Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree20Likes

கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair


Discussions on "கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    1. உதிர்வுக்கு காரணமாகுது பிசிஓஎஸ்

    ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்


    ‘கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு அடர்த்தியான, அழகான தலைமுடி இருந்தது. சமீப காலமா தலைக்குக் குளிக்கிற போது, கொத்துக் கொத்தா முடி கொட்டுது. தலையில கை வச்சாலே நாலஞ்சு முடி கையோட வருது. பார்க்கிறதுக்கு என் முடி நல்லா இருக்கிற மாதிரிதான் தெரியுது.


    ஆனாலும், என்னால வித்தியாசத்தை உணர முடியுது...’ - இப்படி சொல்லிக் கொண்டு சிகிச்சைக்கு வருகிறவர்களை தினம் தினம் பார்க்கிறேன். இவர்களில் பலருக்கும் பிசிஓஎஸ் எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையே கூந்தல் உதிர்வுக்கான காரணமாக இருப்பதையும் பார்க்கிறேன். சினைப்பை நீர்க்கட்டிக்கும் கூந்தல் உதிர்வுக்கும் சம்பந்தம் உண்டா? இதுவே எல்லோரின் கேள்வியாகவும் இருக்கிறது.


    *பிசிஓஎஸ் என்பது பாலிசிஸ்டிக்

    ஓவரியன் சிண்ட்ரோம் என்பதன் சுருக்கம். எண்டோக்ரைன் சுரப்பியில் உருவாகிற ஒரு குறைபாடு. எல்லா பெண்களின் உடலிலும் ஆண்ட்ரோஜென் எனப்படுகிற ஆண் ஹார்மோன் கொஞ்சம் இருக்கும். அது சிலருக்கு அளவுக்கதிகமாக சுரக்கும் போது, குறிப்பாக அதில் உள்ள டி.ஹெச்.டி (Dihydrotestosterone) கூந்தல் புடைப்புப் பகுதிகளை பாதிக்கும். இது புதிய முடிக் கற்றைகள் முளைப்பதைத் தடுப்பதுடன், கூந்தல் உதிர்வுக்கும் காரணமாகிறது. இருக்கும் முடிகளையும் மெலிதாக்கும். இதே ஆண்ட்ரோஜென் ஹார்மோன்களுக்கு மாதவிடாயின் போதான ரத்தப் போக்கின் அளவு மற்றும் ரத்தப் போக்கு நீடிக்கும் நாட்களை பாதிக்கிற குணமும் உண்டு. தவிர, எண்ணெய் பசையான சருமத்துக்கும் பருக்கள் உருவாகவும் கூட இது காரணமாகிறது.

    *சினைப்பைகளால் முதிர்ந்த முட்டைகளை வெளியேற்ற சிரமப்படும்படி ஹார்மோன் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படுவதே பிசிஓஎஸ் பிரச்னைக்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மாதவிலக்கு சுழற்சியில் மாற்றம், அதீத ரத்தப் போக்கு அல்லது மிகக் குறைவான ரத்தப் போக்கு, முகம், தாடை, மார்பகங்கள் என உடல் முழுவதும் ரோம வளர்ச்சி, மங்கு, முடி மெலிதல் அல்லது அளவுக்கதிகமாக முடி கொட்டுதல், முடி உடைந்து பிளவுபடுதல் போன்றவை பிசிஓஎஸ்சின் அறிகுறிகள்.

    *ஈஸ்ட்ரோஜென், எஃப்.எஸ்.ஹெச், எல்.ஹெச்., டெஸ்டோஸ்டீரான் போன்றவற்றின் அளவுகளை சரிபார்ப்பதற்கான டெஸ்ட், தேவைப்பட்டால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகியவற்றின் மூலம்
    பிசிஓஎஸ் பிரச்னையை மருத்துவர் கண்டுபிடிப்பார். பிசிஓஎஸ் உண்டாக்கும் கூந்தல் உதிர்வுக்கான தீர்வுகள்...

    *உணவுக்கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள், உடற்பயிற்சி, மன அழுத்தமில்லாத வாழ்க்கை, வைட்டமின் மற்றும் தாதுச்சத்து சப்ளிமென்ட்டுகள் போன்றவற்றின் மூலமே இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

    உணவு

    *கீரைகள், காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் சோயா மில்க் போன்றவைகூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள். குறிப்பாக சோயா மில்க்குக்கு டி.ஹெச்.டி ஹார்மோனை கட்டுப்படுத்தி, கார்போஹைட்ரேட் மற்றும் புரத அளவுகளை சமநிலைப்படுத்தும் தன்மை உண்டு.

    உடற்பயிற்சி


    *பிசிஓஎஸ் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு இருப்பது சகஜம். சில கிலோ எடைக் குறைப்பு கூட ஹார்மோன் சமநிலையின்மையை சீராக்கி, கூந்தல் வளர்ச்சியைக் கூட்டும். உடற்பயிற்சியுடன் தினமும் 1 மணி நேரம் நடப்பதன் மூலம் டெஸ்டோஸ்டீரான் அளவு மட்டுப்படும். பிசிஓஎஸ் அறிகுறிகள் குறைவதோடு, கூந்தல் ஆரோக்கியமும் மேம்படும்.

    மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்

    *மன அழுத்தம் என்பது ஸ்ட்ரெஸ் ஹார்மோன் எனப்படுகிற கார்ட்டிசால் சுரப்பை அதிகரிக்கக்கூடியது. அதன் விளைவாக கூந்தல் உதிர்வு அதிகமாகும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தம் இல்லாமல் வாழ்வதற்கான வழிகளைப்
    பின்பற்ற வேண்டியது அவசியம்.

    *தியானம் மற்றும் யோகா, நடைப்பயிற்சி, விருப்பமான ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுவது, நீச்சல் போன்றவையும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
    என்ன செய்வது?

    *தாமதிக்காமல் ட்ரைகாலஜிஸ்டை சந்திக்கவும். கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்தும் சில வெளிப்பூச்சுகள், சப்ளிமென்ட்டுகள் மற்றும் ஆர்கானிக் ஷாம்புவை அவர் உங்களுக்குப் பரிந்துரைப்பார்.

    *பிசிஓஎஸ் ஏற்படுத்தும் கூந்தல் உதிர்வு மற்றும் உடல் முழுவதுமான ரோம வளர்ச்சி என இரண்டு பிரச்னைகளையும் கட்டுப்படுத்துகிற சப்ளிமென்ட் ஒன்று உள்ளது. ட்ரைகாலஜிஸ்ட்டின் ஆலோசனையின் பேரில், இதை 6 வாரங்களுக்கு எடுத்துக் கொண்டால் நல்ல முன்னேற்றம் தெரியும். கர்ப்பிணிகளும் தாய்ப்பால் கொடுப்பவர்களும் மட்டும் இதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயோடின் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

    வெளிப்பூச்சுக்கு...

    *‘ஜோஜோபா ஆயில்’ என்கிற அரோமா ஆயில் கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. இது கூந்தல் உதிர்வை நிறுத்தி, புதிய முடிகளை வளரச் செய்யும். பிசிஓஎஸ் பிரச்னை உள்ள பல பெண்களுக்கு ஹைபோதைராய்டு பிரச்னையும் இருக்கிறது. அதுவும் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும். பிரச்னைக்கான வேர் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு சரியான சிகிச்சையையும் வாழ்க்கை முறையையும் பின்பற்றினாலே கூந்தல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து வெளியே வரலாம்.

    கீரைகள், காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் சோயா மில்க் போன்றவை கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள். ‘கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு அடர்த்தியான, அழகான தலைமுடி இருந்தது. சமீப காலமா தலைக்குக் குளிக்கிற போது, கொத்துக் கொத்தா முடி கொட்டுது. தலையில கை வச்சாலே நாலஞ்சு முடி கையோட வருது.

    பார்க்கிறதுக்கு என் முடி நல்லா இருக்கிற மாதிரிதான் தெரியுது. ஆனாலும், என்னால வித்தியாசத்தை உணர முடியுது...’ - இப்படி சொல்லிக் கொண்டு சிகிச்சைக்கு வருகிறவர்களை தினம் தினம் பார்க்கிறேன். இவர்களில் பலருக்கும் பிசிஓஎஸ் எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையே கூந்தல் உதிர்வுக்கான காரணமாக இருப்பதையும் பார்க்கிறேன். சினைப்பை நீர்க்கட்டிக்கும் கூந்தல் உதிர்வுக்கும் சம்பந்தம் உண்டா? இதுவே எல்லோரின் கேள்வியாகவும் இருக்கிறது.

    2.அழகா? பாதுகாப்பா?

    கூந்தல் நிபுணர் லலிதா ஃபெர்னாண்டஸ்

    நகரத்தில் நடக்கும் இருசக்கர வாகன விபத்துகளில் பாதிக்கும் மேல் ஹெல்மெட் அணியாததன் விளைவே என்கிறது புள்ளிவிவரம். காற்றைக் கிழிக்கிற வேகத்தில், ஆஸ்தான டூ வீலரில் சாலைகளில் பறக்கும் சாகசத்தை விரும்புகிற அனேக இளைஞர்களுக்கும் அந்த ஆசையின் பின்னால் உள்ள ஆபத்து புரிவதில்லை. ஹெல்மெட் அணிந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என கடைசி நொடியில் கைநழுவிப் போகிற எத்தனையோ உயிர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்.

    இறந்தவர்களின் உறுப்புகள் இன்னொருவருக்கு தானமாகப் போகிற சம்பவங்கள் நெகிழ வைக்கின்றன. தலைக்கவசம் உயிருக்கே கவசம் எனக் கூவிக் கூவி விழிப்புணர்வுப் பிரசாரம் செய்தும் நோ யூஸ்!இளைய தலைமுறையினர் ஹெல்மெட்டை தவிர்க்க முக்கிய காரணமாகக் காட்டுவது தலைமுடி. ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டும் வியர்வையும் பிசுக்கும் சேரும். ஹேர் ஸ்டைல் கலைந்து விடும்... இப்படி அதைத் தவிர்க்க ஆளுக்கொரு காரணம் வைத்திருக்கிறார்கள்.

    ‘‘அதெல்லாம் அவர்களை ஏமாற்றிக் கொள்ள அவர்களே சொல்லிக் கொள்கிற சாக்குகள்... மற்றபடி ஹெல்மெட் அணிவதால் கூந்தல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதில்லை. கொஞ்சம் கூடுதல் அக்கறை மட்டும் இருந்தால் அழகுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம்’’ என்கிறார் கூந்தல் நிபுணர் லலிதா ஃபெர்னாண்டஸ். ஹெல்மெட் அணிகிறவர்களுக்கான கூந்தல் ஆரோக்கிய டிப்ஸ் சிலவற்றை வலியுறுத்துகிறார் அவர்.

    *ஹெல்மெட் அணிவதற்கு முன்பாக தலையில் ஒரு காட்டன் ஸ்கார்ப் அல்லது தொப்பி அணியுங்கள். இந்த ஸ்கார்ப் அல்லது தொப்பியை தினமும் சுத்தமாக
    துவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

    *அதிக நேரம் அல்லது அதிக தூரம் டூவீலரில் பயணம் செய்ய வேண்டியவர்கள், ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று ஸ்கார்ப் வைத்துக் கொள்ளலாம். வியர்வையால் ஒன்று நனைந்து விட்டால், ஈரமில்லாத இன்னொன்றை உபயோகிக்கலாம். வியர்வையுடன் கூடிய ஸ்கார்பை உபயோகித்தால், அது கூந்தல் உதிர்வை அதிகப்படுத்தக் கூடிய ‘Seborrheic [COLOR=#009900 !important]dermatitis[/COLOR]’,
    பிரச்னைக்குக் காரணமாகி விடும்.

    *அதிக நேரம் ஹெல்மெட் உபயோகிக்கும் போது இடையிடையே சிறிது நேரம் அதைக் கழற்றி விட்டு, தலையில் காற்று படும்படி விடலாம்.

    * தினசரி ஹெல்மெட் உபயோகிப்பவர்கள் தினமுமோ, ஒருநாள் விட்டு ஒருநாளோ தலைக்குக் குளிக்க வேண்டியது அவசியம்.

    *தலைமுடியை முன்பக்கம் கவிழ்த்து, அடிப்பகுதியில் ஹேர் ஸ்பிரே அல்லது ட்ரை ஷாம்பு உபயோகித்து, கூந்தலை மறுபடி பின்னுக்குக் கொண்டு வந்து, அதன் பிறகு ஹெல்மெட் அணிந்து கொள்ளலாம்.

    *கூந்தலை விரித்தபடி டூவீலர் ஓட்டுவதைத் தவிர்க்கவும். கூந்தல் பகுதி முழுவதை யும் மூடும்படியான துணி அணிந்து, அதன் மேல் ஹெல்மெட் அணிவதன் மூலம் தூசும் மாசும் கூந்தலில் சேராமல் காக்க முடியும்.

    தினசரி ஹெல்மெட் உபயோகிப்பவர்கள் தினமுமோ, ஒருநாள் விட்டு ஒருநாளோ தலைக்குக் குளிக்க வேண்டியது அவசியம். கூந்தலை விரித்தபடி டூவீலர் ஓட்டுவதையும் தவிர்க்கவும்.

    நகரத்தில் நடக்கும் இருசக்கர வாகன விபத்துகளில் பாதிக்கும் மேல் ஹெல்மெட் அணியாததன் விளைவே என்கிறது புள்ளிவிவரம். காற்றைக் கிழிக்கிற வேகத்தில், ஆஸ்தான டூ வீலரில் சாலைகளில் பறக்கும் சாகசத்தை விரும்புகிற அனேக இளைஞர்களுக்கும் அந்த ஆசையின் பின்னால் உள்ள ஆபத்து புரிவதில்லை. ஹெல்மெட் அணிந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என கடைசி நொடியில் கைநழுவிப் போகிற எத்தனையோ உயிர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்.

    இறந்தவர்களின் உறுப்புகள் இன்னொருவருக்கு தானமாகப் போகிற சம்பவங்கள் நெகிழ வைக்கின்றன. தலைக்கவசம் உயிருக்கே கவசம் எனக் கூவிக் கூவி விழிப்புணர்வுப் பிரசாரம் செய்தும் நோ யூஸ்!இளைய தலைமுறையினர் ஹெல்மெட்டை தவிர்க்க முக்கிய காரணமாகக் காட்டுவது தலைமுடி. ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டும் வியர்வையும் பிசுக்கும் சேரும். ஹேர் ஸ்டைல் கலைந்து விடும்... இப்படி அதைத் தவிர்க்க ஆளுக்கொரு காரணம் வைத்திருக்கிறார்கள்.

    ‘‘அதெல்லாம் அவர்களை ஏமாற்றிக் கொள்ள அவர்களே சொல்லிக் கொள்கிற சாக்குகள்... மற்றபடி ஹெல்மெட் அணிவதால் கூந்தல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதில்லை. கொஞ்சம் கூடுதல் அக்கறை மட்டும் இருந்தால் அழகுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம்’’ என்கிறார் கூந்தல் நிபுணர் லலிதா ஃபெர்னாண்டஸ். ஹெல்மெட் அணிகிறவர்களுக்கான கூந்தல் ஆரோக்கிய டிப்ஸ் சிலவற்றை வலியுறுத்துகிறார் அவர்.

    *ஹெல்மெட் அணிவதற்கு முன்பாக தலையில் ஒரு காட்டன் ஸ்கார்ப் அல்லது தொப்பி அணியுங்கள். இந்த ஸ்கார்ப் அல்லது தொப்பியை தினமும் சுத்தமாக துவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

    *அதிக நேரம் அல்லது அதிக தூரம் டூவீலரில் பயணம் செய்ய வேண்டியவர்கள், ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று ஸ்கார்ப் வைத்துக் கொள்ளலாம். வியர்வையால் ஒன்று நனைந்து விட்டால், ஈரமில்லாத இன்னொன்றை உபயோகிக்கலாம். வியர்வையுடன் கூடிய ஸ்கார்பை உபயோகித்தால், அது கூந்தல் உதிர்வை அதிகப்படுத்தக் கூடிய ‘Seborrheic dermatitis’, பிரச்னைக்குக் காரணமாகி விடும்.

    *அதிக நேரம் ஹெல்மெட் உபயோகிக்கும் போது இடையிடையே சிறிது நேரம் அதைக் கழற்றி விட்டு, தலையில் காற்று படும்படி விடலாம்.

    *தினசரி ஹெல்மெட் உபயோகிப்பவர்கள் தினமுமோ, ஒருநாள் விட்டு ஒருநாளோ தலைக்குக் குளிக்க வேண்டியது அவசியம்.

    *தலைமுடியை முன்பக்கம் கவிழ்த்து, அடிப்பகுதியில் ஹேர் ஸ்பிரே அல்லது ட்ரை ஷாம்பு உபயோகித்து, கூந்தலை மறுபடி பின்னுக்குக் கொண்டு வந்து, அதன் பிறகு ஹெல்மெட் அணிந்து கொள்ளலாம்.

    *கூந்தலை விரித்தபடி டூவீலர் ஓட்டுவதைத் தவிர்க்கவும். கூந்தல் பகுதி முழுவதை யும் மூடும்படியான துணி அணிந்து, அதன் மேல் ஹெல்மெட் அணிவதன் மூலம் தூசும் மாசும் கூந்தலில் சேராமல் காக்க முடியும்.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 20th Mar 2015 at 04:06 PM.
    jv_66 and sarjana ul like this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    கூந்தல் -1 கர்ப்ப கால மாற்றங்கள்


    ‘ஐ’ படத்தில் ஒரு காட்சி... கண்ணாடியைப் பார்த்து தலையை சீவும் விக்ரமுக்கு, கொத்து முடி சீப்போடு வரும். வழுக்கை தெரியும். அதிர்ச்சியில் உறைவார் ஹீரோ. முடி உதிர்வு என்பது எல்லோருக்கும் சகஜமே. ஆனால், அது அளவு கூடும்போது எங்கேயோ ஏதோ கோளாறு என மண்டைக்குள் மணி அடிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படித்தான்.


    பிரசவத்துக்குப் பிறகான கூந்தல் உதிர்வு என்பதை அனேகமாக எல்லா பெண்களுமே உணர்வார்கள்.

    ‘உன்னை மாதிரியே மண்டை கொள்ளாத முடியோட குழந்தை பிறந்திருக்கு...’ என பிறந்த குழந்தையைப் பாராட்டும் போது பெருமையாக உணர்கிற அம்மாக்கள், அடுத்த 3ம் மாதம் மண்டை தெரிகிற அளவுக்கு முடி உதிர்வதைப் பார்க்கிற போது அதிர்ச்சி அடைவார்கள்.உச்சி முதல் நகக் கண் வரை ஒவ்வொரு உறுப்பிலும் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிற பருவம் கர்ப்ப காலம். எல்லா மாற்றங்களுமே மாறுதலுக்குட்பட்டவையே. சீக்கிரமே சகஜ நிலைக்குத் திரும்பக் கூடியவைதான்.

    ஆனாலும், ஒரு விஷயம் கர்ப்பிணிகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தக் கூடியது. அதுதான் கூந்தல் உதிர்வு. கர்ப்பத்தின் போதும் பிரசவமான உடனேயும் பெரும்பாலான பெண்கள் கூந்தல் உதிர்வை சந்திக்கிறார்கள். அதன் காரணங்கள், தீர்வுகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா.‘‘கர்ப்ப காலத்தில் கூந்தலில் உண்டாகிற மாற்றங்கள் ரொம்பவும் இயல்பானது. சில பெண்களுக்கு கூந்தல் வழக்கத்தைவிட அதிகம் வறண்டு, பொலிவிழந்து காணப்படும்.

    சிலருக்கு இதற்கு நேரெதிராக திடீரென கூந்தல் ஆரோக்கியமாக மாறுவதையும் பார்க்கலாம். ஒரு சிலருக்கு எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருக்கலாம். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடலாம். ஒருவருக்கே கூட முதல் பிரசவத்தில் ஒரு மாதிரியும், அடுத்த பிரசவத்தில் வேறு மாதிரியும் இருக்கலாம். பொதுவாக கர்ப்பத்தின் கடைசி 3 மாதங்களில் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதாகவே பலரும் உணர்கிறார்கள். இவை எல்லாவற்றுக்குமே காரணம் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள்.

    கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் கூந்தல் வழக்கத்தைவிட அதிக அடர்த்தியாக இருக்கும். கூந்தலானது மாதத்துக்கு அரை இஞ்ச் அளவே வளரக்கூடியது. கூந்தலின் வளர்ச்சியிலும் அடர்த்தியிலும் வியத்தகு மாற்றத்தை உணர ஒரு வருடமாவது தேவை. கர்ப்பத்தின் முதல் 3 மாத கூந்தல் வளர்ச்சிக்குக் காரணம் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் சுரப்பும், குறைகிற ஆன்ட்ரோஜென் சுரப்பும். இதன் காரணமாக கூந்தலின் வேர்ப் பகுதிகளில் சீபம் என்கிற எண்ணெய் சுரப்பானது குறைந்து, கூந்தல் முன்னைவிட அடர்த்தியாக இருப்பது போலத் தெரியும். இது பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தாலும் சீபம் குறைவதன் காரணமாக கூந்தல் வறட்சியும் அதிகமாகும். எனவே, கூந்தலை வறண்டு போகச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

    சொரியாசிஸ் பிரச்னை இருக்கும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அது திடீரென காணாமல் போகலாம். அதுவும் தற்காலிகமானதே. பிரசவமானதும் அந்தப் பிரச்னை மீண்டும் திரும்பும்.
    கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அதிகரிப்பதன் காரணமாக கூந்தலானது வளர்ச்சி நிலையான அனாஜனில் அதிக நாட்கள் இருக்கும். அதனாலும் கூந்தல் வளர்ச்சி அதிகரித்தது போலத் தெரியலாம்.
    பிரசவத்துக்குப் பிறகான கூந்தல் உதிர்வு என்பதை அனேகமாக எல்லா பெண்களுமே உணர்வார்கள்.

    குழந்தை முகம் பார்த்து சிரிக்க ஆரம்பிக்கிற 3ம் மாதம் அப்படித்தான் முடி கொட்டும் எனப் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கலாம். இதற்குக் காரணமும் அதே ஹார்மோன் மாறுதல்கள்தான். பிரசவத்துக்கு முன்பு உச்சத்தில் இருந்த ஹார்மோன்கள் எல்லாம் குழந்தை பிறந்ததும் பழைய நிலைக்குத் திரும்பத் தொடங்குவதே காரணம். கர்ப்ப காலத்தில் உதிர வேண்டிய முடிகள், பிரசவத்தின் போது மொத்தமாக கொட்டுவதைப் பார்க்கலாம்.

    கூந்தலின் நுண்ணறைகள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும் வேலையை முழுமையாகச் செய்து முடிக்கிற வரை, அதாவது, பிரசவத்தை அடுத்த 3-4 மாதங்களுக்கு இந்த முடி உதிர்வு சற்றே தீவிரமாகத்தான் இருக்கும். கொத்துக் கொத்தாக கையோடும் சீப்போடும் பிடுங்கிக் கொண்டு வருகிற முடிக் கற்றைகளைப் பார்த்துப் பயப் படத் தேவையில்லை. அது தற்காலிகப் பிரச்னையே... சில வாரங்களில் சரியாகி விடும்.

    கர்ப்பம் என்றில்லாமல் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்புடன் தொடர்புடைய வேறு சில நிகழ்வுகளின் போதும் முடி உதிர்வுப் பிரச்னையை உணர்வார்கள் பெண்கள். ஹார்மோன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதை திடீரென நிறுத்தும் போதும், கருக்கலைப்பின் போதும், உடலில் உண்டாகிற ஹார்மோன் சமநிலையின்மையின் போதும் முடி உதிர்வு அதிகரிக்கலாம்.

    கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வைக் கண்டு பயந்து, அதை சரி செய்கிற முயற்சிகளாக கெமிக்கல் சிகிச்சைகளைச் செய்யக் கூடாது. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் மற்றும் ஃபோலிக் ஆசிட், புரதம், தாதுச் சத்துகள் அடங்கியசப்ளிமென்ட்டுகளையும், காய்கறிகள், கீரைகள், பழங்களையும் சேர்த்துக் கொண்டாலே போதும்...’’

    டாக்டர் சந்திரலேகா

    2. கூந்தல் உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்

    வறண்ட மைதானம்

    போன்றிருக்கிற மண்டையில் விளைச்சலைப் போல முடி வளரச் செய்கிற மாய வித்தையெல்லாம் நிஜத்தில் சாத்தியமே இல்லை. என்னதான் காஸ்ட்லியான எண்ணெயும் ஷாம்புவும் உபயோகித்தாலும் உள்ளுக்குப் போகிற உணவில் போஷாக்கில்லை என்றால், மண்டை மைதானமாவதைத் தடுக்க முடியாது.

    என்றோ ஒருநாள் முடி உதிரும் போது அடுத்த 2 நாட்களுக்கு கறிவேப்பிலையை மேய்வதும், கீரை ஆகாரம் உண்பதும் எல்லோரும் செய்கிறவைதான். அதிகபட்சமாக ஒரு வாரம் தாக்குப்பிடித்தாலே பெரிது. மெல்ல மெல்ல சோம்பேறித்தனம் தலைதூக்க,உணவுப்பட்டியலில் இருந்து கறிவேப்பிலையும் கீரையும் காணாமலே போகும்.

    அழகுக்கலை நிபுணர் ஷீபாதேவி

    கறிவேப்பிலையிலேயே முழு உணவாகச் செய்து சாப்பிடாவிட்டாலும், குழம்பு, ரசம், பொரியலில் சேர்க்கிற இலைகளையாவது ஒதுக்காமல் உண்ணப் பழகலாமே!

    ‘தினமுமே சில உணவுகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளப் பழகினால் கூந்தல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நிரந்தரமாகத் தப்பிக்கலாம்’’ என்கிறார் அழகுக் கலை நிபுணர் ஷீபாதேவி. அவர் சொல்கிற சில கூந்தலைப் பாதுகாக்கும் உணவுகள் இதோ...

    *பொன்னாங்கண்ணி கீரையை மதிய உணவுக்கு பொரியல் செய்து சாப்பிடவும்.

    *செம்பருத்திப்பூவை அரைத்து தோசை மாவில் கலந்து செய்து சாப்பிடவும்.

    *அரைக்கீரை கூட்டு செய்து காலை மற்றும் மதிய உணவில் சேர்த்துக் கொள்ளவும் (கூந்தலுக்கு இரும்புச்சத்து கொடுக்கும்).

    *வல்லாரை கீரையை சப்பாத்தி மாவு, அரிசி மாவு இதனுடன் கலந்து காலை அல்லது இரவு உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

    *கறிவேப்பிலையிலேயே முழுஉணவாகச் செய்து சாப்பிடாவிட்டாலும், குழம்பு, ரசம், பொரியலில் சேர்க்கிற இலைகளையாவது ஒதுக்காமல்உண்ணப் பழகலாம்.

    *வாரத்தில் ஒரு நாளாவது கார்போக அரிசி சாதம் வடித்து சாப்பிடவும்.

    *நில ஆவாரை, துவரம் பருப்பு, தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.

    * சோற்றுக்கற்றாழை சாறுகுடிக்கலாம்.

    *முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து அப்படியே மென்று சாப்பிடலாம்.

    *கீழாநெல்லி சாறு 1 டீஸ்பூன் எடுத்து அதனுடன் தயிர், சிறிது அளவு உப்பு சேர்த்து குடிக்கவும்.

    *நாட்டு மருந்துக் கடைகளில் திரிபலா தூள் கிடைக்கும். தண்ணீரில் 1 டீஸ்பூன் திரிபலா தூள் கலந்து அந்த நீரை குடிக்கவும்.

    *குப்பைமேனி, பருப்புடன் கலந்து கூட்டு செய்து சாப்பிடவும்.

    *முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

    *பயத்தம் பருப்பு, பசலைக்கீரை, வெந்தயம் ஆகியவற்றை வேக வைத்து கூட்டு செய்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடவும்.

    *துளசிச் சாறு எடுத்து 1 டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

    *2 நெல்லிக்காயை மிக்ஸியில் அரைத்து தேன் கலந்து குடிக்கவும்.

    *அறுகம்புல் சாற்றில் தேன் கலந்து குடிக்கவும்.

    *வல்லாரைக் கீரையில் சாறு எடுத்து எலுமிச்சைச்சாறும் தேனும் கலந்துகுடிக்கவும்.

    *தினமும் 1 ஆப்பிள் சாப்பிடவும்.

    *பால், முட்டை, மீன் இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.

    *முளைக்கட்டிய கருப்புக் கொண்டைக் கடலையை வேக வைத்து மாலையில் எடுத்துக் கொள்ளவும்.

    *தினமும் இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிடவும்.

    *குழம்பில் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்ளவும். நாவல்பழம் சாப்பிடவும்.

    *சர்க்கரை தவிர்த்து வெல்லம், பனைவெல்லம் கலந்த உணவு சாப்பிடவும்.


    Last edited by chan; 21st Mar 2015 at 12:46 PM.
    jv_66 and sarjana ul like this.

  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    1. அகத்தின் அழகு முடியிலும் தெரியும்!

    ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்
    அழகு என்பது அகம் மற்றும் புறம் என இரண்டும் சார்ந்தது. இரண்டில் ஒன்று குறைந்தாலும் முழுமையான அழகு சாத்தியமில்லை. வெளிப்புற அழகு என்பது சரியான உடல் அளவு, ஆரோக்கியமான கூந்தல் மற்றும் சருமம் என எல்லாம் சேர்ந்தது. அக அழகு என்பது அழகான உணர்வுகள், திருப்தியான மனநிலை, தூய்மையான எண்ணங்கள் மற்றும் அமைதி ஆகியவற்றால் வருவது. அகமும் புறமும் சேர்ந்தால்தான் அழகு முழுமையாகிறது என்று சொல்லப்படுவது இதனால்தான். அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல... முடியிலும் தெரியும்!


    மன உளைச்சல் இருந்தால் முடி கொட்டும். முடி கொட்டுவதாலும் மன உளைச்சல் உண்டாகும். அது கூந்தல் உதிர்வுப் பிரச்னையை இன்னும் தீவிரமாக்கும்.முடி உதிர்வு என்பது இன்று சிறு வயதினரைக் கூட விட்டு வைப்பதில்லை. காரணம், ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம்.‘சின்னப் பசங்களுக்கு என்ன டென்ஷனும் ஸ்ட்ரெஸ்சும் இருக்கப் போகுது?’ எனப் பலரும் நினைக்கலாம். பதற்றம், பயம், படபடப்பு, திடீர் அதிர்ச்சி என சிறு வயதுப் பிள்ளைகளின் மனக் கவலைக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஸ்ட்ரெஸ் ஏற்படுகிற போது அது சருமத்தையும் மண்டையையும் பெரியளவில் பாதிக்கும். கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டங்களின் சப்ளையையும் இது பாதிக்கும். அதனால் கூந்தலின் வேர்கள் பலமிழந்து உதிர ஆரம்பிக்கும்.

    மன அழுத்தம் அதிகமாவதன் விளைவால் ஏற்படுகிற முடி உதிர்வுப் பிரச்னைகளை மூன்றாக வகைப்படுத்தலாம். அவை...1. அலோபேஷியா அரியேட்டாஅலோபேஷியா அரியேட்டா எனப்படுகிற மிக முக்கியமான முடி உதிர்வுப் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனாலும், அவற்றில் முதலிடம் ஸ்ட்ரெஸ்சுக்கு. இந்தப் பிரச்னையில் ரத்த வெள்ளை அணுக்கள் ஃபாலிக்கிள் எனப்படுகிற கூந்தலின் வேர்ப்புடைப்புப் பகுதியைத் தாக்கி, கூந்தல் வளர்ச்சியைத் தடை செய்வதுடன், முடி உதிர்வையும் ஆரம்பித்து வைக்கும்.

    2. டெலோஜன் எஃப்ளுவியம்

    இந்தப் பிரச்னை குறித்து நாம் ஏற்கனவே முந்தைய இதழில் பார்த்திருக்கிறோம். டெலோஜன் எஃப்ளுவியம் என்கிற நிலையில் அதீத மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, வளரும் நிலையில் உள்ள ஏராளமான முடிக் கற்றைகள், உதிர்வதற்கு முன்பான ஓய்வுநிலைக்குத் தள்ளப்படும். அதனால்தான் அதிக டென்ஷன், கவலையில் இருக்கும் நாட்களைத் தொடர்ந்து முடி உதிர்வும் அதிகரிப்பதை உணரலாம். சாதாரணமாக தலையை வாரும் போதும் தலை குளிக்கும் போதும் கொத்துக் கொத்தாக முடி உதிர்வதெல்லாம் இந்தப் பிரச்னையால்தான்!

    3. ட்ரைக்கோடில்லோமேனியா

    இது ஒரு விசித்திரமான பிரச்னை. தலைமுடியையும், புருவங்களில் உள்ள முடியையும் மற்றும் உடலில் எங்கு முடிகள் இருந்தாலும், அதைப் பிடித்து இழுத்துப் பிடுங்க நினைக்கிற மனநிலையே ட்ரைக்கோடில்லோமேனியா. இதுவும் அதீத மன அழுத்தத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைதான். நெகட்டிவ் எண்ணங்கள், மன உளைச்சல், படபடப்பு, தோல்வி, தனிமை, அதீத களைப்பு, விரக்தி மனநிலை போன்றவை ஏற்படுகிற போது, முடிகளைப் பிடுங்கி எறிய ஒரு உந்துதல் உண்டாகும். மனநலப் பிரச்னைக்கு சிகிச்சை மேற்கொள்ளாத வரை, இவர்களது முடி உதிர்வுப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காது.

    மன அழுத்தத்தால் உண்டாகிற முடி உதிர்வுப் பிரச்னையானது நிரந்தரமானது அல்ல. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, அமைதியாக இருக்கப் பழகினாலே, கூந்தல் வளர்ச்சி சீராகும். கூந்தல் பிரச்னைகள் தொடர்பான சந்தேகங்களை கூந்தல் விஞ்ஞானம் தெரிந்த ட்ரைகாலஜிஸ்ட்டுகளிடம் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். திடீரென கூந்தல் உதிர்வு ஏற்படும் போது, அது மண்டையில் ஆங்காங்கே திட்டுத்திட்டாக ஏற்படுகிறதா அல்லது தலைவாரும் போதும் குளிக்கும் போதும் வழக்கமாக உதிர்வதை விட அதிகமாகத் தெரிகிறதா எனப் பார்த்து ட்ரைகாலஜிஸ்ட்டிடம் சொல்ல வேண்டும்.

    பல நேரங்களில் இப்படி திடீரென உண்டாகிற அசாதாரண முடி உதிர்வானது, உடம்புக்குள் எங்கேயோ, ஏதோ பிரச்னை என்பதற்கான அறிகுறியாகவும், உடனடி கவனிப்பு தேவை என்பதற்கான எச்சரிக்கையாகவும் இருக்கலாம். முடி உதிர்வுக்கான காரணம் அறிந்து, அதற்கான சிகிச்சைகளை பரிந்துரைப்பார். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உங்கள் முயற்சிகள் தோல்வி அடைந்தால், அதற்கும் மருத்துவ உதவியை நாடலாம்.

    தீர்வுகள்...

    *மன உளைச்சலுக்கும் முடி உதிர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு எனப் பார்த்தோம் இல்லையா? அதாவது, மன உளைச்சல் இருந்தால் முடி கொட்டும். முடி கொட்டுவதாலும் மன உளைச்சல் உண்டாகும். அது கூந்தல் உதிர்வுப் பிரச்னையை இன்னும் தீவிரமாக்கும்.

    *குறைந்த அளவு முடி உதிர்தலுக்கு மருத்துவ சிகிச்சைகள் எதுவும் தேவையிருக்காது. சில நேரங்களில் மன உளைச்சலால் முடி உதிர்வதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், அதன் பின்னணியில் வேறு காரணம் ஏதாவது இருக்கும். எனவே முடி உதிர்வு ஒரு அளவைத் தாண்டும் போது ட்ரைகாலஜிஸ்டை சந்திப்பது நல்லது.

    *மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டாலே முடி உதிர்வும் கட்டுக்குள் வரும்.

    2. முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள் 10

    அழகுக்கலை நிபுணர் ஷீபாதேவி
    கூந்தல் வறண்டிருந்தால் உடைந்து உதிரும். கூந்தல் வறட்சிக்குப் பல காரணங்கள் உள்ளன. வறட்சியில்லாத மென்மையான கூந்தல்தான் பார்வைக்கும் அழகு. பராமரிக்கவும் எளிது. கூந்தல் வறட்சிக்கு கெமிக்கல் கலந்த சிகிச்சைகளை முயற்சி செய்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே எளிமையான வழிகளைப் பின்பற்றலாம். அப்படிச் சில வழிகள் இதோ...

    செம்பருத்திப்பூ, இலை, பூங்கங்காய், வேப்பிலை, வெந்தயம், கற்றாழை ஆகியவற்றை கைப்பிடி அளவு எடுத்து, இடித்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இதுதான் இயற்கை ஷாம்பு!

    1. செம்பருத்திப்பூ, இலை, பூங்கங்காய், வேப்பிலை, வெந்தயம், கற்றாழை ஆகியவற்றை கைப்பிடி அளவு எடுத்து, இடித்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். ஆறிய பிறகு வடிகட்டி தலைக்கு ஷாம்புவுக்கு பதில் உபயோகிக்கலாம். இந்த இயற்கை ஷாம்பு, கூந்தலின் வறட்சியை நீக்கி, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.

    2. கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியையும்(நன்கு அலசி சுத்தப்படுத்தியது), செம்பருத்திப் பூக்களையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து அரைத்து சிறிது நல்லெண்ணெய் கலந்து தலையில் பேக் மாதிரி தடவி, 20 நிமிடங்கள் ஊறியதும், கூந்தலை அலசவும்.

    3. வாழைப்பழத்தை அரைத்து தலையில் தடவி, வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் ஒத்தடம் கொடுக்கவும். 20 நிமிடம் கழித்து கூந்தலை அலசவும். இது கூந்தல் வறட்சிக்கு மிகச் சிறந்த இயற்கை ஸ்பா. எலுமிச்சைப் பழச்சாறு அல்லது கருப்பு வினிகர் கலந்த தண்ணீரில் தலையை அலசவும்.

    4. முட்டையின் வெள்ளைக்கரு, பால் ஏடு இரண்டையும் ஒன்றாக கலந்து நன்கு அடித்துக் கொள்ளவும். கூந்தலை சின்னச் சின்ன பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, தடவவும். 15 நிமிடங்களுக்கு பிறகு கூந்தலை அலசவும்.

    5. ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, கூந்தலில் மசாஜ் செய்து வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் ஒத்தடம் கொடுத்து
    அலசினால் கூந்தல் வறட்சி நீங்கி, மென்மையாகும்.

    6. பப்பாளியை நன்றாக கூழாக்கி, பேக் மாதிரி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு நிறைய தண்ணீர் விட்டு அலசினால், கூந்தல் பளப்பாகவும் மிருதுவாகவும்
    இருக்கும்.

    7. முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊற வைக்கவும். மறுநாள் அதை அரைத்து தயிருடன் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு இயற்கை ஷாம்பு உபயோகித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் அலசவும்.

    8. செம்பருத்தி, வேப்பிலை, புதினா ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். ஆறிய பிறகு இதைக் கசக்கினால் கொழ கொழவென்று வரும். அதை நன்றாக கலந்து தலையில் மண்டைப் பகுதியிலிருந்து நுனி வரை நன்கு தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு அலசவும். இதனால் தலைமுடி மிருதுவாவதுடன் அரிப்பு, பொடுகு, முடி உதிர்வும் நிற்கும்.

    9. ஆமணக்கு எண்ணெயில், கற்றாழையின் நடுவில் இருக்கும் ஜெல்லை எடுத்து ஊற வைக்கவும். அதை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பது முடி உதிர்வு மற்றும் வறட்சிக்கு மிகச் சிறந்த மருந்தாக வேலை செய்யும்.

    10. மிளகு, வெற்றிலை, கறிவேப்பிலை இந்த மூன்றையும் அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவி வெதுவெதுப்பான தண்ணீரல் அலசவும். பேன், பொடுகு நீங்குவதுடன் தலைமுடி பட்டு போல மாறும்.


    Last edited by chan; 23rd Mar 2015 at 01:35 PM.
    jv_66 and sarjana ul like this.

  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    1. உங்கள் கூந்தல் எந்த வகை?

    ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

    ஹேர் ஆயில் மற்றும் ஷாம்பு விளம்பரங்களில் தோன்றுகிற மாடல்களின் கூந்தல் போல அலை அலையான, பட்டுப் போன்ற கூந்தலைப் பெற எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால், பலருக்கும் கூந்தல் அப்படி அமைவதில்லை.

    கூந்தலின் தன்மை என்பது பாரம்பரியத் தன்மையைப் பொறுத்தது. கூந்தலின் வளர்ச்சியில் பாரம்பரியத் தன்மையைத் தவிர, உணவு, பராமரிப்பு போன்றவற்றுக்கும் பங்குண்டு. கூந்தலின் தன்மை என்பது பெரும்பாலும் பரம் பரைத் தன்மையைப் பொறுத்ததே. சுருள் சுருளாக அடர்த்திக்கூந்தலோ,அடங்காத முரட்டுக் கூந்தலோ, சொன்னபடியெல்லாம் கேட்கும் அழகுக் கூந்தலோ... எதுவானாலும் அதன் பின்னணியில் பாரம்பரியத்துக்குப் பெரும் பங்கு உண்டு.

    சாதாரணக் கூந்தல், வறண்ட கூந்தல் மற்றும் எண்ணெய் பசையான கூந்தல் என கூந்தல் 3 வகைப்படும். உங்கள் கூந்தல் எந்த வகை என்பதை நீங்களாகவே கண்டுபிடிக்கலாம்.

    எப்படி?

    தலைக்குக் குளித்ததும் ஈரம்போகத் துடைத்த கூந்தலை 2 நாட்களுக்கு அப்படியே விட்டுவிடவும். அதாவது, அந்தக்கூந்தலில் எண்ணெய் வைக்காமல், மறுபடி தலைக்குக் குளிக்காமல் இருக்கவும். 3வது நாள் உங்கள் கூந்தலைப் பாருங்கள். விரல்களை கூந்தலின் இடையே நுழைத்துக் கோதி விடுங்கள். பிசுபிசுப்புத் தன்மையோ, வறட்சியோ தெரியாமல், கூந்தல் சுத்தமாக இருப்பது போலத் தோன்றினால்உங்களுடையது சாதாரணக் கூந்தல்.விரல்களை நுழைத்துப் பார்க்கும் போது, கூந்தல் கரடுமுரடாகக் காணப்பட்டாலும், நகங்களில் வெள்ளைத் துகள்கள் தென்பட்டாலோ, பொடுகு மாதிரி உதிர்ந்தாலோ உங்களுக்கு இருப்பது வறண்ட கூந்தல்.

    கூந்தலில் எந்தப் பொலிவும் இல்லாமல், பளபளப்பே இல்லாமல் காணப்படும்.எண்ணெயே தடவாமல், எண்ணெய் பசை தென்படும். விரல்களில் வெள்ளையான பிசுபிசுப்பான பசைத் தன்மை தெரியும்.அப்படியென்றால் உங்களுடைய கூந்தல் எண்ணெய் பசையானது.கூந்தல் எப்போதும் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பருவநிலை மாற்றங்களுக்கேற்பவும் கூந்தலின் தன்மை மாறும். குளிர்காலத்தில் வறண்டிருக்கும். வெயில் காலத்தில் எண்ணெய் பசையுடன் இருக்கும். சாதாரண கூந்தல் உள்ளவர்கள்...

    தினமுமோ, ஒரு நாள் விட்டு ஒருநாளோ கூந்தலை அலசலாம். சாதாரணக் கூந்தலுக்கான கண்டிஷனர் மட்டுமே உபயோகிக்க வேண்டும். தினமும் 2 - 3 முறை பிரஷ் செய்ய வேண்டும். அது மண்டைப்பகுதியில் உள்ள எண்ணெய் சுரப்பிகளைத்தூண்டிவிடும்.

    அளவுக்கு அதிகமாக தலைக்குக் குளிப்பதை தவிர்த்தல் நல்லது. அது அவர்களின் மண்டைப் பகுதியில் உள்ள இயற்கையான எண்ணெயை நீக்கி, சாதாரண கூந்தல் வறண்ட கூந்தலாக மாறக் காரணமாகி விடும். வறண்ட கூந்தல் உள்ளவர்கள்...

    தலை குளிப்பதிலேயே இவர்கள் கவனம் காட்ட வேண்டும். நன்றாக, சுத்தமாகக் குளிப்பதாக நினைத்துக் கொண்டு நிறையஷாம்புவை எடுத்து, தலையில் பரபரவெனத் தேய்த்துக் குளிப்பார்கள் சிலர். அப்படிச் செய்வதன் மூலம் மண்டைப் பகுதியில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை நீங்கி, கூந்தல் மேலும் வறண்டு போகும்.

    சீக்கிரமே கூந்தலின் நுனிகள் பிளவு பட்டு, உடைந்து, உதிரும். தினசரி தலை குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். தலை குளிப்பதற்கு முன் மிதமான ஆயில் மசாஜ் செய்துவிட்டு, வறண்ட கூந்தலுக்கான ஷாம்புஉபயோகித்து கூந்தலை அலசலாம்.

    எண்ணெய் பசையான கூந்தல் உள்ளவர்கள்...ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூந்தலைஅலசலாம். இவர்களது கூந்தல் சீக்கிரமே பிசுபிசுப்படையும். அதிகப்படியாக சுரக்கும் எண்ணெயை நீக்கும்படி, கூந்தலை முறையாக அலசி சுத்தப்படுத்தாவிட்டால், கூந்தலின் வேர்ப்பகுதிகள் அடைத்துக் கொள்ளும். அதன் தொடர்ச்சியாக தொற்று ஏற்படும். தேவையில்லாமல் கூந்தலுக்கு எண்ணெய் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    கூந்தல் எப்போதும் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பருவநிலை மாற்றங்களுக்கேற்பவும் கூந்தலின் தன்மை மாறும். குளிர் காலத்தில் வறண்டிருக்கும். வெயில் காலத்தில் எண்ணெய் பசையுடன் இருக்கும்.

    2. கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை

    அழகுக்கலை நிபுணர் ஹசீனா சையத்

    சாதாரண கூந்தலுக்கு...இந்த வகைக் கூந்தலுக்கு அதிக மெனக்கெடல் தேவையிருக்காது. தினசரி கவனிப்பே போதுமானது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் தலா 2 டீஸ்பூன் எடுத்து, வெதுவெதுப்பாக்கவும். அதில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் பால் விடவும். உடனே திரிந்த மாதிரி வரும். இந்தக் கலவையை மண்டைப் பகுதியில் வேர்க்கால்களில் படும்படி தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். தண்ணீரில் 10 மருதாணி இலைகளைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

    அதில் சுத்தமான டவலை நனைத்துப் பிழிந்து, தலையைச் சுற்றிக் கட்டிக் கொள்ளவும். மருதாணி இலை, கூந்தலை கண்டிஷன் செய்யும். நான்கைந்து முறை இப்படி டவல் கட்டி எடுத்து, பிறகு வழக்கமாக உபயோகிக்கிற ஷாம்பு அல்லது சீயக்காய் உபயோகித்து கூந்தலை அலசவும்.

    முதல் நாள் இரவே 1 கைப்பிடி அளவு சீயக்காய், 2 பூந்திக் கொட்டை, 1 டீஸ்பூன் வெந்தயம் மூன்றையும் சிறிது தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரை மட்டும் தலையை அலச ஷாம்பு மாதிரிப் பயன்படுத்தலாம்.

    எண்ணெய் பசையான கூந்தலுக்கு...நெல்லிக்காய் எண்ணெய் (ஆம்லா ஆயில்) 2 டீஸ்பூன், ஆலிவ் ஆயில் 2 டீஸ்பூன், பாதாம் ஆயில் 1 டீஸ்பூன் மூன்றையும் ஒன்றாகக் கலந்து வெதுவெதுப்பாக்கி, தலையில் தடவி மிதமான மசாஜ் கொடுக்கவும்.

    2 டேபிள்ஸ்பூன் மருதாணி விழுது, 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி, அரை டீஸ்பூன் துளசி விழுது சேர்த்துக் குழைத்து தலையில் பேக் மாதிரிப் போட்டு, அதே விழுதை முடிக் கற்றைகளில் படும்படி நுனி வரை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து அலசலாம்.

    வறண்ட கூந்தலுக்கு...

    பாதாம் எண்ணெய் 2 டீஸ்பூன், ஹென்னா ஆயில் (மருதாணி எண்ணெய்) 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் சேர்த்து வெதுவெதுப்பாக சூடாக்கவும். வறண்ட கூந்தல் உள்ளவர்களுக்கு எவ்வளவு எண்ணெய் வைத்தாலும் உறிஞ்சிக் கொள்ளும்.

    சிறிது எண்ணெயை முடிக் கற்றைகளிலும் நுனி வரை தடவி, பின்னல் போட்டு, ஒரு ரிப்பன் வைத்து மடித்துக் கட்டி 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கூந்தலைப் பிரித்து, அதே எண்ணெய் கலவையை மறுபடி விரல்களால் தொட்டு, கோதிவிட்டு, வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவல் கட்டி, ஸ்டீம் கொடுக்கவும்.

    சிறிது வேப்பிலை, 1 டீஸ்பூன் வெந்தயம், 1 டேபிள்ஸ்பூன் தயிர் கலந்து தலைக்கு பேக் போட்டு, ஊற வைத்துக் குளிக்கவும். விருப்பமுள்ளோர் முட்டையின் வெள்ளைக் கருவை இதில் கலந்து கொள்ளலாம்.தலைக்கு பேக் போடும் போது, அதை நிறைய தண்ணீர் விட்டு நன்கு அலச வேண்டும். சிறிது பேக் மிச்சமிருந்தாலும் அது பொடுகுக்கும் அரிப்புக்கும் காரணமாகலாம்.

    Last edited by chan; 24th Mar 2015 at 02:42 PM.
    jv_66 and sarjana ul like this.

  5. #5
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    குழந்தைகளின் முடி வளர்ச்சி

    குழந்தைகள் தாயின் வயிற்றிலிருந்து வெளி உலகத்துக்கு வரும் முன்பே, அவர்களுக்கு முடி வளர்ச்சி ஆரம்பித்து விடும். 14 வாரக் கருவாக இருக்கும் போதே, கருவின் முகம் மற்றும் உடல் முழுவதும் மெல்லிய ரோமப் படலம் தென்பட ஆரம்பிக்கும். 30வது வாரத்தில் குழந்தையின் தலையில் முடி வளர்ச்சி ஆரம்பிக்கும். 32 வாரங்களில் அதன் கண் இமைகளும் புருவங்களும் வளர ஆரம்பிக்கும். குழந்தையின் உடலைப் போர்த்திய மெல்லிய ரோமப் படலமானது, அது தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்ததுமே உதிர்ந்து விடும்.


    குழந்தைகளுக்குக் கூட முடி உதிர்வு இருக்கும் என்றால் நம்புவீர்களா? ஆமாம்... குழந்தை பிறப்பதற்கு முன்பே கூட இந்த முடி உதிர்வு இருக்கலாம். அதன் விளைவாக குழந்தை முடியில்லாமல் பிறக்கலாம்.

    ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

    சில குழந்தைகள் பிறக்கும்போதே கருகருவென தலை நிறைய முடியுடன் இருப்பார்கள். இன்னும் சிலரோ மண்டையில் முடியே இல்லாமலும் பிறக்கலாம். இரண்டுமே சகஜம் தான். இந்த முடி உதிரப்போவது உறுதியான, இயற்கையான ஒரு நிகழ்வுதான் என்பதால் அது குறித்து பயப்படத் தேவையில்லை. அப்படி உதிர்கிற இடத்தில் புதிதாக முடி வளரத் தொடங்கும். குழந்தைக்கு 6 மாதமாகும் போது, அதன் மண்டையில் முதிர்ந்த முடிகள் வளர ஆரம்பிக்கும்.

    குழந்தைப் பருவத்தில் காணப்படுகிற முடி வளர்ச்சியை வைத்து, அதன் எதிர்கால முடி வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். குழந்தைகளின் முடி வளர்ச்சியானது, ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு மாற்றத்தை சந்தித்தபடி இருக்கும்.

    குழந்தையின் முடி வளர்ச்சி என்பது கருவிலிருக்கும் போதான நிலை, பிரசவத்துக்குப் பிறகான நிலை என 2 கட்டங்களைக் கொண்டது. பிரசவத்துக்குப் பிறகான குழந்தையின் முடி வளர்ச்சியானது 18 மாதங்களில்கூட ஆரம்பிக்கலாம். இரண்டாம் கட்ட வளர்ச்சியானது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடலாம். ஒரு சில குழந்தைகளுக்கு முதல் கட்ட வளர்ச்சி முடிவதற்கு முன்பே, இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பிக்கும். அது வெளிப்படையாகத் தெரிவதில்லை.

    இன்னும் சில குழந்தைகளுக்கு முதல் கட்ட முடி வளர்ச்சியானது முற்றிலும் உதிர்ந்து, அதையடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகே இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பமாகும். இந்த இடைப்பட்ட காலத்தில் சில மாதங்களுக்கோ, சில வருடங்களுக்கோ கூட குழந்தையின் மண்டையில் முடியே இல்லாமல் இருப்பதையும் பார்க்கலாம். முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளர்ச்சியில் காணப்படுகிற முடியின் தன்மையிலும் நிறத்திலும் கூட நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.

    குழந்தைகளுக்குக் கூட முடி உதிர்வு இருக்கும் என்றால் நம்புவீர்களா? ஆமாம்... குழந்தை பிறப்பதற்கு முன்பே கூட இந்த முடி உதிர்வு இருக்கலாம். அதன் விளைவாக குழந்தை முடியில்லாமல் பிறக்கலாம். பிறந்து 6 மாதங்கள் கழித்தும் சில குழந்தைகளுக்கு முடி உதிரலாம். சில குழந்தைகளுக்கு இது திடீரென நிகழலாம். சிலருக்கு மெல்ல மெல்ல நிகழலாம். குழந்தையின் முடி உதிர்வின் பின்னணியில் மருத்துவக் காரணங்களும் இருக்கக் கூடும்.

    குழந்தைகளின் முடி உதிர்வுக்கான காரணங்களில் முக்கியமான பிரச்னைகள்...Tinea capitis எனப்படுகிற ஒருவகையான பூஞ்சைத் தொற்று குழந்தைகளின் மண்டைப் பகுதியில் உள்ள சருமம், புருவங்கள், இமைகள் போன்றவற்றைத் தாக்கும். இது கூந்தல் தண்டையும், ஃபாலிக்கிள் பகுதிகளையும் பாதிக்கும். இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மண்டைப் பகுதியில் ஆங்காங்கே முடி உதிர்ந்து வட்ட வடிவிலும் ஓவல் வடிவிலும் திட்டுத்திட்டாகக் காணப்படும். முடி உடைந்து கரும்புள்ளிகள் போலவும் காணப்படும்.

    அரிதாக சிலருக்கு சாம்பல் நிறச் செதில்கள் போன்றும் தென்படும்.அடுத்தது Alopecia Areata என்கிற பிரச்னை. இந்தப் பாதிப்பால் முடி உதிர்ந்த இடங்களில் வீக்கமோ, கரும்புள்ளிகளோ, செதில்களோ இல்லாமல் வழுவழுப்பாகக் காணப்படும். குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைவதால் உண்டாகிற இந்தப் பிரச்னை ஆயிரத்தில் ஒரு குழந்தையைத் தாக்குகிறது. இதன் அறிகுறி சில குழந்தைகளின் நகங்களிலும் தெரியும்.

    இந்த வகையான முடி உதிர்வுப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 5 சதவிகிதம் பேர் alopecia totalis என்கிற நிலைக்கு - அதாவது, தலை முழுவதிலுமே முடியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். ஒரு சிறு பிரிவினருக்கு alopecia universalis என்கிற நிலைக்கு - அதாவது, உடல் முழுவதுமே முடியை இழக்கும் நிலைக்கும் தள்ளப்படலாம்.

    மேற்சொன்ன இரண்டு பிரச்னைகளிலும் அறிகுறிகளைப் பார்த்த உடனேயே சரும மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சரியான சிகிச்சையின் மூலம் உதிர்ந்த இடத்தில் மறுபடி ஆரோக்கியமான முடி வளர்ச்சியை திரும்பச் செய்ய முடியும்.

    குழந்தைகளின் முடி உதிர்வுக்கான மூன்றாவது முக்கிய காரணம் அதிர்ச்சி. எப்போதும் கூந்தலை இறுகக் கட்டி வைத்திருப்பது, இறுக்கமாகவே பின்னி வைத்திருப்பது போன்றவற்றாலும் முடி உதிரலாம். படுக்கையிலேயே இருக்க வேண்டிய குழந்தைகளுக்கும் வீல் சேரில் வாழும் குழந்தைகளுக்கும் மண்டைப் பகுதி தொடர்ந்து படுக்கையின் மீதும் நாற்காலியின் மீதும் உராய்ந்து கொண்டிருப்பதாலும் முடி உதிரலாம்.

    2. கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை

    குழந்தைகளின் தலைமுடி பாதுகாப்பு

    புதினா இலைகளை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு ஷாம்புவோடு இதை ஒரு டீஸ்பூன் கலந்து உபயோகித்தால் ஷாம்புவின் ரசாயனத் தன்மை குறையும்.

    * தொட்டிலில் படுப்பதால் பிறந்த குழந்தைகளுக்கு பொடுகுத் தொல்லை ஏற்படும். இதனைப் போக்க தலையில் எண்ணெய் வைத்து 10 நிமிடம் ஊறவிட்டு பிறகு அலச வேண்டும். தொட்டில் துணியை அடிக்கடி அலச வேண்டும். ஒரே இடத்தில் தூங்கச் செய்யாமல், குழந்தையை சிறிது இடம் மாற்றி தூங்க வைக்க வேண்டும்.

    * பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிக எண்ணெய் வைக்கக் கூடாது. தினமும் எண்ணெய் தேய்த்தால்தான் கூந்தல் வளரும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. நம் கூந்தலுக்குத் தேவையான எண்ணெய் பசை இயற்கையிலேயே நம் தலையில் இருந்து சுரக்கிறது. கூந்தலை சுத்தமாக பாதுகாக்க முடியாதவர்கள் ஹேர் கட் செய்துவிடலாம்.

    * குழந்தைகளின் கூந்தலுக்கு எப்போதும் சுத்தமான தேங்காய் எண்ணெய் உபயோகிக்கவும்.

    * இந்த வயதில் பேன், பொடுகு பிரச்னை அதிகமாக வரும். அதைப் போக்க, வசம்பை ஊற வைத்து, அரைத்து, தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து தலையை அலசவும்.

    * வேப்பம்பூ, வெந்தயம் அரைத்து தயிரில் ஊறவைத்து தலைக்கு தடவி குளித்தால் பேன், பொடுகு பிரச்னை தீரும். இதற்கெல்லாம் நேரம் இல்லை என்பவர்கள் தலைக்கு குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி, வேப்பிலை போட்டு குளிக்க வைக்கவும்.

    * சில குழந்தைகள் எப்போதும் அரிப்பினால் தலையைச் சொரிந்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு உளுத்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து குளிக்க வைக்க வேண்டும்.

    * குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் தண்ணீர் கடினத் தன்மையுடன் இருக்கக் கூடாது. நல்ல தண்ணீர் கிடைக்காதவர்கள் படிகாரம் போட்டு பயன்படுத்தவும்.

    * குழந்தைகளுக்கு என தலையணை உறை, டவல், பெரிய பற்களை உடைய தனி சீப் உபயோகிக்கவும்.

    * 6 மாதங்களுக்கு ஒருமுறை சீப்பை மாற்றுவது நல்லது.

    * புதினா இலைகளை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு ஷாம்புவோடு இதை ஒரு டீஸ்பூன் கலந்து உபயோகித்தால் ஷாம்புவின் ரசாயனத் தன்மை குறையும்.

    * வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஊற வைத்து குளிப்பாட்ட லாம். குழந்தைகளுக்கு சளித் தொல்லை ஏற்படும் என நினைத்தால் வாயகன்ற பாத்தி ரத்தில் நீரைக் கொதிக்க வைத்து சிறிய கிண்ணத்தில் எண்ணெய் விட்டு கொதிக்கும் பாத்திரத்தில் வைத்து சூடு செய்து எடுத்து உபயோகிக்கலாம்.

    * குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து சத்தான உணவு கொடுத்து வந்தால் கூந்தல் பிரச்னைகள் இருக்காது. முளைகட்டிய கருப்புக் கொண்டைக் கடலை தினமும் ஒரு டீஸ்பூன், அடிக்கடி அரைக்கீரை கொடுக்கலாம்.



    அழகுக்கலை நிபுணர் ஷீபாதேவி



    jv_66 likes this.

  6. #6
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    தலை வணங்குவோம்!

    ‘முடிக்கு பரிசோதனையா’ என ஆச்சர்யமாக இருக்கிறதா?

    முடி உதிர்வு, பொடுகு, நரை, இன்னும் கூந்தல் தொடர்பான பல பிரச்னைகளுக்கும் உடல் உறுப்புகளில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா?

    ‘‘தீராத காய்ச்சலுக்கும் உடல் வலிகளுக்கும் எப்படி பல்வேறு விதமான பரிசோதனைகளைச் செய்து பார்த்து, காரணங்கள் அறிந்து சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றனவோ, கூந்தல் பிரச்னைகளுக்கும் அப்படிப்பட்ட சோதனைகளும் சிகிச்சைகளும் அவசியம்’’ என்கிறார் பிரபல ஹோமியோபதி மருத்துவர் ஞானசம்பந்தம்.

    முடிப் பிரச்னைகளுக்கான சோதனைகள் பற்றி அவர் சொல்கிற தகவல்கள் அனைவரும் அவசியம் அறிய வேண்டியவை.‘‘ஒரு முடி ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கையில் பிடித்துப் பார்த்துச் சொல்லிவிட முடியும். என்றாலும், நுண்பெருக்கி மூலமே முடியின் தன்மைகளை நன்கு அறிய முடியும். முடியின் வெடிப்புகள், மயிர்க்கால்களின் தன்மை மற்றும் ஏதாவது ‘ஃபங்கஸ்’ இருந்தாலும் தெளிவாகத் தெரிந்துவிடும்.

    சொட்டை இருந்தால் அதாவது, புழுவெட்டு என்று சந்தேகப்பட்டால் சிறிது தோலை சுரண்டிப் பார்த்தால் கிருமிகள் தெளிவாகத் தெரியும். சில பிரத்யேக வழுக்கைகள் குணமாகுமா என்பதை அறிய ‘பயாப்சி’ தேவைப்படும்.ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் மற்றும் ரத்த அணுக்களின் அமைப்பு, ‘நீங்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா?’ என்று சொல்லிவிடும்.

    ரத்த ‘டெஸ்டோஸ்டீரான்’ அளவானது இளம் வயதினரின் வழுக்கை, பெண்களுக்கு மீசை, தாடி வளர்கிற பிரச்னைகளை அறிய உதவும். மேற்சொன்ன பிரச்னைகள் இருப்பவர்கள், இந்த டெஸ்ட் உடன் சர்க்கரை, கொழுப்புச்சத்து, இன்சுலின் அளவுகளையும் தெரிந்து கொள்வது சிகிச்சையை துரிதப்படுத்தும்.

    ஆண்களுக்கு மீசை, தாடி வளரவில்லை என்றாலும், இதே டெஸ்ட் தேவை. மற்றும் சில துணைப் பரிசோதனைகளும் தேவை.இந்தப் பிரச்னைகள் இருந்தால் ஆண், பெண் இருபாலருக்கும் ‘ஸ்கேன்’ பரிசோதனைகளும் தேவைப்படும். முடி பரிசோதனையில் ‘ட்ரைக்கோகிராம்’ என்ற கணினி மென்பொருள் புதிய கண்டுபிடிப்பு. முடி வளர்ச்சி யையும், புழுவெட்டு, நோயாளிகளுக்கு முடி முளைக்கிறதா என்பதையும் கண்டுபிடிக்க உதவும்.

    முடியின் வளர்ச்சி வளர்பருவத்தில் உள்ளதா? சிதை பருவத்தில் உள்ளதா என்பதை யும் இந்தப் பரிசோதனையால் கண்டுபிடிக்க முடியும். தலையில் 1-2 செ.மீ. அளவு முடியை நீக்கிவிட்டு, அப்பகுதியில் நிறத்தைக் கூட்ட ‘டை’ பூசப்பட வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து நுண்ணோக்கி கேமரா மூலம் அந்த இடம் படம் பிடிக்கப்பட்டு கணினிக்கு அனுப்பப்படும்.

    3 நாட்களுக்கு பின் மீண்டும் படம் எடுக்கப்பட்டு, 3 நாட்களில் எத்தனை முடி வளர்பருவத்தில் இருந்தன என்பதையும் எத்தனை முடிகள் சிதை பருவத்தில் இருந்தன என்பதையும் விகித அடிப்படையில் காட்டிக் கொடுக்கும்...’’ரத்த ‘டெஸ்டோஸ்டீரான்’ அளவானது இளம் வயதினரின் வழுக்கை, பெண்களுக்கு மீசை, தாடி வளர்கிற பிரச்னைகளை அறிய உதவும்.

    2 எளிமை... வலிமை! கூந்தலுக்கான வீட்டு சிகிச்சைகள்


    *தைராய்டு பிரச்னை, ரத்தசோகை இருந்தால் முடி அதிகமாக கொட்டும். ஷாம்பு போட்டு கூந்தலை அலசும்போது பி.ஹெச். அளவு குறையும்.

    *முடியின் ஈரப்பதத்தை சரியாக வைத்துக்கொள்ள கண்டிஷனர் உபயோகிக்க வேண்டும். வேர்க்கால்களில் படாமல் (1 செ.மீ. அளவு இடைவெளி விட்டு) உபயோகிக்க வேண்டும்.

    *ஸ்ட்ரெயிட்டனிங் மற்றும் பெர்மிங் சிகிச்சைகளை வீட்டிலேயே முயற்சி பண்ண வேண்டாம். நல்லெண்ணெய், முட்டையை அடிக்கடி உபயோகிக்க வேண்டாம்.

    *கூந்தலை அலச உப்புத் தண்ணீர், அதிக சூடான தண்ணீர் இரண்டுமே கூடாது.

    *கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து முதல்நாள் இரவே தண்ணீரில் கொதிக்க வைத்து அடுத்த நாள் தலைக்கு குளிக்கும் தண்ணீரில் கலந்து கூந்தலை அலசவும்.

    *தண்ணீரில் எலுமிச்சைச் சாறு கலந்து அலசவும்.

    *கைப்பிடி அளவு துளசியை அரைத்து கூந்தலுக்கு பேக் மாதிரி போட்டு 10 நிமிடம் ஊற வைத்து அலசினால், பேன் தொல்லை மறையும்.

    *வெந்தயம் தலைமுடிக்கு நல்ல மருந்து. சிறிதளவு வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலைக்கு தடவி 20 நிமிடம் கழித்து குளிக்கவும்.

    *முகத்தில், முதுகில் பரு இருப்பவர்கள், முகத்தில் முடி படாதவாறு பார்த்துக்கொள்ளவும். முடி உதிர்வதற்கு அதிக காரணம் போதிய ரத்த ஓட்டம் இல்லாததே!

    *ஹெல்மெட்டை நீண்ட நேரம் அணிவதால் அதிக வியர்வையின் காரணமாக கூந்தலின் வேர்கள் வலுவிழந்து அதிகமாக உதிர ஆரம்பிக்கும்.

    *வேகமாக தலை சீவக்கூடாது. ஈரமான கூந்தலை வாரக் கூடாது.

    *இறுக்கமாக பின்னுவது, போனி டைல் கட்டுவது கூடாது. வழக்கத்துக்கு மாறான ஹார்மோன் மாற்றங்களால் முடி கொட்டும்! ஹார்மோன் பிரச்னை, ரத்த சோகை, தைராய்டு இவற்றுக்கான தகுந்த மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும். உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

    *யோகாசனம், தியானம், உடற்பயிற்சி செய்யுங்கள். மன நெருக்கடி ஏற்படும்போது கண்ணை மூடி மூச்சை இழுத்து விடுங்கள். பாசிட்டிவ் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.


    Last edited by chan; 26th Mar 2015 at 04:37 PM.
    jv_66 likes this.

  7. #7
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    நரை

    ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்
    வயதானதன் அறிகுறியாக நரையைப் பார்ப்பவர்கள் மனிதர்கள். ஆனால், விலங்குகள் அப்படியில்லை தெரியுமா? காட்டுப் பன்றிகளைப் பொறுத்தவரை அவற்றின் ரோமம் நரைத்திருப்பது என்பது ஆரோக்கியத்தின் அறிகுறியாம்.முதுமையின் அடையாளமாகவே பார்க்கப்படுகிற நரை, இப்போதெல்லாம் குழந்தைகளையும் பாதிக்கிறது.




    கூந்தலின் நிறமி செல்கள், மெலனின் என்கிற நிறமி உற்பத்தியை நிறுத்தும் போது நரை ஏற்படுகிறது. நரைப் பிரச்னையுடன் வருகிற இளவயதுக்காரர்களின் எண்ணிக்கை இன்று மிகவும் அதிகரித்திருக்கிறது. கண்ணாடியில் பார்க்கும்போது வயதுக்குப் பொருத்தமில்லாத ஒரு முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கக்கூடிய நரைமுடியானது ஒருவரின் தன்னம்பிக்கையைச் சிதைக்கிற விஷயமும் கூட.காரணங்கள்...


    * பலரும் நம்பிக் கொண்டிருக்கிற மாதிரி வெறும் ஸ்ட்ரெஸ் மட்டுமே இதற்கு அடிப்படை அல்ல. சராசரிக்கும் முன்னதாகவே நரையை ஏற்படுத்துவதில் மரபணுக்களுக்கும் மிக முக்கிய பங்குண்டு. இந்தியர்களை உள்ளடக்கிய ஆசிய மக்களுக்கு 30களின் முடிவில் முடி நரைக்கத் தொடங்கும். அதற்கு முன் அவர்களுக்கு நரை தோன்றினால் ஏதோ பிரச்னை என அர்த்தம்.

    * ஃபாலிக்கிள் எனப்படும் கூந்தலின் நுண்ணறைகள் சரியாக இயங்காததும் முக்கிய காரணம். கூந்தலுக்கு நிறத்தைக் கொடுக்கக்கூடிய மெலனின் உற்பத்தியை இவை நிறுத்துவதால் நரை தோன்றும். வெள்ளை முடி என்பது மெலனின் இல்லாதது.

    * பெரும்பான்மையானோரின் நரைப் பிரச்னைக்கு அவர்களது முறையற்ற, சத்தில்லாத உணவுப்பழக்கமே காரணமாக இருப்பதைப் பார்க்கிறேன். கூந்தலுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுச் சத்துகள் இல்லாத உணவை உட்கொள்வதே காரணமாக இருக்கிறது. வைட்டமின் பி 12, காப்பர் மற்றும் அயோடின் குறைபாடே முக்கிய காரணம்.

    * ஹைப்போதைராய்டிசம் பிரச்னை உள்ளவர்களுக்கு கூந்தல் நரைத்துப் போகலாம். புகைப்பழக்கமும் நரைப்பிரச்னைக்கு பிரதான காரணமாக இருக்கிறது.

    என்ன தீர்வு?

    * ஹேர் கலர், ஹேர் ஜெல் போன்று கூந்தலுக்கு கெமிக்கல் பொருட்களை உபயோகிப்பதைக் கூடியவரையில் தவிர்த்து விடவும்.

    * ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம் மட்டுமே நரைக்குக் காரணமில்லை என்றாலும், அதுவும் ஓரளவுக்குக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே தலையில் வெள்ளை முடிகள் தோன்றுவதை விரும்பாதவர்கள், டென்ஷனையும் ஸ்ட்ரெஸ்ஸையும்கூட மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டியது அவசியம்.

    * இரும்புச் சத்து, தாமிரம், வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்த சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அயோடின் அதிகமுள்ள வாழைப்பழம், கேரட், மீன் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டால் நரை தள்ளிப் போகும்.

    * மோரில் 2 டீஸ்பூன் ஈஸ்ட்டும், ‘வீட்ஜெர்ம்’ எனப்படுகிற கோதுமை முளை கலந்து குடிப்பது நரைக்கான நல்ல மருந்து.

    * முளைகட்டிய பயறு போன்ற புரதம் நிறைந்த உணவுகள் நரையை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவை.

    * இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து துருவி, சுத்தமான தேனில் ஊற வைக்கவும். தினமும் இதில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வர, நரை நம்மிடம் வர பயப்படும்.

    * குடைமிளகாய், லெட்டூஸ், கேரட் மற்றும் அல்ஃபால்ஃபாவின் சாறுகள் தாமிரச் சத்துக் குறைபாட்டை சீர் செய்து, நரை முடிப் பிரச்னைக்கும் நல்ல தீர்வு தரும்.

    * தேங்காய் எண்ணெயில் பீர்க்கங்காய் சேர்த்துக் கொதிக்க வைத்து தினமும் கூந்தலுக்கு உபயோகிக்கலாம்.

    * வெயிலில் வெளியில் செல்லும் போது, தலையை மூடிக் கொள்ள வேண்டும். அது கூந்தல் வறள்வதையும் நிறம் மாறுவதையும் தவிர்க்கும்.

    * வெள்ளையாக மாறிய கூந்தலை மீண்டும் கருப்பாக்குவது சாத்தியமில்லை. கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் மற்ற முடிகள் வெள்ளையாவதைத் தவிர்க்கவும் தள்ளிப் போடவும் முடியும்.

    உணவு மட்டுமே இதற்கான முழுமையான தீர்வு. துத்தநாகம் குறைபாடு இருந்தாலும் கூந்தல் உதிர்வதும் நரைப்பதும் ஏற்படலாம். தாமிரக் குறைபாடு காரணமாக கூந்தலின் மெலனின் உற்பத்தி பாதிக்கப்படலாம். சிவப்பு இறைச்சி, கோழி மற்றும் கீரை வகைகளில் தாமிரச் சத்து அதிகமுள்ளது. மாட்டிறைச்சி, முட்டை, கோதுமை மற்றும் சூரியகாந்தி விதைகளில் இரும்புச் சத்து அதிகம். முந்திரி, பாதாம், நண்டு, சிப்பி போன்றவற்றில் தாமிரச் சத்து நிறைய உண்டு.

    அடர் பச்சை காய்கறிகள், மஞ்சள் நிற பழங்கள், காலிஃப்ளவர், வாழைப்பழம், தக்காளி, பருப்பு வகைகள், கிட்னி, ஈரல், தயிர், ஈஸ்ட், ‘வீட்ஜெர்ம்’ போன்றவையும் நரையைத் தவிர்க்க விரும்புவோருக்கான அவசிய உணவுகள்.வெள்ளையாக மாறிய கூந்தலை மீண்டும் கருப்பாக்குவது சாத்தியமில்லை. கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் மற்ற முடிகள் வெள்ளையாவதைத் தவிர்க்கவும் தள்ளிப் போடவும் முடியும். உணவு மட்டுமே இதற்கான முழுமையான தீர்வு.

    2. நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை

    அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்

    கிராம்பு ஆயில், கறிவேப்பிலை ஆயில், அஷ்வகந்தா ஆயில், குல்ஹீனா ஆயில் இவை எல்லாம் அரோமா ஆயில்கள். இவற்றை வாங்கி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றிலும் 10 சொட்டு அளவு எடுத்து நீங்கள் உபயோகிக்கப் போகிற பேக்கில் கலந்து தடவினால் இளநரைக்குப் பெரிய அளவில் உதவும்.
    * ஹென்னா பவுடரில்

    4, 5 பீட்ரூட்டை துருவிப் போட்டு, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுத்துக் கலக்கவும். அதில் 50 கிராம் பனைவெல்லத் தூளையும் சேர்க்கவும். முதல் நாள் இரவே இதைக் கலந்து வைக்கவும். அடுத்த நாள் முதல் பத்தியில் சொன்ன அரோமா ஆயில் கலவையைக் கலந்து, தலையில் பேக் மாதிரி தடவி,3 மணி நேரம் வைத்திருந்து அலசவும்.

    * நீலி அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி இலை இரண்டையும் விழுதாக அரைத்து, அதில் கருஞ்சீரக விதையைப் (கலோன்ஜி மற்றும் வெங்காய விதை என்றும் சொல்வார்கள்.) பொடி செய்து கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து, அரோமா ஆயில் கலந்து தலையில் தடவி, ஊற வைத்துக் குளிக்கவும்.

    * கடைகளில் நீலிபிருங்காதி தைலம் எனக் கிடைக்கும். அதில் 3 முதல் 5 டீஸ்பூன் எடுத்து அதில் மருதாணி இலைப் பொடி 1 டீஸ்பூன், கரிசலாங்கண்ணி பொடி 1 டீஸ்பூன், பிள்ளையார் குன்றி மணி பொடி 1 டீஸ்பூன் (இது விஷம் என்பதால் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்), நெல்லிமுள்ளிப் பொடி 1 டீஸ்பூன், கருஞ்சீரகப் பொடி 1 டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து அரோமா ஆயில் கலவையைக் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தால் நரை கட்டுப்படும்.

    * ஆயுர்வேதக் கடைகளில் குளிர்தாமரை தைலம் எனக் கிடைக்கும். அதில் 2 டீஸ்பூன் எடுத்து 15 கிராம் பொடித்த பனங்கற்கண்டு, கரிசலாங்கண்ணிச் சாறு சிறிது கலந்து, தலையில் மண்டைப் பகுதியில் படும்படி தடவி 4 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.* ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் என மருந்துக் கடைகளில் கிடைக்கும். 4 கேப்ஸ்யூல் எடுத்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தெடுத்த 2 டேபிள்ஸ்பூன், 1 டீஸ்பூன் கிராம்புப் பொடி கலந்து, தலையில் தடவி 5 மணி நேரம் கழித்து, குளித்தால் இளநரை மற்றும் செம்பட்டை மறைய உதவும்.

    * நாட்டு மருந்துக் கடைகளில் சுருள் பாக்கு எனக் கிடைக்கும். அதை இடித்துப் பொடித்து, சலித்துக் கொள்ளவும். 50 கிராம் பொடியில், நெல்லிமுள்ளிப் பொடி, அவுரி பொடி, மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி, சிறிது தேங்காய்ப் பால், சிறிது விளக்கெண்ணெய் எல்லாம் கலந்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்கவும்.30 வயதுகளின் முடிவில் முடி நரைக்கத் தொடங்கும். அதற்கு முன்பே நரை தோன்றினால் ஏதோ பிரச்னை என அர்த்தம்.

    Last edited by chan; 1st Apr 2015 at 10:37 AM.
    jv_66 likes this.

  8. #8
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    எண்ணெய் பசை கூந்தலை என்னதான் செய்வது?

    ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

    எண்ணெய் பசையான, பிசுபிசுப்பான கூந்தல் என்பது பரவலாகப் பலரிடமும் காணப்படுகிற ஒரு பிரச்னை. எண்ணெய் பசையான மண்டைப் பகுதியிலிருந்தே எண்ணெய் பசைக் கூந்தல்
    உருவாகிறது. மண்டைப் பகுதியில் உள்ள செபேஷியஸ் சுரப்பிகளின் தூண்டலே இதற்குக் காரணம். செபேஷியஸ் சுரப்பி சுரக்கும் சீபம், கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிக அவசியமானது.

    அது ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். அதுவே இந்த சீபமானது அளவுக்கதிகமாக சுரந்தால், கூந்தல் அதை கிரகித்துக் கொண்டு, எண்ணெய் பசை தோற்றம் பெறும். சிலருக்கு எண்ணெய் பசை கூந்தலின் விளைவினால், எண்ணெய் வழிகிற சருமப் பிரச்னையும் சேர்ந்து கொள்வதுண்டு.

    என்ன காரணம்?
    1.ஊறல் தோல் அழற்சி
    2.எண்ணெய் பசையான சருமம்
    3.வானிலை மாறுபாடுகள்
    4.ஹார்மோன் கோளாறுகள்
    5.கூந்தலின் வேர் பகுதியில் உள்ள ஃபங்கல் இன்ஃபெக்ஷன்
    6.கூந்தலை அளவுக்கு அதிகமாக வாருவது
    7.பாரம்பரியம்
    8.பூப்பெய்துதல்
    9.ஈரப்பதம்
    10.சுருள் சுருளான கூந்தல் உடையவர்களை விட, மென்மையான, ஸ்ட்ரெயிட் கூந்தல் உடையவர்களின் கூந்தல் அதிக எண்ணெய் பசையுடன் இருக்கும்.

    மண்டை மற்றும் கூந்தலில் அளவுக்கு அதிக எண்ணெய் பசை தென்படுவதே ஊறல் தோல் அழற்சி (seborrheic Dermatitis ) பிரச்னைக்கான அறிகுறி. சீபம் சுரப்பில் ஏற்படுகிற பிரச்னையின் அறிகுறியல்ல இது. ஊறல் தோல் அழற்சி உள்ளவர்களுக்கு வெள்ளை மற்றும் பிரவுன் நிறத்தில் செதில்கள் போல வரும். இதற்கு எண்ணெய் பசையான பொடுகு
    (oily dandruff) என்று பெயர். இது இருந்தால் தலையில் அரிப்பு இருக்கும். அரிப்பு அதிகமாவதன் விளைவாக, ஆக்ரோஷமாக அந்தப் பகுதியை சொரிந்து அதைத் தீவிரப்படுத்திக் கொள்வார்கள். இன்ஃபெக்ஷனானது காதுகள், புருவங்கள் மற்றும் மூக்கு வரை பரவும். பரு பிரச்னையும் ஆரம்பிக்கும்.

    * ஹார்மோன்கள்

    பூப்பெய்தும் பருவம் மற்றும் பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ளவர்களுக்கு அந்த நேரத்தில் ஹார்மோன் கோளாறுகள் இருக்கும். இதனால் செபேஷியஸ் சுரப்பிகள் தூண்டப்பட்டு அதிக சீபம் சுரக்கப் படும். இதனால் மண்டைப் பகுதியும் கூந்தலும் எண்ணெய் பசையுடன் காணப்படும்.

    * என்ன பிரச்னை?

    எண்ணெய் பசையான கூந்தல் என்பது ஒருவருக்கு தோற்றத்தில் கவலையைக் கொடுக்கும் விஷயமாக இருக்கும். அடர்த்தியான கூந்தல் என்பது இவர்களுக்குக் கனவாகவே இருக்கும். போனி டெயில் போட்டால் எலி வால் போலக் காட்சியளிக்கும். பின்னவும் முடியாது. மொத்தத்தில் ஷாம்பு குளியல் எடுக்காமல் இவர்களால் வெளியில் தலைகாட்ட முடியாது.

    * செய்யக்கூடியவை

    * எண்ணெய் பசைக் கூந்தலுக்கான ஷாம்பு உபயோகித்து வாரம் 3 முறை கூந்தலை அலச வேண்டும்.

    * உங்கள் கூந்தல் ரொம்பவும் எண்ணெய் பசையுடன் இல்லை என்றால், ஷாம்பு குளியலுக்குப் பிறகு மிதமான கண்டிஷனர் உபயோகிக்கலாம்.

    * கூந்தல் ஈரமாக இருக்கும் போதே பிசுபிசுப்புத் தன்மையை ஏற்படுத்தாத (நான் க்ரீஸ் புரொடக்ட்டிவ் ஸ்பிரே) ஸ்பிரே உபயோகிக்கலாம்.

    * செய்யக்கூடாதவை


    * உங்கள் ட்ரைகாலஜிஸ்ட் அறிவுறுத்தாத வரை, தலைக்கு எண்ணெய் வைப்பதைத் தவிர்க்கவும்.

    * கூந்தலை அதிக முறை பிரஷ் செய்தால் ஆரோக்கியமானது என்கிற நினைப்பில், அளவுக்கு அதிகமாக வார வேண்டாம். அது எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி, எண்ணெய் சுரப்பை அதிகப்படுத்தும்.

    * தீர்வுகள்

    * எண்ணெய் பசையான கூந்தலுக்கென்றே பிரத்யேக ஷாம்பு கிடைக்கிறது. தினசரி உபயோகத்துக்கேற்ற வகையில் மைல்டான ஷாம்புவாக தேர்ந்தெடுக்கவும்.

    * கூந்தலின் நுனிகள் ரொம்பவும் வறண்டிருந்தால், அந்தப் பகுதிகளுக்கு மட்டும் கண்டிஷனர் உபயோகிக்கவும்.

    ஓட்ஸில் தண்ணீர் விட்டுக் காய்ச்சி ஆற வைக்கவும். தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, மிதமான ஷாம்பு உபயோகித்து அலசவும்.

    * 15 நாட்களுக்கொரு முறை தலைக்கு ஹென்னா உபயோகிப்பதும், அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.

    * எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளுக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் இடம் அளிக்காதீர்கள். தினசரி உணவில் நிறைய பழங்களும் காய்கறிகளும் இருக்கட்டும். உலர்ந்த திராட்சை, பாதாம், பெர்ரி மற்றும் நிறைய பழ ஜூஸ் சேர்த்துக் கொள்ளவும்.

    * ஏரியேட்டட் பானங்களையும் பாட்டில்களில் அடைத்த பானங்களையும் தவிர்க்கவும்.

    * எண்ணெய் பசையான, பொடுகு நிறைந்த, ஆரோக்கியமற்ற மண்டைப் பகுதிக்கு எலுமிச்சை வியத்தகு பலன்களைக் கொடுப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பாதி எலுமிச்சைப் பழத்தை மண்டைப் பகுதியில் தேய்த்து 15 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். 15 நாட்களுக்கொரு முறை இதைச் செய்யலாம்.

    2 எண்ணெய் பசை கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை

    அழகுக்கலை நிபுணர் ஹசீனா சையத்

    எண்ணெய் பசையான கூந்தல் உள்ளவர்களுக்கு வரக்கூடிய முதல் முக்கிய பிரச்னை எண்ணெய் பசையான பொடுகு எனப்படுகிற ஆயிலி டாண்டிரஃப். டிரை டாண்டிரஃப் எனப்
    படுகிற வறண்ட பொடுகைக் கூட சுலபமாக சரி செய்து விடலாம். ஆனால், ஆயிலி டாண்டிரஃபை அத்தனை சுலபத்தில் சரி செய்ய முடியாது. இது இருக்கும்வரை தலையில் ஒருவித மோசமான வாடையும் அடிக்கும்.

    * எண்ணெய் பசை கூந்தல் உள்ளவர்கள், ரொம்பவும் நீளமாக கூந்தலை வளர்க்காமல் மீடியமான அளவில் வெட்டிக் கொள்வது பராமரிக்க சுலபமாக இருக்கும்.

    * பாதாம் எண்ணெயை லேசாக சூடாக்கி, தலையில் மிதமாக மசாஜ் செய்யவும். செம்பருத்திப் பூவின் விழுது 1 டேபிள்ஸ்பூன், வெந்தய விழுது கால் டீஸ்பூன், நெல்லிக்காய் விழுது கால் டீஸ்பூன்... இவை எல்லாவற்றையும் கலந்து, எண்ணெய் மசாஜ் செய்த தலையில் தடவவும். அதையே கூந்தலின் இடையிலும் விட்டு விரல்களால் நீவி விடவும். அரை மணி நேரம் வைத்திருந்து சீயக்காய் அல்லது எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் ஷாம்பு உபயோகித்து அலசவும்.

    * சாதாரணமாக வெளியில் நடக்கும் போதும், டூ வீலரில் பயணம் செய்கிற போதும் சுற்றுப்புற மாசும் தூசும் மிகச் சுலபமாக இவர்களது மண்டையில் படிந்து, ஆயிலி டாண்டிரஃபுக்கு வழி வகுத்து விடும். இந்த வகையான பொடுகு வறண்ட பொடுகு மாதிரி உதிராது என்ப தால் இருப்பதும் தெரியாது. அடிக்கடி அலசி சுத்தப்படுத்தினால்தான் பொடுகு இன்றி பாதுகாக்க முடியும். இந்தப் பொடுகு உள்ளதா என்பதை சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள லாம். டெயில் கோம்ப் என்று கேட்டு வாங்கவும். அதன் கூரிய பின் பகுதியால் தலைமுடியில் பகுதி பகுதிகளாகப் பிரித்து, லேசாகச் சுரண்டவும். அப்போது பொடுகு இருந்தால் வெளியே வரும். இருப்பது தெரிந்தால் சிகிச்சை அவசியம்.

    * தயிரில் சிறிது பாதாம் ஆயில், 2 துளிகள் எலுமிச்சைச்சாறு, சிறிது வேப்பிலை விழுது, துளசி விழுது சேர்த்துக் குழைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து அலசவும். தலையை அலசும்போதும் கவனம் அவசியம். முதலில் தலைமுடியை இட, வலப் பக்கமாக இரண்டாகப் பிரிக்கவும். இடப் பக்க முடியை நன்கு விரல்களை விட்டு சுத்தம் செய்து, நிறைய தண்ணீர் விட்டு அலசி சுத்தப்படுத்திய பிறகு, வலப் பக்க முடியையும் அதே போலச் செய்யவும். பிறகு மொத்த கூந்தலையும் மீண்டும் அலசவும். முதலில் வெறும் தண்ணீரில் இப்படி அலசிய பிறகு, சீயக்காயோ, ஆயில் கன்ட்ரோல் ஷாம்புவோ உபயோகித்து அலசி, வெயிலில் சிறிது நேரம் நின்று உலர்த்தவும்

    * ஒரு கைப்பிடி அளவு சீயக்காய், 3 பூந்திக் கொட்டை, கைப்பிடி அளவு குண்டு மல்லி ஆகியவற்றை முதல் நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் இந்தத் தண்ணீரை வடித்து, தலைக்கு ஷாம்புவாக உபயோகிக்கலாம். எண்ணெய் பசை கட்டுப்படும். தலைமுடிக்கு இயற்கையான நறுமணமும் கிடைக்கும்.

    * 2 கைப்பிடி அளவு பன்னீர் ரோஜாவை எடுத்து வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதிலுள்ள நிறமெல்லாம் போனதும் அந்த ரோஜாவை எடுத்து வேறு தண்ணீரில் போட்டு, கொஞ்சம் மரிக் கொழுந்தும் சேர்த்து ஊற வைக்கவும். மறுநாள் இந்தத் தண்ணீரைக் கசக்கி, வடிகட்டி, தலையை அலச உபயோகிக்கலாம்.

    * வெளியில் செல்லும் போது தலைக்கு எண்ணெய் வைக்கக் கூடாது. தவிர்க்க முடியாமல் எண்ணெய் வைத்தே ஆக வேண்டும் என்றாலும், வைத்த சிறிது நேரத்தில் தலையை அலசி விட வேண்டும். வெளியில் செல்லும் போது தலைமுடிக்கு ஸ்கார்ஃப் அவசியம்.

    * தலைக்குக் குளிக்கிற போது, முடியானது முகத்தில் படாதபடி அண்ணாந்து குளிக்கவும்.

    * தலைக்குக் குளித்ததும் அவர்கள் உபயோகிக்கிற சீப்பு, பிரஷ் போன்றவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.

    * தலையைத் துவட்ட டர்கி டவல் உபயோகிக்காமல், கதர் டவல் உபயோகிப்பதே சிறந்தது.



    Last edited by chan; 3rd Apr 2015 at 02:33 PM.

  9. #9
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    கட்டோடு குழலாட..
    டாக்டர் தலத் சலீம், ட்ரைகாலஜிஸ்ட்,

    கூந்தல் நீளமாக, அடர்த்தியாக, பட்டுப் போன்ற மென்மையுடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்படாத பெண்களே இல்லை. விதவிதமாக ஹேர்ஸ்டைல் வைத்து அலங்கரிப்பது சிலருக்குப் பிடிக்கும் என்றால், கூந்தலை ஃப்ரீயாக விடுவதுதான் சிலருக்குப் பிடிக்கும். எந்த ஹேர்ஸ்டைலும் செய்யலாம்தான். ஆனால், அதற்கு முன் எப்படி தன் கூந்தலைப் பராமரிப்பது, ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, வெளியில் செல்லும்போது எப்படி கூந்தலைப் பாதுகாப்பது என்பதில் அக்கறை வேண்டும்.


    மாசடைந்த காற்று, அதிக வெப்பம், புற ஊதாக் கதிர்வீச்சு போன்றவை கூந்தலில் நேரடியாகப் படும்போது, அதன் இயற்கைத்தன்மை இழந்து, வறட்சியாகி முடி உடைந்துவிடுகிறது. நாளடைவில் நுனி முடியில் பிளவு ஏற்பட்டு பொலிவு இழக்கும். சீக்கிரத்திலேயே முடி கொட்டும். ஹேர்ஸ்டைல் செய்யவும், ஃப்ரீ ஹேர்விடவும் விரும்புவோர் முதலில் தலைமுடியின் தன்மையைக் கண்டறிய, இரு விரலில் முடியை சுற்றி, இழுத்துப்பார்த்தால் அதன் உறுதித்தன்மை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இழுக்கும் போதே முடி உடைந்துவிட்டால், அது வீக் ஹேர்.

    கூந்தலுக்கு எதிரி...
    நிலத்தடி நீரீல் துவர்ப்பு, உப்பு எனப் பல தன்மைகள் உண்டு. கூந்தலை நல்ல தண்ணீரில் அலசுவது முக்கியம். ஆனால், நிலத்தடி நீரும், குளோரின் கலந்த நீரும் தவிர வேறு வழி இல்லை என்பவர்கள், எந்த நீரில் கூந்தலை அலசினாலும், கடைசியில் இரண்டு ஜக் நல்ல நீரில் அலச வேண்டும். இதனால் கூந்தலில் தங்கியிருக்கும் உப்பு, தாதுக்கள் வெளியேறிவிடும்.

    அழகு கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய்

    கூந்தலில் எண்ணெய் தடவலாமா என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். எண்ணெய் தடவுவது நல்லது. ஆனால் அந்த எண்ணெய் கலப்படம் இல்லாததாக இருக்கவேண்டும். தேங்காய் பாலை அடுப்பில் கொதிக்கவைத்து, கடைசியில் கிடைக்கும் திரவமே, சுத்தமான தேங்காய் எண்ணெய். தினமும் இதைத் தடவிவர, கூந்தல் ஊட்டமாகும். எண்ணெய் காய்ச்சும் போது தேங்கும் கசடைத் தூக்கிஎறியாமல் ஹேர் பேக்குடன் பயன்படுத்தலாம்.

    வீட்டிலே தயாரிக்கும் ஹேர் பேக்
    வீட்டில் தயாரித்த பொருட்களைக் கொண்டு வாரம் ஒருமுறை ஹேர் பேக் போட்டுக்கொள்வது கூந்தலுக்குப் பாதுகாப்பை அளிக்கும். கூந்தலின் உயிரோட்டம் ஹேர் பேக்கில் அடங்கியுள்ளது.

    வறண்ட கூந்தல்!
    வாரம் மூன்று முறை தலைக்குக் குளிக்கவேண்டும். தரமான, அவரவர் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்பூ, கண்டிஷனரைப் பயன்படுத்துவது அவசியம். ஷாம்பூக்குப் பதில் சிகைக்காய் தேய்த்து குளிப்பது நல்லது. எதைப்போட்டு கூந்தலை அலசினாலும், அவ்வபோது, ஹேர் பேக் போட்டுக்கொள்வது கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

    எளிய ஹேர்பேக்
    அவகேடோ பழம் 1, தயிர் 2 டீஸ்பூன்,முட்டை 1, பாதாம் எண்ணெய் 1 டீஸ்பூன் ஆகியவற்றை கலந்து தலைமுடியில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கூந்தலை அலசலாம். வறண்ட முடி பளபளப்பாகும்.

    எண்ணெய் கூந்தல்!
    தினமும் தலைக்குக் குளிக்கலாம். கற்றாழையை நடுவில் நறுக்கி, அதில் வெந்தயத்தைக் கொட்டி, பிறகு நூலில் அதை கட்டி இரவு அப்படியேவிடவும். மறுநாள், கற்றாழையின் சதைப் பகுதியையும், வெந்தயத்தையும் எடுத்து முட்டை, வைட்டமின் இ எண்ணெய் கலந்து, தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம். பிசுபிசுப்பு போய் பொலிவாக இருக்கும்.

    ஹேர்... கேர்!
    கடினமான ஹேர்ஸ்டைல், தலைமுடியை இழுத்து வாருதல், முன்பக்கம் தூக்கி வாருதல் போன்றவற்றைத் தவிர்க்கலாம். இதனால், நெற்றி பெரிதாகி, கூந்தலில் உள்ள ஃபாலிக்கில்ஸ்க்கு பி்ரஷர் ஏற்பட்டு கூந்தல் சேதமடையும். எனவே, தளர்வான ஹேர்ஸ்டைல் செய்து கொள்வது நல்லது.
    கிரேப் சீட் ஆயில் - 4 ஸ்பூன், தைன் (Thyne) ஆயில் - 2 துளிகள், சிடர்வுட் (Ciderwood) - 4 - துளிகள், ஜோஜோபா (Jojoba) ஆயில்- 1/2 ஸ்பூன், லாவண்டர் ஆயில் - 3 துளிகள், ரோஸ்மெரி - 3 துளிகள் ஆகியவற்றைக் கலந்து ஸ்கால்ப்பில் நன்றாகத் தடவி, பிறகு வெந்நீரில் நனைத்த டவலை முடியில் கால் மணி நேரம் வரை சுற்றிவைக்கலாம். பின்னர் கூந்தலை அலசிவிடுங்கள். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால், வீக்கான கூந்தல் வலுவாகும்.

    வேறு வேறு முடி வகைகளைக் கொண்டவர்கள் ஒரே ஷாம்பூவைப் பயன்படுத்தக் கூடாது.

    வெயிலிலோ, வெளியில் செல்லும்போதோ குடை அல்லது ஸ்கார்ஃப் அணிந்து செல்லலாம்.

    அடிக்கடி ஷாம்பூ, எண்ணெய், கண்டிஷனரை மாற்றிக்கொண்டே இருக்கக் கூடாது.

    ஊட்டமாக வளர உணவும் முக்கியம்!


    ஊட்டச்சத்தான உணவுகளே கூந்தலுக்கு வலு சேர்க்கும். பச்சைப்பயறில் புரதம் மிகுதியாக உள்ளதால், வாரம் ஒருமுறை சாப்பிடலாம். முடி உதிர்தல் நிற்கும்.

    இரவே, ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதைக் கொதிக்கவிட்டு அந்த நீரைக் குடிக்கலாம். மேலும் பால், தயிர், ஒட்ஸ், மீன், பயறு வகைகள், சூரியகாந்தி விதைகள், ஃப்ளாக்ஸ் விதைகள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

    சாப்பிடுவதற்கு முன் டிரை ஈஸ்ட் (Dry Yeast) சாப்பிடலாம்.

    தினமும் நெல்லிக்காயை உண்ணலாம்.

    வைட்டமின் ஏவும், பீட்டா கரோட்டீனும் நிறைந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு முடி உதிர்தலைப் போக்கும்.

    பாதாமில் வைட்டமின் இ, வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் ஆல்பா லினோலெனிக் அமிலம் இருப்பதால், கூந்தலுக்கான கண்டிஷனர் இவை.

    முட்டையில் பயோடின் மற்றும் வைட்டமின் பி நிறைந்திருப்பதால் முடி உதிர்தலை தடுக்கிறது.

    பச்சைக் காய்கறிகளான குடமிளகாய், புரோகோலி, கீரை வகைகள், தாதுக்கள், வைட்டமின் பி, சி, இ, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடலாம்.

    தினமும் ஒரு கிளாஸ் சோயா பால் கூந்தல் வளர்க்கும் சிறந்த ஊட்டச்சத்து பானம்.

    Last edited by chan; 4th Apr 2015 at 05:40 PM.

  10. #10
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

    மயக்கும் கூந்தலுக்கு... சில எளிய வழிகள்!

    அலைபாயும் கூந்தலை பராமரிக்க.....
    நீண்ட கூந்தலோடு ஒரு பெண் நடந்து சென்றால், திரும்பிப் பார்க்காதவர்கள் யார்? தேங்காய் எண்ணையைத் தலையில் தடவி, செம்பருத்தி இலையை குளக்கரையில் கசக்கி, தலையில் தேய்த்துக் குளித்தபோதெல்லாம் நன்கு வளர்ந்த கூந்தல், விலை உயர்ந்த எண்ணெய் ஷாம்பூவில் உதிர்ந்து போவதேன்? தூசு, மாசுக்களிடம் இருந்து காப்பாற்றி, தலைமுடியைப் பராமரிப்பது எப்படி? உதிரும் கூந்தலைப்பார்த்துப் பதறுவது எப்போது தீரும்?
    கூந்தல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? எப்படிப் பராமரிப்பது? எந்த ஷாம்பூக்களைப் பயன்படுத்தலாம்? முடிக்கு எண்ணெய் தடவலாமா? தேவை இல்லையா? என்கிற அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கிறார்கள் டிரைகாலஜிஸ்ட் தலத் சலீம் மற்றும் சித்த மருத்துவர் பத்மப்ரியா.
    சுத்தம் சுகாதாரம் முக்கியம்
    வாரம் இருமுறை செம்பருத்தி, சீயக்காய், பயத்தம் பருப்பு இவற்றைக் சேர்த்து அரைத்த சீயக்காய் பயன்படுத்தி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். தலையில் எண்ணெய் தடவி, ஷாம்பூவால் அலசும் பழக்கம்தான் இன்று பலரிடமும். இதனால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கான பலனே இல்லாமல் போய்விடும். தலையில் எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்கள் நன்றாக ஊறினால்தான், எண்ணெய் சருமத்தினுள் பாய்ந்து, உடலைக் குளிர்ச்சியாக்கும். வடித்த கஞ்சியில் அரைத்த சீயக்காயைப் போட்டு கலந்து குளிக்கலாம். இதன் மூலம் தலையின் ஸ்கால்ப் பகுதியும் வறட்சியாகாமல் இருக்கும்.
    குழந்தையிலேயே தலைமுடியைப் பராமரிக்கும் வழிகள்...
    குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக அழகாக இருக்கும். அந்தக் காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளர, பாரம்பரிய முறைப்படி எண்ணெய் குளியல் முறைகள் இருந்தன. ஆனால், இன்றோ, தலையில் எண்ணெய்யே படக் கூடாது என்று பிறந்த குழந்தைகளின் தலையில் எண்ணெய் காண்பிப்பது இல்லை. எண்ணெய் தேயத்தால் சருமம் மென்மையும், பளபளப்பும் கூடி, உடல் புத்துணர்ச்சி பெறும். சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க, எண்ணெய் நிச்சயம் உதவும்.
    பிறந்த 45 நாட்கள் ஆன குழந்தைக்கு, தினமும் காலை உச்சந்தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைப்பதை வழக்கமாக்க வேண்டும். இதனால் தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும்.
    குழந்தைக்கெனப் பிரத்யேகமாக விற்கும் சீப்பை வாங்குங்கள். பிறந்து 60 நாட்களான குழந்தையின் தலையில் தேங்காய் எண்ணெய் தடவிய பின் தலைவாரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், தலைக்கு ரத்த ஓட்டம் கிடைத்து முடி, அடர்த்தியாக வளரும்.
    ஆறு மாதம் முதல் நேர் மற்றும் பக்கவாட்டில் வகிடு எடுத்து வார ஆரம்பிக்கலாம். வாரும்போது மேலிருந்து கீழாக வார வேண்டும். இதனால், முடி அடர்த்தியாக வளரும்.
    பெண் குழந்தைகளுக்கு முடி நீளமாக வளரும்போது, வகிடை இரண்டாகப் பிரித்து இரட்டைப் பின்னல் போடுவதால், நீளமும் அடர்த்தியும் அதிகரிக்கும்.
    ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் அவசியம். ஒரு முறை தேங்காய் எண்ணெய் தடவினால், பயத்தமாவு தேய்த்துக் குளிப்பாட்டலாம். அடுத்த முறை நல்லெண்ணெய் தேய்க்கும்போது, கடலை மாவுகொண்டு குளிப்பாட்டலாம். பயத்த மாவு எண்ணெய் பசையை எடுக்காமல், பார்த்துக்கொள்ளும். கடலை மாவு சுத்தமாக்கும். தலையில் இருக்கும் அடைப்புகளை நீக்கி, முடி வளர்ச்சியைத் தூண்டும்.
    குழந்தைக்கு ஒரு வயதில் இருந்து உச்சந்தலையில் ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கிக் கட்டுவது, மேல் நோக்கித் தூக்கி வாருவது கூடாது. இதனால் முன் நெற்றி மேடு பெரிதாகி, முடி வளர்ச்சியைப் பாதிக்கும்.
    மொட்டை அடித்தால், முடி நன்றாக வளரும். ஆனால், சரியாகப் பராமரிக்காமல்விட்டால், முடி வளர்வது குறைந்துவிடும். மொட்டை அடித்ததும், நன்றாகக் குளிப்பாட்ட வேண்டும். குளிர்ச்சிக்காக சந்தனத்தைப் பூசுவதும் தவறு. இதனால், தலையில் செதில்கள் வந்து முடி வளர்வது தடைப்படும்.
    இரண்டு வயதில் ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கு தலையில் வியர்வை சுரப்பதால், வியர்க்குரு ஏற்பட்டு முடி வளர்ச்சி பாதிக்கும். இதற்கு, கடலை மாவு, பயத்த மாவுடன் பூலாங்கிழங்கை அரைத்துக் குளிப்பாட்டலாம். பன்னீர் ரோஸ், மல்லிகை, முல்லை, ஜாதி போன்ற பூக்களைத் தண்ணீரில் போட்டு, அந்தத் தண்ணீரைக் கடைசியாக விடலாம். இதனால் தலை சுத்தமாகவும் வாசனையாகவும் இருக்கும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter