Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree226Likes

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்&a


Discussions on "மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்&a" in "Health" forum.


  1. #31
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by selvipandiyan View Post
    naanum padichen thenu.........enna oru aniyayam???? antha kaalathil pilaikal petraarkale........appo ellam ippadithaan paarthaarkalaa?? antha kaalame thevalai pola........



    ஆமா க்கா.... அந்த காலத்தில் எத்தனை பிள்ளைகள் பெற்றார்கள்...? இப்படி ஸ்கேன், அது இதுன்னு பார்த்தாங்களா என்ன...!! எல்லாமே சுகப்பிரசவம்... பிள்ளைகளும் ஆரோக்கியமாக இருந்தாங்க... ஆனா இப்போ...?? எல்லாமே மெஷினை நம்பி தான் இருக்க வேண்டியது ஆகிவிட்டது...? மெஷின் கூட பழகி பழகி, மனிதர்களின் மனமும் இயந்திரமாகி விட்டது.


    Sponsored Links
    Vimalthegreat likes this.

  2. #32
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by gkarti View Post
    As @femila Said, நானும் இதை FBல படிச்சேன் தேனு.. இது போல நமக்கு தெரிய வர NEWS ஒண்ணு ரெண்டு தான்.. தெரியாதது லட்ச கணக்குல இருக்கு..

    எங்க Areaல ஒரு பிரபல மகப்பேறு மருத்துவர் இருக்காங்க, சுத்தி இருக்கற கிராம மக்கள் இவங்கட்ட தான் சிகிச்சைக்கு வருவாங்க.. கைராசிக்காராம்மா ன்னு பேரும் இருக்கு.. ஆனா இவங்க பண்ற சில வேலைகள் வெளிய வரதில்லை..

    ஒரு Ladyக்கு Delivery பார்க்குறப்போ, கவனக்குறைவாக வேற எதோ Part ah Blade போட்ருக்காங்க.. Bleed ஆகி அந்த Lady இறந்துட்டாங்க.. ஆனா இந்த டாக்டர், இவங்களுக்கு serious GHக்கு உடனே கொண்டு போணும்ன்னு அவங்க சொந்தம்ட்ட பொய் சொல்லி, ambulance வர வச்சு இவங்களும் கூடவே போயிருக்காங்க.. then GH வாசல் வந்ததும் இவங்க இறந்துட்டாங்க ன்னு சொல்லி அந்தம்மா வீட்டுக்கு வந்துருச்சு.. Hosp வந்து சத்தம் போட்ட சொந்தம்ட்ட சொல்லிருக்கு, நான் பணம் தரேன் வெளிய சொல்லாதீங்கன்னு.. பொண்ணே போச்சு பணம் யார்க்கு வேணும் ன்னு வந்துட்டாங்க அந்த சொந்தமெல்லாம்...

    எல்லாத்துலயும் ஒரு அலட்சியம் தான் தேனு.. இப்படிப்பட்ட ஆளுகளுக்காகவே மத்த நல்ல doctors ah um தப்பா பார்க்க வேண்டியிருக்கு.. யாராது தைரியமா case file பண்ணி, அடுத்து அவங்க மருத்துவம் பார்க்கவே முடியாதபடி License Cancel பண்ணிடணும்..

    ஒருத்தர தப்பா தெரியாம பேசிட்டாலே, இப்படி பேசிட்டோமே ன்னு தூக்கம் வரமாட்டுது.. இவங்கலாம் assault ah கொலையே பண்றாங்க..



    ஹய்யோ கார்த்தி.... நீ சொல்லுற இன்சிடென்ட் நிறைய இடத்துல நடக்குது... அந்த நியூஸ் பற்றி படிக்கிற நமக்கே, ஒரு நிமிஷம் வேதனைப்படுவோம்... அடுத்த நிமிஷம் அதை மறந்துடுவோம்.. நமக்கே இப்படின்னா, இதுபோல எத்தனையோ கேஸ்களை பார்த்து இருக்கும் மருத்துவர்களுக்கு.... இது பத்தோடு பதினொன்னு...!

    உண்மைதான் கார்த்தி.... ஒருசிலரால் நல்ல மனம் படைத்த மருத்துவர்களையும் தப்பாக நினைக்க வேண்டியதாக இருக்கு... இப்போல்லாம் ஹாஸ்பிட்டல் போகவே பயம்..., யார் நல்லவங்க... யார் கெட்டவங்கன்னு தெரியாம ஒரே குழப்பம்..!!

    யாரும் case file பண்ண முடியாது கார்த்தி.... பணத்தால கேசை ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாங்க... நம்ம ஊருல பணத்துக்கு தான் மதிப்பு...!! உயிருக்கு அல்ல...!! அப்படி கேஸ் போட முடியும்னா, எத்தனையோ கேஸ் நீதிமன்றத்துல வரிசை கட்டி நிற்கும்...!!


  3. #33
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by RathideviDeva View Post
    தேனு,
    இந்த கட்டுரையை நான் பல மாதங்களுக்கு முன்னே நம் பெண்மை ப்ளாக்கில் படித்தேன். படித்த உடனே , எனக்கு தோணியது, "இதுவும் இணையத்தில் பரப்பப்படும் பொய்யான செய்தியாக இருக்க வேண்டும் கடவுளே"ன்னு தான். இப்பவும் இதே தான் வேண்டுகுறேன், "கடவுளே எத்தனையோ பொய்யான செய்திகள பரப்புராங்க. யாராவது இதை பொய்யான செய்தி என்று பொய்யாகவாது சொல்லுங்களேன்."



    கண்டிப்பாக இது பொய்யான செய்தியாக இருக்காது ரதி...
    ஏன்னா அந்த சம்பவம் நடக்கும்போது, உடனிருந்த உதவி டாக்டர் தான் இதை எழுதி இருப்பது...so....

    அப்படியே நீங்கள் ஆசைப்படுவது போல இது பொய் என்றால், அனைவருக்குமே சந்தோஷம் தான்...!!

    gkarti and RathideviDeva like this.

  4. #34
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by selvipandiyan View Post
    திருச்சி: பிரசவத்தின்போது ஆபரேஷன் செய்த பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி கலெக்டரிடம் ராணுவ வீரர் மனு அளித்துள்ளார். திருச்சி அடுத்த குண்டூர் அய்யனார்கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அசாமில் பீரங்கி படை ராணுவ வீரராக உள்ளார். நேற்று இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் திருச்சி கலெக்டர் பழனிச்சாமியை சந்தித்து புகார் அளித்தார். அம் மனுவில் கூறியிருப்பதாவது:
    எங்களுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான எனது மனைவி ராஜலட்சுமிக்கு கடந்த ஜூலை 30ம் தேதி திருச்சி தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்தது.

    அதன்பின் 10 நாளில் அவருக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு இருந்தது. அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது, சாதாரண வயிற்று வலி தான் என்று கூறி அனுப்பிவிட்டனர்.மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது வயிற்றில் சீழ் வைத்துள்ளதால் ஆபரேஷன் செய்ய ரூ.12 லட்சம் செலவாகும் என்று கூறினர். இதையடுத்து பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் துணி இருப்பதும், பிரசவ ஆபரேஷனின்போது டாக்டர்கள் அந்த துணியை கவனக்குறைவாக உள்ளே வைத்து தைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆபரேஷன் செய்து வயிற்றில் இருந்த துணி (பேன்ட் எய்டு துணி) எடுக்கப்பட்டது. அந்த துணி 129 செ.மீ நீளமும், 11 செ.மீ அகலமும் இருந்தது.

    இதை ஆபரேஷன் செய்து எடுக்காமல் விட்டிருந்தால் எனது மனைவியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும். இதனால் பிரசவ ஆபரேஷனின்போது கவனக்குறைவாக இருந்த, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் அமலிஜெயா, அறுவை சிகிச்சை நிபுணர் தர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், ராணுவ வீரனாக பணியாற்றியதால், பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சேர்த்து எனது மனைவியை காப்பாற்ற முடிந்தது. இந்த பிரச்னையை மருத்துவ சமுதாயம் விசாரித்து நடவடிக்கை எடுத்தால் ஏராளமான உயிர்கள் காக்கப்படும் என்றார்.




    கொடுமைடா சாமி.... அவ்வளவு பெரிய துணி வயிற்றில் இருப்பது தெரியாதா....!! எப்படி அப்படியே விட்டார்கள்...?? இதனால் எவ்வளவு மன உளைச்சல்... அலைச்சல்.... பண விரயம்...!

    இந்த அலட்சிய போக்கை மருத்துவர்கள் எப்போது தான் கைவிடுவார்களோ...!!

    gkarti and RathideviDeva like this.

  5. #35
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    மனச ரணமாக்குற அழுத்தமான பதிவு அக்கா
    இயற்கையாக ஒரு உயிர் பிரியும் போதே அதுல இருந்து வெளி வருவதற்கு நமக்கு பல மாதங்கள் ஆகுது அக்கா .
    இப்படி அடுத்தவங்க வாழ்க்கைய சூனியம் ஆக்குற மாதிரி சம்பவங்களுக்கு காரணம் ஆன பிறகும் எப்படி தான் அதை மூடி மறைத்து விட்டு சுயநல பிண்டமா மட்டும் மனிதர்களால திரிய முடியுது நினைக்கும் போது ஜீரணிக்கவே முடியல அக்கா



    அவர்களுக்கு இதையெல்லாம் பார்த்து பார்த்து மனமே மரத்து போய்டுச்சு போல விமலா.... நோயாளிகளின் கண்ணீர் அவர்களின் மனதை எட்டுவதே இல்லை...!


  6. #36
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Indha topica oru thadavai Vijaytv Neeyaa naanaa cover seidhadhu. Appa anga rendu peroda kadhai kanla kanneer varra alavukku irundhadhu.

    Oru ladykku, delivery appa edho thappaana handling naala, iduppukku keezha unarve illa. Avanga oru auto driveroda wifenu ninaikkiren. Avanga 4 vayasu ponnu ammaakku help panna thaane dosai ootha kathukkichu.

    2nd incidentla oru kai kuzhandhaikku paarvai partialaavo fullaavo poirichu.



    இந்த ரெண்டாவது இன்சிடென்ட் நானும் பார்த்தேன்.... அதைப்பற்றி நிறைய நியூஸ் படித்தும் இருக்கேன்... கஷ்டம்... அந்த பிஞ்சு குழந்தை, மற்றவர்களின் அஜாக்கிரதையால் பிறக்கும்போதே பார்வையின்றி பிறந்தது யார் தவறு....?

    ஆனால் அதற்கு அந்த மருத்துவர் தரும் விளக்கமும், சொல்லும் பதில்களும் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை...!

    அதன்பின் நடந்தது என்ன...? அந்த மருத்துவருக்கு தண்டனை தரப்பட்டதா...? அவர்கள் மருத்துவமனை சீல் வைக்கப்பட்டதா...? அந்த மருத்துவரின் உரிமம் பறிக்கப்பட்டதா....? எதுவுமே இல்லை.... அவர் வழக்கம் போல, அவரின் தொழிலை/வியாபாரத்தை நடத்துகிறார். இதுதான் இந்தியா...!!!!!

    gkarti and RathideviDeva like this.

  7. #37
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by jv_66 View Post
    என்ன ஒரு மகாக் கொடுமை இப்படிப்பட்ட நிகழ்வுகள் ??

    நம்பவே முடியலை ....இந்த காலத்து மருத்துவர்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்புணர்ச்சியே இருக்காதா ?

    மேலே கூறப்பட்ட எந்த ஒரு நிகழ்வுக்கும் என்னால் லைக் கொடுக்க முடியலை . மனசு மிகவும் கனத்துப் போச்சு .

    சமுதாயத்தில் எத்தனை ஒரு உன்னதமான பதவியில் இருந்துகொண்டு , கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் , ஒரு முறைக்கு பல முறைகள் மீண்டும் மீண்டும் கவனித்து செயல்பட்டு இருந்தால் , இத்தகைய குறைகளை எளிதில் களைந்து இருக்கலாமே .

    எத்தனை குடும்பங்களின் வாழ்வைப் பறித்து , இவர்கள் எல்லாம் மனநிம்மதியுடன் இருந்து /இறந்து விட முடியுமா என்ன ?
    @Geethanjali16 உங்களோட பிரச்சினை எதுவாக இருந்தாலும் , மிகவும் மனசுக்கு கஷ்டமா இருக்கு .

    எந்த ஒரு தாய்க்கும் /பெற்றோருக்கும் இத்தகைய நிலைகள் வரவே கூடாது .

    டாக்டர்கள் கண்டிப்பாக ஒரு தீர்மானம் எடுத்தால் தான் இந்த நிலைகள் மாறும் . மருத்துவத் தொழிலை கண்டிப்பாக வியாபார ரீதியாக அணுகாமல் , மற்றவரின் பிணி நீக்கும் தொழிலாக மட்டுமே இதைக் கையாள்வேன் என்பதே அது .

    முன்னர் ஒரு நர்ஸ் டிவியில் தெரிவித்தார் .

    ஆபரேஷன் செய்யும்போது , வெளிப்படும் ரத்தத்தை துடைப்பதற்காக swab என்ற குட்டி bandage துணிகளை அவர் வைத்து இருப்பாராம் .

    ஆபரேஷனுக்கு முன்னர் அவைகளை கணக்கு வைத்துக்கொண்டு, டாக்டர் ஆபரேஷன் முடித்து , தையல் போடுமுன் , தன்னிடம் முன்னர் இருந்த அதே அளவு swab தன்னிடம் உள்ள ட்ரேயில் வந்து விட்டதா என்று செக் செய்த பிறகுதான் , டாக்டரை அவர் தையல் போட விடுவாராம் .

    ஆக இதெல்லாம் டாக்டருக்கு கவனத்தில் வைக்க முடியாமல் இருந்தாலும் ,கூட இருக்கும் நர்ஸ் நல்லவர்களாக இருந்தாலே எல்லாம் சரிவரும் .

    அதெப்படி , ஸ்கேன் செய்த டாக்டர் , அந்த டெக்னிஷியன் என்று அனைவரும் இப்படி ஒரு தவறை செய்து , குழந்தையை கட்டி என்று தவறான முடிவுக்கு வர முடியும் ? இதைக் கொஞ்சம் கூட நம்பவே முடியலை . இந்தச் செய்தி தவறாக இருந்தால் , மிக்க நலம் .



    இதுபோல நிறைய நடக்குது அக்கா....
    நாங்க இந்தியாவில் இருந்தப்போ, எங்க ஃபிரெண்டுக்கு நடந்தது ரொம்பவே கொடுமை... அதுக்காக நாங்க கேஸ் போடுற அளவுக்கு போனோம்.... ஆனா பணம் புகுந்து விளையாடி விட்டது... ஒண்ணுமே பண்ண முடியாம, நொந்து போன மனசோட எல்லாரும் பேசாம இருந்தோம்...

    இன்னொரு இன்சிடென்ட் எங்களுக்கே நடந்தது... அதற்கும் ஒன்றும் செய்ய முடியலை... ஹாஸ்பிட்டல் போய் கத்தி சண்டை தான் போட முடிந்ததே தவிர, வேறு எதையும் செய்ய முடியலை...!

    இதுபோல நிறைய எங்களால சொல்ல முடியும் க்கா.... சாதாரண பொது மக்களால், பணம் கொழுத்த மருத்துவர்களை, அதிலும் பெரிய மருத்துவமனைகளை ஒன்றுமே செய்ய முடியாது... இதுதான் நிதர்சனம்...

    படித்த நம்மாலே எதுவும் செய்ய முடியாதபோது... படிக்காத பாமர மக்களால் என்ன செய்துவிட முடியும்...?? மருத்துவர்களை கடவுளுக்கு ஒப்பிடுகிறோம்... அவர்களை நம்பி நம்மை ஒப்படைக்கிறோம்.... ஆனால் அவர்கள் கடவுளா....!!!!!!!!!!!!!!! அப்படி சொன்னவன் மட்டும் என் கையில் கிடைத்தால்...!!!!!!!!!!!
    எல்லாம் பணம் அக்கா பணம்....!!

    இந்த பதிவில் உள்ளவை நிஜமாகவே நடந்து இருக்க சான்சஸ் உண்டு.... 0.1% கூட இல்லையென்று மறுக்கவே முடியாது... அந்த மருத்துவ உலகின் கொடூரமான இன்னொரு முகத்தை பார்த்தவர்கள் நிறைய பேர் உண்டு.... ஆனால் எல்லாருமே அதை மறந்து வாழ பழகி விட்டார்கள்...! அதுதான் நிஜம்...!

    gkarti likes this.

  8. #38
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by sumathisrini View Post
    மிகக் கொடூரமான செயல் மருத்துவர்களின் கவனக்குறைவால் அரேங்கேற்றப்படுகிறது. கருவை கட்டி என்று கூறி, ஒட்டு மொத்தமாக அந்தப் பெண்ணின் கருப்பைக்கே உலை வைத்துவிட்டது அந்த மருத்துவக் குழு. தன் வமசத்தை வளர்க்க குழந்தை பெற்றெடுக்க தகுதியுடைய அவள், அதற்கான வாய்ப்பை கருப்பையை நீக்கியதன் மூலம் வாழ்நாள் முழுவதும் இழந்து தவிப்பது எவ்வளவு வேதனைக்குரியது!

    இவங்களுக்கு எல்லாம் டாக்டர் பட்டம் ஒரு கேடு
    .



    யாரோ ஒருத்தியின் வம்சம் தழைக்காமல் போனால் இவர்களுக்கு என்ன கவலை...???? அவர்களின் வம்சம் பத்து தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு இவர்கள் பிசினஸ் கொடிக்கட்டி பறக்குதே...!!

    sumathisrini and gkarti like this.

  9. #39
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by RathideviDeva View Post
    இது ஒருவரின் அலட்சியப்போக்காக எல்லா சமயங்களிலும் இருப்பதில்லை. கவனக்குறைவுகள், மற்ற இடங்களில் நடப்பது போல் மருத்துவ துறையிலும் உண்டு. என்ன.... மற்றதற்கும், இதற்கும் உள்ள ஒரே வித்தியாசம், இங்கு கவனக்குறைவின் விலை ஒரு மனித உயிராக இருக்க கூடும்.


    கடந்த காலங்களின் கவனக்குறைவால் கிடைத்த பாடங்களைக்கொண்டு, திரும்பவும் அத்தவறு நடக்காமல் இருக்க எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும், மருத்துவ ஊழியர்கள் .



    மற்ற இடங்களில் கவனக்குறைவு இருக்கலாம்.... தப்பில்லை... தவறுவது மனித இயல்பு.... ஆனா மருத்துவ துறையில் கவனக்குறைவு இருக்கலாமா....?? அவர்களின் மருத்துவ படிப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, உயிரின் மதிப்பு, வேலையில் கவனம்... இதையெல்லாம் தானே சொல்லி தருகிறது...!

    gkarti and RathideviDeva like this.

  10. #40
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by ishitha View Post
    இந்த செய்தியை படிக்கும் போதே வயிறு கலங்குகிறது.
    இதை அனுபவித்தவர்களின் நிலை????
    தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்க பட வேண்டும்


    அது நடக்குமா என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி....
    இங்கு தவறு செய்தவர்களை விட..., அந்த தவறால் பாதிக்கப்பட்டவர்கள் தான் தண்டிக்கப் படுகிறார்கள்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter