Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree779Likes

Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!


Discussions on "Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!" in "Health and Kids Food" forum.


  1. #31
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by v_bhava View Post

    Thank you so..... much Jayanthy for the thread. Kanji Maavu recipe is a very healthy one. I will surely try this. Thanks again.

    Thanks Bhavani.


    Sponsored Links
    Parasakthi and infaa like this.
    Jayanthy





  2. #32
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Hi JV mam, very useful tips.... Thank you..... I also used the raghi koozh until my daughter turned 2/12 yrs... That used to be her breakfast.... Ennaku I thil araikumbothu konjam elaichi pottu pannuvanga( my relative used to prepare this powder) .... Very tasty kanji......

    if you have recipes for foods to be given when unwell or child has indigestion atthum kudunga pls....
    thank you again


    நன்றி பிரியா .

    ஆம் ......ஏலக்காய் போட்டால் நல்ல வாசனையாக இருக்கும்.

    குழந்தைகளின் அஜீரணத்திற்கு , 5 வயது வரை, வாரம் ஒரு முறை ஓம வாட்டர் குடுத்து வரவும்.

    ஓமம் ஒரு இரண்டு ஸ்பூன் எடுத்து, 1 டம்ளர் தண்ணீரில் போட்டு, நன்கு காய்ச்சவும். அது பாதியாகச் சுண்டியவுடன் , நன்கு வடிகட்டி , அந்த நீரை, குழந்தைக்கு அப்படியே கொடுக்கவும். அவர்கள் குடிக்கப் படுத்தினால், பக்கத்திலேயே ஒரு தேன் பாட்டிலை வைத்துக் கொண்டு, அவர்களைக் குடிக்க வைத்தப் பின்னர், சிறிது தேனை அவர்கள் வாயில் (நாக்கில்) தடவவும்.

    இதே முறையை, எல்லா மருந்து, லேகியம் எல்லா வற்றுக்கும் பின் பற்றலாம் .

    ஓம லேகியம் செய்யும் முறை:

    தேவையான பொருட்கள் :

    ஓமம் - 1/2 ஆழாக்கு

    சீரகம் - 1/2 ஆழாக்கு

    மிளகு - 2 ஸ்பூன்

    சுக்கு - 1 சிறு துண்டு

    வெல்லம் - 300 கிராம்

    இஞ்சி - 1 துண்டு

    தேன் - 1 டேபிள் ஸ்பூன்

    நெய் - 2 ஸ்பூன்

    நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

    செய்முறை :

    ஓமம் , சீரகம், மிளகு, சுக்கு இவற்றை ஒரு வெறும் வாணலியில் நன்கு வறுத்து, கிட்டத்தட்ட கருப்பு நிறம் வரும் வரை வறுத்து
    , மிக்சியில் நன்கு பொடியாக செய்து கொள்ளவும் .பின்பு இஞ்சியை அரைத்துச் சாறு எடுத்துக் கொள்ளவும்.

    வெல்லத்தை பொடி செய்து , நீரில் கலந்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும் .

    இந்த வடிகட்டிய வெல்லம், இஞ்சிச் சாறு, இவற்றை ஒரு வாணலியில் கொதிக்க வைக்கவும். அது அப்படியே கெட்டியாகி பாகு பதம்
    வரும் போது, செய்து வைத்துள்ள பொடியைத் தூவிக் கொண்டே கிளறவும். எண்ணெய், நெய்யை விடவும் .

    பாத்திரத்தில் ஒட்டாமல் , தள தள வென்றிருக்கும் பதத்தில் இறக்கி வைத்து , தேனை விடவும் .நன்கு கிளறவும்.

    றிய பிறகு , ஒரு காற்று புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். வேண்டுமானால் fridge இல் வைத்துக் கொள்ளலாம்.

    இந்த லேகியத்தை 15 நாட்களுக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு க் கொடுத்து வந்தால், அஜீர்ணம் (indigestion) பிரச்சினையே வராது .


    Last edited by jv_66; 31st Mar 2013 at 02:46 PM.
    Jayanthy





  3. #33
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    ஓம லேகியம் செய்வதற்குக் கஷ்டமாக உணருபவர்கள், கீழ் கண்ட இஞ்சி சுரசம் செய்து கொடுக்கலாம் .

    இஞ்சி ஒரு பெரிய துண்டு எடுத்துக் கழுவி, தோல் சீவி , காரட் சீவியில் அந்த இஞ்சியை நன்கு சீவிக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு , ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

    அந்தத் தண்ணீர் பாதியாகச் சுண்டியவுடன் , வடிகட்டி, இந்த சுரசத்தை , வாரம் ஒரு முறை 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குடிக்கலாம். வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் இதை குடிப்பது என்று (sunday) என்று வழக்கப்படுத்திக் கொள்ளலாம் .

    இதனால், வயிற்றில் உள்ள வாய்வு நன்கு வெளியேறி விடும். வயிற்று உப்புசம் போன்றவை சரியாகி விடும்.



    Jayanthy





  4. #34
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    குழந்தைக்கு ஜுரமாக இருக்கும் போது , இந்த ராகிக் கஞ்சியைக் கொடுக்கக் கூடாது. அது ஜீரணமாகாது .

    மிகவும் எளிதாக ஜீரணமாகும் உணவு வகைகளையே கொடுக்க வேண்டும்.

    இந்த சமயத்தில் சில குழந்தைகளுக்குப் பால் போன்றவை பிடிக்காது. அவ்வாறெனில் விட்டு விடுங்கள். வற்புறுத்த வேண்டாம்.

    Bread, ரசம் சாதம் போன்றவை மட்டுமே கொடுக்கவும் .

    நிறைய தண்ணீர் கொடுக்கவும் .

    சாத்துக்குடி ஜூஸ் , ஆரஞ்சு ஜூஸ் போன்றவை எந்த உடம்புக்கும் மிகவும் நல்லது .

    மாத்திரையை, எப்போதும் தண்ணீருடனேயே கொடுக்கவும்



    Jayanthy





  5. #35
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    குழந்தைக்கு வயிற்றுப்போக்கு (diarrhea) இருந்தால், உடனே அதை நிறுத்த மாத்திரை கொடுக்காதீர்கள்.

    வயிற்றில் உள்ள கழிவுகள் (toxins) வெளியே வந்து விடுவது நல்லதுதான்.

    இதற்கு அடிக்கடி கொடுக்க வேண்டியது ஒரு டம்ளர் காய்ச்சிய நீரில், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை இதைக் கலந்து , அவ்வப்போது கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    காரட்டை நன்கு வேக வைத்து, அதை ஜூஸ் ஆகச் செய்து கொடுக்கலாம்.


    புழுங்கல் அரிசி கஞ்சி கொடுக்கலாம் . oats கஞ்சி கொடுக்கலாம்.
    வாழைப்பழம், ஆப்பிள் , மோர் சாதம் போன்றவை கொடுக்கலாம்.

    தவிர்க்க வேண்டியவை :

    பால் பொருட்கள், பழச் சாறுகள், சர்க்கரை போட்ட பானங்கள் அல்லது பண்டங்கள், ரசம் சாதம் போன்றவை.

    இதற்கு செய்யகூடிய கை வைத்தியம் :

    வெந்தயம் சிறிதளவு எடுத்து வெறும் வாணலியில் , நல்ல கருக வறுத்து, அதை மிக்சியில் நல்ல நைசான பொடியாகச் செய்து வைத்துக் கொள்ளவும் .

    இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் வாயில் போட்டு, அதன் மேல், ஒரு டம்ளர் மோர் குடித்தால், loose motion நின்று விடும்.


    Moderator's Note: This Article has been published in Penmai eMagazine October 2014. You Can download & Read the magazines HERE.



    Last edited by sumathisrini; 17th Oct 2014 at 04:09 PM.
    Jayanthy





  6. #36
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    இளம் பருவத்தினருக்கு எலும்புகள் நல்ல உறுதி பெற முக்கியமான உணவுகள் :

    வெல்லம், எள்ளு , உளுந்து .

    ஆகவே , இவை சார்ந்த உணவுப் பதார்த்தங்களைப் பார்க்கலாம் .

    எள்ளுருண்டை

    தேவையான பொருட்கள் :

    கறுப்பு எள்ளு - 1 கப்

    வெல்லம் - 1/2 கப்

    செய்முறை :

    எள்ளைக் கழுவி, கல் அரித்துச் சுத்தம் செய்து கொள்ளவும் . கடாயைக் காயவைத்து, அந்த எள்ளை (அது ஈரமாக இருக்கும் போதே ) போட்டு, நன்கு பொரி யும் வரை வறுக்கவும் .

    பொடித்த வெல்லத்தை, மிக்சியில் போட்டு, அதோடு வறுத்த எள்ளையும் போட்டு, whipper blade உபயோகித்து , சுற்றி எடுக்கவும் .

    எள் நைசாக அரை பட்டு விடாமல் , ஒன்று இரண்டாக வெல்லத்தோடு சேர்ந்து இடிபட்டதும் எடுத்து உருண்டைகளாகப் பிடித்து விடவும் .


    இந்த வகை இனிப்பு உருண்டைகளை , குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்த பிறகு, அவ்வபோது கொடுத்து வரலாம் .



    Last edited by jv_66; 4th Apr 2013 at 01:31 PM.
    Jayanthy





  7. #37
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    வெள்ளை எள்ளுருண்டை


    தேவையான பொருட்கள் :

    வெள்ளை எள் - 1 கப்

    வெல்லம் - 1/4 கப்

    செய்முறை :

    எள்ளைச் சுத்தம் செய்து , வெறும் கடாயில் கொட்டி , நன்கு பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும் .

    வெல்லத்தை சிறிதளவே தண்ணீர் சேர்த்து , அடுப்பில் வைத்து , அது கரைந்ததும், எடுத்து வடிகட்டி விடவும் .பிறகு அதை கொதிக்க விட்டு, பாகு பதம் ( இதற்கு , ஒரு சிறிய கிண்ணத்தில் , கொஞ்சம் தண்ணீரில் , அந்தப் பாகை ஒரு சொட்டு விட்டால் , அது நன்கு பந்து போல் சேர்ந்து , உருட்ட வரும் .....இதுதான் சரியான பதம். சேர்ந்து வரவில்லை என்றால், இன்னும் அடுப்பில் இருக்க வேண்டும் ) வந்த பிறகு , வறுத்த எள்ளைக் கொட்டி, நன்கு கிளறவும் .

    பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, சிறிது சூடாக இருக்கும்போதே , உருண்டைகளாக பிடித்து விடுங்கள்.

    குறிப்பு :

    பாகு வைக்கும்போது கவனமாக இருக்கவும் . பாகு பதம் அதிகமாகி விட்டால், உருட்ட வராமல், உதிர்ந்து விடும். பதம் கம்மியாக இருந்தால், உருண்டை நமுத்து விடும்.



    Jayanthy





  8. #38
    vinomanian's Avatar
    vinomanian is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    1,214

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    hai JV,

    மிக நல்ல பயனுள்ள விசயங்களை எங்களுக்கு தந்தமைக்கு நன்றி ...

    நானும் ஒரு குறிப்பு தரவா ?

    (கமலா) ஆரஞ்சு பழத்தை சாறெடுத்து அதை வெந்நீரில் கலந்து 3 மாதத்தில் இருந்தே கொடுத்து வர குழந்தையின் தோல் ஊட்டம் பெறுவதோடு குழந்தைகளுக்கு ஜலதோஷ தொந்தரவும் இருக்காது . ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து குழந்தைகளை புத்துணர்வுடன் இருக்க செய்கிறது .

    வெந்நீரில் சாறெடுப்பதால் ஜலதோஷ தொந்தரவு இருக்காது.


  9. #39
    vinomanian's Avatar
    vinomanian is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    1,214

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    குழந்தையின் 7 மாதத்தில் இருந்து 1 1/2 வயது ஆப்பிள் பழத்தை வேகவைத்து (இட்லி அவிப்பது போல் )நடுவில் உள்ள சதை பகுதியை கொடுத்து வரவும் ......

    ஆப்பிள் ரத்தம் ஊறவும், அயன் சக்தியும் தருவது அனைவரும் அறிந்ததே....


  10. #40
    vinomanian's Avatar
    vinomanian is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    1,214

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    குழந்தையின் 3 வயது வரை சிக்கன் மட்டன் பழக்க வேண்டாம் .

    ஆனால் 9 மாதத்தில் இருந்தே முட்டையையும் மீனையும் வேகவைத்து மசித்து கொடுக்கவும்.

    தினமும் மீன் சேர்த்தால் கூட ஒன்றும் செய்யாது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter