Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
 • 2 Post By chan
 • 1 Post By sharamsn

Sleeping Tips - தூக்கம் வருவதற்கு எளிய டிப்ஸ்கள்


Discussions on "Sleeping Tips - தூக்கம் வருவதற்கு எளிய டிப்ஸ்கள்" in "Health" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Sleeping Tips - தூக்கம் வருவதற்கு எளிய டிப்ஸ்கள்

  தூக்கம் வருவதற்கு எளிய டிப்ஸ்கள்  ஒவ்வொரு மனிதனும் தினமும் ஆறு முதல் எட்டுமணி நேரம் வரை ஆழ்ந்து சுகமாக தூங்க வேண்டும்.

  இப்படி நன்கு தூங்கி எழுந்தால் தான் விழித்திருக்கும்16 மணி நேரத்தில் மனமும் உடலும் திறமையுடன்செயல்படும்.

  எனவே இரவில் தூங்க முடியவில்லை என்பவர்கள் கீழ்கண்ட எளிய வழிகளைப் பின்பற்றுவது நல்லது

  இரவு எத்தனை மணிக்கு படுக்கைக்குச் செல்ல வேண்டும் என்பதை உறுதியாகத் தீர்மானியுங்கள்

  இரவு தூங்கும் அறை நிசப்தமாகவும் , இருட்டாகவும் இருப்பதும் நல்லது ,இருட்டு பிடிக்க வில்லை எனில் நீல நிற இரவு விளக்கைப் பயன்படுத்தவும்

  தூங்கும் அறை காற்றோட்டம் நிறைந்ததாக இருக்க வேண்டும்

  பஞ்சுத்தலையணைகள், பஞ்சு மெத்தை ,போர்வை சுகமானதூக்கத்தை வரவழைக்கும் . தரையிலோ , கட்டிலிலோ படுத்தாலும் பஞ்சு மெத்தைகளையோ உபயோகிக்கலாம்

  தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக பசும்பால் அருந்துவது நல்லது.இது டிரைப்டோபன் அமிலத்தை மூளைக்கு வழங்குவதால் உடனடியாக நரம்பு மண்டலம் அமைதியாகி உங்களை தூங்க வைக்கும்

  மாலை 4 மணிக்கு காஃபைன் உள்ள காபி மற்றும் மது புகையிலை போடுவதை தவிர்க்கவும். இவை நரம்புமண்டலத்தை தூண்டி விடுவதால் இரவு தூங்க நெடுநேரம் ஆகிவிடும்.

  மசாஜ் ,யோகாசனம் மற்றும் தியானம் போன்றவை மனதையும் உடலையும் ஓய்வு நிலைக்குக் கொண்டுவந்து புதுப்பிக்கும்.உங்களுக்கு இதில் எது பிடித்ததோஅதைச் செய்து வாருங்கள்

  இரவு உணவை தூங்கச் செல்வதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பே முடித்துக் கொள்ளவும்சாதம் நல்லது ,ஏனென்றால் அதிகம் சாப்பிட்டாலும் எளிதில் ஜீரணம் ஆகும்.

  நெஞ்செரிச்சல் ஏற்படாமல் இருக்க இடக்கைப் பக்கமாகவே படுக்கவும்.மல்லாந்தோ ,வலகைப்பக்கமோ படுத்தால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கலையும் எப்போதும் குப்புறப்படுக்காதீர்கள்

  தினமும் உடற்பயிற்சி துரித நடைப்பயிர்ச்சி , ஏரோபிக் உடற்பயிற்சி இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பின் பற்றவும். அருகில் உள்ள இடங்களுக்கு துரித நடைப்பயிற்ச்சியாக சென்று வருவது நல்லது

  கனமான தலையணைகளை தவிர்க்கவும்.

  உள்ளங்கால்களை நாமே அமுக்கிவிட்டுக் கொண்டாலும் நரம்பு மண்டலம் அமைதியாகி உடனடியாகத் தூக்கம் வரும்.

  படுத்ததும் கவலைகளை நினைவிற்குக் கொண்டு வராதீர்கள் கண்களை மூடிக்கொண்டு நீங்கள் வசிக்கும் சாலையை கற்பனையில் பாருங்கள்.அந்த சாலை முழுதும் மூடுபனிபடர்ந்துள்ளது போலவும் , அந்த வெண்புகைக்குள் நீங்கள் நுழைந்து சாலையில் செல்வதாக கற்பனை செய்யுங்கள்.
  தூக்கம் வரும்

  பகலில் உங்கள் சௌகரியத்தைப் பொறுத்து இருபது அல்லதுமுப்பது நிமிடங்கள் தூங்களாம்.இதனால் மதியம் மிகுந்த விழிப்புடன் உங்கள் பணிகளைச் செய்வீர்கள்

  பல ஆண்டுகளாகத் தூக்கமின்மையால் அவதிப் படுபவர்கள்மதியமும் , இரவும் கெட்டித் தயிர் சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டுவந்தால் போதும்.தூக்கமின்மை குணமாகும்.

  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 23rd Sep 2015 at 08:26 PM.
  sumathisrini and fatima15 like this.

 2. #2
  sharamsn's Avatar
  sharamsn is offline Commander's of Penmai
  Real Name
  sharmi begam
  Gender
  Female
  Join Date
  Aug 2015
  Location
  puducherry
  Posts
  1,344

  re: Sleeping Tips - தூக்கம் வருவதற்கு எளிய டிப்ஸ்கள்

  amazing share...

  chan likes this.
  SMILE TO SOLVE PROBLEM

  SILENCE TO AVOID PROBLEM

  sharmi begam...

 3. #3
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,556

  Re: Sleeping Tips - தூக்கம் வருவதற்கு எளிய டிப்ஸ்கள்

  Very useful tips Lakshmi.


 4. #4
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  ஆராரோ ஆரிராரோ

  ‘ஆராரோ ஆரிராரோ’

  பெரும்பாலானவர்கள் தூங்குவதை, நேரத்தை வீணாக்கும் செயல் என்று கருதுகின்றனர். ஆறு மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால் ஒன்றும் ஆகிவிடாது என்று நம்புகிறவர்கள் அதிகம். என்றாவது ஒரு சில நாட்கள் மிகக் குறைவான நேரம் தூங்கினால், பெரிய பிரச்னை வராது. ஆனால், நீண்ட காலமாகக் குறைந்த நேரம் தூங்கினால், அது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும்.
  போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால்...
  தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு இதய நோய், மாரடைப்பு, இதயச் செயல் இழப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  உடல் பருமன்
  போதுமான அளவு தூங்காமல், டி.வி பார்ப்பவர்கள், கம்ப்யூட்டர் முன்னால் மணிக்கணக்கில் நேரம் செலவிடுபவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் 6 முதல் 8 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கிறது.

  இதய நோய்
  போதுமான நேரம் தூங்காதவர்களுக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 100 சதவிகிதம் அதிகம்.

  தூக்கம்... சில தகவல்கள்!

  *நம்முடைய வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். உடற்பயிற்சி,உணவுபோல தூக்கமும் மிகவும் அவசியமானது.

  *20-ல் ஒருவருக்கு ஸ்லீப் ஆப்னியா பிரச்னை உள்ளது.

  *ஒரு மனிதனால் 10 நாட்கள் வரை தூங்காமல் இருக்க முடியும். அதற்கு மேல் தூங்காமல் இருந்தால், மரணம் நிகழும் வாய்ப்பு உள்ளது.

  *தூக்கத்தை ஒத்திப்போடும் ஒரே உயிரினம் மனிதன்தான்.

  Last edited by chan; 4th Oct 2015 at 07:32 PM.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter