Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 2 Post By chan
  • 1 Post By jv_66
  • 1 Post By chan
  • 1 Post By chan
  • 1 Post By chan

How to make the Kids eat?-குழந்தையை சாப்பிட வைக்க அருமை வழி!


Discussions on "How to make the Kids eat?-குழந்தையை சாப்பிட வைக்க அருமை வழி!" in "Health and Kids Food" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    How to make the Kids eat?-குழந்தையை சாப்பிட வைக்க அருமை வழி!

    குழந்தையை சாப்பிட வைக்க அருமை வழி!


    இன்றைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு என்ன என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. அந்தளவுக்கு, ஏராளமான பாஸ்ட் புட் அயிட்டங்கள், இனிப்புகள், பிஸ்கெட்டுகள் வந்து விட்டன. வீட்டு உணவை வெறுக்கும் போக்கு ஏற்பட்டுள்ளது. ஊட்டச்சத்து உணவு வேண்டவே வேண்டாம் என்று, அடம் பிடிக்கும் குழந்தைகளை, சாப்பிட வைப்பது சுலபமானதல்ல.
    மிரட்டாதீர்: பெரியவர்களுக்கு ஏற்ற சுவையில் சமைத்து விட்டு, அதை சாப்பிடும்படி குழந்தைகளை மிரட்டாதீர்.

    உங்கள் குழந்தைகள் எதை சாப்பிட விரும்புகிறார்கள் எனபதைக் கேட்டு சமைத்தால், அவர்கள் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பு இருக்காது. அவர்கள் கேட்பதெல்லாம் சமைக்க நேரமில்லை என்றால், அவற்றை விடுமுறை நாட்களில் சமைப்பதாக கூறலாம்.
    சாய்ஸ் கொடுங்கள்: 2 அல்லது 3 உணவு வகைகளிலிருந்து, ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி குழந்தைகளிடம் கேட்கலாம்.

    குழந்தைகளிடையே எதை சாப்பிட வேண்டும் என்ற சண்டை ஏற்படலாம். அப்படி ஏற்படாமல் இருக்க, குழந்தைகளிடையே உருவாகும் போட்டியை தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    சமையலில் உதவட்டும்: கிச்சனில் நீங்கள் சமைக்கும்போது, குழந்தைகளின் உதவியை கேளுங்கள். அவர்கள் வயதிற்கேற்ப சமையலில், உங்களுக்கு உதவும்படி கேட்டு கொள்ளுங்கள். பரிமாறும் போது, குழந்தை உதவியதை மறக்காமல் அனைவரிடமும் சொல்லுங்கள். நீங்களும் மற்ற குடும்பத்தினரும் குழந்தையைப் பாராட்டுங்கள்.

    இப்போது குழந்தை முகம் சுளிக்காமல் சாப்பிடுவதைப் பாருங்கள்!
    வெரைட்டியாக சாப்பிடட்டும்: பெரியோர்கள் சாப்பிடுவதைப் போலவே, குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். சப்பாத்தியுடன் ஜாம் யாராவது சாப்பிடுவாங்களா? என்றெல்லாம் சொல்வதை விட்டு, அவர்கள் விரும்பும் வகையில் உணவை கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.பசித்து சாப்பிடட்டும்:

    நாம் சாப்பிடும் நேரங்களில், குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பதால் தான் நாம் அவர்களை வற்புறுத்துகிறோம். பசித்தால் அதைத் தாங்கிக் கொண்டு எந்த குழந்தையும் சாப்பிடாமல் இருக்காது! நம் வற்புறுத்தல் அவர்களுக்கு சாப்பிடும் பழக்கத்தைவிட உணவை வெறுக்கும் பழக்கத்தையே உண்டாக்கும்.

    இதை தவிர்க்க, குழந்தைகள் விரும்பி கேட்கும் போது உணவு கொடுத்தால், அவர்களுக்கு உணவைக் கண்டால் ஓட வேண்டும் என்ற நினைப்பு மாறிவிடும். சத்தான உணவு வகைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அதற்காக அவற்றை ஒதுக்கிவிட வேண்டாம். மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி/துருவி அல்லது நன்றாக அரைத்து/மசித்து, குழந்தைகளுக்கு பிடித்த உணவுடன் கலந்து விடலாம்.

    இவற்றைக் குறைவானஅளவில் சேர்ப்பது நல்லது. இந்த ஆலோசனைகளை பின்பற்றினால், ஒரே வாரத்தில் குழந்தைகள் மாறிவிடுவார்கள் என்று எண்ண வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்தால், ஒரே மாதத்தில் மாற்றத்தை உணரலாம்!


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 28th Jun 2015 at 04:03 PM.
    jv_66 and krrishna like this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    அடம் பிடிக்கும் குழந்தை அழகாக சாப்பிட வே

    அடம் பிடிக்கும் குழந்தை அழகாக சாப்பிட வேண்டுமா..?!

    குழந்தைகள் சாப்பிட மறுப்பதற்கும், ஜங் ஃபுட் விரும்புவதற்கும், சத்தான உணவுகள் பற்றி அறியாமல் இருப்பதற்கும், டி.வி பார்த்துக்கொண்டே, மொபைலில், `டேப்’பில் விளையாடிக்கொண்டே சாப்பிடுவதற் கும்... இப்படி குழந்தைகளின் தவறான உணவுப் பழக்கங்கள் அனைத்துக்கும் காரணம் குழந்தைகள் அல்ல; பெற்றோர்களே! அதை மறுப்பதை விட்டு, இந்தத் தவறுகளை எப்படி சரிசெய்துகொள்வது என்று பார்ப்போம்!



    ‘பீட்சாவில், என் பிள்ளைக்கு பார்பெக்யூ சிக்கன்தான் பிடிக் கும்’, ‘நான் அவன் ஸ்நாக்ஸுக்கு `சாக் கோ-பை' முழு பாக்ஸே வாங்கி வெச்சிருவேன்’, ‘நியூட்ரிலா இல் லாம அவன் இட்லி சாப்பிடவே மாட்டான்’ - இப்படி எல்லாம் பேசும், இதையெல்லாம் செய்யும் பெற்றோரின் மனநிலை ஒன்றுதான்... ‘நாங்கள் எங்கள் பிள்ளைக்கு விலை உயர்ந்த உணவுப் பொருட்களை வாங்கித் தருகிறோம்!’ என்ற பெருமையை வெளிப்படுத்துவது. குழந்தைகளின் உணவுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்பது முக்கிய மல்ல, அவர்களுக்கு எந்தளவுக்கு ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்கிறீர்கள் என்பதே முக்கியம். அந்த வகையில், ஜங் ஃபுட்கள் வாங்கிக் கொடுத்து, தங்கள் ‘ஸ்டேட்டஸ்’ஸை குழந்தைகளின் உணவிலும் நிரூபிக்க விளை கிற பெற்றோர்கள், உண்மையில் உங்கள் பெருமைக்காக அவர்களின் ஆரோக் கியத்தைச் சிதைக்கிறீர்கள் என்பதே உண்மை.

    ‘மேகி’ விவகாரம், உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்படும்போது நஞ்சாக மாறுவதை உரக்கச் சொல்லிவிட்டது. இன் னமும், ‘என் பிள்ளைக்கு பேக்டு ஸ்நாக்ஸ் அயிட்டம் வாங்க சூப்பர் மார்க்கெட் போறேன்!’ என்றால், 20 வயதுகளிலேயே அவர்களுக்காக டாக்டர் அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டி வரலாம் என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள்.

    ‘சத்தான உணவாகக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்’ என்றால், ‘சத்தான உணவு என்றால் என்ன?’ என்கிறார்கள் பெற்றோர்கள் சிலர். வீட்டில், சுகாதாரமான முறையில் நாம் தயாரிக்கும் இட்லி, தோசை, புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சட்னி... சாம்பார், காய் பொரியல், கீரை, கூட்டு, ரசம் என சுவையூட்டிகள், நிறமூட்டிகள் சேர்க்கப்படாத நம் அன்றாட சமையலே ஆரோக்கியமான உணவுதான். ஆப்பிள், ஆரஞ்சைவிட, கொய்யா, சப்போட்டா, மா, வாழை என நம் மண்ணின் தோட்டத்தில் விளையும் பழங்கள் தரவல்ல சத்துகள் நிறைய! சிறுதானியங்கள் பற்றிய விழிப்பு உணர்வு பெருகியுள்ள நிலையில், ஏற்கெனவே சில அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அவற்றை விரும்பும் சுவையில் சமைத்துத் தர ஆரம்பித்திருக்கிறார்கள். கோலா பானங்களுடன் சோம்பேறித்தனத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, மோர், பானகம், பழ ஜுஸ் செய்து தந்தால், உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு அது எந்தளவுக்கு பலம் சேர்க்கும் தெரியுமா?!

    அடுத்ததாக, குழந்தைகளுக்கு சாப்பிடும் முறையே தெரியவில்லை. எப்படித் தெரியும்? பெற்றோர் கற்றுக்கொடுத்தால், அவர்கள் அதன்படி நடந்தால்தானே குழந்தைகளுக்கு அது பற்றித் தெரியும். அம்மாக்கள், தட்டு நிறைய சோறு போட்டுக்கொண்டு, ‘இன்னிக்கு கூட்டு நல்லாயிருக்கா’, ‘இந்த மட்டன் சூப் குடிச்சா பீமன் மாதிரி ஆயிடலாம்’ என்று உணவைப் பற்றிய சிறு அறிமுகம் கொடுத்து, பின்னர் குழந்தைகளின் கண்கள் விரிய கதை சொல்லிக்கொண்டே கைகளால் ஊட்டிவிட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. குழந்தையின் ஒரு கையில் தட்டையும், இன்னொரு கையில் ரிமோட்டையும் கொடுத்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போகும் ‘பரபர’ அம்மாக்களால், டி.வி பார்த்துக்கொண்டே, என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்றே அறியாமல் சாப்பிடுகிறார்கள்... இல்லை, விழுங்குகிறார்கள் குழந்தைகள்.

    தரையில் சம்மணமிட்டு அமர வைத்து, தட்டும் தண்ணீரும் வைத்து, ‘சூப், குழம்பு, ரசம், தயிர்... இந்த வரிசையில்தான் சாப்பிடணும். கடைசியில பாயசம் குடிச்சா, அந்த இனிப்பு செரிமானத்துக்கு உதவும்’ என்று கற்றுக்கொடுத்து, ‘சிங்கராஜா எப்பவும் சாப்பாட்டை நல்லா மென்றுதான் சாப்பிடுவார். அதனாலதான் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கார். நீயும் நல்லா மென்று சாப்பிடணும்’, ‘கேரட் சாப்பிட்டா, கண்ணுக்கு அவ்வளவு நல்லது’, ‘குட்டிப் பாப்பாவுக்கு நிறைய முடி வளரணும்னா, கொஞ்சம் கீரை சாப்பிடணும்’ என்று கதைகள் பேசி... இப்படியெல்லாம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உணவு முறைக்காக மெனக்கெட்டும், அவர்கள் ‘டி.வி போட்டாதான் சாப்பிடுவேன்’ என்றால், பிறகு சொல்லுங்கள்!

    ‘அய்யோ... நான் எவ்வளவு போராடியும் என் பிள்ளை சாப்பிடவே மாட்டேங்குது. சாப்பாட்டைப் பார்த்தாலே அதுக்கு உமட்டுது!’ - முக்கியப் பிரச்னை இதுதான். இதற்கு சில தீர்வுகளைப் பார்ப்போம். ஒரு விஷயத்தை குழந்தைகளிடம் கட்டாயப்படுத்தி திணித்தால், ஒரு கட்டத்தில் அது அவர்கள் மனதில் வெறுப்பாக மாறிவிடும். எனவே, அவர்களுக்குப் பசி எடுத்த பின்னரே உணவு கொடுங்கள். பசிக்காத வயிறுடன் இருக்கும் பிள்ளையை, ‘சாப்பிடு சாப்பிடு’ என்று அரற்றினால், வாயைத் திறக்காது. ‘அவ காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும்கூட பட்டினியா கிடப்பா’ என்றால், சரி கிடக்கட்டும்! அதற்கு மேல்..? ‘அம்மா பசிக்குது!’ என்று நிச்சயமாக வரும். அப்போது, அதற்குப் பிடித்த உணவைக் கொடுங்கள்.

    சில குழந்தைகள் எந்த உணவின் மீதும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். தோசையை பொம்மை வடிவில் ஊற்றிக் கொடுப்பது, ஆங்கில எழுத்துக்களின் வடிவில் ஊற்றிக் கொடுப்பது, மினி இட்லிகள் செய்து கொடுப்பது, சாதத்தில் கேரட் பொரியலை ஸ்மைலை வடிவில் பரப்பி சாப்பிடச் சொல்வது, அரைக்கீரையை மாவுடன் கலந்து ‘க்ரீன் தோசை’யாக ஊற்றிக் கொடுப்பது என, குழந்தைகளுக்குப் பிடித்த வடிவத்தில், நிறத்தில் உணவு வகைகளைச் செய்து கொடுத்து, அதன் ஆர்வத்தை தூண்டி, சாப்பிட வையுங்கள். கீரை, பாகற்காய் போன்ற குழந்தைகள் அதிகம் விரும்பாத உணவுகளை, விசேஷம், விருந்து, சுற்றுலா போன்ற ஒரு சந்தோஷ தருணத்தில் அறிமுகப்படுத்துங்கள்.

    உணவை வீணாக்கும், சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு, உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பிளாட்ஃபார்மில் ஒருவேளை உணவுக்காக கஷ்டப்படும் பிள்ளைகளைக் காட்டுங்கள். அவர்கள் கையாலேயே அந்தப் பிள்ளைகளுக்கு ஒரு உணவுப் பொட்டலமோ, பழமோ கொடுக்க வைத்து, ‘இப்படியெல்லாம் குழந்தைங்க சாப் பாட்டுக்குக் கஷ்டப்படும்போது, நீ உணவை வீணாக்கலாமா?’ என்று அதன் மனதுக்கு நெருக்கமாகப் பேசுங்கள். மனித நேயத்தையும் சேர்த்தே வளர்க்கலாம்!

    காய்கறி, சிக்கன், மீன் வாங்கும்போது அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். உணவுப் பொருட்கள் தேர்வு தொடங்கி, நுகர்வோர் அறிவு வரை அவர்கள் அறியப் பெறுவார்கள்.

    குழந்தை ஆர்வத்துடன் சாப்பிடுவதற்கும், ஆரோக்கியமானவற்றை சாப்பிடுவதற்கும் பெற்றோரே பொறுப்பு!
    - ரிலாக்ஸ்...டாக்டர் அபிலாஷா


    Last edited by chan; 1st Jul 2015 at 02:37 PM.

  3. #3
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: அடம் பிடிக்கும் குழந்தை அழகாக சாப்பிட வ

    nalla tips...


  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to make the Kids eat?-குழந்தையை சாப்பிட வைக்க அருமை வழி!

    Thanks for the suggestions

    chan likes this.
    Jayanthy





  5. #5
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    How to make the kids eat ?-குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

    குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?


    சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளாக இருந்தால் முதல் நாள் இரவே, அடுத்த நாள் சமையலை அவர்களுடன் சேர்ந்தே திட்டமிடுங்கள்.

    குளித்தல் உள்ளிட்ட அன்றாடக் கடமைகளைச் செய்து முடித்து, குழந்தைக்குப் பசித்த பிறகு உணவு தரலாம். வழக்கமான இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுக்குப் பதிலாக, குழந்தைக்குப் பிடித்த உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். பாலுடன் கார்ன் ஃபிளேக்ஸ், அரை வாழைப்பழம் சேர்த்துக் கொடுக்கலாம். இதில் புரோட்டீன், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.

    ஓட்ஸ் காய்கறி கலவை அல்லது தேன் கலந்த ஓட்ஸ், அரை ஆப்பிள் கொடுக்கலாம். ரவையுடன் முந்திரி, பாதாம், உலர்திராட்சை சேர்த்த கேசரி அல்லது பிரெட் சாண்ட்விச் அல்லது வெண்ணெய் தடவிய பிரெட் கொடுக்கலாம். இட்லிக்கு நிலக்கடலை சட்னி, காய்கறிகள் சேர்த்த உப்புமா, வேக வைத்த முட்டை, பன்னீர் டோக்ளா என எளிய உணவுகளை வித்தியாசமாகச் செய்யலாம். காலை உணவோடு ஒரு பழம் நல்லது!

    சமைக்கும்போது சின்னச் சின்ன வேலைகள் செய்ய குழந்தைகளை அனுமதியுங்கள். தனது பங்களிப்பை செலுத்தும் போது, அது தான் சமைத்த உணவு என்ற எண்ணத்துடன் ரசித்து ருசித்து சாப்பிடப் பழகும் குழந்தை. பள்ளிக்கான தயாரிப்புகளை இரவே முடித்து விடுங்கள். தொலைக்காட்சி நேரத்தைக் குறைத்து, வேறு விளையாட்டுகளை அறிமுகம் செய்யுங்கள். குழந்தைகளின் வேலையை அவர்களே செய்ய வாய்ப்பளியுங்கள்.

    காலை நேர டென்ஷனை தவிர்க்க இது உதவும். சாப்பிடும்போது பெற்றோரும் இணைந்துகொண்டால் போட்டி போட்டு சாப்பிட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாம். பெற்றோரும் சரிவிகித சத்துணவுக்கு மாறுவதே நல்லது.


    jv_66 likes this.

  6. #6
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

    குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?


    அடம் பிடிக்கும் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வைப்பது சுலபமானதல்ல.


    சாப்பிடாமல் அடம் பிடிப்பது குழந்தைகளின் சுபாவம். அதை மாற்ற முடியாமல் திண்டாடுவது அம்மாக்களின் சுபாவம் என்றாகிவிட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வைப்பது சுலபமானதல்ல.

    முதலில் எதையாவது சமைத்துவிட்டு "இதை சாப்பிடப் போறியா இல்லையா?" என்று குழந்தைகளை மிரட்டுவதை மறந்துவிடுங்கள். நாளை அல்லது அடுத்த ஒரு வாரம் உங்கள் குழந்தைகள் எதை சாப்பிட விரும்புகிறார்கள் எனபதைக் கேட்டு சமைத்தால் அவர்கள் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பு இருக்காது. அவர்கள் கேட்பதெல்லாம் சமைக்க நேரமில்லை என்றால் அவற்றை விடுமுறை நாட்களில் சமைப்பதாக கூறலாம்.

    இந்த வம்பே வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2 அல்லது 3 உணவு வகைகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி குழந்தைகளிடம் கேட்கலாம். குழந்தைகளிடையே எதை சாப்பிட வேண்டும் என்ற சண்டை ஏற்படலாம். அப்படி ஏற்படாமல் இருக்க "குழந்தைகளிடையே உருவாகும் போட்டி"யை தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனைத்தொடர்ந்து பின்பற்றி வந்தால் விரைவில் நீங்களே மாற்றத்தைப் காணலாம்.

    மேலும் குழந்தைகள் விரும்பும் வகையில் உணவுகளை தயாரித்து கொடுங்கள். ஆதாவது குழந்தைகள் சாப்பிடும் உணவுகள் கலர்புல்லாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சத்தான காய்கறிகளை அவர்கள் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு காய்கறிகளை வித்தியாசமான முறையில் அவர்கள் விரும்பும் வகையில் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.



    Last edited by chan; 12th May 2016 at 01:24 PM.
    jv_66 likes this.

  7. #7
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்

    குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்


    குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் உணவை கொடுக்காமல் குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள்.


    * குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும்.

    * குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள். .ப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தைகளை அவசரப்படுத்தவே கூடாது. உணவு உண்ணும் நேரம் அவர்களுக்குச் சந்தோஷமான நேரமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

    * தான் ஊட்டினால்தான் தன் குழந்தை சாப்பிடும் என்று சில தாய்மார்கள் பெருமை பொங்க சொல்வார்கள். ஆனால், அது பெருமைப்பட வேண்டிய விஷயம் இல்லை. இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டவே கூடாது. மற்றவர்களோடு அமர்ந்து, அவர்களாகவே சாப்பிட விடவேண்டும். சாப்பாட்டை மேலே, கீழே இறைத்தாலும், குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுவார்கள்.

    * பழங்கள், காய்கறிகள், முழு பயறு வகைகள், பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இவை தடுக்கும்.

    * ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீராவது குழந்தைகளை அருந்த வையுங்கள். வெறும் தண்ணீராகக் குடிக்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பழச்சாறாகவோ, பானகமாகவோ, மோராகவோ, மில்க் ஷேக்குகளாகவோ, இளநீராகவோ கொடுக்கலாம்.

    * காய்கறிகளை சாப்பிடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு காய்களை அப்படியே கொடுக்காமல், சாண்ட்விச்சுகளாகவோ, காய் நூடுல்ஸாகவோ, ஃப்ரைட் ரைஸாகவோ கொடுங்கள். பட்டாணியை வேக வைத்து மசித்தோ, கேரட், பீட்ருட் போன்றவற்றைத் துருவி தூவியோ, உங்கள் அயிட்டங்களை கலர்ஃபுல்லாக பரிமாறுங்கள். அப்புறம் பாருங்கள். சந்தோஷமாகச் சாப்பிடுவார்கள்.

    * ஒரே பழத்தை முழுதாகக் கொடுப்பதைவிட, பல பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பால், தேன் கலந்து சாலட்டாகவோ, மில்க் ஷேக்குகளாகவோ கொடுத்தால் வைட்டமின், மினரல், நார்ச்சத்து எல்லாம் ஒரே உணவில் அவர்களுக்குக் கிடைக்கும்.

    * நீண்ட நாள் பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களும் வேண்டாமே! செயற்கை நிறம், மணமூட்டப்பட்ட பொருள்களும், பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களும் உங்கள் செல்லங்களின் விட்டமின் சத்துக்களை உறிஞ்சுவதோடு, அவர்களின் நடவடிக்கைகளையே மாற்றுகிறது. "ஹைபர் ஆக்டிவிடி" எனப்படும் (அதிவேக செயல்பாடு உடைய) இயல்பும்கூட இதனால் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    * காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவை குழந்தைகளின் முழு சிஸ்டத்தையே குலைக்கக் கூடியவை, தவிர்த்து விடுங்களேன்!

    * தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி போன்ற டிபன்களின் வடிவங்களையும் உங்கள் கற்பனைக்கேற்ப, குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றலாமே! பிறை நிலா வடிவில் தோசை, பூ டிசைனில் சப்பாத்தி, சதுரக் கேக்குகளாக இட்லி என்று வேளைக்கு ஒன்றாக அசத்தினால், எந்தக் குழந்தை சாப்பிட அடம்பிடிக்கும்.

    * உடல்நிலை சரியில்லாத குழந்தைகளுக்கு, நீர்க்க இருக்கும் சூப் அல்லது ரசம் பிசைந்த சாதம், வேகவைத்த காய் என சீக்கிரம் செரிக்கும் உணவுகளைக் கொடுங்கள். காரம், மசாலா வேண்டாம். தண்ணீர் நிறையக் கொடுக்கலாம். அப்போது தான் மாத்திரை, மருந்தினால் உடலில் படிந்த நச்சுக்கள் வெளியேறும்.



    jv_66 likes this.

  8. #8
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்

    Nice Suggestions.. TFS Lakshmi!!


  9. #9
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்

    Very useful sharing. Thanks ji

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter