Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree20Likes

கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair


Discussions on "கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair" in "Hair Care & Hair Removal" forum.


  1. #31
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    ‘ஸ்கால்ப் சோரியாசிஸ்’

    1. சோரியாசிஸ்

    ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

    உச்சி முதல் பாதம் வரை நகக்கண்களைக் கூட விட்டு வைக்காமல் பாதிக்கிற ஒரு பிரச்னை சோரியாசிஸ். இது ஒருவகையான ஆட்டோஇம்யூன் பிரச்னை. இது சருமம், மூட்டு போன்றவற்றையும் பாதிக்கும். சோரியாசிஸ் பாதித்தவர்களின் சருமத்தில் சிவப்பு நிறத்தில் செதில் செதிலாகத் தோன்றும். இதற்கு ‘சோரியாட்டிக் பிளேக்’ என்று பெயர். உடலில் அதிகப்படியான சரும வளர்ச்சி இருக்கும் பகுதிகளில் இது தோன்றும். இந்தப் பகுதிகளில் சருமம் விரைவாக வளர்ந்து, வெள்ளி நிறத்தில் திட்டுத்திட்டாகத் தெரியும். மூட்டு மற்றும் முழங்கால் பகுதிகளில் இது அதிகம் காணப்படும். அதிகப்படியான ஸ்ட்ரெஸ்ஸும் சோரியாசிஸ் ஏற்பட ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

    சோரியாசிஸ் பாதிப்பில் மண்டைப் பகுதியும் தப்பிப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் குழந்தைகளுக்கும் இளவயதினருக்கும் மண்டைப்பகுதியில்தான் சோரியாசிஸுக்கான ஆரம்ப அறிகுறியே தென்படும். மண்டைப் பகுதியில் உண்டாகிற சோரியாசிஸ் பிரச்னையை ‘ஸ்கால்ப் சோரியாசிஸ்’ என்கிறோம். பிளேக் சோரியாசிஸ் பிரச்னை உள்ள பலருக்கும் அதன் வெளிப்பாடு மண்டைப் பகுதியிலும் தெரிவதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம்.

    சோரியாசிஸ் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே மிகக் குறைவு என்பதால் பலருக்கும் அதன் ஆரம்ப அறிகுறிகளை வைத்து அப்பிரச்னையை உறுதி செய்ய முடிவதில்லை. சருமத்தில் தென்படுகிற செதில்களையும் வித்தியாசங்களையும் வைத்தே அதை சந்தேகிப்பார்கள். மற்றபடி சோரியாசிஸை உறுதி செய்ய பிரத்யேக ரத்தப் பரிசோதனையோ, மருத்துவச் சோதனைகளோ இல்லை. சில நேரங்களில் சருமப் பகுதியை பயாப்சி செய்து, சோரியாசிஸ் இருப்பதை உறுதி செய்யலாம்.

    பாதிக்கப்பட்ட சருமப் பகுதியை சுரண்டி எடுக்கும்போது, சருமத்தின் அடிப்பகுதியிலிருந்து வருகிற ரத்தத்தை வைத்தும் இதை உறுதி செய்யலாம்.
    சோரியாசிஸ் என்பதை உறுதிசெய்துவிட்டால், அதை முறையான சிகிச்சைகளின் மூலம் கட்டுப்பாட்டில்தான் வைக்க முடியும். முற்றிலும் ஒழிப்ப
    தென்பது சாத்தியமே இல்லை.

    சோரியாசிஸ் பிரச்னையின் தீவிரம் குறைந்து, அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர குறிப்பிட்ட காலம் ஆகும். எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரே இரவில் தீர்வு எதிர்பார்க்கும் நம் மக்களுக்கோ, அதுவரை பொறுமை இருப்பதில்லை. நீண்ட நாட்களாகியும் சிகிச்சை பலன் தராததைக் கண்டு, பாதியிலேயே அதை விட்டுவிடுகிறார்கள். சருமத்தில் உண்டான சோரியாசிஸ் பாதிப்புகளை சரி செய்கிற எண்ணெயோ, தார் மற்றும் ஆன்த்ராலின் கலந்த களிம்புகளோ மண்டைப் பகுதி பாதிப்புக்கு உதவுவதில்லை. இதற்குக் காரணம் மண்டைப் பகுதியில் உள்ள சருமமானது, உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்தை விட தடிமனானது.

    தலையில் உண்டாகிற ஸ்கால்ப் சோரியாசிஸ், சிலருக்கு முகம், காதுகள், கழுத்துப் பகுதிகளுக்கும் பரவலாம். இந்தவகை சோரியாசிஸ் உள்ளவர்களின் முக்கிய பிரச்னை சமூகத்தை எதிர்கொள்வது. மண்டைப் பகுதியில் இருந்து பொடுகு போன்று உதிர்ந்து கொண்டே இருக்கும். அதிகப்படியான சரும செல்கள் உதிர்வதன் வெளிப்பாடான இது, தர்மசங்கடமான உணர்வைத் தரும். இப்படி உதிர்ந்து வருகிற செதில்களை கவனமாக அப்புறப்படுத்த வேண்டும். மண்டைப் பகுதியை சுரண்டுவது, சொரிவது போன்றவற்றால் அந்த இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, பிரச்னை இன்னும் தீவிரமடையலாம்.

    மண்டைப் பகுதிக்கான கார்ட்டிகோஸ்டீஸ்ராய்டு ஸ்கால்ப் லிக்யுட் (Corticosteroid scalp liquids) மற்றும் தார் கலந்த ஷாம்பு (Tar-containing shampoo) இரண்டையும் தினசரி உபயோகிப்பதுதான் பெரும்பாலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிற சிகிச்சைகளாக இருக்கும். சாலிசிலிக் அமிலம் மற்றும் தார் கலந்த ஷாம்பு உபயோகிக்க எளிதானதாக இருக்கும். பிரச்னை குறையவில்லை என்றால் சரும மருத்துவரை கலந்தாலோசிப்பதே பாதுகாப்பானது.

    ஸ்கால்ப் சோரியாசிஸ் இருப்பவர்களுக்கு முடி உதிர்தல் பிரச்னையும் இருக்கும். அது குறித்தும் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம். சோரியாசிஸ் உள்ளவர்கள் டை அடிப்பது போன்ற கூந்தலுக்கான கெமிக்கல் சிகிச்சைகளைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

    இப்படியான மேல்பூச்சு மற்றும் போட்டோதெரபி சிகிச்சைகளுக்குக் கட்டுப்படாத சோரியாசிஸ் பிரச்னைக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் மற்றும் ஊசி எடுத்துக் கொள்ளலாம். அந்த சிகிச்சைக்கு ‘Systemic treatment’ என்று பெயர். ஆனால், இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்கிற நபர்கள் முறைப்படி ரத்தப் பரிசோதனையையும், கல்லீரல் செயல்பாட்டுக்கான பரிசோதனையையும் அடிக்கடி செய்து பார்க்க வேண்டியது அவசியம். சோரியாசிஸ் பிரச்னைக்காக எடுத்துக் கொள்கிற மருந்துகளின் நச்சுத் தன்மையைத் தெரிந்து கொள்ளவே இவை. இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்கிற பெண்கள் தற்காலிகமாக கர்ப்பத்தைத் தள்ளிப் போடுவதும் அறிவுறுத்தப்படும்.

    சோரியாசிஸை நிரந்தரமாக விரட்டியடிப்பதாகச் சொல்வதில் உண்மையில்லை. நீரிழிவு போன்று இதையும் கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். திடீரென பிரச்னை முற்றிலும் குணமடைந்த மாதிரித் தெரியலாம். ஆனால், அது எப்போது வேண்டுமானாலும் திரும்பவும் வரும்.சோரியாசிஸ் தொற்றுநோய் அல்ல. சோரியாசிஸ் உள்ளவரைத் தொட்டுப் பேசுவதால் இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொற்றாது. ஆனாலும் பாதிப்புள்ளவர் தனது தலையணை உறை, சீப்பு, ஹெல்மெட் போன்றவற்றை சுத்தமாகப் பராமரிப்பது நல்லது.சோரியாசிஸை நிரந்தரமாக விரட்டியடிப்பதாகச் சொல்வதில் உண்மையில்லை. நீரிழிவு போன்று இதையும் கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும்.

    2. சோரியாசிஸ் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை

    அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக்

    * குமுட்டிக் காயை மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். அதில் கேமோமைல் மற்றும் டீ ட்ரீ ஆயில் தலா 4 சொட்டுகள் கலந்து, தலையில் தடவினால் சோரியாசிஸினால் தலையில் உண்டாகும் செதில் செதிலான பகுதிகள் மறையும்.

    * ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயிலில், பிர்ச் ஆயில் மற்றும் லேவண்டர் ஆயில் தலா 4 சொட்டுகள் கலந்து தடவி வர, சோரியாசிஸ் விரைவில் குணமாகும். அரிப்பு உடனே நிற்கும்.

    * வேப்பெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் இரண்டும் கலந்து, பரங்கிச்சக்கை பொடியும், வில்வப் பொடியும் குழைத்து, மண்டைப் பகுதியில் தடவி, ஊற வைத்துக் குளித்து வர, சோரியாசிஸ் விரைவில் குணமாகும்.

    * கோஷ்டம் என்று நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். கோஷ்டம் மற்றும் திரிபலா பொடி இரண்டும் தலா 1 டீஸ்பூன் எடுத்து, நல்லெண்ணெயில் கலந்து, தலைக்கு பேக் போட்டு தினமும் குளித்தால் சோரியாசிஸ் மட்டுப்படும்.

    * கடுகெண்ணெயும், ஆலிவ் ஆயிலும் தலா 150 மி.லி. எடுத்துக் கொள்ளவும். அதில் குன்றிமணிப் பொடி, பொடுதலைப் பொடி, கொடுவேலி பொடி, புங்கம்பட்டை பொடி ஆகியவற்றை தலா 25 கிராம் கலந்து 1 வாரத்துக்கு நன்கு ஊற விடவும். பிறகு இதை தினமும் தலையில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தால் சோரியாசிஸ் மட்டுப்படும்.

    * கொடுவேலி பொடி, பால் சாம்பிராணி, திரிபலா பொடி மூன்றையும் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து சோரியாசிஸ் உள்ள பகுதிகளில் தடவி, ஊற வைத்துக் குளிக்கவும்.

    * மண்டைப் பகுதியில் சோரியாசிஸ் பாதிப்பு உள்ளவர்கள் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதையும், கண்டிஷனர் உபயோகிப்பதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    * உடலில் சோரியாசிஸ் பாதிப்பிருந்தால் வாசனை உள்ள சோப் மற்றும் பாடி வாஷ் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகம் வெயிலில் அலைவதையும் தவிர்க்க வேண்டும். கை, கால்களில் பாதிப்புள்ளவர்கள், தேவையற்ற ரோமங்களை அகற்ற வாக்சிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு அந்தரங்க உறுப்புகளில் கூட இந்த பாதிப்பு ஏற்படும். அவர்கள் சிந்தெடிக் உள்ளாடை களைத் தவிர்த்து காட்டன் உள்ளாடை
    களையே அணிய வேண்டும்.

    உடலில் சோரியாசிஸ்பாதிப்பிருந்தால் வாசனை உள்ள சோப் மற்றும் பாடி வாஷ் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகம் வெயிலில் அலைவதையும்
    தவிர்க்க வேண்டும்.



    Sponsored Links
    Last edited by chan; 19th May 2015 at 02:13 PM.

  2. #32
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    1. பொடுகுப் பிரச்னை

    ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

    அலை அலையான அழகுக் கூந்தல் இருக்கும். என்ன மாதிரியான ஹேர் ஸ்டைல் செய்து கொண்டாலும் அழகுஅள்ளும். ஆனாலும், வெளியே தலைகாட்ட முடியாத நிலையில் இருப்பார்கள். காரணம், பொடுகு! உடையில் உதிர்ந்து வெள்ளை வெள்ளையாகக் காட்சியளித்து சம்பந்தப்பட்டவரை தர்மசங்கடப்படுத்துவதுடன், அடுத்தவரையும் முகம் சுளிக்கச் செய்கிற பிரச்னை இது.

    பெரும்பாலான மனிதர்களின் மண்டைப்பகுதியில் Malassezia என்கிற ஒரு வகையான பூஞ்சை இருக்கும். சில நேரங்களில் இந்தப் பூஞ்சைத் ெதாற்று அளவு கடந்து வளரும் போது, பொடுகாக மாறுகிறது. சருமத்திலுள்ள செபேஷியஸ் சுரப்பிகளில் உற்பத்தியாகிற சீபம் என்கிற எண்ணெய்தான் பொடுகுக்குக் காரணமான பூஞ்சைகளின் விருப்ப உணவு.

    இப்படி வளர்கிற பூஞ்சையானது மண்டைப் பகுதிசருமத்தின் உள்ளே ஊடுருவி, ஒருவித வீக்கத்துக்கும், செதில் செதிலாக செல்கள் உதிர்வதற்கும் காரணமாகின்றன.
    செபோரியா என்கிற சருமப் பிரச்னையின் வெளிப்பாடாகவும் சிலருக்கு பொடுகு தோன்றலாம். இது அரிப்புடன் கூடிய செதில்களை உருவாக்கும். இந்த செதில்கள் அதிகமாகும்போது அவற்றை நாம் பொடுகு என்கிறோம். புருவங்கள், நெற்றி, காது மடல்கள், மூக்கு மற்றும் உதடுகளைச் சுற்றிய பகுதிகளிலும் சிவந்த தடிப்புகள் காணப்படும். இந்தப் பகுதிகள் மிகவும் வறண்டு காணப்படும்.

    மண்டைப் பகுதி முழுவதும் வறண்டு, 2 நாட்களுக்கும் மேலாக அரிப்பு நீடித்தால் பொடுகுப் பிரச்னை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாக அர்த்தம். பொடுகுப் பிரச்னையை குணப்படுத்திவிட முடியும் என்பது நல்ல செய்தி. ஆரம்ப நிலை பொடுகுக்கு வாரம் 2 முறை தலையில் தயிரைத் தடவிக் கொண்டு, மிக மைல்டான ஆன்ட்டி டான்டிராஃப் ஷாம்புவால் தலை குளித்தாலே போதுமானது. உள்ளுக்கும் ஒரு கப் தயிர் சாப்பிடுவது கூடுதல் பலனளிக்கும்.

    கூந்தல் பிரச்னைகளுக்குக் காரணமான மிக முக்கியமான ஒரு இன்ஃபெக்*ஷன் Tinea Capitus. இது வீங்கி, செதில்களாகக் காணப்படும். கூந்தல் உடைந்து, பூஞ்சைத் தொற்றும் இடங்களில் உள்ள முடி உதிர ஆரம்பிக்கும். பூஞ்சைத்தொற்றானது மிக மிதமானதாக இருந்தால் சிகிச்சையின்றியே குணப்படுத்திவிடலாம்.

    மண்டைப் பகுதியில் செதில் செதிலாகக் காட்சியளித்தால், அது பிரச்னைக்கான அறிகுறி. கூடவே தாங்க முடியாத அரிப்பு, திடீர் முடி உதிர்வு, மண்டைப் பகுதியில் திட்டுத்திட்டான சொட்டைப் பகுதிகள் போன்றவையும் சேர்ந்து கொண்டால், உடனடியாக ட்ரைகாலஜிஸ்டை சந்திக்க வேண்டியது அவசியம்.

    Scalp seborrhea என்கிற பிரச்னை நிரந்தர முடி இழப்பை ஏற்படுத்துமோ எனப் பயப்பட வேண்டியதில்லை. இந்தப் பிரச்னை பிறந்த குழந்தைகளைக் கூடப் பாதிக்கும். பிறந்த சில மாதங்கள் வரை நீடிக்கும். அது குழந்தைகளின் மண்டைப் பகுதியைக் கூடப் பாதிக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படுகிற பொடுகுப் பிரச்னைக்கு Cradle cap என்றே பெயர். பிறந்த குழந்தையின் மண்டையில்இப்படியொரு பிரச்னையைப் பார்க்கிற எந்தப் பெற்றோருக்கும் கவலையும் வருத்தமும் ஏற்படுவது இயல்புதான். ஆனால், அவர்களது பயம் அனாவசியமானது.

    குழந்தைக்கு உண்டாகிறஇந்த வகைப் பொடுகு, அவர்களது 3 வயதுக்குள் தானாகச் சரியாகி விடும்.சிலருக்கு மரபுரீதியாகவே பொடுகுப் பிரச்னை தொடரலாம். அபூர்வமாக சிலருக்கு அவர்கள் கூந்தலுக்கு உபயோகிக்கிற கெமிக்கல் கலந்த தயாரிப்புகளின் விளைவாக ஒவ்வாமை காரணமாகவும் பொடுகு வரலாம். தட்பவெப்ப நிலையும், அதிகப்படியான வியர்வையும் கூட இதற்குக் காரணங்களாக சொல்லப்படுகின்றன.

    சில தகவல்கள் மண்டைப் பகுதியில் உள்ள சருமமானது அளவுக்கதிகமாக உரிவதன் விளைவாகவே பொடுகு ஏற்படுகிறது. தலைக்கு சரியான ஷாம்பு உபயோகித்துக் குளிக்காதபோது, ஏற்கனவே உள்ள பொடுகானது, தேங்கிப் பெருக ஆரம்பிக்கும். மண்டைப் பகுதி தொடர்பான வேறு சில பிரச்னைகளின் காரணமாகவும்பொடுகு வரலாம்.

    மன அழுத்தம் அதிகமாகஇருந்தாலோ, உடல்நலமில்லாத போதோ கூட பொடுகு அதிகரிக்கும். அதிகப்படியான குளிர் மற்றும் வறட்சியும் கூட பொடுகை உருவாக்கும்.மண்டைப் பகுதியை அதீத சுத்தமாகவைத்துக் கொள்வதன் மூலம் பொடுகு வராமல் காக்கலாம்.

    அடிக்கடி தலை குளிக்காதவர்களுக்கு மண்டைப்பகுதியில் தூசு, அழுக்கு, எண்ணெய் பசை, இறந்த செல்கள் என எல்லாம் சேர்ந்து பொடுகை அதிகரிக்கச் செய்யும். ட்ரைகாலஜிஸ்ட் ஆலோசனையின் பேரில் ஆன்ட்டிஃபங்கல் க்ரீம்களைஉபயோகிக்கலாம். அது மண்டைப்பகுதியில் வசிக்கிற ஈஸ்ட் தொற்றைக் கட்டுப்படுத்தி, பொடுகையும் கட்டுப்படுத்தும்.
    பொடுகு நீக்க உதவும் ஷாம்பு...

    1. Tar
    2. Salicylic acid
    3. Zinc pyrithione
    4. Selenium sulphide
    5. Ketoconazole
    6. டீ ட்ரீ ஆயில் கலந்த ஷாம்பு.

    இவை எல்லாம் மெடிக்கேட்டட் ஷாம்பு வகைகள். பொடுகு இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு, பொடுகின் தீவிரத்துக்கேற்ப மேற்சொன்னவற்றில் பொருத்தமான ஒரு ஷாம்புவை உபயோகிக்கலாம்.எப்போது டாக்டரை பார்க்க வேண்டும்?

    ஆரம்பக்கட்ட பொடுகுக்கு மருத்துவ ஆலோசனை அவசியப்படுவதில்லை. ஆனால், பொடுகை விரட்ட என்னென்னவோ சிகிச்சைகளை முயற்சி செய்து பார்த்தும் பலனில்லாத போதோ, அரிப்பு கட்டுக்கடங்காத போதோ, தலையில் வீக்கமும் கீறலும் ஏற்பட்டு சிவந்து போனாலோ ட்ரைகாலஜிஸ்டை அணுக வேண்டியது அவசியம். பொடுகுதானா, அதற்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் தரப்பட வேண்டும் என்பதை அவரால்தான் சரியாகக் கணித்து அறிவுறுத்த முடியும்.

    மண்டைப் பகுதி முழுவதும் வறண்டு, 2 நாட்களுக்கும் மேலாக அரிப்பு நீடித்தால் பொடுகுப் பிரச்னை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாக அர்த்தம்.
    பொடுகுப் பிரச்னையை குணப்படுத்திவிட முடியும்என்பது நல்ல செய்தி!


    2. பொடுகுப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சைகள்

    அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி

    200 மி.லி. தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். அதில் ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி இலையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து அணைத்து மூடி வைக்கவும். ஆறியதும் அந்தத் தண்ணீரில் பயத்த மாவைக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளித்தால் பொடுகு போகும். ஒற்றைச் செம்பருத்திப் பூ 10 எடுத்து கைகளால் கசக்கினால் சாறு வரும். அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கசக்கி, வடிகட்டவும். அதில் 2 டீஸ்பூன் வெந்தயத் தூள், 2 டீஸ்பூன் பயத்த மாவு கலந்து தலைக்கு பேக் மாதிரி தடவி, 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். இது பொடுகையும், அதனால் வரும் அரிப்பையும் நீக்கும்.

    வெந்தயம், நெல்லிமுள்ளி, வால்மிளகு, பிஞ்சு கடுக்காய் நான்கையும் தலா 25 கிராம் எடுத்து 100 கிராம் பயறு மற்றும் 100 கிராம் பூலாங்கிழங்கு சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளவும்.இந்தப் பொடியை தலை குளிக்க உபயோகித்து வந்தால் பொடுகு நீங்கும். வெந்தயம், நெல்லிமுள்ளி, வால்மிளகுமற்றும் பிஞ்சுக் கடுக்காயை தலா 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். கால் லிட்டர் நல்லெண்ணெயில் பொடித்ததைப் போட்டு தைலம் பதம் வரும் வரைக் காய்ச்சவும். வாரம் 2 முறை இந்தத் தைலத்தைத் தலைக்குத் தடவி, இதற்கு முந்தைய குறிப்பில் சொன்னகலவையால் தலையை அலசினால் பொடுகு மறையும். கூந்தல் பளபளப்புடன் கருமையாக வளரும். வெந்தயமும் நெல்லிமுள்ளியும் ஸ்ட்ரெஸை நீக்கும்.

    மருதாணி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரை மூன்றையும் தலா 1 கைப்பிடி எடுத்துப் பொடியாக நறுக்கவும். 4 நெல்லிக்காயை விதை நீக்கி சீவிக் கொள்ளவும். கால் லிட்டர் நல்லெண்ணெயை சூடாக்கி, இவற்றைச் சேர்த்து பசுமை மாறும் முன்பே அணைக்கவும். இந்த எண்ணெயை வாரம் 2 முறைதலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். தினசரிஉபயோகிக்க நினைக்கிறவர்கள் நல்லெண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெயில் இதைத் தயாரித்து உபயோகிக்கலாம்.

    மண்டைப் பகுதியை அதீதசுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் பொடுகு வராமல்காக்கலாம். அடிக்கடி தலை குளிக்காதவர்களுக்கு மண்டைப் பகுதியில் தூசு, அழுக்கு,எண்ணெய் பசை, இறந்த செல்கள் என எல்லாம் சேர்ந்து பொடுகை அதிகரிக்கச் செய்யும்.


  3. #33
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    1. பொடுகைப் புரிந்து கொள்ளுங்கள்...

    ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

    பொடுகு என்பது மண்டைப் பகுதியில் உள்ள சருமத்தில் இருந்து உதிரும் இறந்த செல்கள் என்றும் சொரிந்தால் அதிகமாகும் என்பதையும் பார்த்தோம். வறண்ட சருமமும் பொடுகும் ஒன்றுதான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வறண்ட மண்டைப் பகுதி மட்டுமின்றி, அதிக எண்ணெய் வழிகிற மண்டையும்கூட அதிகப்படியான இறந்த செல்கள் ஒன்று சேர்ந்து, பொடுகுக்குக் காரணமான செதில்களாக உருவாகக் காரணமாகும்.

    வறண்ட மண்டைப் பகுதி, செபோரிக் டெர்மடைட்டிஸ், மண்டைப் பகுதியில் ஏற்படுகிற சோரியாசிஸ், அலர்ஜி, க்ராடில் கேப் எனப்படுகிற பச்சிளம் குழந்தைகளுக்கு உருவாகிற பிரச்னை எனப் பலதும் இப்படி பொடுகு செதில்கள் உருவாகக் காரணமாகலாம்.பொடுகைத் தீவிரப்படுத்தும்
    காரணிகள்...

    * பரம்பரைத் தன்மை
    * பூப்பெய்தும் போது ஏற்படுவது போன்ற ஹார்மோன் மாற்றங்கள்
    * மதுப்பழக்கம்
    * அதிக சர்க்கரை, மசாலா மற்றும் உப்பு சேர்த்த உணவுப் பழக்கம்
    * கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி போன்ற அத்தியாவசிய சத்துகள் குறைபாடு
    * வானிலை மாறுபாடுகள்
    * ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம்.

    வறண்ட தன்மைதான் மண்டைப் பகுதியில் செதில்களை உருவாக்கவும் அதிக எண்ணெய் வழிய வைக்கவும் காரணம். மண்டைப் பகுதியின் வறட்சியும் அதன் காரணமாக ஏற்படுகிற பொடுகும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கிடைக்கிற விலை அதிகமற்ற மெடிக்கேட்டட் ஷாம்புகளின் மூலமே
    குணப்படுத்தக் கூடியவை.

    Seborrheic dermatitis என்கிற பிரச்னை மஞ்சள் மற்றும் வெள்ளை நிறச் செதில்களை எண்ணெய் பசை அதிகமிருக்கிற மண்ைடப் பகுதி, முகம், காதின் உள்
    பகுதிகளில் ஏற்படுத்திவிடும். இந்தப் பிரச்னைக்கான துல்லியமான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஹார்மோன் கோளாறுகள், நோய் எதிர்ப்பு சக்தியின்மை, சில சத்துக் குறைபாடுகள், நரம்பு மண்டலப் பிரச்னைகள் என பல பிரச்னைகளின் கலவையாக இருக்கலாம். Malassezia என்கிற ஈஸ்ட் தொற்றும் ஒரு காரணமாகலாம். இந்தப் பிரச்னை பரம்பரையாகவும் தொடரக்கூடியது.

    மன அழுத்தம், எண்ணெய் பசை சருமம் மற்றும் சில மருத்துவ சிகிச்சைகளின் பின் விளைவு, வானிலை மாற்றங்களும் கூட இந்தப் பிரச்னையை உருவாக்கலாம். மண்டைப் பகுதியையும் கூந்தலையும் சுத்தமாக வைத்திருக்க அடிக்கடி ஷாம்பு குளியல் எடுக்க வேண்டும். ஷாம்பு அல்லது ஸ்டைலிங் ஜெல் உபயோகித்து அலர்ஜி ஏற்பட்டிருந்தாலும் அது மண்டைப் பகுதி சருமத்தைப் பாதித்து செதில்களை உருவாக்கலாம். குறிப்பிட்ட ஷாம்பு அல்லது ஜெல் உபயோகித்ததும் இப்படி செதில்களும் பொடுகும் வருவது தெரிந்தால் உடனடியாக அதை நிறுத்த வேண்டும்.

    பிறந்த குழந்தைக்கு முதல் 2 மாதங்களில் ஏற்படக் கூடிய க்ராடில் கேப் என்கிற ஒருவிதப் பொடுகுப் பிரச்னையைப் பற்றியும் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இது லேசான மஞ்சள் நிறத்தில் எண்ணெய் பிசுக்குடன் காணப்படும். பிறந்தது முதல் சில மாதங்கள் வரை நீடிக்கும் இது, குழந்தைக்கு 2 வயதாகும் போது தானாகச் சரியாகி விடும்.

    மிதமான பொடுகுப் பிரச்னை ஒரு மாதத்துக்கு வாரம் ஒன்று அல்லது 2 முறைகள் மெடிக்கேட்டட் ஷாம்பு உபயோகித்தாலே சரியாகிவிடும். செலினியம் சல்ஃபைடு அல்லது கீட்டோகொனோ சோல் அடங்கிய ஷாம்புவும் பலன் தரும். ஆனால், ஒருநாள், இரண்டு நாட்களில் முடிவுக்கு வருகிற பிரச்னை அல்ல அது. தொடர் சிகிச்சை தேவைப்படும்.

    திடீரென நிறுத்தினால் மீண்டும் வரும்.இத்தனைக்கும் கட்டுப்படாத பொடுகு என்றால் ட்ரைகாலஜிஸ்டை சந்தித்து, முறையான சோதனையின் மூலம் காரணங்களைத் தெரிந்து, சிகிச்சை எடுப்பதுதான் தீர்வு.

    மிதமான பொடுகுப்பிரச்னை ஒரு மாதத்துக்கு வாரம் ஒன்று அல்லது 2 முறைகள் மெடிக்கேட்டட் ஷாம்பு உபயோகித்தாலே சரியாகிவிடும். ஆனால், ஒருநாள், இரண்டு நாட்களில் முடிவுக்கு வருகிற பிரச்னை அல்ல அது. தொடர் சிகிச்சை தேவைப்படும். திடீரென நிறுத்தினால் மீண்டும் வரும்.

    2. பொடுகுக்கான வீட்டு சிகிச்சை

    அழகுக்கலை நிபுணர் உஷா

    கற்றாழைக்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. மண்டைப் பகுதியின் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கக்கூடியது. பொடுகு உருவாகக் காரணமான இறந்த செல்களையும் அழித்து விடும். ரெடிமேடாக கிடைக்கிற கற்றாழை ஜெல்லைவிட, வீட்டில் வளர்க்கும் கற்றாழைச் செடியில் இருந்து அதன் உள்ளே உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து நான்கைந்து முறை அலசி வைத்துக் கொள்ளவும். அதைத் தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊற வைத்து, மைல்டான ஷாம்பு போட்டு அலசவும்.

    *அரை கப் வினிகரை, ஒன்றரை கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும்.

    ஒவ்வொரு முறை ஷாம்பு குளியல் எடுத்து முடித்ததும், இந்தக் கரைசலை கடைசியாக தலையில் விட்டு அலசி, நன்கு காய விடவும். பொடுகு குறையும்.

    * வெள்ளை மிளகுப் பொடியை சிறிதளவு தயிரில் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும்.

    * சிறிதளவு பாதாம் எண்ணெயில் கொஞ்சம் நெல்லிக்காய் சாறு விட்டுக் கலந்து தலையில் தடவி, விரல் நுனிகளால் மிதமாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்கலாம்.

    *முட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது விளக்கெண்ணெயும், அரை டீஸ்பூன் கிளிசரினும் கலந்து தலையில் தடவி ஊற வைத்தும்
    குளிக்கலாம்.

    * 2கைப்பிடி அளவு வேப்பிலையை அரை பக்கெட் தண்ணீரில் போட்டு இரவு முழுக்க அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, தலையை அலசவும். வேப்பிலையை அரைத்து, தலையில் தடவி, ஊற வைத்தும் அலசலாம். இரண்டு சிகிச்சைகளுமே பொடுகை விரட்டும்.

    * வெயிலே படாமல் வாழ்வது சருமத்தை அழகாக வைக்கலாம். ஆனால், பொடுகுப் பிரச்னைக்கு சூரிய வெளிச்சம் இல்லாததும் ஒரு காரணம். எனவே தினமும் காலை மற்றும் மாலை வெயில் சிறிதாவது நம் மேல் படும்படி இருப்பதுகூட பொடுகை விரட்ட உதவும்.

    * டீ ட்ரீ ஆயில் என ஒன்று கிடைக்கும். ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் டீ ட்ரீ ஆயில் கலந்து மூடி போட்ட ஸ்பிரே பாட்டிலில் விட்டுக் குலுக்கவும். தலைக்குக் குளித்து முடித்ததும், இந்தக் கலவையை தலையில் ஸ்பிரே செய்து கொள்ளவும். லேசாக மசாஜ் செய்து, அப்படியே விட்டு விடவும்.
    மறுபடி கூந்தலை அலச வேண்டாம்.

    * 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் நன்கு மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பு கொண்டு அலசவும்.

    *ஆரஞ்சு பழத்தோலை மிக்ஸியில் விழுதாக அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சைச்சாறு சோ்த்து கலக்கவும். அதைத் தலையில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினாலும் பொடுகு மறையும்.

    கற்றாழைக்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. பொடுகு உருவாகக் காரணமான இறந்த செல்களையும் அழித்து விடும்.



  4. #34
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    1. இளநரைக்கு அற்புத மருந்து

    ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்


    `சால்ட் அண்ட் பெப்பர் லுக்’ என்கிற பெயரில் நடிகர்கள் நரைத்த கூந்தலுக்கு சாயம் பூசாமல் வரத் தொடங்கினாலும், சாமானிய மக்களுக்கு இன்னும் அந்த தைரியம் முழுமையாக வரவில்லை என்பதே உண்மை.நரை என்பது மூப்பின் அடையாளமாக இருந்த காலம் மாறி, இன்று அது டீன் ஏஜிலும் அதற்கு முன்பேயும்கூட ஆரம்பிக்கிற அவஸ்தையாக இருக்கிறது. 20 வயதுக்கு முன்பே தோன்றுகிற நரையானது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது பெற்றோருக்கும் பெருங்கவலை அளிக்கிற விஷயமே!

    வெள்ளையர்களுக்கு 30களின் மத்தியிலும் ஆசியர்களுக்கு 30களின் இறுதியிலும் கூந்தல் நரைக்கத் தொடங்கும். பெரும்பாலான மக்களுக்கு 50 வயதில் பாதிக்கும் மேலான கூந்தல் நரைத்திருக்கும். வயதானவர்களின் தலையில் தோன்றுகிற நரை நம்மை உறுத்துவதில்லை. ஆனால், தோற்றத்தில் இளமையாகக் காட்சியளிப்பவரின் தலையில் தோன்றுகிற ஒற்றை வெள்ளை முடிகூட நம்மை உற்று கவனிக்க வைக்கிறது. இளநரை என்கிற பிரச்னை இன்று அனேக இளைய தலைமுறையினருக்கும் இம்சை கொடுப்பதை மறுப்பதற்கில்லை.

    இளநரைக்கான காரணங்கள்?

    நம்முடைய கூந்தலின் ஃபாலிக்கிள் என்கிற நுண்ணறைகளில் மெலனின் என்கிற நிறமிகள் இருக்கும். உடலில் இந்த நிறமி உற்பத்தி குறைகிற போதுதான் கூந்தல் கருமை இழந்து வெள்ளையாகிறது. இதன் பின்னணியில்...

    *மரபணுக்கள் காரணமாக இருக்கலாம்.

    *பிட்யூட்டரி அல்லது தைராய்டு சுரப்பிகளில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் கூந்தல் நரைக்கலாம். அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டால் நரைப்பதும் நின்றுவிடும்.

    *வைட்டமின் பி12 குறைபாடு அல்லது தவறான உணவுப்பழக்கம் இந்த இரண்டும்தான் இளநரைக்கான முதல் முக்கிய காரணங்கள். இரும்புச்சத்து, தாமிரச்சத்து மற்றும் அயோடின் சத்து இந்த மூன்றும் உணவில் போதுமான அளவு இல்லாமல் போவதன் விளைவே, இன்றைக்கு இளம் வயதினர் பலரும் நரை முடிப் பிரச்னையை சந்திப்பதன் காரணம்.

    *ஸ்ட்ரெஸ் என்கிற மன அழுத்தம் எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாக இருப்பது போலவே இளநரைப் பிரச்னைக்கும் காரணமாகிறது. மனது அதிக கவலை கொள்கிற போது, மண்டைப் பகுதியின் சருமத்தில் அதிக டென்ஷன் உருவாகிறது. அது கூந்தலுக்குப் போதுமான ஊட்டம் கிடைக்கிற வேலைக்கு இடையூறாகிறது. அதன் விளைவாகவே கூந்தல் நரைத்து, ஆரோக்கியம் இழக்கிறது.

    *கூந்தல் அழகாக இருக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் அதை சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை அடிக்கடி சரியாக சுத்தப்படுத்தாமல் தூசும் மாசும் படிந்து, கூந்தலின் வேர்க்கால்கள் அடைபடும்போதும் நரை வரலாம்.

    *ஒரே ஒரு நரை முடியைப் பார்த்ததுமே அலறியடித்துக் கொண்டு மிக இளவயதிலேயே ஹேர் டை உபயோகிப்பதும் நரையை அதிகப்படுத்தும்.

    *தலை குளிக்க மிக அதிக சூடான தண்ணீரைப் பயன்படுத்துவது.

    *அதீத மலச்சிக்கல்

    *தீவிரமான ரத்தசோகை

    *ஹார்மோன் பிரச்னைகளும் தொற்றுநோய் பாதிப்புகளும்

    *கீமோதெரபி மற்றும் ரேடியேஷன்

    சிகிச்சைகள்

    *விடிலிகோ எனப்படுகிற வெண்புள்ளிப் பிரச்னை
    *தைராய்டு கோளாறு
    *ஃபோலிக் அமிலக் குறைபாடு.

    என்ன தீர்வுகள்?

    இளநரைக்கான அதிஅற்புதமான மருந்து என்றால் அது கறிவேப்பிலை. தினமும் முடிந்தளவு அதை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    *கைப்பிடி அளவு கறிவேப்பிலையை எடுத்துக் கழுவவும். அதை முதல்நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். அதே தண்ணீருடன் கறிவேப்பிலையைக் கொதிக்க வைத்து தினம் ஒருவேளை குடிக்கவும்.

    *பசும்பாலில் தயாரித்த வெண்ணெயால் தலைக்கு மசாஜ் செய்யவும். இதை வாரம் 2 முறை செய்ய வேண்டியது அவசியம்.

    *நிறைய பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக் கொள்ளவும். இது இள நரையைத் தடுப்பதுடன், கூந்தலையும் அழகாக, ஆரோக்கியமாக வைக்கும்.

    *சிறிது தயிரில் ஒரு டேபிள்ஸ்பூன் ஈஸ்ட் கலக்கவும். ஒவ்வொரு முறை உணவுக்கு முன்பும் இதைக் குடிக்கவும். இளநரைக்கான எளிமையான சிகிச்சை இது.

    இளநரைப் பிரச்னை அதிகரிப்பதாக உணர்கிறவர்கள் ட்ரைகாலஜிஸ்டை அணுகி, அதற்கான காரணத்தை ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். ஹோமியோ
    பதியிலும் யுனானியிலும் இளநரையைப் போக்க ஏராளமான மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையின்படி அவற்றை எடுத்துக் கொள்வதும் பலனளிக்கும்.

    இளநரைக்கான அதிஅற்புதமான மருந்து என்றால் அது கறிவேப்பிலை. தினமும் முடிந்தளவு அதை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

    2. இளநரைக்கான வீட்டு சிகிச்சை

    அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

    * நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி
    ஆகியவை தலா 10 கிராம்- இவை அனைத்தையும் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்கவைக்கவும். இந்தக் கலவையை நான்கு நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சூரியக் கதிர்கள் பட்டு எண்ணெயில் சாரம் இறங்கும். பின்பு வெள்ளைத் துணியில் அதை வடிகட்டவும். குளிக்கும் முன் தலையில் தேய்த்து வந்தால் நரை குறையும். செம்பட்டை முடி கருமையாகும்.

    * செம்பருத்தி பூ, அவுரி விதை, நெல்லி முள்ளி (காயவைத்த நெல்லிக்காய்) மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். நரைமுடிக்குத் தேவையான அளவு அந்தக் கலவையைத் தண்ணீரில் கலந்து ஒரு இரும்பு பாத்திரத்தில் நான்கு மணி நேரங்கள் வைக்கவும். வெள்ளை முடி உள்ள இடங்களில் அதைத் தடவி அரை மணி நேரத்தில் அலசிவிடவும். இது முடியைக் கருப்பாக்கும். வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கும்.

    * பூந்திக்காய், வெந்தயம், வேப்பிலை, ரோஜா இதழ், ஆரஞ்சுப் பழத்தோல், மல்லிகைப் பூ, வெட்டிவேர், செண்பக மொட்டு, நெல்லிக்காய் எல்லாம் சேர்த்து 100 கிராம் எடுத்துக் கொள்ளவும். எல்லாப் பொருட்களையும் காய வைத்து, அரைக்கவும். 100 கிராம் பொடியை 200 மி.லி. தயிரில் கலந்து கொள்ளவும். முதலில் தலையில் சிறிது நல்லெண்ணெய் தடவவும். பிறகு இந்த ஹேர் பேக்கை தடவி, 45 நிமிடங்கள் ஊற வைத்து அலசவும். இந்த பேக், இளநரை வராமல் தடுப்பதோடு, முடி உதிர்வையும் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு நல்ல பளபளப்பையும் ஆரோக்கியத்தையும் தரும்.

    50 கிராம் அளவுக்கு மருதாணிப் பொடியில் ஒரு முட்டை, 5 மி.லி. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், 2 டேபிள்ஸ்பூன் தயிர், 2 டேபிள்ஸ்பூன் காபி (சிக்கரி கலக்காதது) அல்லது டீ டிகாக்*ஷன், எலுமிச்சைச்சாறு 5 முதல் 8 சொட்டு, தேவைக்கேற்ப வெதுவெதுப்பான நீர் சேர்க்கவும். இவற்றை ஒரு இரும்பு பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

    தலையில் ஆயில் மசாஜ் செய்த பின் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்து எல்லா பக்கமும் பரவும்படி இதைத் தடவிக் கொண்டை போடவும். வெறும் பளபளப்பு மட்டும் வேண்டுமானால், அரை மணி நேரத்தில் குளிக்கவும். கலர் வேண்டுமானால் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கவும். சுருட்டை முடி உள்ளவர்கள் ஹென்னா போடுவதை தவிர்க்கலாம்.

    சுருட்டை முடி உள்ளவர்கள் ஹென்னா போடுவதைதவிர்க்கலாம்.



    Last edited by chan; 3rd Jul 2015 at 03:56 PM.
    rsakthi1974 likes this.

  5. #35
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    ட்ரைகோடில்லோமேனியா


    தலைப்பின் பெயரில் பாதியே குறிப்பு கொடுத்திருக்கும். யெஸ்... டென்ஷன் அல்லது தீவிர மன அழுத்தம் காரணமாக முடியைப் பிடுங்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. தெரிந்தோ தெரியாமலோ இப்படிச் செய்வதன் பெயர்தான் ட்ரைகோடில்லோமேனியா (Trichotillomania).

    மனதின் உந்துதல் அல்லது உளவியல் ரீதியான பாதிப்பின் காரணமாக கூந்தலைப் பிடித்து இழுத்துப் பிய்த்தெறிய வேண்டும் என்கிற எண்ணம் எழும். இதன் விளைவாக தலையில் உள்ள முடிகளை மட்டுமின்றி, புருவங்கள், இமைகள், மூக்கு, அந்தரங்க உறுப்புகள் என எங்கிருந்தும் ரோமங்களைப் பிடுங்கிப் போடுவார்கள். பிரச்னை தீவிரமான சிலர், கொத்துக் கொத்தாக தலையிலிருந்தும் புருவங்களில் இருந்தும் முடிக் கற்றைகளைப் பிடுங்கி எறிவார்கள். அதனால் அந்த இடங்களில் அவர்களுக்கு வழுக்கை போன்ற தோற்றம் தெரியும்.

    ஒருசிலர், ஒரே ஒரு முடியை மட்டும் பிடுங்குவார்கள். பிடுங்கிய முடியை ஆராய்ச்சி செய்வது, அதை வைத்து விளையாடுவது என்கிற அளவுக்குப் போகிறவர்களும் உண்டு. இதில் என்ன கொடுமை தெரியுமா? ட்ரைகோடில்லோமேனியா உள்ளவர்களில் பாதிக்கும் மேலானவர்கள், பிடுங்குகிற முடிக் கற்றைகளை வாய்க்குள் போட்டுக் கொள்வார்கள்.

    இந்த விசித்திரமான பிரச்னை பெரும்பாலும் டீன் ஏஜிலேயே ஆரம்பமாகிறது. இது இளைஞர்களைவிட, இளம்பெண்களையே அதிகம் தாக்குகிறது. 1 வயதுக் குழந்தைக்குக் கூட இந்தப் பிரச்னை வரலாம். அந்த வயதில் குழந்தையானது முடியை தன் விரலில் சுற்றிக்கொண்டு இழுக்கும். இந்தப் பழக்கம் குழந்தையின் விரல் சூப்பும் பழக்கத்தைக் கூட மறக்கடிக்கச் செய்யலாம்.

    மன அழுத்தமும் மனச் சோர்வும் இந்தப் பிரச்னையைத் தீவிரப்படுத்தும் விஷயங்கள். பிரச்னை உள்ள மனிதர்கள் பார்ப்பதற்கு தாரணமானவர்களாகவே தெரிவார்கள். ஆனால், அவர்களது தலையிலும், புருவங்களிலும் உடலெங்கும் ஆங்காங்கே ரோமங்கள் அற்ற திட்டுத்திட்டான பகுதிகள் காணப்படும்.இந்த பாதிப்புள்ளவர்களுக்கு நகங்களைக் கடிப்பது, தோலைப் பிய்த்தெடுப்பது போன்ற வேறு பிரச்னைகளும் இருக்கலாம். சிலருக்கு படபடப்பு, மனச் சோர்வு மற்றும் ஓசிடி எனப்படுகிற Obsessive compulsive disorder பிரச்னைகளும் சேர்ந்து கொள்ளலாம். அரிதாக ஒருசிலருக்கு இந்தப் பிரச்னை பரம்பரை வழியாகவும் தொடரலாம்.

    Tonsure trichotillomaniaட்ரைகோடில்லோமேனியாவிலேயே இது இன்னும் தீவிரமான ஒரு பாதிப்பு. முடியைப் பிடுங்கிய பிறகுதான் நிம்மதியாக உணர்கிற ஒரு நிலை. தீவிரமான இந்தப் பிரச்னையில் முடிகள் முழுக்கவும் பிடுங்கப்படும். 11 முதல் 40 வயதுக்காரர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் 11 முதல் 17 வயது பெண்களின் எண்ணிக்கை அதிகம்.

    ட்ரைகோடில்லோமேனியா பாதித்தோரில் இள வயதுக்காரர்கள் தங்களை அறியாமலும் மெல்ல மெல்லவும் இந்தப் பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். முன்னந்தலைப் பகுதியிலுள்ள முடிகளே அடிக்கடி பிடுங்கப்படுகின்றன. அதன் விளைவாக மற்ற முடிகள் முறுக்கிக் கொண்டும், உடைந்தும் காணப்படும். ட்ரைகாலஜிஸ்ட் பாதிக்கப்பட்டவரது மண்டைப் பகுதியை ஆராயும் போது ஆங்காங்கே கீறல்களும் காயங்களும் இருப்பதைக் கண்டுபிடிப்பார். முடி பிடுங்கப்பட்ட பகுதியானது ஜியாமெட்ரிகல் வடிவத்தில் காணப்படும். வழக்கமாக வழுக்கை விழுந்த பகுதிக்கும் இதற்கும் வித்தியாசம் தெரியும்.

    குழந்தையானது இப்படிப் பிடுங்கும் முடியை விழுங்கவோ மெல்லவோ கூடும். குழந்தையின் வாயை சோதனை செய்வதன் மூலம் இதைக் கண்டுபிடிக்கலாம். கூடவே குழந்தைக்கு வாந்தியோ, வயிற்று வலியோ, ரத்தசோகையோ இருக்கிறதா என்கிற கேள்வி களும் கேட்டு அறியப்படும்.

    ட்ரைகோடில்லோமேனியா பாதித்த குழந்தைகளில் 10 சதவிகிதம் பேருக்கு இந்த அறிகுறிகள் இருக்கும். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தை விழுங்கிய கூந்தல் சேர்க்கைக்கு trichobozear என்று பெயர். இது வயிற்றுப் பகுதியில் காணப்படும். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிற பயங்கரமான பிரச்னை.


    சிகிச்சைகுழந்தைகளிடம் காணப்படுகிற இந்தப் பிரச்னையை அவர்கள் மனநலம் பாதிக்கப்படாத பட்சத்தில் எளிதில் குணப்படுத்தி விடலாம். அந்தக் குழந்தையிடமும், பெற்றோரி டமும் பேச வேண்டியது முக்கியம்.பேச்சு தெரபி மற்றும் சில மருத்துவ சிகிச்சைகளின் மூலம் இந்தப் பிரச்னையை சரி செய்து விட முடியும். முடியைப் பிடுங்குவது நின்றதும் மீண்டும் அந்தப் பகுதியில் முடி வளர ஆரம்பிக்கும்.

    தீவிரமான நிலையில், இந்தப் பழக்கத்தை நிறுத்துவதற்கான சிகிச்சைக்கு சிலர் தயாராக இருக்க மாட்டார்கள். அதைப் பற்றிச் சொன்னால் அதிக டென்ஷனாவார்கள். அப்போது நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில், இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

    HRT எனப்படுகிற Habit reversal training இவர்களுக்குப் பெரிய அளவில் உதவும். இந்தப் பயிற்சியில் மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பிரச்னையை புரிந்து கொள்ள உதவுவார்கள். கூடவே அதிலிருந்து வெளியே வர வேண்டியதன் அவசியத்தையும் அதற்கான வழிகளையும் காட்டுவார்கள்.
    முடியைப் பிடுங்கத் துடிக்கிற கைகளுக்கு எப்போதும் ஏதேனும் வேலையைக் கொடுப்பதும் இதிலிருந்து விடுபடுவதற்கான இன்னொரு வழியாக சொல்லப்படுகிறது.

    உதாரணத்துக்கு ஸ்ட்ரெஸ்சை குறைக்கிற பந்தை அமுக்குவது, ஓவியம் வரைவது போன்றவற்றைச் செய்ய வைக்கலாம். டி.வி. பார்க்கும் போது ஸ்வெட்டர் பின்னுவது, கூடை முடைவது போன்ற வேலைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் முடியைப் பிடுங்க நினைக்கிற கைகளையும் மனதையும் திசைத்திருப்பலாம்.
    இந்தப் பிரச்னைக்கான பிரத்யேக மருந்துகள் உள்ளன. அவையும் நல்ல முன்னேற்றம் காட்டும்.முடியைப் பிடுங்கத் துடிக்கிற கைகளுக்கு எப்போதும் வேறு ஏதேனும் வேலையைக் கொடுப்பதும் இதிலிருந்து விடுபடுவதற்கான இன்னொரு வழி!

    2. கூந்தல் வளர்ச்சிக்கான வீட்டு சிகிச்சை

    அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி

    *சின்ன வெங்காயம் 1, பூண்டு 4 பற்கள், அதிமதுரம் ஒரு சிறிய துண்டு மூன்றையும் மூழ்கும் அளவு கொதிக்கும் தண்ணீரில் அல்லது பாலில் சிறிது நேரம் ஊற வைத்து அம்மியில் நைசாக அரைக்கவும். அதை முடி உதிர்ந்த பகுதிகளில் தடவி, 1 மணி நேரம் ஊறி, வெறும் தண்ணீரில் அலசவும்.

    *செம்பருத்திப் பூக்களின் மகரந்தப் பகுதியை நிறைய சேர்த்துக் கொள்ளவும். அதை அப்படியே முடி உதிர்வுள்ள பகுதிகளில் அவ்வப்போது தேய்த்துக் கொண்டே இருக்கலாம். முடி இல்லாத பகுதியில் எப்போதும் இந்தத் தூள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். தடவிய பிறகு தலையை அலசத் தேவையில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்யலாம்.

    *2 டீஸ்பூன் கசகசா, 2 டீஸ்பூன் மிளகு இரண்டையும் சிறிது பால் விட்டு நைசாக அரைக்கவும். அதை லேசாக சூடாக்கி, முடி உதிர்ந்த இடங்களில் தடவி, 1 மணி நேரம் ஊறிக் குளிக்கவும்.

    *1 டீஸ்பூன் ெசம்பருத்தி தூள், 1 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள், 1 டீஸ்பூன் கறிவேப்பிலைத் தூள் மூன்றையும் பேஸ்ட் போலக் குழைத்து முடி உதிர்ந்த இடங்களில் தடவி, ஊறிக் குளிக்கலாம். இந்த மூன்றையும் முழுதாக வாங்கி, அரைப்பது சிறந்தது. இந்தக் கலவை முடிக்கு ஊட்டம் அளித்து, ேவர்ப்பகுதிகளைத் தூண்டி, வளரச் செய்யும்.

    மேலே கூறிய சிகிச்சைகளைச் செய்யும் போது ஷாம்புவை தவிர்க்கவும். வெந்தயம் மற்றும் பாசிப் பருப்பு தலா 100 கிராம், வெட்டிவேர் 50 கிராம் மூன்றையும் மெஷினில் அரைத்து அதை தலையை அலசப் பயன்படுத்தலாம். ஷாம்பு உபயோகித்ததால் மண்டைப்பகுதியில் சேர்ந்திருக்கிற ரசாயனச் சேர்க்கையை இது நீக்கும்.

    வெந்தயம் மற்றும் பாசிப்பருப்பு தலா 100 கிராம், வெட்டி வேர் 50 கிராம் மூன்றையும் மெஷினில் அரைத்து அதை தலையை அலசப் பயன்படுத்தலாம். ஷாம்பு உபயோகித்ததால் மண்டைப்பகுதியில் சேர்ந்திருக்கிற ரசாயனச் சேர்க்கையை இது நீக்கும்.


    Last edited by chan; 24th Aug 2015 at 01:48 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter