Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
 • 3 Post By chan
 • 1 Post By gkarti
 • 1 Post By ahilanlaks

'டிஸ்லெக்ஸியா' நோயா... குறைபாடா? - காரணங்களும&


Discussions on "'டிஸ்லெக்ஸியா' நோயா... குறைபாடா? - காரணங்களும&" in "Health and Kids Food" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  'டிஸ்லெக்ஸியா' நோயா... குறைபாடா? - காரணங்களும&

  'டிஸ்லெக்ஸியா' நோயா... குறைபாடா? - காரணங்களும் சில உண்மைகளும்!  ‘டிஸ்’ என்றால் ‘சிரமம்.’ ‘லெக்ஸியா’ என்றால் ‘மொழி’. `தெளிவற்ற பேச்சு' என்பதன் வார்த்தைப் பிரயோகமே டிஸ்லெக்ஸியா. எந்த ஒரு தகவலையும் புரிந்து படிக்க இயலாத நிலைக்கு பல காரணங்கள் இருந்தபோதிலும், கருத்தொற்றுமை இல்லாத நிலையையே நாம் 'டிஸ்லெக்ஸியா' என்கிறோம்.

  எந்த ஒரு குழந்தையாவது தனது தாய்மொழியையும் கணித எண்களையும் கற்க சிரமப்படுகிறதா, எழுத்துக்களில் இருக்கும் வேறுபாடுகளை அறிய முடியாமல் திணறுகிறதா, சொற்றொடர்களை சரளமாகப் படிக்க சிரமப்படுகிறதா, நோட்டுப் புத்தகத்தில் அதிக எழுத்துப் பிழைகளுடன் எழுதுகிறதா? இந்தக் கேள்விகளுக்கு பதில் `ஆம்' என்றால், அந்தக் குழந்தை 'டிஸ்லெக்ஸியா' எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.


  டிஸ்லெக்ஸியா வியாதியா... குறைபாடா?
  இது வியாதி அல்ல... குறைபாடு என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் மூளை மற்றும் நரம்பியல் நிபுணர்கள், இதை 'இயலாமை' (disorder) என்றும் கூறுகிறார்கள். இது பற்றி 'மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா அசோசியேஷன் (MDA)' சார்பில், டிஸ்லெக்ஸியா மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும் ஆசிரியை ஹரிணி மோகனிடம் கேட்டோம்.

  ‘‘டிஸ்லெக்ஸியா பற்றிய போதுமான விழிப்பு உணர்வு நம் மக்களிடம் இல்லை . மூளை வளர்ச்சிக் குறைபாடுகளான ஆட்டிசம், டவுண் சிண்ட்ரோம் ஆகியவற்றுக்கும், நரம்புகளை அதிர்வலைகள் மூலம் செயல்படவைக்கும் செல்களான நியூரான்களின் செயல்திறன் குறைபாடான டிஸ்லெக்ஸியாவுக்கும் உள்ள வேறுபாட்டை, முதலில் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.

  பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு எப்படி பார்வைக் குறைபாடு அல்லது கேட்கும் திறன் குறைபாடு உள்ளதோ, அதேபோல்தான் மனித மூளையில் செயல்படும் நியூரான்களின் செயல்திறன் குறையும். குழந்தைகள் கண்களால் காணும் ஒரு மொழியின் எழுத்துக்கள், மூளை நரம்புகள் வழியாக செல்லும் முன்னர், அதற்கேற்ப மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு மாற்றம் செய்யப்படாமல் போகையில், குழந்தைகளுக்கு ஒரு எழுத்துக்கும் மற்றொரு எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போகும். உதாரணமாக ஆங்கில எழுத்துக்களான 'b' மற்றும் 'd' ஒரே மாதிரி இருப்பதால், குறைபாடுள்ள குழந்தைகள் 'bag' என எழுதுவதற்குப் பதிலாக 'dag' என எழுதுவர். இதனால் அவர்களின் அடிப்படைக் கல்வி பாதிக்கப்படுகிறது.

  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள்ளாகவே அவர் பலமுறை மனதளவில் காயப்படுத்தப்பட்டார். `மக்கு பையன்' என்றும், `சோம்பேறி' என்றும் கடைசி பெஞ்சுக்குத் தள்ளப்பட்டார். சக மாணவர்களிடம் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டார்.

  இதனால், ஆறாம் வகுப்புக்குப் போகவும் இல்லை; பள்ளியில் அழைக்கவும் இல்லை. அதன் பிறகு லாட்டரி சீட்டு விற்கும் பையனாக, ஜெராக்ஸ் கடையில் உதவியாளராக, வேறு சில கடைகளில் டீ வாங்கி வரும் பையனாக... என, சமூகத்தின் அடித்தளத்தில் உழல்பவராகவும், அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு உழைப்பவராகவும் வளர்ந்தார்.

  மூன்று வருடங்கள் கழித்து, 'எனக்கு ஏன் இந்த நிலை... எனக்குள் என்ன பிரச்னை? இதைப் போக்க முடியாதா?' என யோசித்தபோது, 'எந்த கல்வி தன்னை நிராகரித்ததோ அந்த கல்வியாலேயே சாதித்துக்காட்டுவது' என முடிவு செய்தார். எட்டாம் வகுப்பில் தனித்தேர்வு எழுதினார்... தேர்வானார். அடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நம்பிக்கையுடன் எழுதினார்... தேறினார். ப்ளஸ் ஒன் படிக்க, பள்ளிக்குச் சென்றார். பள்ளி அவரை டிஸ்லெக்ஸியா குறைபாடு உடையவராகத்தான் பார்த்தது. மீண்டும் தனித்தேர்வு எழுதினார், தேர்ச்சி பெற்றார்.


  எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக்காக யாரிடமும் போய்ப் படிக்கவில்லை; சந்தேகம்கூட கேட்டது இல்லை. சம்பந்தப்பட்ட பாடப்புத்தகங்களை வாங்கி திரும்பத் திரும்பப் படித்தார். படித்ததை திரும்பத் திரும்ப எழுதி பார்த்தார். கல்லுாரியில் இடம் தேடியபோது, தனித்தேர்வாளர்களை ஒரு புழுபோல பார்த்துத் துரத்தியது.


  ஒரு கல்லுாரியின் இளங்கலை ஆங்கிலப் பிரிவில் இடம் கிடைத்தது. அதில் முதல்தர மதிப்பெண் எடுத்தார். முதுகலை ஆங்கிலப் பிரிவில் , அவர் விரும்பிய கல்லூரியில் அனுமதி கிடைத்தது. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், சென்னை ராணுவப் பயிற்சிக் கல்லுாரியில் சேர விருப்பம் கொண்டார். அங்கு சேரப் போகும்போது ஏற்பட்ட விபத்தில், உடல்நிலை பெரிதாக பாதிக்கப்பட்டது. சிகிச்சைக் கட்டணம் மூவாயிரம் ரூபாய் இல்லாத நிலையில், நந்தகுமாரின் தாய் தனது தாலியை விற்று பணத்தைக் கொண்டுவந்தார். பணத்தைப் பெற்ற மருத்துவர், ‘இவன் பிழைப்பது கடினம். எதற்காக தாலியை விற்று சிரமப்படுகிறீர்கள்?’ எனக் கேட்டார். `தாலியைவிட என் பையன் உயிர் முக்கியம்' என, அந்தத் தாய் பதில் தந்திருக்கிறார். அவரின் வைராக்கியத்தால் உடல் தேறி எழுந்தார். ஆனால், ராணுவக் கல்லூரியில் சேர முடியவில்லை.

  அடுத்து என்ன செய்வது என்று நினைத்தபோது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ் போன்ற மத்திய அரசின் குடிமைப் பணியில் சேர்வது என முடிவுசெய்தார். அதுவும் இளங்கலை/ முதுகலைபோல மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டும் என்ற அறியாமை நிலையுடன் அதற்கான பயிற்சி மையங்களை அணுகினார். `ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் படித்தவர்களே படாதபாடுபடும்போது பாவம் இவர் என்ன செய்யமுடியும்?' என அந்தப் பயிற்சி மையங்கள் அவரை நிராகரித்தன. அப்போதுதான் அவரது நண்பர் ஒருவர், `இது போட்டித் தேர்வுதான். வழக்கம்போல நீயே படித்து முயற்சி செய்' எனச் சொல்லிவிட்டார். அதற்கான முயற்சியில் இறங்கி தேர்வு எழுதினார் நந்தகுமார். அகில இந்திய அளவில் முதல் மாணவராகத் தேறினார். ஐ.ஆர்.எஸ் ஆனார். பயிற்சி மையம் சென்ற ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் மாணவர்கள் எல்லாம் ரேங்கில் இவரைவிட வெகு தொலைவில் இருந்தனர். திருச்சி வருமானவரித் துறையின் இணை இயக்குநராக வருவதற்கு முன்னர் பார்த்த பல்வேறு பொறுப்பான பணிகளில், டெல்லி பிரதமர் அலுவலகப் பணியாளராக இருந்ததும் ஒன்று. `சரியாக எழுத வராது' என பல்வேறு கல்விக்கூடங்களால் நிராகரிக்கப்பட்ட நந்தகுமாரின் வார்த்தைகளைத்தான் பாராளுமன்றத்தில் பேசினார்கள். டிஸ்லெக்ஸியாவை வென்று சாதனை படைத்திட்ட இவரது தன்னம்பிக்கையைப் பாராட்டி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

  டிஸ்லெக்ஸியா ஒரு பார்வை...

  உலகளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையை பார்க்கையில், பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளையே இந்தக் குறைபாடு அதிகம் தாக்குகிறது என்பது தெரிகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளை சிறு வயதிலேயே அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தி ஊக்குவித்தால், எதிர்காலத்தில் அவர்களுக்கு விருப்பமான ஒரு துறையில், அவர்கள் மிகப் பெரிய அறிவாளிகளாக வர வாய்ப்பு உள்ளது. ஆனால், ஆரம்பப் பள்ளி குழந்தைகள் கூட்டத்துக்கு நடுவே இவர்களை அடையாளம் காண்பது சற்று சிரமம்.

  அமெரிக்காவைச் சேர்ந்த 'நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூராலஜிக்கல் டிசீஸ்' ன் ஆய்வறிக்கைபடி, இன்றளவில் உலக மக்களின் 17 சதவிகிதம் பேர், இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள் உள்ள குழந்தைகள், பொதுவாக மூன்றில் இருந்து நான்கு வயதுள்ளபோதுதான் கண்டறியப்படுவர். எப்போதும் தனிமையில் இருப்பது, வகுப்பில் ஆசிரியர் எழுப்பி கேள்வி கேட்கும்போது, எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது, ஹைபர் ஆக்டிவ்வாக ஓர் இடத்தில் அமராமல் எப்போதும், சுட்டித்தனத்தோடு சுறுசுறுப்பாக எதையாவது செய்துகொண்டே இருப்பது போன்றவற்றை வைத்தே, இவர்களை மற்ற மாணவர்களிடம் இருந்து, வேறுபடுத்திக் காட்ட முடியும்.

  சரிசெய்யும் முறைகள்:
  இந்தக் குறைபாட்டை, மருந்து மாத்திரைகளாலோ, மருத்துவ சிகிச்சை முறையின் மூலமாகவோ முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. இறப்பு வரை இது இருக்கும். குறைபாட்டின் தாக்கத்தை மட்டும், இவர்களுக்கான பிரத்யேகப் பயிற்சிகள் மூலம் குறைக்கலாம். இந்த மாணவர்களுக்கு ஆரம்பப் பள்ளியில் இருந்தே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல பெற்றோர்களுக்கு தங்கள் டிஸ்லெக்ஸிக்யா குழந்தைகளைச் சேர்க்க, சிறப்புப் பள்ளிகள் இருப்பதே தெரியவில்லை. அவர்களை வழிநடத்தவே பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்துவருகின்றன.  குழந்தைப் பருவத்தில் டிஸ்லக்ஸியாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்

  லியோனார்டோ டாவின்சி மற்றும் ஓவியர்கள் பாப்லோ பிக்காசோ அலெக்சாண்டர் கிரகாம்பெல்,ஆல்பர்ட் ஜன்ஸ்டைன், தாமஸ் ஆல்வா எடிசன், குத்துச் சண்டை வீரர் முகமது அலி, ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் , எழுத்தாளர் அகதா கிரிஸ்டி, ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு,

  ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் உள்ளிட்ட பலர்.

  டிஸ்லெக்ஸியா மாணவர்களைக் கையாள ஆசிரியர்களுக்கு சில டிப்ஸ்

  டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க பொறுமை மிக அவசியம். அவர்களுக்கு ஒரு செய்முறை புரியவில்லை என்றால், இன்னும் ஒரு முறை சொல்லிப் புரிய வையுங்கள்.

  ஒவ்வொரு குழந்தையிடமும் தனிக் கவனம் செலுத்துங்கள்.

  குழந்தைகளின் தனித் திறமைகளை வெளிக் கொணர ஊக்கப்படுத்துங்கள்.

  உங்கள் கோபத்தை முடிந்தவரை தள்ளியே வையுங்கள்.

  வார்த்தை உச்சரிப்பை தெளிவாக குழந்தைகள் மனதில் பதிய வையுங்கள். சொன்னதை சரியாக செய்தால், கூட்டத்திற்கு மத்தியில் ஒரு குழந்தையை எழ வைத்து, கை தட்டி உற்சாகப்படுத்துங்கள். இதனால் அவர்கள் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கி, இயல்பாக மற்றவரிடம் பழகத் துவங்குவர்.

  எந்த வகையிலும், அவர்கள் மற்ற குழந்தைகளைக் காட்டிலும் அறிவிலும், ஆற்றலிலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை அடிக்கடி வலியுறுத்துங்கள்.

  மார்க், எக்ஸாம், ரிப்போர்ட் கார்ட், ரிசல்ட் இவற்றைத்தாண்டி, பெரிய உலகமும், வாழ்க்கையும் இருப்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.முடிந்தவரை அவர்கள் தனியாக அமர்ந்திருப்பதையோ, உலாவுவதையோ அனுமதிக்காதீர்கள்.


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 29th May 2016 at 12:49 PM.
  kasri66, gkarti and ahilanlaks like this.

 2. #2
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,119

  Re: 'டிஸ்லெக்ஸியா' நோயா... குறைபாடா? - காரணங்களு

  Worth Sharing.. Athum Mr.Nandakumar Cheers Sir!!

  Thanks for the Article, Lakshmi.

  chan likes this.

 3. #3
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: 'டிஸ்லெக்ஸியா' நோயா... குறைபாடா? - காரணங்களு

  Nice article thanks for sharing.

  chan likes this.
  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter