ஒவ்வொரு தாயும் எப்போதும் குழந்தைகளது உடல் நலனில் அதிகம் அக்கரை காட்டுவார்கள். அதிலும் அவர்கள் குழந்தைகளுக்கு எப்போதும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையே கொடுப்பர். அப்படி குழந்தைகள் மீது அக்கரை வைத்திருக்கும் தாய்கள், குழந்தைகள் அதிகம் சோடியம் கலந்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அத்தகைய சோடியம் உண்ணும் உணவில் சேர்க்கப்படும் உப்பில் அதிகம் இருக்கிறது. ஆகவே அவர்கள் உணவில் அதிக அளவு உப்புகளை சேர்த்து உண்டால், பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் உடலில் சுரக்கப்படும் திரவங்கள் சரியான அளவில் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

எவ்வளவு உண்ண வேண்டும்?

வர்த்தக நிர்ணய நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில், ஒரு வயதான குழந்தைகளின் உடலில் தினமும் 1 கிராமிற்கு குறைவான அளவே உப்பை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 1-3 வயதுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 2 கிராமும், 4-6 வயதான குழந்தைகளுக்கு 3 கிராமும் தான் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் 7-10 வயதான குழந்தைகளுக்கு 5 கிராம் தான் கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் அதேப்போல் பால், சாப்பாடு மற்றும் காய்கறிகளிலும் சோடியங்கள் இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் அவற்றில் உடலுக்குத் தேவையான அளவே இருக்கின்றன.ஆகவே குழந்தைகள் மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பவர்கள் என்றால், அவர்களுக்கு அதனை எவ்வளவு கொடுக்க வேண்டுமோ, அந்த அளவு கொடுக்க வேண்டும். முடிந்த வரை உணவில் சுவைக்காக அதிக அளவு உப்பு சேர்ப்பதை குறைத்துவிடுங்கள். இல்லையென்றால் குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்படும்.

என்ன பாதிப்பு ஏற்படும்?

உப்பு நிறைந்த உணவுகளை குழந்தைகள் அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு பலவிதமான நோய்கள் வரும். சில சமயங்களில் சிறுநீரகம் பழுதடைகிறது என்றால், அதற்கு காரணம் அளவுக்கு அதிகமான அளவு உப்பு கலந்த உணவுகளை உண்பதாலேயே ஆகும். ஏனெனில் அதிகமான அளவு சோடியம் சேர்ந்தால், சிறுநீரகங்களால் அதனை முற்றிலும் வெளியேற்ற முடியாமல், அந்த சோடியம் சிறுநீரகங்களிலேயே தங்கிவிடும். இதனால் சிறுநீரகக் கோளாறு ஏற்படுவதோடு, மனஅழுத்தமும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் ஆஸ்துமா, சிறுநீரகக் கல், உடல் பருமன் போன்றவையும் ஏற்படக்கூடும்.

ஆகவே குழந்தைகளுக்கு அதிக அளவு உப்பு கலந்த உணவுகளை கொடுக்க வேண்டாம். அதுவும் 1 வயது கூட ஆகாமல் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்ப் பாலே சிறந்தது. இதிலேயே குழந்தைகளின் உடலுக்குத் தேவையான உப்பு கிடைத்துவிடும். மேலும் குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொடுப்பதை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் அவற்றில் சோடியம் அதிகம் இருக்கும். எனவே அவர்களுக்கு தானிய வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொடுக்க வேண்டும். அதற்காக உப்புகளையே சாப்பிடக்கூடாது என்று கூறவில்லை, சரியான அளவுகளே சாப்பிட வேண்டும். ஏனெனில் சோடியமும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது தான், ஆனால் அது குறைந்த அளவில் தான் இருக்க வேண்டும்.

Similar Threads: