Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree779Likes

Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!


Discussions on "Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!" in "Health and Kids Food" forum.


  1. #131
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    குழந்தைக்குச் சூட்டினால்,மலம் தண்ணீராக போனால், ஜாதிக்காயை கல்லில் இரண்டு உரை உரைத்து , தாய்ப்பாலில் கலந்து புகட்ட வேண்டும். உடனே குணம் கிடைக்கும்.

    மூன்று வேளை கொடுக்க வேண்டும் .

    ஜாதிக்காயை அதிகம் உரைக்கக் கூடாது. இல்லாவிடில் குழந்தைக்கு மயக்கம் வந்து விடும் .



    Sponsored Links
    Parasakthi, gkarti and Vibha like this.
    Jayanthy





  2. #132
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    ஆறு மாதக் குழந்தைக்கான வைத்தியம் :

    வசம்பை உரைத்து குழந்தை நாக்கில் தடவினால், நன்கு பேச்சு வரும் .

    மலம் போகாமல் இருந்தால் ,கடுக்காய் ஒன்றை , கல்லில் மூன்று உரை உரைத்து, பாலில் கலந்து கொடுக்க வேண்டும்.

    மலம் நுரைத்துப் போனால், ஜாதிக்காய் , இரண்டு உரை , உரைத்து பாலில் கலந்து கொடுக்கவும் .

    பத்து நாளைக்கு ஒரு முறை , வெத்தலை - 1, பூண்டு -1 துண்டு , துளி ஓமம் , இதை அரைத்து, திப்பி இல்லாமல், மைய அரைக்கவும் . இல்லாவிடில் தொண்டையில் மாட்டிக் கொள்ளும் . இதை ஒரு பாலாடை புகட்டவும். வயிற்றில் வாயு சேராமல் இருக்கும்.

    இல்லாவிடில், இதில் சிறிது தண்ணீர் சேர்த்து, வடிகட்டி, அந்த திப்பியை நன்கு பிழிந்து, அந்தச் சாற்றை கொடுக்கவும் .


    Jayanthy





  3. #133
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by jv_66 View Post
    ஆறு மாதக் குழந்தைக்கான வைத்தியம் :

    வசம்பை உரைத்து குழந்தை நாக்கில் தடவினால், நன்கு பேச்சு வரும் .

    மலம் போகாமல் இருந்தால் ,கடுக்காய் ஒன்றை , கல்லில் மூன்று உரை உரைத்து, பாலில் கலந்து கொடுக்க வேண்டும்.

    மலம் நுரைத்துப் போனால், ஜாதிக்காய் , இரண்டு உரை , உரைத்து பாலில் கலந்து கொடுக்கவும் .

    பத்து நாளைக்கு ஒரு முறை , வெத்தலை - 1, பூண்டு -1 துண்டு , துளி ஓமம் , இதை அரைத்து, திப்பி இல்லாமல், மைய அரைக்கவும் . இல்லாவிடில் தொண்டையில் மாட்டிக் கொள்ளும் . இதை ஒரு பாலாடை புகட்டவும். வயிற்றில் வாயு சேராமல் இருக்கும்.

    இல்லாவிடில், இதில் சிறிது தண்ணீர் சேர்த்து, வடிகட்டி, அந்த திப்பியை நன்கு பிழிந்து, அந்தச் சாற்றை கொடுக்கவும் .

    Hi Jayanthy!

    You are providing very useful tips dear. It'll be useful to many moms.


    Parasakthi, jv_66 and nivan like this.

  4. #134
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by sumathisrini View Post

    Hi Jayanthy!

    You are providing very useful tips dear. It'll be useful to many moms.

    Thanks Sumathi

    Parasakthi and sumathisrini like this.
    Jayanthy





  5. #135
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    குழந்தைக்கு ஜலதோஷம் வந்தால் , மஞ்சள் கலந்த குங்குமத்தை ஒரு ஸ்பூன் தண்ணீரில் கலக்கி கொதிக்கவைத்து , மூக்கிலும் , தலை உச்சியிலும் , தடவலாம் .

    குழந்தைகுக் காய்ச்சல் வந்தால் , தாய்ப்பால் கொடுக்கலாம்.

    குழந்தையின் தாயார் , மிளகு ரசம்,மற்றும் , ஓமத்தை வெடிக்க விட்டு, மோரை அதில் விட்டு கொதித்தவுடன் ,அதை சாப்பிடலாம்.

    இதனால், குழந்தைக்கு நலம்.

    அல்லது கோபி சந்தனத்தை உரைத்து மூக்கிலும் தொண்டையிலும் தடவலாம்.


    Jayanthy





  6. #136
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    நல்ல கொழுந்து வேப்பிலையாக எடுத்து சுத்தம் செய்து, நல்ல மைய அரைத்து, குழந்தைக்கு ஒரு மூன்று வயதிலிருந்து , பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை , கொடுத்து வந்தால் , வயிற்றில் உள்ள எந்த பூச்சி , புழுவும் , வெளியே வந்து விடும்.

    இந்த உருண்டையை , வயதுக்கு ஏற்றவாறு அதிகமாக்கி கொடுக்கவும்(size)


    Jayanthy





  7. #137
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Dear Jayanthy, very useful home made medicine for killing the insects and worms from the children's stomach. thank you

    Parasakthi and jv_66 like this.

  8. #138
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    இப்போது சில சத்தான லஞ்ச் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளைப் பார்க்கலாம். பள்ளிகள் திறந்து விட்டிருக்குமே .

    தானிய சாண்ட்விச்

    தேவையானவை :

    முளை கட்டிய தானியக் கலவை (பச்சைப்பயிறு , கொள்ளு, கடலைகள் , கம்பு போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ) - ஒரு கப்

    கொத்தமல்லி - ஒரு கப்

    பச்சை மிளகாய் - 3

    பிரட் ஸ்லைஸ் - தேவையான அளவு

    கோதுமை மாவு - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    உப்பு , நெய் - தேவையான அளவு

    செய்முறை :

    தானியத்தை தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் வேக விடவும். வேக வாய்த்த தானியத்துடன், உப்பு சேர்த்து, மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

    கடாயில், எண்ணெய் விட்டு, அரைத்த தானியத்தைப் போட்டுக் கிளறி , கோதுமை மாவை சிறிது தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும்.

    பச்சைச் சட்னிக்கு , கொத்தமல்லியுடன் பச்சை மிளகாய் , உப்பு சேர்த்து அரைக்கவும். இந்தக் கலவையை பிரட்டில் தடவி , அதன் மேல் தானியக் கலவையைப் பரப்பி , மற்றொரு பிரட்டில் பச்சை சட்னியைத் தடவி மூடி, தோசைக்கல்லில் போட்டு , சுற்றிலும் நெய் விட்டு வாட்டி எடுக்கவும்.

    வித்தியாசமான , சத்தான பிரட் சாண்ட்விச் இது .


    Jayanthy





  9. #139
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    கடலைப் பருப்பு இட்லி

    தேவையானவை :

    கடலைப் பருப்பு - ஒரு கப்

    பச்சரிசி - ஒரு டேபிள் ஸ்பூன்

    தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்

    பட்டாணி , பொடியாக நறுக்கிய காரட் , பீன்ஸ் கலவை -அரை கப்

    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி

    பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்

    பொடியாக நறுக்கிய இஞ்சி

    உப்பு - தேவையான அளவு

    கடுகு , எண்ணெய், கருவேப்பிலை - தாளிக்க

    செய்முறை :

    அரிசி, பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து , உப்பு சேர்த்து , கரகரப்பாக அரைக்கவும்.

    எண்ணையில் , கடுகைத் தாளிக்கவும் .

    அரைத்த மாவில் , தாளித்த கடுகு (எண்ணையுடன் ), காய்கறி , இஞ்சி, மிளகாய் , தேங்காய் துருவல் , கறிவேப்பிலை , மல்லிதழை , அனைத்தையும் ஒன்றாகக் கலந்து , சிறு சிறு இட்லிகளாக ஊற்றி எடுக்கவும்.

    இதற்குத் தொட்டுக் கொள்ள , மசாலா தயிர் மற்றும் மல்லி சட்னி , நன்றாக இருக்கும் .

    வித்தியாசமான , வேறு நிறத்தில் உள்ள இட்லி அனைவரையும் சாப்பிடத் தூண்டும்.


    Jayanthy





  10. #140
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    வேர்கடலை சாதம்

    தேவையானவை :

    வறுத்த வேர்கடலை - ஒரு கப்

    காய்ந்த மிளகாய் - 5

    உளுத்தம் பருப்பு , கடலை பருப்பு - 1/4 cup

    பெருங்கயத்தூள் , வடித்த சாதம் , உப்பு - தேவையான அளவு


    தாளிக்க :

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    கடுகு, உளுத்தம்பருப்பு , கடலைபருப்பு

    செய்முறை :

    பச்சை வேர்கடலை உபயோகித்தால் , அதை வறுத்து , பின் உபயோகிக்கவும். வறுத்ததை உபயோகித்தால் , அப்படியே தோல் நீக்கி விடவும் .

    கடாயில் , எண்ணெய் விடாமல் , கடலை பருப்பு , உளுத்தம்பருப்பு , காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து , ஆறியதும் மிக்சியில் பொடிக்கவும் .

    அடுத்து , வேர்கடலையை சேர்த்து , ஒருமுறை சுற்றி எடுக்கவும் .

    வடித்த சாதத்தில் , தாளித்துக் கொட்டி, வறுத்த பொடிகளை போட்டு , உப்பு சேர்த்து , சிறிது நல்லெண்ணெய் விட்டு நன்றாகக் கலக்கவும் .

    சத்தான வேர்கடலை சாதம் தயார் .


    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter