தோழி,
உங்கள் மகன் தானும் கஷ்டப்பட்டு , உங்களையும் கஷ்டப்படுத்தக்கூடாதென்று தான் இறைவனிடம் சென்று விட்டான். அவன் மீண்டும் உங்கள் மடியில் கொஞ்சி விளையாட வருவான்...வந்து முன்பிருந்த சந்தோஷத்தை இரண்டு பங்காக மீட்டு தருவான். அந்த நம்பிக்கையுடன், வாழ்க்கையை எதிர் நோக்குங்கள். அந்த நம்பிக்கையை உங்கள் கணவருக்கும் அளியுங்கள். கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு துணை இருப்பார்.