Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Bed wetting - 7 வயது வரை படுக்கையை நனைப்பதால் பாதகம் ħ


Discussions on "Bed wetting - 7 வயது வரை படுக்கையை நனைப்பதால் பாதகம் ħ" in "Health and Kids Food" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Bed wetting - 7 வயது வரை படுக்கையை நனைப்பதால் பாதகம் ħ

    7 வயது வரை படுக்கையை நனைப்பதால் பாதகம் இல்லை!


    காலையில் எழுந்திருக்கும்போதே படுக்கை நனைந்து, உடையெல்லாம் ஈரமான நிலையில் அழுதுகொண்டே அம்மா முன் வந்து நிற்கும் குழந்தைகள் இல்லாத வீடே இல்லை. ஆனால், இதை பெருங்குற்றமாக நினைத்து அவர்களைத் தண்டிக்கும் பெற்றோர்களும் உண்டு.

    குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.“படுக்கையை நனைப்பது, குழந்தைகள் வளர்ச்சியில் நடைபெறும் சாதாரண நிகழ்வென்பதால் இது பெரிய விஷயமில்லை” என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் லஷ்மி பிரசாந்த்.

    ‘‘‘மோசமான கழிவறைப் பயிற்சியின் அறிகுறிதான் குழந்தைகள் படுக்கையை நனைக்கும் செயல்’ என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இரவு நேரங்களில் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல், தானாக வெளியேறுவதால் 90 சதவிகிதக் குழந்தைகளுக்கு படுக்கையை நனைக்கும் பழக்கம் இருக்கிறது. பொதுவாக 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தால் இதுபற்றி கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. இந்த வயது வரையிலான குழந்தைகளுக்கு இரவுநேர சிறுநீரகப்பை கட்டுப்பாடு என்பது வளர்ச்சியடையாத நிலையிலேயே இருக்கலாம்.

    7 வயதுக்குப் பிறகும் இப்பழக்கம் தொடர்ந்தால் அவர்களைப் புரிந்து கொண்டு பொறுமையாகக் கையாள வேண்டும். இரவில் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீர் தங்கும் அளவிற்கு சிறுநீரகப்பை வளராத நிலை, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது சிறுநீரகப்பை நிரம்புவதை உணராமை, ஹார்மோன் சமநிலையின்மை,

    சூழ்நிலை காரணமான மன அழுத்தம், சிறுநீர்பாதைத் தொற்று, தூக்கத்தில் மூச்சுத்திணறல், குழந்தை நீரிழிவு, மோசமான மலச்சிக்கல், முதுகுத் தண்டுவட பாதிப்பு, டையூரிக் அமிலம் எதிர்ப்பு ஹார்மோன் குறைவு (Low ADH) மற்றும் நரம்பியல் அமைப்பு அல்லது சிறுநீரக அமைப்பு குறைபாடு போன்ற காரணங்களால் சில குழந்தை கள் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றனர்.

    சிறுநீரகப்பைக்கும், மூளைக்குமான தகவல் தொடர்பு இருக்கிறது. சிறுநீரகப்பை நிரம்பும் போது மூளை அதை உணர்த்தி தூக்கத்திலிருந்து விழிப்படையச் செய்துவிடும். சிறுநீரகப்பை கட்டுப்பாட்டில் முதிர்வு அடையும் பருவமான 5 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தானாகவே இப்பழக்கம் நின்றுவிடும்.

    சிறுநீரகப்பை கட்டுப்பாடு குறைவாக இருக்கும் நிலையை ‘தாமதமான சிறுநீர்ப்பை முதிர்வு’ (Delayed Bladder Maturation) என்கிறோம். இதனால் 7 வயதுக்குப் பிறகும் சில குழந்தைகளுக்கு இப்பிரச்னை தொடரக்கூடும்.

    7 வயதைத் தாண்டியும் படுக்கையை நனைத்தல், முழுவதுமாக நின்று திடீரென்று சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடர்தல், சிறுநீர் வரும்போது வலி ஏற்படுதல், அளவுக்கு அதிகமாக தாகம் ஏற்படுதல், சிறுநீரின் நிறம் மாறுதல், மலச்சிக்கல் மற்றும் குறட்டை விடுதல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் மருத்துவரிடம் கூட்டிச் செல்வது அவசியம்.

    பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளில் டீன்ஏஜ் பருவத்தினர் இப்பிரச்னை உள்ளவர்களாக இருக்கிறார்கள். டீன்ஏஜில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படுகிறது. படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தால் பெரிய அளவில் ஆரோக்கிய பாதிப்பு இல்லை என்றாலும், இக்குழந்தைகள் தாழ்வுணர்ச்சியால் மற்ற குழந்தைளோடு பழகாமல் தனிமைப்படுகிறார்கள். சில குழந்தைகள் உறவினர் வீட்டுக்குச் செல்வதைக் கூட தவிர்ப்பார்கள்.

    இப்பிரச்னை உள்ள குழந்தைகளை கூட்டி வரும் போது, ‘பெற்றோரில் யாருக்கேனும் சிறுவயதில் இப்பழக்கம் இருந்திருக்கிறதா’ என்று விசாரிப்போம். சிறுநீர் போவதற்கு முன்னும், பின்னும் அடக்கமுடியாமல் சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் கழித்த பிறகு ஏற்படும் வலி, அனிச்சையாக மலம் சிறு அளவில் வெளிவருவது போன்ற அறிகுறிகள் இருப்பதையும் கேட்டு அறிந்து கொள்வோம். குடும்பத்தில் சண்டை, பிரிவு போன்று ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்வோம்.

    குழந்தையின் மனநலத்தை பாதிப்பதால், இதுவும் ஒரு காரணமாகிறது. குழந்தையின் முழு உடல் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, ஸ்கேன் போன்ற சோதனைகள் செய்து பிறகு சிகிச்சையைத் தொடர்கிறோம். சிகிச்சையின் முதல் கட்டமாக பெற்றோர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கிறோம்.

    அவர்களை இரவு படுக்கைக்கு போவதற்கு முன்னால் டாய்லெட் போகச்செய்து தூங்க வைப்பது, இரவில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை அலாரம் வைத்து எழுப்பி சிறுநீர் கழிப்பதற்கு கூட்டிச் சென்று பழக்கப்படுத்துவது போன்ற சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய சொல்லிக் கொடுப்போம். இச்செயல்களை தவறாமல் கடைப்பிடிக்கும்போது 60 சதவிகிதத்தினருக்கு இந்தப் பழக்கம் படிப்படியாக குறைந்துவிடும்.

    இப்போது ஈரப்பதத்தை உணர்த்தும் Wet alarm வந்துவிட்டது. இதைப் பயன்படுத்தியும் குழந்தைகளை பழக்கப்படுத்தலாம். இதுபோன்ற சிறுசிறு பயிற்சிகள் கொடுத்த பிறகும் இப்பழக்கம் தொடரும் குழந்தைகளுக்கு மட்டும் இரவில் சிறுநீர் வெளியே வராமல் தடுக்கக்கூடிய மற்றும் சிறுநீரகப்பையின் கொள்ளளவை அதிகரிக்கக்கூடிய மருந்துகளை பரிந்துரைக்கிறோம்” என்கிறார் டாக்டர் லட்சுமி பிரசாந்த்.

    குடும்பத்தில் பெற்றோர்களுக்கிடையே சண்டை, பிரிவு போன்று ஏதேனும் பிரச்னை இருந்தால், அது குழந்தையின் மனநலத்தை பாதிப்பதால், அதுவும் அவர்களது படுக்கையை நனைக்கும் பழக்கத்துக்கு ஒரு காரணமாகிறது.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 11th Jun 2016 at 05:19 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter