Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By jayakalaiselvi
  • 1 Post By gkarti
  • 1 Post By umasaravanan
  • 1 Post By naliniselva

Children's Weight, Height and Balancing food - குழந்தையின் எடை,உயரம்,சரிவிகித உ


Discussions on "Children's Weight, Height and Balancing food - குழந்தையின் எடை,உயரம்,சரிவிகித உ" in "Health and Kids Food" forum.


  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Children's Weight, Height and Balancing food - குழந்தையின் எடை,உயரம்,சரிவிகித உ




    குழந்தை பிறந்த செய்தி கேட்டவுடன் விவரம் தெரிந்தவர்கள் கேட்கும் கேள்விகுழந்தையின் எடை என்ன? இது பிறந்திருக்கும் குழந்தை ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதை அறிந்துக்கொள்ள உதவும். குழந்தைக்கு ஒரு வருடம் ஆகும் வரை குழந்தை மருத்துவ நிபுணரிடம் குழந்தையைக் காட்டி எடை, உயரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்வோம். (மிகச்சிறந்த குழந்தை மருத்துவர் குழந்தையின் தலையின் அளவைக்கூட குறித்துக்கொள்வார்) பிறகு குழந்தை வளர வளர் உடல் நிலை ஏதும் சரியில்லை என்றால் தான் மருத்துவரிடம் செல்வோம் என்பதால் பல விடயங்கள் நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது.

    தற்போதைய சூழ்நிலையில் பிள்ளைகள் சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. (சாப்பிட வைப்பதே பெரும்பாடாக இருக்கும் பொழுது சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா?) ஆனால் கவலைப்பட வேண்டும். அப்போதுதான் நாம் நம் குழந்தையின் வளர்ச்சி பற்றி அறிந்துக்கொள்ள முடியும். குழந்தையின் வளர்ச்சியில் உயரமும், எடையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தந்த வயதுக்கு இருக்கவேண்டிய உயரத்துக்குரிய எடை நம் குழந்தை அடைந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதிக எடையோ, அல்லது குறைவான எடையோ ஆபத்தானது.

    கொழுக் மொழுக்கென இருக்கும் குழந்தைதான் ஆரோக்கியம் என்பது அபத்தம். உயரத்துக்கான எடை இருந்தாலே அவர்கள் ஆரோக்கியமானவர்கள் என்று அர்த்தம்.

    அதிக எடை:

    அதிக எடை ஏற்படும் பொழுது குழந்தைகள் சர்க்கரை வியாதிக்குள்ளாகிறார்கள் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு. அதீத உணவு, குறைவான உடற்பயிற்சி இவைதான் குண்டு குழந்தைகளுக்கான காரணங்கள். இதை தெரிந்து கொண்டு சரிசெய்தால் குழந்தைகளை சரியான எடைக்கு கொண்டு வந்துவிடலாம்.

    குறைவான எடை:

    இந்தவகை குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் பல. உடலில் தெம்பில்லாது போவதால் சோம்பலாக இருப்பார்கள். அதிகம் ஓடியாடி விளையாட முடியாது. உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாததால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும். இது இவர்களின் வளர்ச்சி, கற்றல் போன்றவற்றில் பாதிப்பைத் தரும். இன்னொரு வகை பிரச்சனையும் இருக்கிறது. குடும்ப வாகு, உடல்வாகு போன்ற காரணத்தால் சில குழந்தைகள் அதிக உயரம்(வயதுக்கு மீறிய உயரம்) இருப்பார்கள். இதனால் ஒல்லியாக தெரிவார்கள். 12 வயதுக்கு 147 செ.மீ இருக்க வேண்டிய பையன் 153இருந்தால் அதிக உயரம்.

    (வயதுக்குத் தகுந்த எடை இருந்தாலும்) அதிக உயரத்துக்கு தகுந்த உடல் எடை இல்லாமல் போனால் இந்தக் குழந்தையும் எடைக்குறைந்த குழந்தையின் பாதிப்புக்களுக்கு உள்ளாவான். நாம் குழந்தையின் உயரம் மற்றும் எடையைக் கண்காணித்து வரவேண்டும்.

    உயரம்/எடை அளவு ஆண்குழந்தைக்கு வேறு அளவு, பெண் குழந்தைக்கு வேறு அளவு என்பதை நாம் மறக்கக்கூடாது. சரியாக கவனித்து முறையாக வளர நாம்தான் உதவ வேண்டும். ஆரோக்கியாமான குழந்தைகளை வளர்ப்போம். அவர் நலன் காப்போம்

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Children's Weight, Height and Balancing food - குழந்தையின் எடை,உயரம்,சரிவிகித உ-image.jpg  
    jv_66, gkarti and naliniselva like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    re: Children's Weight, Height and Balancing food - குழந்தையின் எடை,உயரம்,சரிவிகித உ

    Nice Sharing daa..

    jayakalaiselvi likes this.

  3. #3
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: Children's Weight, Height and Balancing food - குழந்தையின் எடை,உயரம்,சரிவிகித உ

    Quote Originally Posted by gkarti View Post
    Nice Sharing daa..
    Thank u sis....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #4
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    re: Children's Weight, Height and Balancing food - குழந்தையின் எடை,உயரம்,சரிவிகித உ

    very usefull kka...Thanks for sharing...

    jayakalaiselvi likes this.

  5. #5
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: Children's Weight, Height and Balancing food - குழந்தையின் எடை,உயரம்,சரிவிகித உ

    Quote Originally Posted by umasaravanan View Post
    very usefull kka...Thanks for sharing...
    Thank u uma....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  6. #6
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    re: Children's Weight, Height and Balancing food - குழந்தையின் எடை,உயரம்,சரிவிகித உ

    good info jeyakalaiselvi

    jayakalaiselvi likes this.


    நளினி



  7. #7
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: Children's Weight, Height and Balancing food - குழந்தையின் எடை,உயரம்,சரிவிகித உ

    Quote Originally Posted by naliniselva View Post
    good info jeyakalaiselvi
    Thank u nalini sis.......

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  8. #8
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Children's Weight, Height and Balancing food - குழந்தையின் எடை,உயரம்,சரிவிகித உ

    அனைத்தும் உண்மை ....பகிர்வுக்கு நன்றி ஜெயா

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter