Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By chan

பாதத்தைக் கவனிக்காவிட்டால் பாதகம் தான்!


Discussions on "பாதத்தைக் கவனிக்காவிட்டால் பாதகம் தான்!" in "Hand, Foot & Nail Care" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  பாதத்தைக் கவனிக்காவிட்டால் பாதகம் தான்!

  பாதத்தைக் கவனிக்காவிட்டால் பாதகம் தான்!

  பெடிக்யூர் பெஸ்ட்

  முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் பாதங்களுக்குத் தருவது இில்லை. ஆனால் பாதங்களைக் கவனிக்காவிட்டால், உடல் நலத்துக்குப் பாதகம்தான். பாதங்களைப் பராமரிக்காவிட்டால், அழுக்கு, சொரசொரப்பு, வெடிப்பு, சுருக்கம் எனப் பல பிரச்னைகளால் அவற்றின் அழகு கெடுவதுடன், கால் விரல்களில் முதுமையும் விரைவில் எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. பாதம் மற்றும் கை விரல்களைப் பராமரிக்க, பியூட்டி பார்லர்களில் பெடிக்்யூர் மற்றும் மெனிக்யூர் என்ற பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. 'உண்மையில் 'பெடிக்யூர்’ செய்வதால், அழகுடன் ஆரோக்கியமும் கிடைக்கிறது' என்கிறார் ஆயுர்வேத அழகுக்கலை நிபுணர் அஞ்சலி.


  'ஒருவரின் உடல்நிலை மற்றும் அவரது சருமத்தின் தன்மையைப் பொறுத்தே என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறோம். ஆயுர்வேத ஸ்பாக்களில் கிளென்சிங்ல் ஆரம்பித்து, மசாஜ், ஸ்க்ரப்பிக், ஆயுர்வேத பேக் என்று நான்கு படி நிலைகளில் பெடிக்யூர் செய்யப்படுகிறது.
  அதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்

  .


  எலுமிச்சைச் சாறு, ஆயுர்வேத ஷாம்பூ, டெட்டால், கல் உப்பு, பாதாம் எண்ணெய் ஆகியவை கலந்த வெதுவெதுப்பான நீரில் 10 முதல் 20 நிமிடங்கள் கால்களை ஊறவைக்க வேண்டும். பாதங்களின் வெடிப்பான பகுதிகளை அதற்குரிய பிரஷ்கள் மூலம் தேய்த்து, வெடிப்பு வந்த பகுதிகளை மிருதுவாக்க வேண்டும். நகங்களைச் சரியான அளவில் வெட்ட வேண்டும்.

  பிறகு பால், குங்குமப்பூ சேர்த்து 10 நிமிடம், தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து 10 நிமிடம், ஆயுர்வேத எண்ணெய்களால் 10 நிமிடம் என அரை மணி நேரம் வரை தொடர்ந்து பாதங்களை மசாஜ் செய்ய வேண்டும். கடைசியில், கை, கால்களில் ஆயுர்வேதப் பொருட்களைப் பூசவேண்டும். கொத்தமல்லி, புதினா, வேப்பிலை மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் அடங்கிய ஹெர்பல் பேக், பப்பாளிப்பழ பேக், ஃப்ரூட் பேக் என விரும்பிய பேக்கைத் தடவி, 10 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரில் கழுவ வேண்டும்.

  இதே முறையில் கைகளுக்கும் மெனிக்யூர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாதத்துக்கு ஒரு முறையேனும் பெடிக்யூர், மெனிக்யூர் சி்கிச்சைகளை எடுத்துகொண்டால், கை மற்றும் பாதம் பளபளப்பாக இருக்கும். வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கும். பூஞ்சை காளான் தொற்றுகள் நீக்கப்படும். வெடிப்புகளால் வரும் நோய்களைத் தடுக்க முடியும். பார்லருக்கு வரமுடியாத
  வர்கள், வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை வீட்டில் எளிமையாகக் கை மற்றும் பாதங்களைப் பராமரிக்கலாம்.

  சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் கல் உப்பைப் போட்டு, கைகளை ஊறவைக்க வேண்டும். பிரத்யேகமான துண்டைப் பயன்படுத்தி, கைகளை நன்றாகத் துடைக்கவேண்டும்.

  நகங்களை வெட்டிவிடவும். கடலை மாவு, தயிர், உப்பு, பாதாம், கடுக்காய், கிராம்பு ஆகியவற்றை ஒன்றாக அரைக்கவும். இந்தப் பொடியை தண்ணீர் விட்டுக் கலக்கி கைகளில் பூசி, மசாஜ் செய்யவும். பிறகு, எலுமிச்சம் பழத்தை நறுக்கி, கைகளில் வைத்து, கைகளைச் சுத்தம் செய்யவும். அதன் பிறகு, பப்பாளிப் பழத்தைக் கூழாக்கி, பூசவும்.


  வீட்டில், சுத்தமான மண் தரை, சிமெண்ட் தரை இருப்பவர்கள் வீட்டுக்குள்ளே செருப்பு அணியத் தேவை இல்லை. ஆனால், கிரானைட், மார்பிள், டைல்ஸ் போன்ற தரைகள் கொண்ட வீடு
  களில் வசிப்பவர்கள் நல்ல காற்றோட்டமான, வீட்டுக்குள் மட்டுமே அணியக்கூடிய செருப்புகளை வாங்கி அணிவது நல்லது. பாதம் மற்றும் விரல்களில் அதிக வெடிப்புகள் இருப்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி, பெடிக்யூர், மெனிக்யூர் செய்து
  கொள்ளுவது நல்லது' என்றார். கால்களைக் கவனிப்போம்!

  வறட்சியே சுருக்கத்துக்குக் காரணம்!


  தோல் வறட்சிக்கு என்ன காரணம் என்று ஆயுர்வேத மருத்துவர் யாழினியிடம் கேட்டபோது...

  'உடலில் எண்ணெய்ப் பசை குறைய ஆரம்பிக்கும்போது தோலில் வறட்சி ஏற்படுகிறது. போதுமான அளவு நீர் பருகாதது, உணவுப் பழக்கம் இரண்டும்இந்த வறட்சிக்கு முக்கியக் காரணம். பெண்களுக்கு சமையலறையில் ஆரம்பித்துக் குளியலறை வரை சோப், வேதிப் பொருள்கள் கலந்த நீர்மங்கள் மற்றும் தண்ணீரில் அதிக நேரம் கைகளைப் பயன்படுத்துதல் போன்ற காரணத்தால்், எளிதில் சுருக்கமும், வெடிப்பும் வந்துவிடும்.

  அதேபோல், ஆண்கள் வெயில் நேரங்களில் பைக் ஓட்டு வதாலும் கை, கால்களில் தோல் சுருக்கம் ஏற்படுவது மட்டுமின்றிக் கருத்தும் போகி்்றது. பாதங்களைப் பாதுகாக்க பெடிக்யூரும், கைகளைப் பளிச்சென வைத்திருக்க மெனிக்யூர் சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம்' என்றார்.  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 16th Apr 2015 at 01:20 PM.
  rsakthi1974 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter