Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 5 Post By chan
  • 1 Post By girija chandru

'ஜக்கி அறிவுரை... சத்தான அறிவுரை


Discussions on "'ஜக்கி அறிவுரை... சத்தான அறிவுரை" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    'ஜக்கி அறிவுரை... சத்தான அறிவுரை

    ''ஜக்கி அறிவுரை... சத்தான அறிவுரை!''

    ரமணி சந்திரன்


    தன் எழுத்தால் எண்ணற்ற இதயங்களில் வாடகை இல்லாமல் குடியிருக்கும் நாவலரசி ரமணி சந்திரன்! பெண்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்னைகள், காதல், குடும்பம், பொருளாதாரச் சிக்கல்கள் என்று எழுத்துகளாலேயே எல்லோரையும் வசீகரித்தவர். ரமணி சந்திரன் என்ற பெயருக்காகவே இன்றும் நாவல் வாங்கக் காத்திருக்கிறது ஒரு பெரும் வாசகர் வட்டம் என்பது இவரது சாதனை!

    ''இப்பவெல்லாம் சின்னக் குழந்தைங்களைக்கூட அடிக்கடி மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போறாங்க. எனக்கெல்லாம் 20 வயசு வரைக்கும் தலைவலின்னாலே என்னன்னு தெரியாது'' ஆச்சர்யம் குறையாமல் பேசுகிறார் 77 வயதைக் கடந்த இந்த இல்லத்தரசி. 148 நாவல்களைக் கடந்தும் பேனா மீதான பிரியம் கொஞ்சமும் குறையாமல் உற்சாகமாக எழுதிக்கொண்டு இருப்பவரிடம் ''உங்கள் எனர்ஜி ஃபேக்டரி எது?'' என்று ஆரம்பித்தோம்.


    ''அன்றாடம் செய்துவரும் வீட்டு வேலைகள்தான் என் உடல்நலத்தின் ரகசியம். வீட்டு வேலைகளுக்கு என்று இதுவரையிலும் யாரையும் வைத்துக்கொண்டது இல்லை. வீட்டு வேலைகள் தவிர தொடர்ந்து நடைப்பயிற்சி செய்கிறேன். இதுதான் என்னுடைய அதிகபட்ச உடற்பயிற்சி.

    உணவுப் பழக்கத்தைப் பொருத்தவரை சின்ன வயதில் என்னவெல்லாம் சாப்பிட்டேனோ அதே உணவுகளையே தொடர்ந்து சாப்பிடுகிறேன். உடல் ஓர் அற்புதமான, அதிசயமான இயந்திரம். தெளிவாகச் செயல்பட்டுவரும் அந்த இயந்திரத்தைக் குழப்புகிற வகையில் திடீரென்று நானாக எதையும் மாற்றிக்கொண்டது இல்லை. இந்தப் பழக்கத்தை என் அப்பாவிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.

    நம் பெண்கள் இன்று அளவுக்கு அதிகமாகத் தொலைக்காட்சி பார்க்கிறார்கள். தொலைக்காட்சி பார்ப்பது தவறு இல்லை. ஆனால், அதை ஒரு வேலையாகவே செய்துகொண்டிருக்கிறார்கள். இது பெரிய தவறு. உடல் பருமன் ஏற்படுவதற்கு இதை ஒரு முக்கியமான காரணமாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
    தொலைக்காட்சி பார்க்கிற பழக்கம் எனக்கு அதிகம் இல்லை. ஆனால், ஒருமுறை தற்செயலாகத் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது சத்குரு ஜக்கிவாசுதேவ் சொன்ன ஒரு விஷயம் ரொம்பவும் பிடித்திருந்தது. 'நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்திலிருந்து 100 மீ. தொலைவுக்குள் விளையும் உணவைச் சாப்பிட்டுப் பழகுவது நல்லது’ என்றார் அவர். நம் உடல்நிலைக்கும் வெப்பநிலைக்கும் என்ன உணவு ஏற்றுக்கொள்ளுமோ அந்த உணவைச் சாப்பிடுவதுதான் நல்ல டயட். இன்றைய வாழ்க்கையில் 100 மீ. தொலைவு என்ற சாத்தியம் குறைவு என்றாலும் நம்மைச் சுற்றியுள்ள, நமக்கு எளிதாகக் கிடைக்கிற உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லதுதான்.

    அந்தந்தப் பருவங்களில் கிடைக்கிற காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுங்கள் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இயற்கை அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ற உணவை வழங்குகிறது. உதாரணத்துக்கு தக்காளி மட்டும் ஒரு பருவத்தில் அதிகமாகக் கிடைக்கிறது என்றால், சந்தையில் அது விலை மலிவாகிவிடும். அப்போது நாம் 'விலை மலிவான பொருளைச் சாப்பிடக் கூடாது; டிமாண்ட் அதிகமாக இருக்கிற ஆப்பிள்தான் சத்தானது’ என்று நினைப்போம்... அது தவறு. கொய்யாப் பழம் கிடைக்கும் பருவத்தில் கொய்யாப் பழம் சாப்பிடுங்கள். மாம்பழ சீஸனில் மாம்பழம் சாப்பிடுங்கள்.

    பொதுவாகக் கிராமத்தில் பிறந்தவர்கள்தான் ஆரோக்கியத்தோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை நிறையப் பேரிடம் இருக்கிறது. அப்படியெல்லாம் சொல்லமுடியாது. கிராமமோ, நகரமோ நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொருத்துதான் நம் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது. நான் பிறந்து வளர்ந்தது திருச்செந்தூரில். அது நகரம் சார்ந்த சூழல்தான். எங்கள் வீட்டில் ஏழு குழந்தைகள். என் சித்தப்பா வீட்டில் எட்டு குழந்தைகள். நாங்கள் ஒன்று சேர்ந்தாலே விளையாட்டு, கலாட்டா என்று களேபரமாக இருக்கும். கடற்கரையில் கிளிமாந்தட்டை விளையாடுவதில் ஆரம்பித்து கடல் அலைகள் கால்களை நனைக்கவிடாமல் 'அலை தொடாத விளையாட்டு’ என விளையாட்டுகளால் நிரம்பியிருந்தது என்னுடைய இளமைப் பருவம். இப்போதைய எனது ஆரோக்கியத்துக்கும் அதுதான் அடிப்படைக் காரணம் என்றுகூடச் சொல்லலாம்!

    'நான் மருத்துவமனைக்கே சென்றதில்லை’ என்று சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நானும் சின்ன வயதில் இருந்து அப்படித்தான் இருந்தேன். இந்த 74 வயதில்தான் சர்க்கரை லேசாக எட்டிப் பார்த்திருக்கிறது. 'இனிப்பு வகைகளை மட்டும் சாப்பிட வேண்டாம்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.



    சாப்பாட்டு விஷயத்தில் என் அப்பா மிகத் தெளிவாக இருப்பார். சாம்பார் பிடிக்கும் என்றாலும் சாம்பாரில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, அடுத்து ரசத்தில் கொஞ்சம், தயிரில் கொஞ்சம் என்று அனைத்தையும் சாப்பிடுவார். ஒரு உணவு வகை நமக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக அதையே சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கூடாது என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்'' என்கிற ரமணி சந்திரனின் வார்த்தைகளில் கண்டிப்பும் கனிவும் ஒருசேரக் கலந்திருக்கிறது.

    உடல்நலம்பற்றி ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்தவரிடம் 'உடல்நலம் பற்றி நாம் பேசுகிற அளவுக்கு மனநலம் பற்றிப் பேசுவதில்லையே...’ என்ற கேள்வியைக் கேட்டால், ''எந்த ஒரு விஷயத்தையும் மனதில் போட்டுக் குழப்பிக்கொள்ளும் பழக்கம் எனக்கு இல்லை. அதனதன் போக்கில் எளிதாக எடுத்துக்கொண்டுபோவதுதான் என் சுபாவம். அப்படி எடுத்துக்கொள்ளாமல் நம்மை நாமே கஷ்டப்படுத்திக்கொண்டால் மனநலமும் கெட்டுப் போகும். உடல் நலமும் கெட்டுப்போகும்.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு ஒரு நாள் சென்றிருந்தேன். கோயிலுக்கு வெளியில் ஒருவர் வெறுமையாக எதையோ பார்த்துக்கொண்டு இருந்தார். கோயிலுக்குள் சென்றுவிட்டு வெளியில் வரும்போதும் அவர் அப்படியே இருந்ததைக் கவனித்தேன். பார்த்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் எல்லாம் தெரியவில்லை. இவரைப் போல் பலரைப் பல இடங்களில் கவனிக்கிறேன். வாழ்வில் ஏதாவது நடக்காமல் போனாலோ, ஏதாவது கவலைகளை வைத்துக்கொண்டோ இப்படி வெறுமையான மனோநிலையோடு வாழ்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். எது நடந்தாலும் மனதைப் பாதிக்காமல் இயல்பாக எடுத்துக்கொண்டு ஒரு நதியின் போக்கில் செல்வதுபோல் வாழ்வின் போக்கில் சென்றுகொண்டு இருந்தால் இந்த வெறுமை வராது. எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்தால் இந்த வெறுமை அதிகம் ஆகும். ஏதாவது வேலை செய்துகொண்டே இருந்தால் இந்த வெறுமை வராது. இதை என் அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன்.''

    உறுதியான வார்த்தைகளில் முடிக்கிறார் ரமணி சந்திரன்.



    Sponsored Links
    Last edited by chan; 30th Sep 2015 at 03:30 PM.

  2. #2
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: 'ஜக்கி அறிவுரை... சத்தான அறிவுரை

    superb sharing... i like this...

    chan likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter