Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By chan
  • 2 Post By chan
  • 1 Post By chan

How to practice the child not to Bed wet?-படுக்கையில் சிறுநீர் கழித்தல் பி&


Discussions on "How to practice the child not to Bed wet?-படுக்கையில் சிறுநீர் கழித்தல் பி&" in "Health and Kids Food" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    How to practice the child not to Bed wet?-படுக்கையில் சிறுநீர் கழித்தல் பி&

    ஈரம்! -குழந்தைகள் நலம்

    இன்றைய எந்திரத்தனமான வாழ்க்கை சூழலில், வீட்டில் பாட்டி, தாத்தா போன்ற அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இல்லாத நிலையில் குழந்தையை நல்லபடியாக வளர்த்தெடுக்க இளம் தாய்மார்கள் படுகின்ற பாடு கொஞ்சநஞ்சமல்ல.



    அதுவும், அடிக்கடி உடுத்தி இருக்கிற ஆடையை அசிங்கப்படுத்தி, படுக்கையை ஈரமாக்கும் குழந்தை என்றால், சொல்லவே தேவையில்லை. உடை மாற்றுதல், படுக்கையை சுத்தம் செய்தல், குழந்தை அசிங்கப்படுத்திய துணிகளை துவைத்தல் என வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும்... இவற்றோடு, ‘யூரினரி இன்ஃபெக்ஷன்’ எனும் சிறுநீரகத் தொற்று, சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் சேர்ந்து கொள்ளும்.

    ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பார்கள். அதனால், பெற்றோர் குழந்தையின் சிறுநீர் பிரச்னையில் கவனமாக இருக்க வேண்டும். இந்த ‘ஈரப்’ பிரச்னையைத் தடுக்க, அதில் இருந்து விடுபட, குழந்தை நல மருத்துவர் ஜெயகுமார் ரெட்டி தகுந்த ஆலோசனை அளிக்கிறார். ‘‘பிறந்த குழந்தைகள் சிறுநீர் போவதற்கு முன் அழுவது பற்றிதான் பெரும்பாலான பெற்றோருக்கு சந்தேகம் வருகிறது.



    பிறந்த குழந்தைகள் இயற்கை உபாதையான சிறுநீர் கழிப்பதற்கு முன் அழுவது இயல்பான செயல். அதில் ஒன்றும் தவறில்லை. உண்மையில், பிறந்த குழந்தை ஆண், பெண் என எந்தப் பாலினத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழிப்பதுதான் முக்கிய பிரச்னை.

    புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மூன்றிலிருந்து 6 மாதம் வரை சிறுநீர்பை, சிறுநீர் வெளியேறும் துளை இரண்டும் ஒன்றாக வேலை செய்யாது. இது குழந்தையின் ஒன்றரை வயது வரை நீடிக்கும். ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர் வெளியேறும் இடம் இறுக்கமாக இருக்கும். இதன் காரணமாக, சிறுநீர் கழிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். 1 வயது வரை சிறுநீர் வெளியேறும் இடம் இறுக்கமாக இருப்பது இயல்பானது. அதனால், குழந்தைகளுக்கு ஒரு பிரச்னையும் ஏற்படாது. அதற்குப்பிறகும், சிறுநீர் வெளியேறும் இடம் ‘டைட்’ ஆக இருந்தால்தான் பிரச்னை.

    இதனால் குழந்தைகளுக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. சிறுநீர் உடலிருந்து சீராக வெளியேற முடியாத காரணத்தால், பிளாடருக்குள் போய் மீண்டும் கிட்னியை அடையும். இதனால் குழந்தைப் பருவத்திலேயே கிட்னி ஃபெயிலியர் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பிறந்த குழந்தைகள் 6 மாதம் வரை ஒரு நாளில்8 முதல் 10 முறை சிறுநீர் போகும். அதன் பிறகு, 5 அல்லது 6 முறை சிறுநீரை வெளியேற்றும். 1 வயது கடந்த குழந்தைகள் ஒரு நாளில் மூன்றிலிருந்து 5 தடவை சிறுநீர் போகும்.

    3 மணி நேரத்துக்கு ஒரு தடவை யூரினை வெளியேற்றிவிட்டு, சிறுநீர்பையை காலியாக வைத்திருக்க வேண்டும். இந்தப் பழக்கம் வருவதற்கு 2 வயதில் இருந்தே பயிற்சி கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் வெறுமனே ‘பாத்ரூம் போய்ட்டு வா’ என்றால் போகாது. பெற்றோரும் குழந்தையுடன் சேர்ந்து பாத்ரூம் சென்று வரவேண்டும்.

    அம்மா, அப்பா அறையிலோ, பாத்ரூமுக்கு வெளியிலோ நின்று கொண்டு, ‘யூரின் பாஸ் பண்ணிவிட்டு வா’ என்றால் குழந்தைகள் போகாது. தன்னை அதட்டுவதாகத்தான் குழந்தைகள் புரிந்து கொள்ளும். குழந்தைகளுக்கு உணவு உண்ணும் பழக்கம் இயல்பாக வரவேண்டும் என்பதற்காக, எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம் அல்லவா? அதைப்போன்றுதான், குழந்தைகளுக்குத் தனியாக சிறுநீர் கழிக்கும் பழக்கம் வரும்வரை பெற்றோரில் எவரேனும் ஒருவர் குழந்தையுடன் பாத்ரூம் சென்றுவருவது நல்லது.

    3 அல்லது 4 மணிக்கு ஒரு தடவை

    குழந்தைகள் சிறுநீர் கழிக்க பழக்கப்படுத்த வேண்டும். சிறுநீர் கழிக்கும் நேரங்களில் குழந்தைகளை ‘சீக்கிரம் சீக்கிரம்’ என அவசரப்படுத்தக் கூடாது. போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும். இப்படி குழந்தைகள் தானாகவே சிறுநீர் கழிக்கிற பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

    5 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்றவை இல்லாமல் காய்ச்சல் மட்டும் இருந்தால், யூரினரி இன்ஃபெக்ஷன் இருக்கலாம். வீட்டில் ஒரு குழந்தைக்கு கிட்னி பிராப்ளம் இருந்தால் மற்றொரு குழந்தையையும்பரிசோதனை செய்வது நல்லது.

    1 வயது வரை குழந்தைகளுக்கு படுக்கையில் சிறுநீர் கழிப்பது தெரியாது. ஒரு வயதைக் கடந்த பிறகு குழந்தைகளுக்கு படுக்கையை ஈரமாக்குவது தெரியும். 2 வயதுக்கு மேலே, குழந்தைகளால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த முடியும். வாரத்தில் 2 தடவையாவது குழந்தைகள் படுக்கை மற்றும் போர்வைகளை ஈரப்படுத்தும். இப்பழக்கம் 5 வயது வரை நீடிக்கும். சில குடும்பங்களில், 10 வயது வரை கூட படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். இதற்கும் பரம்பரைத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.

    குழந்தைகள் படுக்கையை ஈரமாக்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆழ்ந்த உறக்கம் இல்லாமை, சிறுநீர்பை அளவில் சிறியதாக இருத்தல் போன்றவை முக்கிய காரணங்கள். இப்பழக்கத்தைத் தடுப்பது மிகவும் எளிதான செயல். மாலை 6 மணிக்குமேல், குழந்தைகள் கேட்டால்தான் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

    இரவில் குளிர்பானங்கள், ஜூஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். படுக்கை அறையில் ஏ.சி. அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். மாலை வேளையில் கண்டிப்பாக டாய்லெட் போக வைக்க வேண்டும். தூங்கச் செல்லும் 1 மணி நேரத்துக்கு முன்பும் படுக்கச் செல்லும் வேளையிலும் மறக்காமல் சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், குழந்தைகளிடம் உள்ள தேவையில்லாத எந்தப் பழக்கத்தையும் எளிதாக மாற்றலாம்...’’

    ‘‘3 மணி நேரத்துக்கு ஒரு தடவை யூரினை வெளியேற்றிவிட்டு, சிறுநீர்பையை காலியாக வைத்திருக்க வேண்டும். இந்தப் பழக்கம் வருவதற்கு 2 வயதில் இருந்தே பயிற்சி கொடுக்க வேண்டும்.’’

    ‘‘குழந்தைகள் படுக்கையை ஈரமாக்குவதற்கு ஆழ்ந்த உறக்கம் இல்லாமை, சிறுநீர்பை அளவில் சிறியதாக இருத்தல் போன்றவை முக்கிய காரணங்கள். பரம்பரைத் தன்மையும் காரணமாகலாம்.’’


    Similar Threads:

    Sponsored Links
    jv_66, Aarushi and ahilanlaks like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: How to practice the child not to Bed wet?-படுக்கையில் சிறுநீர் கழித்தல் ப

    Thanks for the suggestion

    Jayanthy





  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    bed wetting

    bed wetting

    டாக்டர் எல். மகாதேவன்

    படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடும் பிரச்சினையைச் சய்யா மூத்திரம் அல்லது bed wetting என்று கூறுவார்கள். இது தன்னிச்சை செயல். 5 முதல் 8 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு இது வரும். பகலிலும் இரவிலும் இப்படி ஏற்படலாம். பொதுவாக இரவில் தூங்கும்போது குழந்தைகள் அறியாமல் சிறுநீர் போவதைத்தான் bed wetting என்று சொல்வார்கள். இந்த நோயை nocturnal enuresis என்றும் கூறுவார்கள். இது சாதாரணமானதுதான்.

    7, 8 வயதுவரைகூடக் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் போவதைப் பார்த்திருக்கிறேன். 10 வயதுக்கு மேல் இது சிறிது சிறிதாகக் குறையும். சில குழந்தைகள் எப்பொழுதும் இரவில் படுக்கையிலேயே சிறுநீர் போவார்கள். உடல் அதிகச் சிறுநீரை உற்பத்தி செய்வதாலும், மூத்திரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாததாலும், குழந்தை ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருப்பதாலும் இப்படி ஏற்படும்.

    இதனால் குழந்தைக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. சில குழந்தைகளுக்குக் கூச்ச உணர்வு வரலாம். Self esteem எனப்படும் தன்னம்பிக்கை குறையலாம். குழந்தைக்குத் தன்னம்பிக்கை ஊட்டும்படி பெற்றோர்கள் பேச வேண்டும். இது சாதாரண விஷயம்தான். இது மாறிவிடும் என்பதை எடுத்துக் கூற வேண்டும். இரவு உறங்கும் முன் அவர்களை வற்புறுத்திச் சிறுநீர் போகச் செய்ய வேண்டும்.

    இரவு நேரத்தில் குளிர்ந்த உணவு, திரவ உணவு கொடுப்பதைக் குறைக்க வேண்டும். சில நேரம் அலாரம் வைத்துக் குழந்தையை எழுப்பி, சிறுநீர் போகச் செய்ய வேண்டும். சிறிது சிறிதாகக் குழந்தை தானாக எழுந்து போய்ச் சிறுநீர் கழித்த பின் படுத்துக் கொள்ளும். இந்தச் செயல்முறை நடைமுறையில் பலனளிக்கச் சற்று நாளாகும்.

    குழந்தைக்கு மனஉளைச்சல் வராமல் பாதுகாக்க வேண்டும். மூத்திரப்பையில் பழுப்பு, காய்ச்சல் போன்றவை இல்லையா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். சில நேரம் இதற்கென்று மருந்து கள் தேவைப்படுகின்றன. அபான வாயுவின் ஜலக் குணம் அதிகரித்து, மூத்திரத்துடன் சேர்ந்து தன்னிச்சையாக மூத்திரம் வெளியேறலாம்.
    இப்படிப்பட்டவர்களுக்கு நல்லெண்ணெயைச் சூடாக்கி, தொப்புளுக்குக் கீழே தடவி வருவது பலன் கொடுக்கும். விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவுவதும் நல்லது. வஸ்தி ஆமய அந்தக கிருதம் என்னும் நெய்யை இரவு உறங்கும் முன் 1 ஸ்பூன் கொடுக்கலாம். தர்ப்பைப்புல் கஷாயம் சிறந்த கைமருந்து. தாமரை சூர்ணம், அரசம்பட்டை சூர்ணம் இரண்டையும் 5 கிராம் தேனில் கலந்து கொடுக்கலாம்.

    இரவில் 2 ஸ்பூன் சாப்பிடலாம். நரம்புகளை வலுவாக்க அஸ்வகந்தாதி சூர்ணம் 3 அல்லது 5 கிராம் பாலில் கலந்து கொடுக்கலாம். தலைக்கு லாக்ஷாதி தைலம் தேய்த்துக் குளிக்கச் சொல்லலாம். நாள்பட இது குணமாகி விடும். அதன் பிறகும் மனதில் கூச்ச உணர்வு அதிகமாக இருந்தால் வல்லாரை நெய் அல்லது கல்யாணகம் நெய் கொடுக்கலாம்.

    Last edited by chan; 18th Apr 2016 at 12:34 PM.
    jv_66 and ahilanlaks like this.

  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to practice the child not to Bed wet?-படுக்கையில் சிறுநீர் கழித்தல் ப

    Good suggestion

    Jayanthy





  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: How to practice the child not to Bed wet?-படுக்கையில் சிறுநீர் கழித்தல் ப

    Very nice share & good suggestions ji


  6. #6
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    பெட் வெட்டிங் - தவிர்க்க 10 வழிகள்

    பெட் வெட்டிங் - தவிர்க்க 10 வழிகள்

    நீர் உறிஞ்சும் விரிப்புகள் (Soggy sheets), போர்வையை விரித்து, டயப்பர் அணிந்துதான் உறங்குகின்றன நிறையக் குழந்தைகள். கொஞ்சம் பெரிய குழந்தை உள்ள வீடுகளில், ‘இந்த வயசிலேயும் பெட்ல யூரின் போறயே’ எனக் காலையிலேயே சத்தம்போட்டுக்கொண்டிருப்பார் அம்மா. “என் பையனுக்கு ஆறு வயசாகிடுச்சு, இன்னும் பெட்லேயே யூரின் போயிடுறான்... அன்பா சொல்லியாச்சு, அடிச்சும் பார்த்தாச்சு ஒண்ணும் செய்ய முடியலை” என்று புலம்பும் பெற்றோர்கள் உண்டு. படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பது, பெரும்பாலான குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் ஒரு சாதாரண நிலைதான். பெரியவர்களுக்கு சில நோய்க் காரணிகளாலும், வயது முதிர்ச்சியாலும் இது ஏற்படும். படுக்கையில் சிறுநீர் கழிப்பதை, நைட் டைம் இன்கான்டினென்ஸ் (Night time incontinence) அல்லது நாக்டர்னல் எனுரீசிஸ் (Nocturnal enuresis) என்பார்கள்.

    தூக்கத்தில் தன்னையும் அறியாமல் சிறுநீர் கழிப்பதைத்தான் பெட் வெட்டிங் என்கிறோம். இது, எல்லா வயதிலும் ஏற்படக்கூடிய ஒன்று. என்றாலும், சிறு குழந்தைகளுக்கும் முதியவர்களுக்குமே அதிகம் ஏற்படுகிறது. இதற்கான காரணங்கள் வேறுபடும்.

    சிறுநீர் வெளியேறும் அறிவியல்


    நம் சிறுநீரகத்தில் இருந்து சிறு குழாய்கள் வழியே சிறுநீரானது சிறுநீர்ப்பையை வந்தடைகிறது. அது நிறைந்ததும் மூளைக்குத் தகவல் செல்கிறது. மூளை, சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. அதன் பிறகே சிறுநீர் வெளியேறுகிறது. இந்த சிறுநீர்ப்பையானது இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தன்னிச்சையாகச் செயல்படும். சிறுநீர் மெதுவாக சிறுநீர்ப்பையில் வந்து சேர்ந்தவுடன், தானாகவே சிறுநீர்ப்பை சுருங்கி, சிறுநீரை வெளியேற்றும். பின், வயது அதிகரிக்கும்போது இதன் கட்டுப்பாட்டை மூளை எடுத்துக்கொள்ளும். இந்தச் செயல்பாடு மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகே, குழந்தைகளுக்குத் தாங்கள் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவையைச் சொல்வார்கள். இவ்வாறு, பழக்கப்படுத்துவதையே கழிப்பறைப் பயிற்சி (டாய்லெட் ட்ரைனிங்) என்கிறோம்.

    கழிப்பறைப் பயிற்சியை சில குழந்தைகள் மூன்று முதல் ஐந்து வயதுக்குள் பழகிக்கொள்வார்கள். ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் இரவு படுக்கையில் சிறுநீர் கழிக்க மாட்டார்கள். அதேபோல, பகலில் சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும்போது சொல்வார்கள். ஐந்து வயது முதல் ஏழு வயது வரை உள்ள 90 சதவிகிதக் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது இல்லை. ஏழு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதையே நாம் பெட் வெட்டிங் என்கிறோம்.


    பெட் வெட்டிங் காரணங்கள்


    பொதுவாக, குழந்தைகளுக்கு இட மாற்றம் ஏற்படும்போது அதாவது, பள்ளி, வசிப்பிடம் மாறும்போது, புதிய இடம், அறிமுகம் இல்லாத ஆட்கள், புதிய சூழலால் மனஅழுத்தத்துக்கு ஆளாவார்கள். இது ஒரு முக்கியமான காரணம். சில குழந்தைகள் பிறந்ததில் இருந்தே கொஞ்சமும் கட்டுப்பாடு இல்லாமல், சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பார்கள். பிறவியிலேயே சிறுநீர்ப்பை சுருங்கி இருப்பதே இதற்குக் காரணம். இதனாலும் பெட் வெட்டிங் பிரச்னை இருக்கும். மேலும், மலச்சிக்கல், சிறுநீர்ப்பைத் தொற்று, சிறுநீர்ப்பை நிறைந்ததை உணர முடியாத நிலை, ஹார்மோன் சமச்சீரின்மை, ஸ்லீப் ஆப்னியா, டான்சிலைடிஸ், சிறுநீர்ப்பாதை மற்றும் நரம்பு மண்டல அமைப்பில் பிரச்னை உள்ளவர்களுக்கும் பெட் வெட்டிங் பிரச்னை இருக்கும்.

    சிகிச்சை உள்ளதா?

    குழந்தை அடிக்கடி பெட் வெட்டிங் செய்கிறது என்றால், குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்வது நல்லது. இவர்களுக்கு சிறுநீர்ப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மற்றும் உளவியல் பரிசோதனை செய்யப்படும். 90 சதவிகிதக் குழந்தைகளுக்கு எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில், உணவுப் பழக்கத்தில் சிறிய மாறுதல் செய்தாலே போதும். இதனுடன், இரவு தூங்கச் செல்லும் முன்பு, சிறுநீர் கழித்துவிட்டு தூங்கும் பழக்கம், இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு மேல் தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருக்கும் பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும். மேலும், குழந்தைகள் வளர வளர இந்தப் பிரச்னை தானாகவே சரியாகிவிடும். இதற்குப் பெற்றோர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். இது குழந்தைகள் தங்களை அறியாமல் செய்வது என்பதால், அவர்களை திட்டுவதோ, அடிப்பதோ கூடாது. அவர்களைப் புரிந்துகொண்டு, அரவணைத்துச் செல்ல வேண்டும். திட்டுவதாலோ அடிப்பதாலோ இந்தப் பிரச்னையை சரிசெய்துவிட முடியாது. இது, பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்யும்.

    பெரியவர்களுக்கு ஏற்படும் பிரச்னை

    சிலருக்கு, டீன் வயதுக்கு முந்தையப் பருவத்தில் இந்தப் பிரச்னை திடீனெத் தோன்றும். அதாவது, ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் வாழும் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்குத் தோன்றும். முதியவர்களில் ஆண்களுக்கு பெட்வெட்டிங் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. 50 - 60 வயதில் இந்தத் தொந்தரவு ஏற்பட்டால், ப்ராஸ்டேட் பிரச்னையாக இருக்க வாய்ப்பு உள்ளது. ப்ராஸ்டேட் சுரப்பி சிறுநீர்பைக்கு கீழ் அமைந்திருக்கிறது. இதன் மையத்தில் சிறுநீர்க் குழாய் இருக்கிறது. ப்ராஸ்டேட் அளவு பெரிதாகும்போது, குழாய் சுருக்கம் அடையும். இதனால், சிறுநீர்ப் பாதையில் அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீர்ப்பையில் தேக்கம் ஏற்படும். இவ்வாறு வீக்கம் ஏற்பட்டு சிறுநீர் தேங்குவதால் தொற்று ஏற்படும். அதனால், அவர்களையும் அறியாமல் தூக்கத்தில் சிறுநீர் வெளியேறும். மேலும், சிறுநீர்ப்பையில் கற்கள் தோன்றும். இதற்கு நவீன சிகிச்சைகள், தீர்வுகள் உள்ளன என்பதால் கவலைப்படத் தேவை இல்லை.

    நீ ர் உறிஞ்சும் விரிப்புகள் (Soggy sheets), போர்வையை விரித்து, டயப்பர் அணிந்துதான் உறங்குகின்றன நிறையக் குழந்தைகள். கொஞ்சம் பெரிய குழந்தை உள்ள வீடுகளில், ‘இந்த வயசிலேயும் பெட்ல யூரின் போறயே’ எனக் காலையிலேயே சத்தம்போட்டுக்கொண்டிருப்பார் அம்மா. “என் பையனுக்கு ஆறு வயசாகிடுச்சு, இன்னும் பெட்லேயே யூரின் போயிடுறான்... அன்பா சொல்லியாச்சு, அடிச்சும் பார்த்தாச்சு ஒண்ணும் செய்ய முடியலை” என்று புலம்பும் பெற்றோர்கள் உண்டு. படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பது, பெரும்பாலான குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் ஒரு சாதாரண நிலைதான். பெரியவர்களுக்கு சில நோய்க் காரணிகளாலும், வயது முதிர்ச்சியாலும் இது ஏற்படும். படுக்கையில் சிறுநீர் கழிப்பதை, நைட் டைம் இன்கான்டினென்ஸ் (Night time incontinence) அல்லது நாக்டர்னல் எனுரீசிஸ் (Nocturnal enuresis) என்பார்கள்.

    தூக்கத்தில் தன்னையும் அறியாமல் சிறுநீர் கழிப்பதைத்தான் பெட் வெட்டிங் என்கிறோம். இது, எல்லா வயதிலும் ஏற்படக்கூடிய ஒன்று. என்றாலும், சிறு குழந்தைகளுக்கும் முதியவர்களுக்குமே அதிகம் ஏற்படுகிறது. இதற்கான காரணங்கள் வேறுபடும்.

    சிறுநீர் வெளியேறும் அறிவியல்

    நம் சிறுநீரகத்தில் இருந்து சிறு குழாய்கள் வழியே சிறுநீரானது சிறுநீர்ப்பையை வந்தடைகிறது. அது நிறைந்ததும் மூளைக்குத் தகவல் செல்கிறது. மூளை, சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. அதன் பிறகே சிறுநீர் வெளியேறுகிறது. இந்த சிறுநீர்ப்பையானது இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தன்னிச்சையாகச் செயல்படும். சிறுநீர் மெதுவாக சிறுநீர்ப்பையில் வந்து சேர்ந்தவுடன், தானாகவே சிறுநீர்ப்பை சுருங்கி, சிறுநீரை வெளியேற்றும். பின், வயது அதிகரிக்கும்போது இதன் கட்டுப்பாட்டை மூளை எடுத்துக்கொள்ளும். இந்தச் செயல்பாடு மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகே, குழந்தைகளுக்குத் தாங்கள் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவையைச் சொல்வார்கள். இவ்வாறு, பழக்கப்படுத்துவதையே கழிப்பறைப் பயிற்சி (டாய்லெட் ட்ரைனிங்) என்கிறோம்.

    கழிப்பறைப் பயிற்சியை சில குழந்தைகள் மூன்று முதல் ஐந்து வயதுக்குள் பழகிக்கொள்வார்கள். ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் இரவு படுக்கையில் சிறுநீர் கழிக்க மாட்டார்கள். அதேபோல, பகலில் சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும்போது சொல்வார்கள். ஐந்து வயது முதல் ஏழு வயது வரை உள்ள 90 சதவிகிதக் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது இல்லை. ஏழு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதையே நாம் பெட் வெட்டிங் என்கிறோம்.

    பெட் வெட்டிங் காரணங்கள்

    பொதுவாக, குழந்தைகளுக்கு இட மாற்றம் ஏற்படும்போது அதாவது, பள்ளி, வசிப்பிடம் மாறும்போது, புதிய இடம், அறிமுகம் இல்லாத ஆட்கள், புதிய சூழலால் மனஅழுத்தத்துக்கு ஆளாவார்கள். இது ஒரு முக்கியமான காரணம். சில குழந்தைகள் பிறந்ததில் இருந்தே கொஞ்சமும் கட்டுப்பாடு இல்லாமல், சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பார்கள். பிறவியிலேயே சிறுநீர்ப்பை சுருங்கி இருப்பதே இதற்குக் காரணம். இதனாலும் பெட் வெட்டிங் பிரச்னை இருக்கும். மேலும், மலச்சிக்கல், சிறுநீர்ப்பைத் தொற்று, சிறுநீர்ப்பை நிறைந்ததை உணர முடியாத நிலை, ஹார்மோன் சமச்சீரின்மை, ஸ்லீப் ஆப்னியா, டான்சிலைடிஸ், சிறுநீர்ப்பாதை மற்றும் நரம்பு மண்டல அமைப்பில் பிரச்னை உள்ளவர்களுக்கும் பெட் வெட்டிங் பிரச்னை இருக்கும்.

    சிகிச்சை உள்ளதா?

    குழந்தை அடிக்கடி பெட் வெட்டிங் செய்கிறது என்றால், குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்வது நல்லது. இவர்களுக்கு சிறுநீர்ப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மற்றும் உளவியல் பரிசோதனை செய்யப்படும். 90 சதவிகிதக் குழந்தைகளுக்கு எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில், உணவுப் பழக்கத்தில் சிறிய மாறுதல் செய்தாலே போதும். இதனுடன், இரவு தூங்கச் செல்லும் முன்பு, சிறுநீர் கழித்துவிட்டு தூங்கும் பழக்கம், இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு மேல் தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருக்கும் பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும். மேலும், குழந்தைகள் வளர வளர இந்தப் பிரச்னை தானாகவே சரியாகிவிடும். இதற்குப் பெற்றோர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். இது குழந்தைகள் தங்களை அறியாமல் செய்வது என்பதால், அவர்களை திட்டுவதோ, அடிப்பதோ கூடாது. அவர்களைப் புரிந்துகொண்டு, அரவணைத்துச் செல்ல வேண்டும். திட்டுவதாலோ அடிப்பதாலோ இந்தப் பிரச்னையை சரிசெய்துவிட முடியாது. இது, பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்யும்.

    பெரியவர்களுக்கு ஏற்படும் பிரச்னை

    சிலருக்கு, டீன் வயதுக்கு முந்தையப் பருவத்தில் இந்தப் பிரச்னை திடீனெத் தோன்றும். அதாவது, ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் வாழும் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்குத் தோன்றும். முதியவர்களில் ஆண்களுக்கு பெட்வெட்டிங் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. 50 - 60 வயதில் இந்தத் தொந்தரவு ஏற்பட்டால், ப்ராஸ்டேட் பிரச்னையாக இருக்க வாய்ப்பு உள்ளது. ப்ராஸ்டேட் சுரப்பி சிறுநீர்பைக்கு கீழ் அமைந்திருக்கிறது. இதன் மையத்தில் சிறுநீர்க் குழாய் இருக்கிறது. ப்ராஸ்டேட் அளவு பெரிதாகும்போது, குழாய் சுருக்கம் அடையும். இதனால், சிறுநீர்ப் பாதையில் அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீர்ப்பையில் தேக்கம் ஏற்படும். இவ்வாறு வீக்கம் ஏற்பட்டு சிறுநீர் தேங்குவதால் தொற்று ஏற்படும். அதனால், அவர்களையும் அறியாமல் தூக்கத்தில் சிறுநீர் வெளியேறும். மேலும், சிறுநீர்ப்பையில் கற்கள் தோன்றும். இதற்கு நவீன சிகிச்சைகள், தீர்வுகள் உள்ளன என்பதால் கவலைப்படத் தேவை இல்லை.



    தவிர்க்க 10 வழிகள்
    மாலை முதல் இரவு தூங்கச் செல்லும் வரை குழந்தை அருந்தும் நீர் அளவைக் குறைக்க வேண்டும்.

    காஃபின் உள்ள பானங்கள், உணவைத் தவிர்க்க வேண்டும்.

    குழந்தை தூங்கச் செல்வதற்கு முன் சிறுநீர் கழிக்க அறிவுறுத்த வேண்டும்.

    இரவில் சிறுநீர் வந்தால் எழுந்திருக்க வேண்டும் என்று அன்பாகச் சொல்ல வேண்டும்.

    குழந்தை இரவில் விழித்தால் எழுந்திருக்க வசதியாக இரவு விளக்கை எரியவிட வேண்டும்.

    இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் செட்செய்து குழந்தையை எழுப்பி, சிறுநீர் கழிக்கப் பழக்க வேண்டும்.

    கழிப்பறைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

    சிறுநீர் கழிக்காத நாட்களுக்குப் பாராட்டு தெரிவித்து, உற்சாகமூட்ட வேண்டும்.

    மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், சரிசெய்ய வேண்டும்.

    சிறுநீர் கழித்தால் அடிக்கக் கூடாது. சருமத்தில் ஒவ்வாமை ஏதும் ஏற்படாமல் இருக்க, சுத்தம் செய்ய உதவ வேண்டும்.


    Last edited by chan; 2nd Jun 2016 at 12:02 PM.
    jv_66 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter