Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree114Likes

Prevention Better than Cure - Need suggestions Ladies!


Discussions on "Prevention Better than Cure - Need suggestions Ladies!" in "Health and Kids Food" forum.


  1. #1
    Rudhraa's Avatar
    Rudhraa is offline Moderator & Blogger Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    The World
    Posts
    1,870

    Prevention Better than Cure - Need suggestions Ladies!

    Hi friends,

    Climate has changed and due to rainy and bad weather most of kids get sick and get cold, fever etc. It won't affect persons who has good immunity. Hope many of you follows good granny therapy to increase immunity and also some times the granny therapy to cure cold and flu easily without taking medicines (which has more side effects) if you know please share it here.

    பருவநிலை மாறி விட்டது, அடிக்கடி சளி ஜுரம் போன்ற குழந்தைக்கும் நம் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் வந்து ரொம்ப கஷ்டம் கொடுக்கும் உங்கள் வீடுகளில் இவை வாராமல் இருக்க என்ன செய்வீர்கள், வந்தால் எளிய முறையில் சரிசெய்ய என்ன செய்வீர்கள் என்று பகிர்ந்து கொள்ளுங்கள்.



    Please note, if you have fever please consult doctor immediately don't try any granny therapy, since now malarial and dengue fever too spreading quickly.

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine December 2015. You Can download & Read the magazines HERE.



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Prevention Better than Cure - Need suggestions Ladies!-5f09f9229c9adda336922661cfcfa47f.jpg  
    Last edited by sumathisrini; 24th Dec 2015 at 02:08 PM.
    Universal Rule Never Change!
    What you send out, comes back.
    What you sow, you reap.
    What you give, you get.



    Bagavad Gita Discussion Group| Must Read Motivational Books!


  2. #2
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

    சளித் தொல்லைக்கு தூதுவளை மிகவும் நல்லது.

    தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சளி பிடித்தால், தாய் நாள்தோறும் தூதுவளை சம்பல் செய்து சாப்பிட்டு வர குழந்தைக்கு சளி படிப்படியாக குறைந்து இல்லாமல் போய்விடும். இது எங்கள் வீட்டு அனுபவம்.



    தூதுவளை இலை - 25
    தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
    சிறிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 1
    உப்பு, தேசிப்புளி - அளவாக
    எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு சிறிய உரலில் இடித்து மதிய உணவுடன் சாப்பிடவும்.
    சளி முற்றாக நீங்கும் வரை சாப்பிட வேண்டும்.

    பெரியவர்களுக்கும் இது மிகவும் நல்லது.

    இணைத்தமைக்கு மிகவும் நன்றி கார்த்திகா @gkarti .

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine December 2015. You Can download & Read the magazines HERE.


    Attached Thumbnails Attached Thumbnails Prevention Better than Cure - Need suggestions Ladies!-.jpeg  
    Last edited by sumathisrini; 24th Dec 2015 at 02:09 PM.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

    Hi Rudhraa,

    When my son was young, if he suffers from fever, initially, I used to give the crocin drops which was prescribed by the doctor for 1 or 2 times in a day. Along with this, I used to keep a cloth dipped in cold water over the temple (நெத்தி ) and also in the genital part , which will subside the fever immediately.

    but if the fever still prevails, then immediately I used to rush to the doctor. This is because , my son sometimes used to get Febrile seizure (fits during fever).

    But he never used to get fever frequently. so it was not a big problem for me.

    He had good immunity power.

    Cold was quite common, once in 6 months, he used to get it. Cough...no...he didn't have it.

    for cold and to avoid cold, I used to follow the below.

    கைக்குழந்தை ஜலதோஷத்தினால் கஷ்டப் பட்டால், விளக்கெண்ணையில் 2 பூண்டு துண்டு போட்டு காய்ச்சி , இளம் சூட்டில், பூண்டை எடுத்து விட்டு , தாய்ப்பாலுடன் புகட்ட வேண்டும்.
    உடனே ஜலதோஷ சளி , வயிற்றுப் போக்கில் வெளியே வந்து விடும் .

    குழந்தைக்கு 8 மாதத்திற்கு மேல் ,


    பூண்டை ஒரு பத்து பற்கள் எடுத்து நன்றாக நசுக்கி , 5 மிளகு எடுத்து நசுக்கி , ஒரு க்ளாஸ் பாலில் போட்டு , ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து , அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி , அந்தப் பாலை மட்டும் , குழந்தைக்கு கொடுத்தால் , மார்புச்சளி நீங்கும் .

    சளி நீங்கும் வரை தினமும் கொடுக்கவும் . மோஷனில் சளி வந்துவிடும் . அல்லது வாமிட் செய்தால் வந்து விடும் .

    இதற்குப் பிறகு , 15 - 20 நாட்களுக்கு ஒரு முறை இந்த பூண்டு சுரசம் கொடுத்து வரலாம் . மார்புச் சளி கட்டாமல் இருக்கும் .



    Read more: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    For cough, we can give சித்திரத்தை கஷாயம் .

    For cold, I also used to give the Homeopathic medicine, Ocimum sanctum, which is nothing but the Thulasi kashayam.


    Jayanthy





  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

    டியர் ருத்ரா

    நான் fever வந்தால் உடனே ஒரு நாலு ml Paracetamol குடுத்து உடனே டாக்டர் இடம் அழைத்து சென்று விடுவேன்.மருந்து குடுக்காமல் டாக்டரிடம் அழைத்து போகும் முன் fever அதிகம் ஆகி ஜன்னி வந்து விடாமல் தடுக்கவே இது.இது டாக்டர் எங்களுக்கு சொன்னது.

    மருந்து குடுக்கும் முன் எவ்வளவு ஜுரம் இருந்தது என்று நோட் பண்ணி வைத்து டாக்டரிடம் கூற வேண்டும்.

    fever எந்த மாதிரி என்று தெரியாது,அதனால் டாக்டரிடம் போவது நல்லது.

    1 வயது வரை
    குளிப்பாட்டி முடித்த உடன் சிறிது கஷாயம் தருவோம்.

    அது செய்வது
    கொதிக்கும் கால் கப் நீரில் சிறிது பொடித்த மிளகு,ஓமம் சிறிது,1 பல் பூண்டு கையில் நசுக்கி போடவும்,பெருங்காயம் சிறிது,வெத்தலை காம்பு 2 or 3 ,கொழுந்து வேப்பிலை 2 or 3 போட்டு ஊற வைப்போம்.
    இதை கையால் நசுக்கி ,ஒரு துணியில் வடிகட்டி ,2 or 3 சொட்டு நல்ல எண்ணெய் ஊற்றி அரை சங்கு குடுப்போம்.இது சளி இருமல் வராமல் தடுக்கும்.

    ஒரு டப்பாவில் மிளகு,ஓமம் ,கட்டி பெருங்காயம் கலந்து வைத்து கொண்டு ஒரு சிடிகை போட்டால் போதும்.

    cold வந்தால்
    1 வயது முன் தேங்காய் எண்ணையில் 1 or 2 கற்பூரம்
    or
    தேங்காய் எண்ணையில் முருங்கை பூ போட்டு காய்ச்சி நெஞ்சில் ,முதுகில் தடவி விடுவோம்

    1 வயது பின்
    கடுகு எண்ணையில் 5 or 6 பூண்டு போட்டு காய்ச்சி அந்த எண்ணையை நெஞ்சில் ,முதுகில் தடவி விட்டால் சளி நன்றாக கட்டுப்படும்.இந்த எண்ணையை காய்ச்சி வைத்து கொண்டு தேவை படும் போது சூடு செய்து use செய்யலாம்.சில குழந்தைகளுக்கு கடுகு எண்ணை சேராது பொறி பொறியாக வரும்.முதலில் டெஸ்ட் செய்து பார்த்து கொள்ளவேண்டும். இது என் வடநாட்டு தோழி சொன்னது.


    குழந்தையாக இருக்கும் போது டெய்லி தலைக்கு தண்ணிர் ஊற்றுவோம்
    குளித்து முடித்த பின் 1 lr தண்ணீரில் ஓமம் சிறிது போட்டு காய்ச்சி வைத்து கொண்டு,அதை வடிகட்டி மித சூட்டில் குளுப்பாட்டி முடித்த பின் தலை வழியாக இந்த தண்ணீர் ஊற்றி முடிக்க வேண்டும்,இதுவும் சளி ,இருமல் வராமல் தடுக்கும்.இது என் வடநாட்டு தோழி சொன்னது.

    நாங்கள் ஆரம்பத்தில் இருந்து எட்டாம் மாதத்தில் இருந்து ஹோட்டல் சென்றால் அந்த உணவு குடுத்து பழகி விட்டோம்.என்ன தரமான ஹோட்டல் போனால் பிரச்சனை இல்லை.

    என் மாமியார்,அம்மா இருவரும் சொல்லி விட்டார்கள் ,குழந்தைக்கு என்று தனியாக சாப்பிட சமைக்க கூடாது ,ஊட்டி விட கூடாது என்று.அதனால் எங்கள் வீட்டில் என்ன சமைத்தாலும் குடுத்து பழகி விட்டோம்.காரம் என்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கற்று தந்து விட்டோம்.

    முக்கியமாக எல்லா நாடுகள்,இடங்கள் அழைத்து சொல்லுவோம்.அங்கு என்ன உணவு கிடைக்கிறதோ அதையே குடுப்போம்.

    என் சில தோழிகள் infection ஆகி விடும் என்று எங்கும் அழைத்து சொல்லாமல்,வெளியே சென்றாலும் வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து வருவார்கள்.அந்த குழந்தைகளுக்கு தான் எளிதில் உடல் நலம் பாதிக்கிறது.இது நான் அனுபவத்தில் கண்டது.

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine January 2016. You Can download & Read the magazines HERE.

    Last edited by sumathisrini; 17th Feb 2016 at 02:27 PM.

  5. #5
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

    tag செய்ததிற்கு நன்றி கார்த்திகா ..

    முதல் ஆறு மாதத்தில்குழந்தைக்கு ஜுரம் வந்தவுடன் .குழந்தையின் உள்ளங்கால் நெற்றி பொட்டில் சிறிது பேபி colone தடவினால் ஜுரம் குறைந்து விடும்.இது நான் என் பெரிய பையனுக்கு செய்வேன் .அவனுக்கு infection இல்லாத சமயம் குணமாகிவிடும் .இல்லையென்றால் மருத்துவரிடம் அழைத்து செல்வேன் ..

    குழந்தைக்கு ஜுரம் இருக்கும் சமயம் குறிப்பிட்ட temperature அதிகம் போனால் இழுப்பு அல்லது vacant stare வரும் .மருந்து கொடுத்தாலும் 102 டிகிரிக்கு மேலேபோனால் நல்ல வெது வெதுவெதுப்பான நீரில் நல்ல காட்டன் துண்டை நனைத்து நன்றாக பிழிந்து(நீர் இருக்க கூடாது ) அதை குழந்தையின் உடம்பில் வைத்து துடைதெடுத்தால் உடனே 2 டிகிரி குறைந்து விடும் .இது டாக்டர் சொல்லி நான் என் இரண்டாம் மகனுக்கு செய்தது .. என் சின்ன பையனுக்கு ஜுரம் வந்தால் ஒரு மணிக்கு ஒரு முறை செக் செய்து இதே போல் செய்வேன் .

    குழந்தைக்கு இருமல் இருந்தால் பெரும்பாலும் படுத்த பிறகு தான் அதிகமாகும் ..உடனே குழந்தை வாந்தி எடுத்து விடும் .இருமல் இருக்கும் சமயத்தில் குழந்தைக்கு படுக்க கொடுக்க கூடாது அப்படியே கொடுக்க வேண்டும் என்றால் படுக்க போகும் 3 மணி நேரத்திற்கு முன் கொடுங்கள்.. .பால் சீக்கிரம் வாந்தி வர வைத்து விடும் ..பால் குடிக்கும் குழந்தை என்றால் பால் கொடுத்து ஒரு மணி நேரம் குறையாமல் படுக்க வைக்க வேண்டாம் .திட உணவு சாப்பிடும் குழந்தை என்றால் அரை வயிறு போல் எளிதில் ஜீரணம் ஆகும் உணவு கொடுக்கலாம்..

    குழந்தைக்கு வறட்டு இரும்மல் , மார்பு சலி இருந்தால் .அரை கப் பால் , அரை கப் தண்ணீர் கலந்து இதில் பங்கல்கண்டு, சிறிது மஞ்சள் தூள் , சிறிது மிளகு தூள் போட்டு நன்றாக காய்ச்சி மிதமான சூட்டில் கொடுத்தால் சலி கரைந்து வெளி வந்து விடும் ..

    பெரியவர்களுக்கு வறட்டு இரும்மல் சலி இருந்தால் மேலே சொன்னதை செய்யலாம் ..மற்றும் டீ போட்டு சாப்பிடும் போது அதில் கால் ஸ்பூன் மிளகு தூள் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டால் இரும்மல் குறைந்து சலி கரைந்து வெளி வந்து விடும் ..

    கருப்பூர வள்ளி இலையில் இரண்டு இலையை அரை கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து கால் கிளாஸ் வந்ததும் அதில் சிறிது தேன் கலந்து குடித்தால் சலதோஷம் , மூக்கில் நீர் வடிதல் குறைந்து விடும் .கற்பூரவள்ளி செடியை வீட்டில் வளர்க்கலாம் தேவையான பொழுது உபயோக படும் இது வீட்டில் இருந்தால் கிருமி அண்டாமல் காக்கும்(இது நான் ஒரு புத்தக்கத்தில் படித்தேன் ) .

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine January 2016. You Can download & Read the magazines HERE.

    Last edited by sumathisrini; 17th Feb 2016 at 02:28 PM.
    - உமா உதய்

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

    ஆமாம் @chan & @repplyuma

    நான் கூட , சளி இருந்தா , தேங்காய் எண்ணையில் கற்பூரம் போட்டு வெதுவெதுப்பாக காய்ச்சி அதை மார்பில், விலாவில் தடவுவது , அப்புறம் ,யூகலிப்டஸ் ஆயிலை உள்ளங்காலில் தடவுவது இது ரெண்டுமே செஞ்சிருக்கேன் .

    இதெல்லாம் செஞ்சு ரொம்ப ரொம்ப வருஷம் ஆச்சா ...மறந்தே போச்சு ...ஹி..ஹி

    Jayanthy





  7. #7
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

    Quote Originally Posted by jv_66 View Post
    ஆமாம் @chan & @repplyuma

    நான் கூட , சளி இருந்தா , தேங்காய் எண்ணையில் கற்பூரம் போட்டு வெதுவெதுப்பாக காய்ச்சி அதை மார்பில், விலாவில் தடவுவது , அப்புறம் ,யூகலிப்டஸ் ஆயிலை உள்ளங்காலில் தடவுவது இது ரெண்டுமே செஞ்சிருக்கேன் .

    இதெல்லாம் செஞ்சு ரொம்ப ரொம்ப வருஷம் ஆச்சா ...மறந்தே போச்சு ...ஹி..ஹி
    இருமல் வந்தால் தேன்னில் சிறிது மிளகு பொடி கலந்து நாக்கில் தடவினால் சளி,இருமல் மட்டுப்படும்,வெறும் இருமல் என்றால் வெறும் தேன் மட்டும் போதும்.


  8. #8
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

    Hi Ruthraa,


    TFT me karti @gkarti

    Naan maha ku fever vantha paracetamol 2.5 ml kudupen,then DR ta kootitu poven...

    thalaiku oothra annaiku kashayam kudupen,1/2 glass water nalla kothika aarambichone athula 2 milagu,1 poondu, -itha lighta thatti podanum athoda thuli jeera/omam1/2 vetrilai,2-3 thulasi,panangarkandu serthu nalla kothichi 1/4 glass aaganum...atha nalla filter panni kudupen....ithaye cold irukum bothu mngla verum vaithula kudupen apdi kudukutha motion pogum pothu salilam vanthidum...


    nightla irumal jasthi iruntha 1/4 glass milkla,1 spoon honey,oru chittigai manjal podi serthu vethuvethuppa kudutha irumal kurainchidum...

    another option 2 drops honey,oru chittigai manjal podi,thuli milaguthool serthu lick panna sonnalum irumal kuraiyum...

    night thoongumbothu romba moojivida mudiyama kashtapatta konjama vicks eduthu vetrilaila thadavi nalla vilakula soodu kaati porukra sootla kuzhanthaigal nenjula vachi vachi edukanum...athe mathiri nethilayum podanum..ipdi senja mookadaipu konjam kuraiyum...

    thalai verthu kooda kuzhanthaikalukku sali pidikkum athukku night thoongumbothu thalaganikku bathil 1kg puzhungal arisi ya oru cotton thhunila mootaya katti (clotha arisiya kotti sinthatha mathiri rectangleah madichi) thalaiku vachu padukka vacha..thalaila irukra eeram arisi izhuthudum...

    Ithu en friend sonnathu naatu marunthu kadaila Neerkovaimathirai athai thaaipaallayo,illa hot waterlayo karachi nethila pathupotalum cold kuraiyum.........

    naan seira home remedies ellam sollitenu nenaikiren...innumgnabagam vantha varen friends.............

    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  9. #9
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

    ஆமா ஜெயந்தி அக்கா ..சில சமயம் நமக்கு நல்லா தெரிந்த விஷயம் சரியானா நேரத்தில நியாபகம் வராது ..நேற்று post போட்ட அப்புறம் ஒரு விஷயம் நியாபகம வந்தது ..

    வெளிநாட்டில் குளிர் பிரதேசத்தில இருக்கும் குழந்தைக்கு பொதுவா winter முடியறதுக்குள்ள ear infection, அல்லது throat infection கண்டிப்பா வரும் .இதனால் ஜுரம் அதிக படும் .சில சமயம் நாம் மருந்து கொடுக்கும் சமயம் ஜுரம் குறையும் நாலு மணி நேரம் கழித்து மறுபடியும் ஜுரம் வந்து விடும் ..பெரும்பாலும் இது infection இருந்தால் இப்படி ஆகும் .

    குழந்தைக்கு ஜுரம் வரும் சமயம் வாய் துர்நாற்றம் வருகிறதா என்று கவனியுங்கள் .அப்படி இருந்தால் throat infection இருக்க வாய்ப்பு உண்டு .infection அதிகம் ஆனால் சாப்பிடவே மாட்டாங்க ..நீங்கள் உடனடியாக டாக்டரிடம் அழைத்து செல்லவும் .

    அது போல காதின் பின் கீழ் பகுதியில் லேசாக அழுத்தினால் அல்லது தடவினால் குழந்தை வலியில் அழும் ..இது ear infection இருக்க வாய்ப்பு உண்டு .infection அதிகம் ஆனால் குழந்தை காதை தொட்டாலே அழும் ..இப்படி இருந்தால் நாள் கடத்தாமல் டாக்டர் கிட்ட அழைத்து செல்லவும் .

    என் இரண்டாம் மகனுக்கு நாலு வயது வரை ஒரு ஒரு winter க்கும் இந்த பிரச்சனை இரண்டு முறையாவது வரும் .ஜுரம் 102 - 103 வரை இருந்து கொண்டே இருக்கும் .ஜுரம் 102 வந்தால் sponge bath (ஈர துணியால் துடைப்பது ) கொடுத்து ஜூரத்தை குறைக்க சொன்னார் டாக்டர் .infection குறையும் வரை ஜுரம் இறங்காது .

    sinus பிரச்சனை இருக்கற பெரியவங்களுக்கு இது வர வாய்ப்பு உண்டு ..சாப்பாடு முழுங்கும் போது தொண்டை -காது வலித்தால் சைத்தியம் என்று சொல்வாங்க ..இதற்க்கு ஒரு கை பிடி கல் உப்பை வாணலியில் வறுத்து கொஞ்சம் மொத்தமான காட்டன் துணியில் சுற்றி காதின் அடி பகுதி , தொடையில் ஒத்தடம் கொடுத்தால் சரியாகும் ..ஒரு நாளைக்கு மூன்று முறை செய்து பாருங்கள் .

    அதோடு கொஞ்சம் சூடான தண்ணியில் உப்பு போட்டு தொண்டையில் வைத்து கொப்பளித்தால் சரி ஆகும் ..mouth wash போட்டு கொப்பளித்தால் வலிக்கு இதமாக இருக்கும் .

    வறட்டு இருமல் இருந்தால் இரவில் தூங்க முடியாது .இரவில் இருமல் வந்தால் mouth wash போட்டு தலையை அண்ணாந்து தொண்டையில் வைத்து கொப்பளித்தால் , வலி மறுத்து தூங்க முடியும் . அல்லது ஒன்னு ரெண்டு ஏலைகாய் வாயில் அடக்கி கொண்டு தூங்கினால் இரவில் இருமல் மட்டு படும் .



    Quote Originally Posted by jv_66 View Post
    ஆமாம் @chan & @repplyuma

    நான் கூட , சளி இருந்தா , தேங்காய் எண்ணையில் கற்பூரம் போட்டு வெதுவெதுப்பாக காய்ச்சி அதை மார்பில், விலாவில் தடவுவது , அப்புறம் ,யூகலிப்டஸ் ஆயிலை உள்ளங்காலில் தடவுவது இது ரெண்டுமே செஞ்சிருக்கேன் .

    இதெல்லாம் செஞ்சு ரொம்ப ரொம்ப வருஷம் ஆச்சா ...மறந்தே போச்சு ...ஹி..ஹி


    Last edited by repplyuma; 6th Oct 2015 at 07:12 PM.
    - உமா உதய்

  10. #10
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

    nice thread ருத்ரா

    tag பண்ணதுக்கு தேங்க்ஸ் கார்த்தி

    இங்கே வருடத்தில் இரண்டு மாதம் தான் வெயில்.. மற்ற நேரம் எல்லாம் குளிர் தான் எனவே பிள்ளைகள் காது கழுத்து நெஞ்சு நல்லா மூடி அனுப்புவேன்.. கூடுமான வரை காத்து பிடிசிக்கமால் பார்த்துக்குவேன்.. பத்து நாட்களுக்கு ஒரு முறை மிளகு திப்பிலி அரைச்சி குழம்பு செய்துடுவேன்... காலை வெளியே கிளம்பும்முன் பாலில் பனக்கல்கண்டு கொஞ்சம் மிளகுத்தூள் கலந்து கொடுப்பேன்... இரவு குடிக்கும் பாலில் இஞ்சி தட்டி போட்டு கொதிக்க வச்சி கொடுப்பேன்... அவ்வளோ தான்... இங்கே குளிர் கால நோய்கள் நிறைய வரும் எனவே கை வைத்தியம் எதுவம் செய்வது இல்லை... நோயினு வந்துட்டா டாக்டர் கிட்டே போய்டுவோம்...

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine February 2016. You Can download & Read the magazines HERE.

    Last edited by sumathisrini; 17th Feb 2016 at 02:29 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter