Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree226Likes

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்&a


Discussions on "மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்&a" in "Health" forum.


 1. #1
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்&a

  இரத்தக் கறையோடு எழுதுகிறேன்...


  நீண்ட காலமாக குழந்தையில்லாத ஒரு தம்பதி, என் நண்பர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு வந்தார்கள்.அவர்களுக்கு பலவிதமான பரிசோதனைகள் செய்யபட்டு, பரிசோதனை முடிவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. (இப்போது நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில்லை; பரிசோதனை முடிவுகளுக்குத்தான் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்).


  சிகிச்சை எடுத்துக்கொண்ட பெண்ணிற்கு உடலில் சில மாறுதல்கள் தெரிந்தன. க
  ர்ப்பபை தொடர்பான சில தொந்தரவுகள் ஏற்பட்டன. ஸ்கேன் எடுக்குமாறு பரிந்துரைத்தார் மருத்துவர்.


  கர்ப்பப்பையில் ஒரு கட்டி வேகமாக வளருவதாகவும், அதன் வேகம் புற்றுநோய் செல்களுக்கு இணையாக இருப்பதாகவும் ஸ்கேன் அறிக்கையின் வழியாக மருத்துவர் முடிவு செய்தார். அந்த கட்டியின் வேகமான வளர்ச்சி, அடுத்த கட்ட பரிசோதனைகளுக்கு செல்வதற்குக் கூட நேரம் தரவில்லை என்றும், பெண்ணை காப்பாற்றுவதற்காக கர்பப்பையை நீக்கி விடலாம் என்று பரிந்துரைத்தார் மருத்துவர்.


  கர்ப்பை நீக்கப்பட்ட பிறகு தனக்கு குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற அதிர்ச்சியை தன் மனைவிக்காக ஏற்றுக் கொண்ட கணவர் அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். அறுவை சிகிச்சை உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த என் நண்பரும்,நானும் ஸ்கேன் அறிக்கைகளையும், விசித்திரமான நோயாளிகள் பற்றியும் விவாத்திக் கொள்வோம்.


  கர்ப்பபை அகற்றும் அறுவை சிகிச்சை அந்த பெண்ணிற்கு முடிந்தது. அவர் உயிர் பிழைத்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையில் அறுத்தெறியப்பட்ட உள்ளுறுப்புகளைப் பார்ப்பதற்காக வழக்கம் போல நாங்கள் அறைக்குள் செல்கிறோம். அறுத்து குப்பையில் வீசப்பட்ட கர்ப்பையின் ஒரு பகுதியில் ஒட்டி கொண்டிருந்தது கட்டி அல்ல; அறுபது நாட்கள் வளர்ந்த கரு. அந்த சிசுவின் விரல்கள் அரிசி ஓவியம் போல நேர்த்தியாக இருந்தது. அறுவை சிகிச்சை உதவியாளர்கள் மருத்துவரிடம் தகவல் சொன்னார்கள்.


  ஒரு நிமிடம். ஒரே ஒரு நிமிடம் அதிர்ந்தார். அவருக்குள் இருந்த மனித தன்மை வெளிப்பட்டது. அடுத்த நிமிடம் தொழில் முறை மருத்துவரானார். அதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மருத்துவமனை பணியாளர்கள் அவர்கள் தொழில் தர்மத்தைக் கட்டி காத்தார்கள்... சம்பளத்தோடு.


  கருவிலே வேரறுக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு வாழும் வாய்ப்பை மறுத்தது யார்? ஸ்கேன் அறிக்கையா? அதை உறுதி செய்து கொள்ளாத மருத்துவரா? வணிகமயமான மருத்துவமா?


  அந்த சிசு என்னோடு இரண்டு வருடங்கள் இருந்தது. அதை ஒரு கண்ணாடி குடுவையில் என்னோடு வைத்திருந்தேன். முழு வளர்ச்சி அடையாத அந்தச் சிசுவின் கைகள் ஆங்கில மருத்துவத்தை விட்டு என் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியது.


  கருவிகளின் கற்பனையில், காகிதங்களின் முடிவுகளில் இப்படி வாழ்கையை இழந்தவர் பலர். கருவிகள் நமக்கு முதலாளிகள் அல்ல. கருவிகள் நமக்கு உதவி செய்வதற்குத்தான். முடிவுகளை எப்போதும் அவை அறிவிப்பதில்லை. அறிவின் வழியாக முடிவுகளை அடைவதுதான் அறிவியல்....


  மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?

  - Dheeran Kongu Ravi K


  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  Geethanjali16's Avatar
  Geethanjali16 is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  Geetha
  Gender
  Female
  Join Date
  Jul 2015
  Location
  CHENNAI
  Posts
  1,859

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  இதைப் படித்ததும் என் கர்ப்பமே கலைந்ததுபோல் மனம் துடிக்கிறதம்மா... பிள்ளை இல்லாதவர்களுக்குத்தான் தெரியும் அப்பிள்ளையின் அருமை. அதைச் சுமக்க முடியாதவர்களுக்குதான் தெரியும் அதன் வேதனை. ஒரு தாய் பத்துமாதம் போற்றிக்காத்து ஈன்றேடுக்க வேண்டிய அந்த அற்புதத்தை வேரிலேயே கிள்ளி எறிவதுதான் மருத்துவ வளர்ச்சியா? எத்தனை கொடுமையான ரீதியில் இவ்வுலகம் மாறிக் கொண்டிருக்கிறது. யாரிடம் அதிகமாக இரக்க குணம் இருக்க வேண்டுமோ அவன்தான் இங்கே அரக்கனாகமாறிக் கொண்டிருக்கிறான். தெய்வமாகப் போற்றப்பட வேண்டிய மருத்துவன் இங்கே பணத்துக்கும்,புகழுக்கும் அடிமையாகி மனித உடல்களை வியாபார ரீதியாகப் பார்க்கிறான். அவர்களின் மனதையும், வலிகளையும் பற்றி அவன் சிறிதும் கவலை கொள்வதில்லை. ஏனென்றால் அவனுக்கு லட்சம் நோயாளிகளில் நாமும் ஒருவர். இவர்கள் செய்யும் இந்த தவறுகள் அவர்களுக்கு ஒரு நிமிட வேதனை. ஆனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆயுள் முழுக்க வேதனையல்லவா? இப்படி ஒரு மருத்துவரால் பாதிக்கப் பட்டவள்தான் நானும். அவர்கள் செய்த சிறு தவறு என் வாழ்வின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையே சூறையாடிவிட்டது. மனிதர்களுக்கு உயிர் கொடுக்கிறோம் என்ற பெயரில் அவர்களின் மனங்களைச் சாகடித்துக் கொண்டிருக்கும் இம்மருத்துவ வளர்ச்சியை எண்ணி வருத்தப்படுவதா இல்லை மகிழ்வு கொள்வதா????

  with love...
  Geethanjali
  [B][I][COLOR=#800080][SIZE=5]
  My ongoing story- http://www.penmai.com/forums/serial-...ethanjali.html

  My completed stories- http://www.penmai.com/forums/penman-...ethanjali.html

  Some things may be difficult but nothing is impossible!

 3. #3
  femila's Avatar
  femila is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  Miracle World
  Posts
  3,764

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  I read this in Facebook sis...

  che!!! no words...

  ethula carefula irukanum.. ethula alatchiyam kaatanumnu theriala.... ivangaluku ellam...  My Stories : CLICK CLICK
 4. #4
  sujivsp's Avatar
  sujivsp is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  SujaGomathy
  Gender
  Female
  Join Date
  Nov 2013
  Location
  Chicago
  Posts
  5,432
  Blog Entries
  4

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  My god.. solla varthaiye illa... saiyana kovam varudhu...


 5. #5
  sujivsp's Avatar
  sujivsp is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  SujaGomathy
  Gender
  Female
  Join Date
  Nov 2013
  Location
  Chicago
  Posts
  5,432
  Blog Entries
  4

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

  Quote Originally Posted by Geethanjali16 View Post
  இதைப் படித்ததும் என் கர்ப்பமே கலைந்ததுபோல் மனம் துடிக்கிறதம்மா... பிள்ளை இல்லாதவர்களுக்குத்தான் தெரியும் அப்பிள்ளையின் அருமை. அதைச் சுமக்க முடியாதவர்களுக்குதான் தெரியும் அதன் வேதனை. ஒரு தாய் பத்துமாதம் போற்றிக்காத்து ஈன்றேடுக்க வேண்டிய அந்த அற்புதத்தை வேரிலேயே கிள்ளி எறிவதுதான் மருத்துவ வளர்ச்சியா? எத்தனை கொடுமையான ரீதியில் இவ்வுலகம் மாறிக் கொண்டிருக்கிறது. யாரிடம் அதிகமாக இரக்க குணம் இருக்க வேண்டுமோ அவன்தான் இங்கே அரக்கனாகமாறிக் கொண்டிருக்கிறான். தெய்வமாகப் போற்றப்பட வேண்டிய மருத்துவன் இங்கே பணத்துக்கும்,புகழுக்கும் அடிமையாகி மனித உடல்களை வியாபார ரீதியாகப் பார்க்கிறான். அவர்களின் மனதையும், வலிகளையும் பற்றி அவன் சிறிதும் கவலை கொள்வதில்லை. ஏனென்றால் அவனுக்கு லட்சம் நோயாளிகளில் நாமும் ஒருவர். இவர்கள் செய்யும் இந்த தவறுகள் அவர்களுக்கு ஒரு நிமிட வேதனை. ஆனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆயுள் முழுக்க வேதனையல்லவா? இப்படி ஒரு மருத்துவரால் பாதிக்கப் பட்டவள்தான் நானும். அவர்கள் செய்த சிறு தவறு என் வாழ்வின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையே சூறையாடிவிட்டது. மனிதர்களுக்கு உயிர் கொடுக்கிறோம் என்ற பெயரில் அவர்களின் மனங்களைச் சாகடித்துக் கொண்டிருக்கும் இம்மருத்துவ வளர்ச்சியை எண்ணி வருத்தப்படுவதா இல்லை மகிழ்வு கொள்வதா????
  aaccho... kekkave kashtama iruku geetha... i feel very sorry ma..


 6. #6
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  naanum padichen thenu.........enna oru aniyayam???? antha kaalathil pilaikal petraarkale........appo ellam ippadithaan paarthaarkalaa?? antha kaalame thevalai pola........


 7. #7
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,127

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  As @femila Said, நானும் இதை FBல படிச்சேன் தேனு.. இது போல நமக்கு தெரிய வர NEWS ஒண்ணு ரெண்டு தான்.. தெரியாதது லட்ச கணக்குல இருக்கு..

  எங்க Areaல ஒரு பிரபல மகப்பேறு மருத்துவர் இருக்காங்க, சுத்தி இருக்கற கிராம மக்கள் இவங்கட்ட தான் சிகிச்சைக்கு வருவாங்க.. கைராசிக்காராம்மா ன்னு பேரும் இருக்கு.. ஆனா இவங்க பண்ற சில வேலைகள் வெளிய வரதில்லை..

  ஒரு Ladyக்கு Delivery பார்க்குறப்போ, கவனக்குறைவாக வேற எதோ Part ah Blade போட்ருக்காங்க.. Bleed ஆகி அந்த Lady இறந்துட்டாங்க.. ஆனா இந்த டாக்டர், இவங்களுக்கு serious GHக்கு உடனே கொண்டு போணும்ன்னு அவங்க சொந்தம்ட்ட பொய் சொல்லி, ambulance வர வச்சு இவங்களும் கூடவே போயிருக்காங்க.. then GH வாசல் வந்ததும் இவங்க இறந்துட்டாங்க ன்னு சொல்லி அந்தம்மா வீட்டுக்கு வந்துருச்சு.. Hosp வந்து சத்தம் போட்ட சொந்தம்ட்ட சொல்லிருக்கு, நான் பணம் தரேன் வெளிய சொல்லாதீங்கன்னு.. பொண்ணே போச்சு பணம் யார்க்கு வேணும் ன்னு வந்துட்டாங்க அந்த சொந்தமெல்லாம்...

  எல்லாத்துலயும் ஒரு அலட்சியம் தான் தேனு.. இப்படிப்பட்ட ஆளுகளுக்காகவே மத்த நல்ல doctors ah um தப்பா பார்க்க வேண்டியிருக்கு.. யாராது தைரியமா case file பண்ணி, அடுத்து அவங்க மருத்துவம் பார்க்கவே முடியாதபடி License Cancel பண்ணிடணும்..

  ஒருத்தர தப்பா தெரியாம பேசிட்டாலே, இப்படி பேசிட்டோமே ன்னு தூக்கம் வரமாட்டுது.. இவங்கலாம் assault ah கொலையே பண்றாங்க..


 8. #8
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  தேனு,
  இந்த கட்டுரையை நான் பல மாதங்களுக்கு முன்னே நம் பெண்மை ப்ளாக்கில் படித்தேன். படித்த உடனே , எனக்கு தோணியது, "இதுவும் இணையத்தில் பரப்பப்படும் பொய்யான செய்தியாக இருக்க வேண்டும் கடவுளே"ன்னு தான். இப்பவும் இதே தான் வேண்டுகுறேன், "கடவுளே எத்தனையோ பொய்யான செய்திகள பரப்புராங்க. யாராவது இதை பொய்யான செய்தி என்று பொய்யாகவாது சொல்லுங்களேன்."


 9. #9
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  திருச்சி: பிரசவத்தின்போது ஆபரேஷன் செய்த பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி கலெக்டரிடம் ராணுவ வீரர் மனு அளித்துள்ளார். திருச்சி அடுத்த குண்டூர் அய்யனார்கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அசாமில் பீரங்கி படை ராணுவ வீரராக உள்ளார். நேற்று இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் திருச்சி கலெக்டர் பழனிச்சாமியை சந்தித்து புகார் அளித்தார். அம் மனுவில் கூறியிருப்பதாவது:
  எங்களுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான எனது மனைவி ராஜலட்சுமிக்கு கடந்த ஜூலை 30ம் தேதி திருச்சி தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்தது.

  அதன்பின் 10 நாளில் அவருக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு இருந்தது. அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது, சாதாரண வயிற்று வலி தான் என்று கூறி அனுப்பிவிட்டனர்.மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது வயிற்றில் சீழ் வைத்துள்ளதால் ஆபரேஷன் செய்ய ரூ.12 லட்சம் செலவாகும் என்று கூறினர். இதையடுத்து பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் துணி இருப்பதும், பிரசவ ஆபரேஷனின்போது டாக்டர்கள் அந்த துணியை கவனக்குறைவாக உள்ளே வைத்து தைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆபரேஷன் செய்து வயிற்றில் இருந்த துணி (பேன்ட் எய்டு துணி) எடுக்கப்பட்டது. அந்த துணி 129 செ.மீ நீளமும், 11 செ.மீ அகலமும் இருந்தது.

  இதை ஆபரேஷன் செய்து எடுக்காமல் விட்டிருந்தால் எனது மனைவியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும். இதனால் பிரசவ ஆபரேஷனின்போது கவனக்குறைவாக இருந்த, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் அமலிஜெயா, அறுவை சிகிச்சை நிபுணர் தர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், ‘ராணுவ வீரனாக பணியாற்றியதால், பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சேர்த்து எனது மனைவியை காப்பாற்ற முடிந்தது. இந்த பிரச்னையை மருத்துவ சமுதாயம் விசாரித்து நடவடிக்கை எடுத்தால் ஏராளமான உயிர்கள் காக்கப்படும்’ என்றார்.
 10. #10
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,115

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  மனச ரணமாக்குற அழுத்தமான பதிவு அக்கா
  இயற்கையாக ஒரு உயிர் பிரியும் போதே அதுல இருந்து வெளி வருவதற்கு நமக்கு பல மாதங்கள் ஆகுது அக்கா .
  இப்படி அடுத்தவங்க வாழ்க்கைய சூனியம் ஆக்குற மாதிரி சம்பவங்களுக்கு காரணம் ஆன பிறகும் எப்படி தான் அதை மூடி மறைத்து விட்டு சுயநல பிண்டமா மட்டும் மனிதர்களால திரிய முடியுது நினைக்கும் போது ஜீரணிக்கவே முடியல அக்கா

  ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
  மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
  வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
  காதல் கொண்டனை போலும் மண்மீதே,
  கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
  மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
  மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

  -மகாகவி

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter