Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By chan
  • 1 Post By jv_66
  • 1 Post By chan

Asthma in Children - குழந்தைகளுக்கும் ஆஸ்துமா?


Discussions on "Asthma in Children - குழந்தைகளுக்கும் ஆஸ்துமா?" in "Health and Kids Food" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Asthma in Children - குழந்தைகளுக்கும் ஆஸ்துமா?

    குழந்தைகளுக்கும் ஆஸ்துமா?

    ‘‘ஆஸ்துமா பாதிப்பு பெரியவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், 5 முதல் 10 சதவிகிதம் வரை குழந்தைகளையும் ஆஸ்துமா பாதிக்கிறது’’ என்கிறார் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரான சோமசுந்தரம்.உலக ஆஸ்துமா தினமாக மே 5ம் தேதியைக் கொண்டாடிய பிறகு, மே மாதத்தை ஆஸ்துமா விழிப்புணர்வு மாதமாக அறிவித்து பல்வேறு நடவடிக்கைகளை ‘இந்திய குழந்தைகள் நல மருத்துவர் குழுமம்’ செய்து வருவதன் அவசியம் பற்றியும் தொடர்ந்து விளக்குகிறார்.

    ‘‘சுற்றுச்சூழல் மாசு, பரம்பரை ரீதியான காரணங்களால் பொதுவாக ஆஸ்துமா ஏற்படுகிறது. இதே காரணங்களால் குழந்தைகளுக்கும் ஆஸ்துமா உண்டாகலாம். கிராமத்தைவிட நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு இந்த சாத்தியம் இன்னும் அதிகம். பல பெற்றோர் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதில்லை.

    உடனே வேறு மருத்துவர், வேறு சிகிச்சை என்று மாற்று வழிகளைத் தேடுகிறார்கள். அப்படியே ஆஸ்துமாவை ஏற்றுக்கொண்டாலும் இன்ஹேலர் வைக்க வேண்டும் என்று சொன்னாலோ, நெபுலைஸர் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னாலோ கேட்பதில்லை. பெற்றோரின் அறியாமையால் கடைசியில் குழந்தைதான் பாதிக்கப்படுகிறது’’ என்று வருத்தப்படுபவர், குழந்தைகளிடம் ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுப் பொருட்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்கிறார்.

    ‘‘நிறம், மணம், சுவை கிடைப்பதற்காக, உணவைப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களால் குடல் மற்றும் சருமம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். இந்த வேதிப் பொருட்களால் மூச்சுக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டு ஆஸ்துமா உண்டாவதற்கும் 5 சதவிகித வாய்ப்பு உண்டு. ஆரோக்கியமாக இருக்கும் குழந்தை திடீரென்று மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவதற்கு உணவுப் பொருட்களே பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன.

    குறிப்பாக ஐஸ்க்ரீம் வகைகள், குளிர்பானங்கள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு உணவுகளில் இந்த வாய்ப்பு அதிகம். சில குழந்தைகளுக்கு இயற்கை உணவுகளே ஆஸ்துமாவை உண்டாக்குகின்றன. அதனால், குழந்தைகள் இருமலால் அவதிப்பட்டால் சமீபத்தில் குழந்தை என்ன சாப்பிட்டது என்பதை பெற்றோர் கவனித்து, குறிப்பிட்ட உணவை அதன்பிறகு தவிர்க்க வேண்டும். காய்ச்சல் இல்லாமலே சளி ஏற்படுவது, இருமலுடன் வாந்தி, 10 நாட்கள் வரை சளித் தொல்லையால் குழந்தை அவதிப்படுவது போன்றவை ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது அவசியம். இந்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்’’ என்கிறார்.


    Similar Threads:

    Sponsored Links
    jv_66 likes this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Asthma in Children - குழந்தைகளுக்கும் ஆஸ்துமா?

    Thanks for the info.

    chan likes this.
    Jayanthy





  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    குழந்தைகளை பாதிக்கும் ஆஸ்துமா நோய்

    குழந்தைகளை பாதிக்கும் ஆஸ்துமா நோய்

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பலருக்கு ஆஸ்துமா நோய் தாக்கம் ஏற்படுகின்றது. மாசடைந்த சூழ்நிலைகளாலும் தூசி அலர்ஜி போன்றவைகளினாலும் எண்ணற்ற குழந்தைகள் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

    அவர்கள் உபயோகிக்கும், படுக்கையறை, பொருட்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆஸ்துமா நோய் தாக்காமல் பாதுகாக்கலாம் என்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்.

    குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது. பூக்களின் மகரந்த தூள்கள், வீட்டுத்தூசு, மிருகக்கழிவு, போன்றவற்றால் இது ஏற்படுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை இந்த ஆஸ்துமா தாக்குகிறது. குளிர்காற்று, வீரியம் மிக்க வாசனை, புகை போன்றவற்றாலும் வைரஸ் நுண்கிருமிகள் மூலம் ஏற்படும் தொற்று நோயாலும் ஏற்படக்கூடும்.

    சில குழந்தைகளுக்கு மூன்று வயதிற்குப் பிறகே வீசிங் என்னும் மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்குகிறது. இது சாதாரணமாக 8 வயதிற்கு முன்பாக குணமாகிவிடும்.

    லேசான விட்டு விட்டு ஏற்படும் ஆஸ்துமா வருடத்திற்கு 3 அல்லது 4 முறை ஏற்படும். 10 முதல் 12 வயதிற்குள் சரியாகிவிடும்.

    ஆஸ்துமா நோயின் அறிகுறிகள் 2 வயதிற்கு முன்னரே ஆரம்பிக்கும். நோயின் கடுமை அதிகாமாகவும், நீடித்தும் இருக்கும். இந்நோய் முழுமையாக குணமடையாது பிற்காலத்திலும் நீடிக்கும்.

    ஆஸ்துமா ஏற்படாமல் இருக்க சுத்தமாக வீடுகளை வைத்துக்கொள்ள வேண்டும். புகை பிடிப்பவரின் அருகில் தூசி படியும் இடங்களில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க கூடாது. நாய்,பூனை போன்றவைகளின் முடிகளாலும் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சில குழந்தைகளுக்கு சத்து குறைவினாலும் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    jv_66 likes this.

  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Asthma in Children - குழந்தைகளுக்கும் ஆஸ்துமா?

    Thanks for the details

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter