Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

விளையாட்டம்மை எதனால் வருகிறது


Discussions on "விளையாட்டம்மை எதனால் வருகிறது" in "Health and Kids Food" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    விளையாட்டம்மை எதனால் வருகிறது

    விளையாட்டம்மை எதனால் வருகிறது

    டாக்டர் எல்.பாலகிருஷ்ணன்


    குழந்தைகள் நல மருத்துவர், பவானி

    “அம்மை நோய் என்பது வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடியது. இந்த வகையான வைரஸ் கறுப்பு, சிவப்பு நிறப் புள்ளிகளை உடலில் தோற்றுவிக்கக்கூடியது. பொதுவாக, குழந்தைகளுக்கு வரும் இதுபோன்ற விளையாட்டு அம்மையால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தட்டம்மையைத்தான் விளையாட்டு அம்மை என்பார்கள். இது மீசல்ஸ் எனும் வைரஸால் வருவது. குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் தட்டமைக்கான தடுப்பூசி போட வேண்டும்.

    இதை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போட்டுக்கொள்ளலாம். குழந்தைகளுக்குத் தேவையான, சத்தான உணவினை சரியான அளவில் கொடுத்துவந்தாலே, இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு அந்தந்த வயதுக்கு ஏற்ற தேவையான உணவுகளைத் தருவதும் அவசியமான ஒன்று. இது, குழந்தைகளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.

    விளையாட்டு அம்மை தானாகவே சரியாகிவிடும். ஆனாலும், மருத்துவரிடம் ஆலோசித்து மருந்து அவசியாமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் சுயமாகவே குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பது தவறு.

    தட்டம்மை வந்த சமயத்தில் குழந்தைகளுக்குப் பத்திய உணவு தேவை இல்லை. அதே சமயம் இளநீர், வாழைப்பழம், அரிசி கஞ்சி, போன்ற குளிர்ச்சியான உணவுகளையும், வைட்டமின் ஏ அடங்கி உள்ள சத்தான திட ஆகாரங்களையும் கொடுப்பது நல்லது.

    இந்த அம்மையால் வயிற்றுப்போக்கு, நிமோனியா காய்ச்சல், காதில் சீழ் வருதல், சோர்வாக இருத்தல் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ஆனால், பயப்படத் தேவை இல்லை. ஏழு நாட்கள் வரை நீடிக்கும்

    இந்த அம்மை, எளிதில் குணப்படுத்தக்கூடியதுதான். அம்மை என்று தெரிந்ததும் மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இதைத் தவிர, உடலில் சூடுவைப்பது போன்ற முரட்டுத்தனமான, தவறான வழக்கங்களைப் பின்பற்றக் கூடாது.”







    Sponsored Links
    Last edited by chan; 26th Jan 2016 at 03:02 PM.
    Vaisri02 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter