மூளைக்கு வேலை
சிலருக்கு, மூளையில் 'மெமரி கார்டு' பொருத்தினால் கூட, நன்றாக இருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு, ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது. தேவையான சத்துக்கள், உண்ணும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு முக்கிய காரணம்.
காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செரி போன்ற உணவுகளில் மூளைக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்று, மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற ரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி, உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்கு காரணம்.

மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் ஓமேகா -3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. சைவப் பிரியர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே, மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது. எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன், மூளை பலவீனம், குழப்பம், நோய் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க, 'பி', 'ஏ', 'ஈ' ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மூளையை சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன், நல்ல மனப்பாங்கையும், காரியத்தை செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன. மனதை அமைதிப்படுத்துவது இது.


Similar Threads: