Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

குளிர்நீர் குளியல், வெந்நீர் அருந்தலின்


Discussions on "குளிர்நீர் குளியல், வெந்நீர் அருந்தலின் " in "Health" forum.


 1. #1
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  குளிர்நீர் குளியல், வெந்நீர் அருந்தலின்

  தினமும் குளிர்ந்த நீரில் குளிப்பதென்பது பலருக்கும் கசக்கும் ஒரு விடயமாகும். எனவேதான் சூடான நீரில் இதமாகவே குளிக்கின்றனர் பலர். அதுமட்டுமல்லாது பலர் குளிர்நீரினையே பருகுகின்றனர். முக்கியமாக கடும் வெயிலில் களைத்து வந்தவுடன் குளிர்நீர் குடிப்பது இதமாக இருக்கின்றது என எண்ணி அதனை பருகுகின்றனர். உண்மையில் இந்த இரண்டு செயற்பாடுகளிலும் தவறாகவே செயற்படுகிறோம் நாம். ஏனெனில் விஞ்ஞானமும் சரி ஆயுள்வேதமும் சரி குளிர்ந்த நீரில் குளிப்பதும் இளம்சூடான நீரினை பருகுவதுமே மனிதனை ஆரோக்கியமான வாழ்விற்கு இட்டுசெல்வதாக கூறுகின்றன. மேலும் மனிதஉடல் 70% நீரினை கொண்டிருப்பதால் நீர் சம்பந்தப்பட்ட இச்செய்கைகள் உடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில் குளிர்நீரில் குளிப்பதாலும் இளஞ்சூடான நீரை அருந்துவதாலும் கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.  தினமும் குளிர்நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி முதலில் நோக்குவோம்.

  Improves the blood circulation
  குளிர்நீரில் குளிப்பது நோயினை உண்டாக்கும் என சிலர் நினைப்பதுண்டு. ஆனால் குளிர்நீரானது ஒருபோதும் ஆரோக்கிய குறைவிற்கு காரண*மாக அமைவதில்லை. மாறாக அது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதாவது உடலானது குளிர்நீரில் உள்ள போது, உடலின் வெதுவெதுப்பினை தக்க வைப்பதற்காக இரத்தமானது உடல் முழுவதும் பாய்ச்சப்படுகின்றது இதனால் உடலில் உள்ள அனைத்து பகுதிகளும் முறையான செயல்பாட்டை பெறுகின்றது.  Healthy hair and skin

  சூடான நீரானது மனதுக்கு மகிழ்வழிக்கும்தான். ஆனால் தோலிற்கோ முடிக்கோ அவ்வாறல்ல. எனவே சுடுநீரில் குளிப்பதன் விளைவாக முடி உதிர்வதோடு சருமமும் கரடுமுரடாகின்றது. ஆனால் குளிர்நீர் குளியலானது சருமத்தில் இருக்கும் நுண்துகள்களினை இறுக்கமடைய செய்து சூழல் மாசினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காப்பதோடு முடியினையும் அழுக்குகளிலிருந்து காக்கிறது. எனவே மாசினால் தோல் மற்றும் சருமத்தில் ஏற்படும் பலதரப்பட பாதிப்பினை தவிர்க்க இந்த குளிர்நீர் குளியல் உதவுகின்றது என்பதால் அடுத்த முறை குளிப்பதற்கு வெந்நீரினை விடுத்து குளிர் நீரினையே பயன்படுத்துங்கள்.  Better Breathing and Alertness

  காலையில் தூக்கத்திலிருந்து எழும்போது சோம்பலை உணர்வது சாதாரணமானதே. இருப்பினும் நாள் முழுவதும் அதேபோல் இருப்பது நன்றாக இருக்காது. ஆகவே நித்திரை விட்டு எழுந்ததும் குளிர்நீரில் குளியுங்கள். இதனால் உடல் உறுப்புகள் விரைவாக தொழிற்படுவதால் சோம்பல் நீங்குவதோடு சுவாசமும் சீராகி புத்துணர்வும் ஏற்படும்.  Lesser Mood Swinger

  குளிர்நீர் குளியலானது காலையில், அந்த நாளிற்கான சிறந்த தொடக்கத்தை வழங்குகின்றது. இதனால் உடலில் உள்ள சுரப்புக்கள் சீராக சுரந்து மனநிலையினை சீராக பேணுகின்றது. ஆகவே தேவையற்ற குழப்பங்கள், அழுத்தங்கள் தவிர்க்கப்படுவதோடு அன்றாட கடமைகளை பதட்டம் இன்றி செய்யவும் முடிகின்றது. மேலும் மனநிலையை சீராகப்பேண உதவும் சுரப்புக்களை தூண்டுவதிலும் குளிர்நீரின் பங்கு முக்கியமானது.


  Sponsored Links

 2. #2
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: குளிர்நீர் குளியல், வெந்நீர் அருந்தலின

  அடுத்து இளஞ்சூடான நீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நோக்குவோம்.


  Shed weight

  பலர் உங்கள் உடலின் நிறையினை குறைக்க பலவகையில் முயன்றிருப்பீர்கள். ஆனால் அதனை வெந்நீர் செய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா? தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் அருந்துவதால் உடலில் உள்ள கொழுப்புக்கள் குறைகின்றது. அதுமட்டுமல்லாது வெந்நீருடன் எலுமிச்சையும் சேர்த்துப்பருகுதல் மிகச்சிறந்த பலனைத்தரக்கூடியது. இது உடலில் உள்ள கொழுப்பினை கட்டுப்பாட்டுள் வைப்பதோடு சிறுநீரகம் முதலான பகுதிகள் சீராக இயங்கவும் வழிசெய்கிறது.  Curbs and signs of aging

  தமது முகமானது பார்ப்பதற்கு வயதானது போல் தெரிவதை யாரும் விரும்புவதில்லை. அதிலும் குறிப்பாக பெண்கள் விரும்பவே மாட்டார்கள். அவ்வாறானவர்கள் இளஞ்சூடான நீரினை பருகுவதால் வயதான தோற்றம் உண்டாவதை தவிர்க்கலாம். இளவயதில் வயதான தோற்றம் உண்டாவதற்கு உடலில் உள்ள நச்சு தன்மை காரணமாக அமையலாம். வெந்நீர் பருகுவது உடலை சுத்தப்படுத்துவதோடு சிதைவடைந்த கலங்களையும் புதுப்பிக்கும். ஆகவே உங்கள் இளமை தோற்றம் என்றும் நீடிக்கும்.  Meaningful Digestion

  நமது உடல் இயங்குவதற்கு கொழுப்புசத்து அவசியமானது தான். ஆனால் இது சமிபாடடைவது சற்று சிக்கலாகும். மேலும் குளிர்நீரானது தாகத்தை தணிக்குமெனினும் கொழுப்பினை உடலில் தங்கச்செய்து விடும். ஆனால் வெந்நீர் கொழுப்பின் சமிபாட்டினை தூண்டுகின்றது. இதனால் உடலின் சமிபாடு சீராக நடைபெறுகின்றது.  Acne and pimple

  முகத்திலுள்ள பருக்களை நீக்குவதற்கு பலர் பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் அதனை வெந்நீர் பருகுவதானாலேயே நீக்கமுடியும் என்பது பலருக்கு தெரியாது. சருமத்தில் காணப்படும் நச்சுத்தன்மையாலேயே முகப்பரு உண்டாகின்றது. இத்தகைய நச்சுத்தன்மையினை உடலில் இருந்து நீக்குவதற்கு வெந்நீரே மிகப்பொருத்தமானதாகும். அதுமட்டுமின்றி வெந்நீர் பருகுதல் உடலிற்கு மேலும் பலவகையிலும் உதவுகின்றது.
loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter