Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree779Likes

Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!


Discussions on "Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!" in "Health and Kids Food" forum.


  1. #201
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: sathu maavu ingredients list in tamil

    Hi Guest,

    சத்து மாவு கஞ்சி செய்முறை கேட்டுருக்கீங்க. ஜெயந்தி ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க. எங்கள் வீட்டில் செய்யும் முறையையும் இங்கே சொல்கிறேன்.

    பொதுவாக ஆறுமாதக் குழந்தையிலிருந்தே எல்லா சாமானும் கலந்து சத்து மாவு கஞ்சி தரலாம் என்றாலும் சின்ன குழந்தைகள் என்பதாலும் புது உணவு என்பதாலும் ஜீரணம் ஆக பழகவேண்டும். அதனால் முதலில் சாதா சாமான்களை வறுத்து கொடுக்கலாம்.

    முதலில் ஒரு ஸ்பூன் பொடியில் ஆரம்பித்து அதே அளவில் ரெண்டு மூணு நாள் பழகியதும் இன்னொரு அரை ஸ்பூன் அதிகரிக்கலாம். ஒரு வேளை குழந்தைக்கு வயிற்றுக்குப் போதாமல் போனால் மறுபடி பசியில் அழும், அப்போது கொஞ்சமாக தண்ணீர் குடிக்கத் தந்து சமாதானப்படுத்தி வைத்தால் கஞ்சி ஒத்துக்கொள்கிறதா என்று தெரியும். பசியில் அழுகிறதே என்று அதிகம் கஞ்சி கொடுத்துவிட்டால் ஒத்துக்கொள்ளாமல் போவது தெரியாமல் போக வாய்ப்பு உண்டு என்பதால் இப்படி செய்வது.

    கஞ்சிமாவு அளவு:

    நான் சொல்வது வீட்டில் மிக்சியில் அரைத்து செய்யும் முறை.
    நாலு பங்கு புழுங்கலரிசி (இட்லி அரிசி நல்லது) என்றால் மீதி சாமான்கள் எல்லாம் ஒரு பங்கு போடவும். (செய்வதை முதலில் சின்ன கிண்ணத்தில் செய்து கொண்டால் மாதம் இருமுறை பிரெஷ் மாவு தயாரிக்கலாம்.)

    ராகி (கேழ்வரகு), பொட்டுக்கடலை, பாசிப்பருப்பு, சம்பா கோதுமை எல்லாம் ஒரு பங்கு எடுக்கவும்.

    ஜவ்வரிசி முக்கால் பங்கு எடுக்கவும். (ஜவ்வரிசி நல்லது என்றாலும் மலச்சிக்கல் ஏற்படுத்தும் என்பதால் அளவைக் குறைக்கலாம்)

    பார்லி பவுடர் ரெண்டு ஸ்பூன்

    ஓமம் ரெண்டு ஸ்பூன்

    இதில் செய்முறை ஒவ்வொன்றிற்க்கும் வேறுபடும்.

    முதலில் ராகியை காலையில் ஊற வைக்க வேண்டும். ராகியில் கல் மண் இருப்பது தவிர்க்க முடியாது, அது சின்ன குழந்தைகளுக்கு ரொம்பவும் சிரமத்தை தரும் என்பதால் எவ்வளவு நல்ல கடையில் வாங்கினாலும் ரெண்டு மூன்று முறை கழுவி கல் அரித்து ஊற விடவேண்டும்.

    ஒரு நாள் முழுக்க ஊறியதும் மறுநாள் வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் கட்டித் தொங்கவிட்டால் அடுத்த நாள் உள்ளே முளைவிட்டுவிடும். இந்தப் process முடியவே ரெண்டு நாள் ஆகிடும். முளை விட்ட ராகியை ஒவ்வொரு பிடியாக எடுத்து இரும்பு வாணலியில் (இரும்பு வாணலியில் செய்வதால் இரும்பு சத்தும் கிடைக்கும், சீக்கிரம் பதமாக வறுபடும்) போட்டுப் பொரிக்க வேண்டும்.

    முதலில் வாணலியை நன்றாக சூடு படுத்திவிட்டு அடுப்பை சிம்மில் வைத்து ஒரு ஸ்பூன் அளவு முளைவிட்ட ராகியைப் போட்டுவிட்டால் மணமாகப் பொறியும். பாப் கார்ன் பொரிவது போல வெள்ளைவெளேரென்று பொறியும். வேண்டுமானால் மூடி வைத்து பொரிக்கலாம். கருக்காமல் பார்த்துக்கொள்ளவும். இது ஒரு வேளை சூடு அதிகமாகி கருகிவிட்டால் அடுப்பை அணைத்துவிட்டு மறுபடி ஆன் செய்யலாம். இப்படி கொஞ்ச கொஞ்சமாக பொறித்துக்கொண்டு மிக்சியில் நைசாக அரைத்து ரெண்டு முறை சலிக்கவும். ராகியில் உள்ள தோல் சில சமயம் குழந்தைக்கு செரிக்காமல் பேதியாக ஆரம்பிக்கும் என்பதால் கொஞ்சம் கவனமாக ரெண்டு முறை சலித்து வைக்கலாம். ராகியை மட்டும் தனியாக இப்படி செய்து கொண்ட பின் மற்ற சாமான்களை வறுக்கத் தொடங்கலாம்.

    மற்ற சாமான்களை வறுக்கும் முறை:

    இட்லி அரிசியை ரெண்டு முறை கழுவி உடனேயே வடிகட்டி ஒரு துணியில் பரத்தி காய வைக்கவும். அரிசி கொஞ்சம் ஈரமாக இருக்கும்போதே மேலே சொன்ன முறைப்படியே வாணலியில் ஒவ்வொரு பிடியாக போட்டு பொன்னிறமாக வறுக்கவும். நல்ல வாசனைதான் பொரிந்ததன் அடையாளம்.

    அடுத்து பாசிப்பருப்பை இப்படியே ஒவ்வொரு பிடியாக வறுக்கவும். இதுவும் சிவக்க வேண்டும், ஆனால் கழுவ வேண்டியதில்லை.
    குழந்தை கொஞ்சம் பெரிதாக ஆகும்போது பாசிப்பருப்புக்கு பதில் பாசிப்பயறு போடலாம், அடுத்து அதை முளைகட்டிப் போடலாம்.

    கோதுமை என்றால் பஞ்சாப் கோதுமையை விட சம்பா கோதுமைதான் சீக்கிரம் செரிக்கும், உடம்புக்கும் நல்லது. இதையும் வெறுமே வறுத்தால் போதும், நனைத்து வடிகட்ட வேண்டிய தேவையில்லை. வறுத்த கோதுமையை வாயில் போட்டு பார்த்தால் சுலபமாக கடிபடவேண்டும், இதுவே அடையாளம்.

    ஜவ்வரிசியை சூடான வாணலியில் போட்டால் பொரி போல பொரிந்து சைஸ் பெரிதாகும். இதுதான் வருபட்டதன் அடையாளம்.

    அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே பொட்டுக்கடலையை போட்டு வைத்தால் போதும்.

    பார்லி பொடியாக போடுவது என்றால் மாவாக்கிய பின் கலந்து கொள்ளலாம். குழந்தை பெரிதாகி மிஷினில் தந்து அரைப்பதானால் பார்லி அரிசியை வறுத்து சேர்க்கலாம்.

    கடைசியாக ஓமம். ஓமம் செரிமானத்துக்கு உதவும், வாசனை தரும். ஆனால் கூடவே சூடு ஏற்படுத்தும் என்பதால் மிகக் குறைந்த அளவு போதும். ஆனால் மண் கலந்திருப்பது தவிர்க்கவே முடியாது என்பதால் ரெண்டு ஸ்பூன் ஓமத்தை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அரை மணி நேரம் வைத்திருந்தால் கல், மண் குப்பைகள் அடியில் தங்கிவிடும். மேலாக உள்ளதை ஒரு டீ வடிகட்டியில் வடிகட்டி மீண்டும் தண்ணீரில் அலசி வடிகட்டவும். இப்படி செய்யும்போது அளவு ஒன்றரை ஸ்பூன் அளவாக குறைந்துவிடும். இந்த ஓமத்தை வாணலி சூடாக இருக்கும்போது ஈரத்தொடேயே போட்டால் படபடவென்று பொறியும்.

    இனி மேலே சொன்ன சாமான்களை ஒன்றாகக் கலந்து மிக்சியில் பொடித்து ரெண்டு முறை மீண்டும் மீண்டும் சலித்து அரைக்கவும்.

    கடைசியில் முதலிலேயே தயார் செய்துவைத்த ராகி மாவையும் பார்லி மாவையும் சேர்த்து மறுபடி ஒரு முறை சலித்தால் எல்லாம் சரியாகக் கலந்துகொள்ளும்.

    இந்த மாவு பழகியதும் சோயா, கம்பு, பாதாம், வேர்க்கடலை என்று ஒவ்வொன்றாக சேர்க்கலாம். ஒவ்வொரு பொருள் add பண்ணும்போதும் குறைந்த பட்சம் ஒரு மாதம் அது பழகிய பின் அடுத்த பொருளை சேர்க்கலாம்.

    இனி இந்த மாவை எப்படி எல்லாம் விதவிதமாக செய்து தரலாம் என்று சொல்கிறேன்.

    சிலர் இதில் ஏலக்காய் சேர்ப்பார்கள் அது பால் சேர்த்த கஞ்சியாக செய்ய மட்டுமே பயன்படும். மேலே சொன்ன விதத்தில் தயார் செய்தால் அதை கூழ் போல செமி சாலிட் (semi solid) ஆகவும் தரலாம். கெட்டியாக சாதம் போலவும் தரலாம். பாட்டிலில் ஹார்லிக்ஸ் போலவும் தரலாம். செய்முறைதான் வேறுபடும்.

    1. கொஞ்சம் உப்பு சேர்த்து கெட்டியாக கஞ்சி போலச் செய்து வீட்டில் செய்யும் குழம்பு ஒரு கரண்டி சேர்த்து தரலாம்.

    2. அல்லது கெட்டியாக செய்து மிளகு ரசம் கலந்து ஊட்டலாம்.

    3. காலை உணவு என்றால் குக்கரில் ஒரு துண்டு காரட், ஒரு துண்டு பீட்ரூட், ஒரு துண்டு உருளைக்கிழங்கு, ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் கீரை நறுக்கியது சேர்த்து (ஒரு பல் பூண்டு சேர்த்தால் நல்லது) பானில் வைத்து வெந்ததும் ஒரு ஸ்பூன் வெந்த பருப்பு சேர்த்து தக்காளி தோல் மற்றும் கிழங்கு தோலை நீக்கிவிட்டு மிக்சியில் அரைத்து கஞ்சியில் கலந்து சூப் போலத் தரலாம். மேலே கால் ஸ்பூன் நெய் சேர்த்து ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்க்கலாம்.

    4. அல்லது எப்போதும் போல பாலுடன் சர்க்கரை சேர்த்து காய்ச்சித் தரலாம். ஏலக்காய் வாசனை விரும்பினால் கொஞ்சம் பொடித்து சேர்த்துக்கொள்ளலாம்.
    இப்படி விதவிதமாக செய்து தந்தால் குழந்தைகள் விரும்பி அதிக நாள் சாப்பிடுவார்கள்.

    Hope you find this useful!


    Sponsored Links
    jv_66 likes this.
    - Chitra

  2. #202
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Thanks a lot Chitra @kasri66 for these wonderful tips & recipe of sathu maavu.

    kasri66 likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter