பெற்றோருக்கு எச்சரிக்கை

படிப்பின் அவசியத்தை எல்லோருமே உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் எப்போது பார்த்தாலும் படி, படி என பிள்ளைகளை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். பல பெற்றோர் பள்ளி படிப்பையும் தாண்டி, பாட்டு, டான்ஸ், இந்தி, கராத்தே கிளாஸ் என பிள்ளைகளை வாட்டியெடுக்கிறார்கள். பிள்ளைகளுக்கு அனைத்து துறை களிலும் வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பதற்காக இப்படி மெனக்கெடுகிறார்கள். இதனால் பல ஆயிரம் இந்த படிப்புகளுக்கு செலவு ஆவதோடு, மன அழுத் தத்துக்கும் ஆளாகிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பிள்ளைகள் படிப்புக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்க பெற்றோர் தயார். கடன் வாங்கியாவது, கிரெடிட் கார்டில் தேய்த்தாவது படிப்பு கட்டணத்தை செலுத்துகிறார்கள். விடுமுறை நாட்களில் கூட, காலையில் தொடங்கி, மாலை வரை பல்வேறு கிளாஸ்களுக்கு பயணம் செய்கிறார்கள் குழந்தைகள். விளையாட்டு என்பது செல்போன் கேம், கம்ப்யூட்டர் கேமோடு நின்று போய் விடுகிறது. 10ம் வகுப்பு முடிவதற்குள் குழந்தைகள் என்னவெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என நம் பெற்றோர் நினைத்தார்களோ, அதையெல்லாம் 5ம் வகுப்பு முடிவதற்குள் தங்கள் பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என இப்போதைய பெற்றோர் நினைக்கிறார்கள். எல்கேஜி, யூகேஜி பிள்ளைகளை லீடர்ஷிப் டெவலப்மென்ட் கிளாசுக்கு அனுப்புகிறார்கள்.
கையில் பணம் இல்லாத காரணத்தால், ஏதாவது ஒரு கிளாசை நிறுத்த நேர்ந்தால், மனம் வருத்தப்படுகிறார்கள். தங்களை குற்றவாளி போல் கருதுகிறார்கள். பல தியாகங்களை செய்து, சக்தியை மீறி செலவு செய்து பிள்ளைகளை வளர்க்கிறார்கள். இதனால் ஏற்படும் மனச் சோர்வு காரணமாக, குழந்தைகள் சிறு தவறு செய் தாலும் கோபத்தில் கத்தி விடுகிறார்கள். இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. குழநதைகளுக்கு பாட்டு, டான்ஸ், கராத்தே எல்லாம் அவசியம்தான். ஆனால் இதையெல்லாம செய்தால்தான் தாங்கள் சிறந்த பெற்றோர் என பிள்ளைகள் நினைப்பார்கள் என நினைப்பதும் இதுபோன்ற திறமைகள் குழந்தைளுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கித் தரும் என நினைப்பதும் தவறு. அதேபோல், என்னால் இதெல்லாம் படிக்கவைக்க முடியாது என குழந்தைகளிடம் சொல் வது கஷ்டமான விஷயம்தான். தேவைப்பட்டால் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Dinakaran

Similar Threads: