Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree12Likes

Baby's food habits -குழந்தைகளுக்கான உணவு முறைகள்


Discussions on "Baby's food habits -குழந்தைகளுக்கான உணவு முறைகள்" in "Health and Kids Food" forum.


 1. #1
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Baby's food habits -குழந்தைகளுக்கான உணவு முறைகள்

  பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்

  குழந்தைக்கு முதல் மற்றும் முக்கியமான உணவே தாய்ப்பால் தான். குழந்தை பிறந்தது முதல் ஒரு வருட காலம் வரை தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது.

  குழந்தை பிறந்து முதல் நான்கு மாதங்களுக்கு
  தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்குப் பிறகு பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்கலாம். ஆனால் பால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  முடிந்தவரை நள்ளிரவில் குழந்தைக்கு பால் கொடுப்பதை தவிர்க்கப் பாருங்கள். காரணம், நாளடைவில் குழந்தையின் பற்களில் சொத்தை விழ இது காரணமாக அமையலாம் என்பதோடு பால் காதுக்குள் நுழைந்து அப்படியே அசையாமல் குழந்தை தூங்கிவிடலாம். காதில் சில தொற்று நோய்கள் உண்டாகக்கூடும்.

  நான்காவது மாதம்
  குழந்தை பிறந்து நான்கு மாதம் ஆகிவிட்டால், பருப்புத் தண்ணீர் அல்லது கரட் தண்ணீரை கொடுத்து பழக்கலாம்.

  ஐந்தாவது மாதம்
  குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள் ஆனவுடன் காய்கறி மற்றும் பழங்களைக் கொடுக்கத் தொடங்கலாம்.
  பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், பழுத்த பப்பாளி ஆகியவை உங்களது முதல் விருப்பமாக இருப்பது நல்லது.
  மலை வாழைப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழை மற்றும் ரஸ்தாளி அளிப்பதை தவிர்க்கலாம்.
  வைட்டமின் சி சத்து நிறைய அடங்கியவை - சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவை குழந்தைக்குத் தவறாமல் கொடுக்கலாம். பெற்றோருக்கு இந்த சிட்ரஸ் வகைப்பழங்கள்அலர்ஜி என்றால், குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயது ஆனபிறகு இதுபோன்ற பழங்களைக் கொடுத்துப் பார்க்கலாம்.
  குழந்தைகளால் சீக்கிரம் ஜீரணிக்கக் கூடியவைகளும், அவர்களால் விரும்பப்படுவதுமான பிசைந்த வாழைப்பழங்களும், கடைந்த ஆப்பிள்களும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் உணவு வகைகளில் சிறந்தது.
  பெரும்பான்மையான எல்லா பழங்களையும், காய்கறிகளையும் மிக்ஸியில் அரைத்து குழந்தைகளுக்கு கூழ் போலாக்கி கொடுக்கலாம். பருப்பு வகைகளையும் இப்படி கொடுக்கலாம்.

  ஆறாவது மாதம்
  முட்டையில் உள்ள மஞ்சள் கருவை கொடுக்கலாம். இட்லியும் கொடுக்கத் தொடங்கலாம். அரை ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொடுக்கலாம்.
  இட்லிக்கு சர்க்கரையை தொட்டு கொடுப்பதைவிட தெளிவான ரசம் போன்றவற்றைத் தொட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் இனிப்பு மட்டுமல்லாது மீதி சுவைகளும் குழந்தையின் நாக்குக்கு பிடிபடுவது நல்லது. அப்போதுதான் வளர்ந்தபிறகு பலவகை உணவுகளை குழந்தை உண்ணத் தயாராகும்.
  சிறுகச் சிறுக புதிய உணவு வகைகளில் குழந்தையின் அனுபவத்தை வளர்க்க வேண்டும். குழந்தை ஆறு மாதக் குழந்தையாகும்போது உணவில் சிறு பகுதி புரதம் செறிந்த மீன், முட்டை, கோழிக் குஞ்சின் இறைச்சி இவைகளைச் சேர்க்கலாம். ஆனால் இவை நன்றாக பக்குவப்படுத்தப் பட்டதாகவும், மிருதுவாகவும் உள்ளதாயும் இருத்தல் அவசியம்.

  ஏழாவது மாதம்
  ஏழாவது மாதத்தில் சப்போட்டா போன்ற பழங்களைக் கொடுக்கலாம்.
  தோசை, பால் குறைவான சப்பாத்தி, தானிய சுண்டல், மிக்ஸ்ட் ரைஸ், கிச்சடி, உப்புமா, பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக வேண்டும்.

  பத்தாவது மாதம்
  குழந்தைக்கு பத்து மாதம் ஆனதும் சாதத்தையும் பருப்பையும் குழைத்துப் பிசைந்து வெண் பொங்கல் போலாக்கி காய்கறித் துண்டுகளையும் சேர்த்துக் கொடுக்கலாம்.
  குழந்தைகள் காய்கறிகளை துப்பிவிடுகிறது என்றால் அவற்றை சூப்பாக்கி கொடுக்கலாம். தினமும் ஒருமுறை இப்படி சாப்பிடலாம். நடுவே வெரைட்டிக்கு ரொட்டித் துண்டில் வெண்ணெய் மற்றும் ஜாம் தடவித் தரலாம்.
  காய்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் ஆகியவை குழந்தையின் உடலுக்கு நல்லது. ஆனால் இவற்றை சாப்பிட்ட பிறகு மறக்காமல் பற்களைச் சுத்தம் செய்து விடுங்கள்.
  எப்போதுமே ஒரே நாளில் இரண்டுவித புதிய உணவுகளைக் குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டாம். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகே அடுத்த புதிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்துங்கள். அப்போதுதான் குழந்தைக்கு வயிற்றுப்போக்கோ வேறு ஏதாவது சிக்கலோ ஏற்பட்டால் அது எந்த உணவினால் என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.


  - இணையதளத்திலிருந்து

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine Feb 2017. You Can download & Read the magazines HERE.  Similar Threads:

  Sponsored Links
  Last edited by sumathisrini; 14th Mar 2017 at 03:03 PM.
  jv_66 and gkarti like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 2. #2
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  re: Baby's food habits -குழந்தைகளுக்கான உணவு முறைகள்

  அதிகபடியான உப்பும் சர்க்கரையும் வேண்டாமே.....

  முதலில் காரம் இல்லாத உணவு வகைகளை கொடுத்து பிறகே கொஞ்சம் கொஞ்சமாக காரம் மற்றும் மசாலா சேர்ந்த பொருட்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்.

  உணவில் மிக அதிகமான சர்க்கரையையும், உப்பையும் சேர்க்காதீர்கள். அதிகபடியான உப்பு உடம்பில் நீர் இல்லாமல் செய்துவிடும். அதிகபடியான சர்க்கரை சொத்தைப் பல்லை உண்டாக்கும். பிற்காலத்தில் இதனால் பலவிதமான பிரச்சனைகள் உருவாகும். முக்கியமாக 1 வயது வரை உள்ள குழந்தைகள் இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும். குழந்தையின் சுவை உறுப்பு நன்றாக வேலை செய்யக்கூடியது. ஆகவே அதற்கு அதிகபடியான உப்பும் சர்க்கரையும் தேவையில்லை.


  - இணையதளத்திலிருந்து

  jv_66 and gkarti like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 3. #3
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Baby's food habits -குழந்தைகளுக்கான உணவு முறைகள்

  பகிர்வுக்கு நன்றி அக்கா .

  gowrymohan likes this.
  Jayanthy

 4. #4
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Re: Baby's food habits -குழந்தைகளுக்கான உணவு முறைகள்

  Quote Originally Posted by jv_66 View Post
  பகிர்வுக்கு நன்றி அக்கா .
  Welcome Jayanthy dear.......

  jv_66 likes this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 5. #5
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Re: Baby's food habits -குழந்தைகளுக்கான உணவு முறைகள்

  குழந்தைகளிடம் உணவைத் திணிக்காதீர்கள்

  சில சமயங்களில் குழந்தை எல்லா வித உணவுகளையும் புறக்கணிக்கக்கூடும். இது அநேகமாக வழக்கத்தில் இருந்து மாறுபடுவதால் ஏற்படுவது.

  குழந்தை திட உணவை புறக்கணித்தால் அதனைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள். திட உணவின் அமைப்பும், ருசியும் பாலினின்றும் வெகுவாக வேறுபடுவதாலும் விழுங்கும் முறை வழக்கமான உறிஞ்சிக்குடிக்கும் முறையிலிருந்து வேறுபடுவதாலும் குழந்தை புறக்கணிக்கக்கூடும்.

  குழந்தை உணவு உட்கொள்வதில் ஆவலாக இல்லாவிடினும் கவலைப்படாதீர்கள். அதனைக் கட்டாயப்படுத்தாதீர்கள். மாறாக வேறு ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள். வேறுபட்ட தானியம் அல்லது வேறு வகையான பழக்கூழ் போன்றவை. அப்பொழுதும் குழந்தை அவைகளை புறக்கணித்தால் சில நாட்கள் சென்ற பிறகு மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.

  ஒவ்வொரு புதிய உணவு வகைகளையும் குழந்தை ருசி பார்க்கட்டும். அதன் ருசியையும் அதன் கெட்டித்தன்மையையும் பழக்கப்படுத்திக் கொள்ளட்டும்.

  குழந்தைக்கு முதலில் கொஞ்சம் கொடுங்கள். அதைச் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னும் கொஞ்சம் கொடுங்கள். அவர் சிறிது அதிகமாக சாப்பிட்டால் அதை அவனுக்குக் கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகப்படுத்தி அவன் பசிக்கு ஏற்ப கொடுங்கள்.

  குழந்தையை பெருக்க வைக்கும் எந்தவிதமான உணவையும் கொடுக்காதீர்கள். உதாரணமாக, அதிகபடியான வெண்ணெய் அல்லது நெய், கிரீம் அல்லது தித்திப்பான முட்டையும், பாலும் சேர்ந்த தின்பண்ட வகை இவைகள் குழந்தையை பெருக்க வைக்கும். எவ்வளவு எலும்பும் தோலுமாக இருந்தாலும் அநேகமாக பின்பு தடித்த குழந்தையாகி, பிற்காலத்தில் கொழுத்த மனிதனாவான்.

  புளிக்காத பிரிட்ஜில் வைக்காத தயிர் சாதம் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீரியா இருப்பதால் உடல் நலனுக்கு மிகவும் நல்லது.

  தினம் தோறும் நான்கு அல்லது ஐந்து முறையாவது குழந்தைகளுக்கு காய்கறி உணவுகளையும், பழங்களையும் கொடுங்கள். குழந்தைகளுக்கு நார்ச் சத்து மிகவும் முக்கியம். அவை அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுங்கள்.

  சில குழந்தைகள் கையில் எது கிடைத்தாலும் வாயில் போட்டுக்கொள்ளும். இது போன்ற குழந்தைகளுக்கு கையில் பிடித்துக்கொள்ளும் வகையிலான ரொட்டி, அப்பம் அல்லது ஆப்பிள், வாழைப்பழம், காரட் போன்றவற்றை கொடுக்கலாம்.

  அதிகமான கடின உணவை கடித்துத் தின்பது குழந்தையின் ஈறுகளும், பற்களும் ஆரோக்கியமாக வளர உதவி புரிகின்றது. குழந்தைக்கு குறிப்பாக பல் முளைக்கும் சமயம் இது சௌகரியமாக அமையும்.

  இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.

  குழந்தைகளுக்கு நிறைய கலர்புல்லான காய்கறிகள், பழங்கள் என்று அதிகமாக கொடுக்கலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், பி புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

  குழந்தைக்கு இரும்புச் சத்து, புரதச் சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத் தவிர சிக்கன் சூப், வேக வைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புச் சாதம் கொடுக்கலாம். வளர வளர குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்களும் மாறும் அதற்கேற்ப கவனித்து குழந்தைகளுக்கு உணவளியுங்கள்.


  - இணையதளத்திலிருந்து

  jv_66 and gkarti like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 6. #6
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Re: Baby's food habits -குழந்தைகளுக்கான உணவு முறைகள்

  4 - 6 மாத குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சிறந்த திட உணவுகள்

  பல குழந்தை மருத்துவர்கள் குழந்தைகளுக்கு 6 மாதம் முடிந்தவுடன் தான் திட உணவுகள் கொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.  தானியங்கள்
  அரிசி மற்றும் ஓட்ஸ் தானியங்கள் தான் அலர்ஜி ஏற்படும் இடர்பாடு குறைவாக உள்ள தானியங்களாகும். அதனால் பல குழந்தைகளுக்கு இதிலிருந்து தான் ஆரம்பிக்கப்படுகிறது. ஒரு வேளை தானியங்கள் வேண்டாம் என்றால் அவகேடோ அல்லது வாழைப்பழத்தில் இருந்து தொடங்குங்கள்.

  பழங்கள்
  8 மாதங்கள் முடிவடைந்தவுடன் பழங்களை அப்படியே கொடுக்கலாம். ஒரு வேளை, மென்மையான பழங்களாக இருந்து, குழந்தைக்கு செரிமான பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருந்தால் 8 மாதத்திற்கு முன்பே கூட இதனை கொடுக்கலாம். வாழைப்பழம் அல்லது அவகேடோ என்றால் எப்போதுமே வேக வைக்க வேண்டாம்.

  காய்கறிகள்
  குழந்தைக்கு 12 மாதங்கள் முடிந்த பிறகு அல்லது மெல்ல தொடங்கும் போது, காய்கறிகளை எப்போதுமே வேக வைத்தே கொடுங்கள். இதனால் தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஏற்படாது.

  புரதம்
  சரியாக வேகாத உணவுகளை கொடுக்காதீர்கள் - உதாரணத்திற்கு சரியாக வேகாத கோழி, ஆடு அல்லது மீனை குழந்தைக்கு கொடுக்காதீர்கள்.

  பால் பொருட்கள்
  குழந்தைக்கு 12 மாதங்கள் முடியும் வரை தாய்ப்பாலுக்கு பதில் வேறு ஏதும் கொடுக்க வேண்டாம். அப்படி செய்தால் உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். 2 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு குறைந்த கொழுப்பு அல்லது ஆடை நீக்கிய பால் பொருட்களை கொடுக்காதீர்கள். முழுமையான பால் தேவையானது.

  ஒரு நாளைக்கு எவ்வளவு
  மசித்த உணவு அல்லது தானியங்களை ஒரு நாளைக்கு 1 டீஸ்பூன் கொடுத்து ஆரம்பியுங்கள். அந்த தானியங்களுடன் 4-5 டீஸ்பூன் தாய்ப்பாலை சேர்த்திடவும். இந்த 1 டீஸ்பூன் மசித்த உணவை அல்லது தாய்ப்பால் கலக்கப்பட்ட 1 டீஸ்பூன் தானியத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை என உயர்த்திடுங்கள். தானியங்கள் கொடுத்தால் நாளடைவில் அது கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.  உணவளிக்கும் டிப்ஸ்
  முதல் முறையாக நீங்கள் கொடுப்பதை உங்கள் குழந்தை உண்ணவில்லை என்றால், சில நாட்களுக்கு பிறகு மீண்டும் முயற்சிக்கவும். இந்த வழிமுறைகளை பயன்படுத்தி, உங்கள் குழந்தைக்கு முதல் வருடத்தில் என்ன கொடுக்க வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நாங்கள் கூறிய அளவு எல்லாம் தோராயமானது தான். அதனால் உங்கள் குழந்தை அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது குறைவாக சாப்பிட்டாலோ அதை எண்ணி கவலை கொள்ளாதீர்கள். குழந்தைக்கு திட உணவுகளை கொடுக்க ஆரம்பிப்பதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க பரிந்துரைக்கப்படுகிறது.


  - Tamil boldsky

  jv_66 and gkarti like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 7. #7
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Re: Baby's food habits -குழந்தைகளுக்கான உணவு முறைகள்

  குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஒவ்வொரு கவளம் உணவையும் சரியாக கொடுத்தால் மட்டுமே அவர்கள் சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு எவ்வாறு உணவு ஊட்டவேண்டும் என்று குழந்தை நல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

  குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது பொறுமை அவசியம். சீக்கிரம் சாப்பிட்டால் ஐஸ்கிரீம் வாங்கித்தரேன், மிட்டாய் வாங்கித்தருகிறேன் என்று கூறுவது தவறான முன் உதாரணமாகும்.

  குழந்தைகளின் உணவில் 90 சதவிகிதம் சத்தான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். மீதமுள்ள 10 சதவிகிதத்தில் இனிப்பு, பொரித்த உணவுப்பொருட்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பழங்கள், காய்கறிகளை வெவ்வேறு வடிவங்களில் வெட்டி கொடுத்தால் அவர்கள் சாப்பிடுவார்கள்.

  உணவு உண்ணும் போது குழந்தைகள் கீழே மேலே சிந்திதான் சாப்பிடும் எனவே அதற்காக குழந்தைகளை அடிக்கவேண்டாம். குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்கவேண்டாம். வடிவத்தையோ, நிறத்தையோ மாற்றிக் கொடுங்கள். அதுவே உணவு உண்பதில் குழந்தைகளுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும்.

  சிறுசிறு சமையல் வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் குழந்தைகளுக்கு உணவில் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

  வீடுகளில் குளிர்பானங்களையோ, சிப்ஸ் போன்ற பொருட்களையோ வாங்கிவைக்காதீர்கள். அவற்றை கூடுமானவரை வாங்கி வைக்காமல் இருப்பது நல்லது. கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்கள், எனர்ஜிபானங்கள், பழச்சாறுகள் போன்றவைகளில் எந்த சத்தும் இருப்பதில்லை. அதில் உள்ள ரசாயனங்களினால் குழந்தைகளின் உடலுக்குத்தான் கெடுதல் என்று ஜெனரல் பீடியாட்டிரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
  எனவே விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

  gkarti likes this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 8. #8
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,127

  Re: Baby's food habits -குழந்தைகளுக்கான உணவு முறைகள்

  Useful Sharing @gowrymohan.. Keep Posting


 9. #9
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Re: Baby's food habits -குழந்தைகளுக்கான உணவு முறைகள்

  Quote Originally Posted by gkarti View Post
  Useful Sharing @gowrymohan.. Keep Posting
  Thank you Karthi . Sure dear .

  gkarti likes this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 10. #10
  nsumitha is offline Citizen's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2013
  Location
  UK
  Posts
  638

  Re: Baby's food habits -குழந்தைகளுக்கான உணவு முறைகள்

  thanks. good info.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter