Foods During Pregnancy - பிரசவ காலத்தில் உணவு முறைகள்
Discuss here on Foods During Pregnancy - பிரசவ காலத்தில் உணவு முறைகள் within the Health & Nutrition forums, part of the Pregnancy forum; பிரசவ காலத்தில் பலவிதமான வைட்டமின் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது உங்களுக்கும், உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. சாதாரண நேரத்தில் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் ...
-
30th Nov 2011, 04:45 PM #1
Foods During Pregnancy - பிரசவ காலத்தில் உணவு முறைகள்
பிரசவ காலத்தில் பலவிதமான வைட்டமின் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது உங்களுக்கும், உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. சாதாரண நேரத்தில் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சத்துக்களை விட, அதிகமான சத்துக்கள் பிரசவ காலத்தில் உடலுக்கு தேவைப்படும். சில நேரங்களில், நாம் எடுத்துக் கொள்ளும் உணவில், எல்லாவிதமான வைட்டமின், தாதுக்கள் அடங்கியுள்ளன என்று சொல்ல முடியாது. சராசரி இந்திய உணவுகளில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் குறைவாக உள்ளன. போதுமான அளவு வைட்டமின் சத்துள்ள உணவை சாப்பிட்டால், பேறுகால குறைகளை எதிர்கொள்ளலாம். பிரசவ காலத்தில் பெண்களுக்கு, போலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் கால்ஷியம் அதிகமாக தேவைப்படும்.
போலிக் அமிலம்: போலிக் அமிலம் என்பது வைட்டமின் "பி' சத்து. கீரைகள், ஆரஞ்சு, , தானியங்கள், நன்கு சமைத்த மாமிசத்தில் வைட்டமின் "பி' சத்து உள்ளது. காய்கறிகளை நன்றாக கழுவி, பாதி வேக்காட்டில் வேக வைத்து, சாப்பிட வேண்டும். நன்கு வேக வைத்து சாப்பிட்டால், உணவில் இருக்கும் அமிலம் போய்விடும். பிரசவ காலத்தில், முதல் 12 வாரம் 400 மைக்ரோ கிராம் போலிக் அமிலம் உள்ள உணவை சாப்பிட வேண்டும். இவை பிறவிப் பிரச்னை, கை, கால் வலுவிழப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்பி லிருந்து குழந்தையைப் பாதுகாக்கும்.
அன்பு தோழி!
Positive Thought gives us the Energy to struggle in our life......
-
30th Nov 2011, 04:46 PM #2
re: Foods During Pregnancy - பிரசவ காலத்தில் உணவு முறைகள்
இரும்புச்சத்து: இவை வளரும் குழந்தையின் உடலுக்கு, ரத்தத்தை அதிகப்படுத்த உதவுகிறது. நாள் ஒன்றுக்கு 30 முதல் 60 மில்லி கிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இரும்புச்சத்து, உடலில் ஹிமோகுளோபினை அதிகப்படுத்தி, ஆக்சிஜனை உடல் முழுவதற்கும் எடுத்துச் செல்கிறது. இரும்புச்சத்து குறைவால் ரத்தசோகை ஏற்படும். இதனால், மூச்சுவிடுவதற்கு கஷ்டப்படுவது, உடல் சோர்வுடன் இருப்பது போன்று தோன்றும். பச்சைக்காய்கறிகள், வேகவைத்த முட்டை மற்றும் உலர்ந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வைட்டமின் "சி' சத்து அதிகமுள்ள, சிட்ரஸ் பழங்கள் மற்றும் பழச்சாற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கால்ஷியம்: பிரசவ நேரத்தில், பெண்களுக்கு இரண்டு மடங்குக்கும் மேலாக கால்ஷியம் தேவைப்படும். ஒரு நாளைக்கு, 1,500மில்லி கிராம் கால்ஷியத்தை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். பால் கலந்த பொருட்கள், காய்கறிகள் மற்றும் மீனில், கால்ஷியம் அதிகம் இருக்கிறது. மற்ற வகை தாதுக்கள்: வைட்டமின் "சி' வைட்டமின் "டி' வைட்டமின் "பி6', "பி12' வைட்டமின் "இ' பொட்டாஷியம், சின்ங்க் அடங்கியுள்ள உணவையும், சேர்த்துக் கொள்வது நல்லது. விலங்குகளில் இருந்து உருவாக்கப்படும் வைட்டமின் "ஏ'வை அதிகமாக உட்கொண்டால், குழந்தைப் பிறப்பிற்கு நஞ்சாக மாறும். அதற்கு பதிலாக செடிகளில் இருந்து பீடாகரோட்டின் மூலம் உருவாக்கப்பட்ட வைட்டமின் "ஏ' மிகவும் பாதுகாப்பானது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சாப்பிடுங்கள்.
Thanks:Dinamalar
அன்பு தோழி!
Positive Thought gives us the Energy to struggle in our life......
-
3rd Jan 2012, 12:21 PM #3
re: Foods During Pregnancy - பிரசவ காலத்தில் உணவு முறைகள்
harini.. very useful information..
-
re: Foods During Pregnancy - பிரசவ காலத்தில் உணவு முறைகள்
Indian Diet during Pregnancy
Following tips will help you and your baby stay healthy.
- As it has been strictly prescribed by doctors that intake of Vitamin A must be controlled because it may cause damage to embryo.
- Cabbage, Cauli-flower & all long green vegetables such as Tondali, Turai, Louki, Parwal, Spinach, Govari should be used alternately. You must keep balance, rather than eating same vegetable all the time.
- Reduce brinjal, suran/yam, papaya, celery, onion, chilli, garlic, ginger, pepper, asfoetida, mustard, bajara, carom seeds, jaggery from your diet. You must remember that those who have previous history of abortion better they must avoid these.
- Those who suffer from constipation, gas, bloating must avoid peas and other `heavy to digest' cereals, potato. They must take green gram as it is easy to digest and gives protein.
- Black grapes, banana, ripe mango, dates, cashewnuts, apricot are very beneficial.
- Butter, clarified butter, milk, honey, fennel seeds, sweets made from jaggery rather than white sugar can be taken in small quantity.
- Rice, Murmure, pulao, Bhakari, Khichri, Chapati, Paratha, Gujarati thepla are the items made from wheat and rice, so they are quite beneficial.
- Items such as sandwich, bakery bread, bun, dhokla, pizza, handva, pancake, khaman, steamed rice cake, curd, tomato, tamarind, kadhi usually increase the swellings and acidity. So, try to avoid such item but if such problems do not exist, you can take in small quantity.
- Indian women try to carry out fasts during pregnancy which is not good for health.
- Do not eat left over, frozen & deep-frozen food.
- Avoid cold drinks, mutton, cocoa, chicken, eggs, alcohol, smoking, tobacco, betel nut, pan-masala but tea, coffee & ice-creams can be taken in small quantity.
- Remember, the baby inside depends on you for proper nutrition. So, if you will take healthy & balanced diet your child will become healthy.
- During pregnancy, mother must focus on supplemental nutrients while maintaining a balanced and nutritious diet. They must get a list of healthy Indian foods and meal planning tips from doctor to eat well during a pregnancy.
source:Indianfoodforevernlakshmi.
Every closed eye is not sleeping, and every open eye is not seeing.-Bill Cosby
Similar Threads
-
இவ்வளவு துல்லியமாக உடுப்பி கிருஷ்ணனை கா&
By Kousalya bala in forum Temples, Gods & GoddessReplies: 9Last Post: 13th Mar 2012, 07:28 PM -
கடல் வழியாக உலகை சுற்றி வந்த முதல் இளம் பĭ
By Ganga in forum News & PoliticsReplies: 0Last Post: 29th Jan 2012, 10:52 AM -
உதவி சுற்றுலா அலுவலர் பணி காலியிடங்கள் -16-12-
By Parasakthi in forum Govt JobsReplies: 0Last Post: 16th Dec 2011, 12:25 PM -
மகப்பேறு காலத்தில் மனைவிக்கு உதவ ஆண்களு&
By sudhar in forum Interesting FactsReplies: 0Last Post: 7th Dec 2011, 11:02 AM -
குற்றாலத்தைத் தாண்டி சில அருவிகள் - தமிழக
By Ganga in forum Travel & TourismReplies: 3Last Post: 22nd Oct 2011, 05:35 PM


LinkBack URL
About LinkBacks

Reply With Quote

Bookmarks