Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

கால்களில் துர்நாற்றம்


Discussions on "கால்களில் துர்நாற்றம்" in "Hand, Foot & Nail Care" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    80,650

    கால்களில் துர்நாற்றம்

    கால்களில் துர்நாற்றம்

    கால்களில் உற்பத்தியாகும் வியர்வையை நாம் அணிந்திருக்கும் சில வகையான செருப்புகளால் உறிஞ்ச முடியாது. இதனால், கால்களில் வியர்வை தங்கி அதன் காரணமாகத் துர்நாற்றம் உண்டாகலாம்.

    அல்லது கால்களில் பாக்டீரியா கிருமிகள் இருந்தால் சிறிது வியர்த்தாலும் இதுபோன்ற துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே, குளிக்கும்போது உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கால்களுக்கும் கொடுத்து, நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். சாதாரண சோப்புகளைத் தவிர்த்து, ஆன்ட்டி பாக்டீரியல் சோப்பைப் பயன்படுத்துவது நல்லது.

    செருப்பு அல்லது ஷூ போடுவதற்கு முன்னர் கால்களை ஈரம் போக நன்றாகத் துடைக்க வேண்டும்.

    நீங்கள் எந்த வகையான செருப்புகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதும் முக்கியம்.

    வியர்வையை உறிய முடியாத தன்மை கொண்டனவற்றைத் தவிர்த்து, எம்.சி.பி. ரப்பர் செருப்புகளைப் பயன்படுத்தலாம்.

    ஷூ அணிபவராக இருந்தால், நைலான் சாக்ஸ்களுக்குப் பதில், பருத்தியால் ஆன சாக்ஸை உபயோகப்படுத்தலாம்.

    பாக்டீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக் கூடிய சில வகை பவுடர் உண்டு. அவற்றைப் பயன்படுத்தியும் துர்நாற்றம் இல்லாமல் இருக்க முடியும்.

    இவற்றில் எல்லாம் கட்டுப்படவில்லை என்றால், தோல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நல்லது''.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: கால்களில் துர்நாற்றம்

    Thanks for your efforts to bring this info here


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter