Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By thenuraj
  • 1 Post By sumathisrini
  • 1 Post By gkarti
  • 1 Post By ilakkikarthi

Eat According to Your Blood Type - இரத்த வகைக்கேற்ப உண்ண, தவிர்க்க வேண


Discussions on "Eat According to Your Blood Type - இரத்த வகைக்கேற்ப உண்ண, தவிர்க்க வேண" in "Health" forum.


  1. #1
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Eat According to Your Blood Type - இரத்த வகைக்கேற்ப உண்ண, தவிர்க்க வேண

    பலர் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பல வழிகளில் முயற்சித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதாவது சத்துள்ள உணவுகளை உண்பதோடு தினமும் உடற்பயிற்சி செய்தல், யோகாசனம் செய்தல் போன்றவற்றினையும் மேற்கொள்கிறார்கள். மேலும் அசைவ உணவுகளை தவிர்த்து மரக்கறி வகைகளையும் பழங்களையும் அதிகளவில் உண்ணுகிறார்கள். ஆனால் இவற்றை செய்தும்கூட உணவு செரிமான பிரச்சினை, சோர்வு உணர்வு போன்றவை சிலருக்கு இருக்கத்தான் செய்கின்றது. அதற்கு காரணம் உங்களது குருதி வகைக்கேற்ப உண்ண வேண்டிய உணவுகளை உண்ணாமலும் தவிர்க்க வேண்டிய உணவுகளை உண்பதுமே ஆகும். எனவே உங்கள் குருதி வகைக்கேற்ப நீங்கள் உண்ணவேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.



    Type “O”

    “O” வகை குருதியினை கொண்டவர்கள் பொதுவாக கவனம் கூடியவர்களாகவும் சுறுசுறுப்பானவர்களாகவும் வியக்கத்தக்க தலைமைப்பண்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் பெரும்பாலும் அசைவ உணவுகளில் அதிக நாட்டமுள்ளவர்களாகவும் இருப்பர்.நீங்கள் இக்குருதி வகையினராக இருப்பின் புரதச்சத்தினை அதிகம் கொண்ட மரக்கறிகள், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகளவில் உண்ணலாம். எனினும் தினசரி உணவுகளில் அவரை, தானியங்கள், பால் போன்றவற்றை சிறிய அளவிலேயே சேர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உடல் நிறையினை குறைத்துக்கொள்ள விரும்பினால் கடலுணவுகள், கீரைவகைகள், பச்சைப்பூக்கோசு போன்றவற்றை உண்ணுவதோடு கோதுமை, சோளம், பயறு, முட்டைக்கோஸ் போன்றவற்றை உண்பதை தவிர்ப்பது நல்லது. மேலும் உப்புள்ள உணவுகளை உண்பதால் அயோடினின் அளவை சீராக பேணி உடலிற்கு உகந்த தைரோயிட் அளவினை உங்களால் பேண முடியும்.



    Type “A”

    “A” வகை குருதியினை கொண்டவர்கள் பொதுவாக பொறுப்புணர்ச்சி கூடியவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் அதே வேளை எதையும் இலேசாக எடுத்துக்கொள்ளும் மனமுடையவர்களாகவும் வெற்றிக்கு ஏங்குபவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவு வகைகளின் மீது வெறுப்புடையவர்களாக இருப்பதோடு பருப்பு வகைகள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் என்று சைவ உணவில் அதிக விருப்புடையவர்களாகவும் இருப்பர்.நீங்கள் இக்குருதி வகையினராக இருப்பின் கோதுமை, தானியங்கள் போன்றவற்றை அதிகளவில் உண்ணலாம். எனினும் மீன், இறைச்சி போன்றவற்றை அளவுடனேயே உண்ண வேண்டும். நீங்கள் உங்கள் உடல் நிறையினை குறைத்துக்கொள்ள விரும்பினால் சோயா அவரை, மரக்கறிகள், அன்னாசிப்பழம் போன்றவற்றை உண்ணுவதோடு கோதுமை, இறைச்சி, பால் உணவுகள் போன்றவற்றை உண்பதை தவிர்ப்பது நல்லது.



    Type “B”

    “B” வகை குருதியினை கொண்டவர்கள் பொதுவாக இயற்கையினை நேசிப்பவர்களாகவும் தமக்கு பிடித்த வேலைகளை மட்டுமே செய்பவர்களாகவும் தங்களது மனது போடும் சட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.நீங்கள் இக்குருதி வகையினராக இருப்பின் தாராளமாக இறைச்சி, பாலுணவுகள் (யோக்கர்ட், சீஸ்), இலைக்கீரைகள், மரக்கறிகள், பழங்கள் (வாழைப்பழம், திராட்சைப்பழம்) போன்றவற்றை உண்ணலாம். எனினும் தானியங்கள், சோளம், கோதுமை, கச்சான் போன்றவற்றை உண்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.




    Type “AB”

    “AB” வகை குருதியினை கொண்டவர்கள் பொதுவாக நம்பகத்தன்மை உடையவர்களாகவும் அதிகளவில் ஏனையோருக்கு உதவுபவர்களாகவும் இருப்பார்கள்.நீங்கள் இக்குருதி வகையினராக இருப்பின் மரக்கறிகள், பாலுணவுகள், பழங்கள் (செர்ரிபழம், அத்திப்பழம், தர்ப்பூசணி) போன்றவற்றை தாராளமாக உண்ணலாம். மேலும் இலகுவில் சமிபாடடையக்கூடிய கடலுணவுகளான சலமன், சூரை போன்றவற்றையும் உண்ணலாம். எனினும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்ற ஜீரணம் ஆக கஷ்டப்படும் உணவுகளை உண்பதை தவிர்ப்பது நல்லது.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Eat According to Your Blood Type - இரத்த வகைக்கேற்ப உண்ண, தவிர்க்க வே

    Nice sharing Thenu, thanks.

    thenuraj likes this.

  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: Eat According to Your Blood Type - இரத்த வகைக்கேற்ப உண்ண, தவிர்க்க வே

    Goodo THenu.. Many Thanks for Sharing..

    thenuraj likes this.

  4. #4
    ilakkikarthi's Avatar
    ilakkikarthi is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    karthiga
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    delhi
    Posts
    881

    Re: Eat According to Your Blood Type - இரத்த வகைக்கேற்ப உண்ண, தவிர்க்க வே

    very useful info fnd........................

    thenuraj likes this.
    with love,
    sweet karthi..

    “Dare to be free, dare to go as far as your thought leads, and dare to carry that out in your life. ”

    swami vivekananda

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter