Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 3 Post By chan
  • 1 Post By Dangu

கொலஸ்ட்ரால் - Cholesterol


Discussions on "கொலஸ்ட்ரால் - Cholesterol" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கொலஸ்ட்ரால் - Cholesterol

    கொலஸ்ட்ரால்


    நாம், நம் தேவைக்கும் அதிகமாகக் கொழுப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொண்டால், அவை உடம்பில் சேமித்து வைக்கப்படுகின்றன. முக்கியமாக, கொலஸ்ட்ராலின் அளவு ரத்தத்தில் அதிகமாகிறது.

    சாதாரணமாக, கொலஸ்ட்ரால் உடம்புக்குத் தேவையான புதிய அணுக்களின் (செல்) உற்பத்திக்கும், ஹார்மோன்களின் உற்பத்திக்கும், வேலைப்பாட்டுக்கும் அவசியமான ஒரு வகை சத்து. தேவையான அளவு கொலஸ்ட்ராலை உடம்பே உற்பத்தி செய்துகொள்கிறது. நாம் உண்ணும் உணவின் மூலமும் கொலஸ்ட்ரால் உடம்பை சேருகிறது.

    உட்கொள்ளும் அளவு அதிகமானால், கொலஸ்ட்ரால் ரத்த நாளங்களில் படிந்து, ரத்த ஓட்டம் தடைபடும். இந்தக் கொழுப்பு அடைப்புகள் பெரும்பாலும் இதயம், மூளை போன்ற உறுப்புகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அதிகம் ஆக ஆக, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் தாக்கும் அபாயமும் அதிகரிக்கிறது.

    40 வயதை தாண்டிவிட்டோம் இனி உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சிறிய செய்தி. இந்த நோய்களுக்கெல்லாம் அஸ்திவாரம் இளமையிலேயே போடப்படுகிறது. இளம் வயதில் ஏற்படும் உணவுப் பழக்கங்கள்தான் நம்மை இக்கட்டில் வைத்துவிடுகிறது. சிறு வயதிலிருந்தே நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் இருக்கும் அதிகக் கொழுப்பு, ரத்தக் குழாய்களில் படிந்து தன் அழிவு வேலையை ஆரம்பிக்கிறது.

    நமது ரத்தத்தில் இயல்பாக இருக்க வேண்டிய கொலஸ்ட்ராலின் அளவு 150-300 மில்லிகிராம். இந்த அளவு அதிகரித்தால், இதய நோய் தாக்க அதிக வாய்ப்பு உண்டு. உண்மையைக் கூற வேண்டும் என்றால், இந்த மொத்த கொலஸ்ட்ரால் அளவு உடலின் ஆரோக்கியத்துக்கான ஒரு துல்லியமான அளவுகோல் இல்லை எனலாம்.

    கொலஸ்ட்ரால் அளவு நம் வயது, பாலினம், மரபு போன்ற விஷயத்தை பொறுத்துதான் அமையும். அதுமட்டுமல்ல, கொலஸ்ட்ரால் நம் உடம்பில் நான்கு வகையாக உற்பத்தி ஆகிறது. மிகவும் குறையடர்த்தி கொழுமிய லிப்போப்ரோடீன்கள், குறையடர்த்தி கொழுமிய லிப்போப்ரோடீன்கள், அதிக அடர்த்தியுடைய லிப்போப்ரோடீன்கள் மற்றும் கைலோமைக்ரோன் என நான்கு வகைப்படும்.

    இவற்றுள், அதிக அடர்த்தி உடைய லிப்போப்ரோட்டீன்கள் அளவில் சிறியதாகவும் புரதத்தில் நிறைந்தும் காணப்படுகின்றன. கொழுப்புச்சத்தை உடம்பில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடமாற்றம் செய்ய உதவுகிறது. எனவே, இதை நல்ல கொலஸ்ட்ரால் என்று அழைக்கிறார்கள்.

    இந்த நல்ல கொலஸ்ட்ரால், உடம்பில் 40 மில்லிகிராமுக்கும் அதிகமாக இருப்பது நல்லது. இந்த நல்ல கொலஸ்ட்ரால் தேவைக்கு அதிக கொலஸ்ட்ராலை உடம்பிலிருந்து அகற்றவும் ஏதுவாக இருக்கிறது.

    உணவுகளின் வில்லனாகக் கருதப்படும் இந்த கொலஸ்ட்ரால், அனைத்து திசுக்களிலும் காணப்படுகிறது.

    இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, மற்றும் பால், பால் சார்ந்த உணவுப் பொருட்களில் கொலேசடிரால் அதிகம் காணப்படுகிறது. பல முக்கியமான வேலைப்பாடுகளில் பங்கேற்கும் கொலோஸ்ட்ரால் அட்ரீனல் ஹார்மோன்கள், பித்த நீர் உற்பத்திக்கான மூலப்பொருளாகவும் விளங்குகிறது. உடம்பில் உள்ள உயிரணுக்களின் குறிப்பாக நரம்பு அணுக்களின் சவ்வுகளின் முக்கிய அங்கமான நிகழ்கிறது.

    இந்த கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகாமல் உடம்பின் வேலைப்பாடுகளுக்கு தேவையான அளவு சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்வதற்கான சில குறிப்புகள் -

    1. குழந்தைகளுக்கு வெண்ணெய்க்குப் பதிலாக நெய்யை காய்ச்சிக் கொடுக்கலாம்.

    2. காய்கறிகளும் பழங்களும் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால், அதில் இருக்கும் நார்ச்சத்து உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

    3. இறைச்சிக்குப் பதிலாக ஒமேகா 3, அதிகம் உள்ள மீன் வகையை சேர்த்துக்கொண்டால் இதயத்துக்கு நல்லது.

    4. வெந்தயம், கீரைத்தண்டு, வாழைத்தண்டு ஆகியவற்றில் இருக்கும் ஒருவகை நார்ச்சத்து, ரத்தத்தில் இருக்கும் தீய கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது.

    ’பூண்டை தின்றார் ஆண்டை வென்றார்’ என்று கூறுகிறது சித்த மருத்துவம். பூண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், உணவின் சுவை, மணம் மட்டுமல்ல வாழ்க்கையின் தரமும், நோயின்றி வாழும் வழியும் பிறக்கும்.

    டாக்டர் அபிலாஷா


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 13th Sep 2015 at 07:35 PM.
    fatima15, RathideviDeva and Dangu like this.

  2. #2
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    re: கொலஸ்ட்ரால் - Cholesterol

    Thanks for the info Lakshmi.

    chan likes this.

  3. #3
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    re: கொலஸ்ட்ரால் - Cholesterol

    thanks dear..........

    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

  4. #4
    fatima15's Avatar
    fatima15 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    New York
    Posts
    316

    re: கொலஸ்ட்ரால் - Cholesterol

    Thanks for sharing.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter