Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By chan
  • 1 Post By jv_66

Plastic Lunch boxes pose dangers-பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் விபரீதம்


Discussions on "Plastic Lunch boxes pose dangers-பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் விபரீதம்" in "Health and Kids Food" forum.


  1. #1
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    Plastic Lunch boxes pose dangers-பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் விபரீதம்

    பிளாஸ்டிக் பாக்ஸ் விபரீதம்


    விழிப்புணர்வு
    கண்ணைக் கவரும் வண்ணங்களில் கடைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன பிளாஸ்டிக் டப்பாக்கள். விதவிதமான வடிவங்கள், அலங்காரங்களோடு அடுக்கப்பட்டிருக்கிற லஞ்ச் பாக்ஸ், ஸ்னாக்ஸ் பாக்ஸ், வாட்டர் பாட்டில்கள் குழந்தைகளை கவருகின்றன. பெற்றோரும் எந்த புரிதலுமின்றி பிளாஸ்டிக் டப்பாக்களை வாங்கி ஸ்னாக்ஸ், லஞ்சை கட்டித் தந்து தங்கள் குழந்தைகளை மகிழ்விக்கிறார்கள். வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜ்களில் உணவுப் பொருட்களைச் சுமந்து கொண்டு பிளாஸ்டிக் டப்பாக்களே நிறைந்திருக்கின்றன. மளிகைப் பொருட்களும் பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் தஞ்சமடைந்திருக்கின்றன. ஆனால், பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவு, தண்ணீரை வைத்துப் பயன்படுத்துவது மிகப்பெரிய விபரீதம் என்கிறார்கள் நிபுணர்கள்.

    “கடைகளில் விதவிதமான பிளாஸ்டிக் டப்பாக்கள் குவிந்து கிடக்கின்றன. பார்ப்பதற்கு அழகாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் மக்கள் அவற்றை வாங்குகிறார்கள். குழந்தைகளும் அவற்றை விரும்புகின்றன. ஆனால், அதுமாதிரி டப்பாக்களில் உணவுப் பொருட்களை வைத்தால், உணவுப்பொருளும் விஷமாகிவிடும் என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை. பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து, பிஸ்பீனல்-ஏ (bisphenol-a) என்ற வேதிப்பொருள் உருவாகும். இது, ‘ஹார்மோன்’ பாதிப்பை ஏற்படுத்தும். நரம்பு சார்ந்த பிரச்னைகளையும் உருவாக்கும். தொடர்ந்து இந்த வேதிப்பொருள் உடம்புக்குள் சென்றால் உடல் பருமனாகும். நீரிழிவு பாதிப்பும் வரலாம். குறைந்த வயதிலேயே, பெண்கள் பூப்பெய்திவிடவும் வாய்ப்புள்ளது...” என்கிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்.

    “பள்ளி மாணவர்களுக்கு ‘பெட்’ (பாலி எத்திலின் டேரப்தலேட்) பாட்டிலில் தண்ணீர் கொடுத்தனுப்புகிறார்கள். இந்தப் பாட்டில்களில் ‘டை- எத்தில் ஹைட்ரக்சில் அமைன்’ என்ற ரசாயனப் பொருள் கலந்துள்ளது. இது, புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருள். பெட் பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாலும், வெந்நீரை ஊற்றி பருகுவதாலும், இந்த வேதிப்பொருள் உடலுக்குள் செல்கிறது. பிளாஸ்டிக்கைப் பொருத்தவரை நல்ல பிளாஸ்டிக், கெட்ட பிளாஸ்டிக் என்று எதுவும் கிடையாது. எவ்வளவு தரமான பிளாஸ்டிக்காக இருந்தாலும் அது உணவோடு கலக்கவே செய்யும். எனவே, முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். நம் காலத்தில், எவர் சில்வர் டப்பாக்களில் தான் உணவைக் கொண்டு செல்வோம். அது உணவைப் பாதுகாப்பதோடு, உடம்புக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. குழந்தைகளுக்கும் அதையே கொடுத்தனுப்புவது நல்லது...” என்கிறார் அம்பிகா சேகர்.



    “பிளாஸ்டிக் டப்பாவில் 100 டிகிரிக்கு மேல் சூடான பொருட்களை வைக்கும்போது ‘பிளாஸ்டிசைசர்ஸ்’, (பிளாஸ்டிக்கை தேவையான வடிவத்துக்கு வார்க்க பயன்படுத்தக் கூடிய ரசாயனம்) உணவில் கலக்க வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக் டப்பாக்கள் மட்டுமல்ல... பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்துவதும் விபரீதம் தான். முன்பெல்லாம் காய்கறி வாங்கச் செல்லும்போது, கையோடு துணிப் பை எடுத்துச்செல்வோம். இப்போது வெறும் கையை வீசிச்சென்று பிளாஸ்டிக் கவரில் காய்கறி மட்டுமின்றி விஷத்தையும் சேர்த்து வாங்கி வருகிறோம். வாங்குகிற காய்கறிகளை அப்படியே பிளாஸ்டிக் பைகளில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைக்கிறார்கள். வெப்பநிலை மாறுபாடு காரணமாக பிளாஸ்டிக் கவரில் இருந்து வெளிப்படும் ரசாயனக்கசிவு, ஃப்ரிட்ஜில் இருக்கும் எல்லாப் பொருளையுமே மெல்லக் கொல்லும் விஷமாக மாற்றிவிடுகிறது. சிலர் மைக்ரோ அவனில், பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துகிறார்கள். சிலர் காய்கறிகளை பிளாஸ்டிக் கவருடன் அப்படியே மைக்ரோ அவனில் வைக்கிறார்கள். மைக்ரோ அவன் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் என்பதால், பிளாஸ்டிக் கவரில் உள்ள ரசாயனம் உணவுடன் கலந்து பெரும் பாதிப்புகளை உருவாக்கி விடும்.

    பிளாஸ்டிக் பை, பாக்ஸ்களில் டயாப்சான், தாலேட், பென்சீன் போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இவை புற்றுநோயின் நேரடி காரணியாக அமையக்கூடியவை. மிகப்பெரும் விபரீதங்கள் அடங்கிய ஒரு பொருளை நாம் சர்வசாதாரணமாக பயன்படுத்துகிறோம். அடுத்த தலைமுறைக்கும் அதைப் பழக்கப்படுத்துகிறோம். இனியேனும் பிளாஸ்டிக் டப்பாக்களை தூக்கி எறிந்துவிட்டு எவர்சில்வர் டப்பாக்களில் உணவை கட்டிக் கொடுத்தனுப்புங்கள். வீட்டில் சேமிக்கும் உணவுப் பொருட்களையும் எவர்சில்வர் டப்பாக்களுக்கு மாற்றுங்கள். வெளிநாட்டு உணவுகளையும், துரித உணவுகளையும் தவிர்த்து, வீட்டில் செய்யக்கூடிய சத்துள்ள ஆரோக்கிய உணவை சாப்பிட குழந்தைகளை பழக்குங்கள்...” என்கிறார் சித்த மருத்துவரும் சூழலியலாளருமான கு.சிவராமன். கெட்டவை எல்லாம் ஈர்க்கவே செய்யும். எச்சரிக்கையாக இருங்கள். எல்லாவற்றையும் விட மேலானது நம் குழந்தையின் ஆரோக்கியம். உடனடியாக பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு குட் பை சொல்லுங்கள். குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்!

    "பிளாஸ்டிக்கைப் பொருத்தவரை நல்ல பிளாஸ்டிக், கெட்ட பிளாஸ்டிக் என்று எதுவும் கிடையாது. எவ்வளவு தரமான பிளாஸ்டிக்காக இருந்தாலும் அது உணவோடு கலக்கவே செய்யும். எனவே, முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்."


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 1st Dec 2015 at 02:18 PM.
    jv_66 likes this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: Plastic Lunch boxes pose dangers-பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் விபரீதம்

    Thanks for the caution.

    chan likes this.
    Jayanthy



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter