Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4Likes
 • 3 Post By chan
 • 1 Post By gkarti

நலம் தரும் குளியல் - The good bath guide


Discussions on "நலம் தரும் குளியல் - The good bath guide" in "Health" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  நலம் தரும் குளியல் - The good bath guide

  நலம் தரும் குளியல் !!!

  ‘எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம்’, இன்று தலையை விட்டு விட்டு உடலை மட்டும் கழுவும் கெட்ட பழக்கம் இன்று எங்கு பார்த்தாலும் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

  உடலுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றிக் கழுவுவதால் வரும் துன்பங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

  1. சைனஸ், ஒற்றைத் தலைவலி,மைக்ரேன், அடுக்குத் தும்மல், மணத்தை உணரமுடியாத தன்மை, மூக்கு எலும்பு வளைதல் முதலியன.
  உடலுக்கு மட்டும் நீர் விடும் போது உடல் சூடு முழுக்க தலைக்கு ஏறுகிறது. அதனால் தலையில் உள்ள வாயுக்கள் (கபால வாயு) சூட்டால் விரிவடைகிறது. இந்த பாதிப்பிலிருந்து காக்க, உடலது தற்காப்பு அமைப்பின் செயலால் தலை குளிர்விக்கப்படுவதால் காற்று குளிர்ந்து நீராக மாறி மண்டையோட்டில் உள்ள சைனஸ் பள்ளங்களில் தேங்குகிறது.

  தொடர்ந்து இந்த செயல்பாடுகளால், தேங்கும் நீர் மற்றும் சளி கட்டியாவதால் சைனஸ் பகுதிகளில் ஏற்படும் வீக்கமும், வலிகளும் அதிகரிக்கின்றன. எக்ஸ்ரே படங்களில் மூக்கு எலும்பு வளைந்தது போல் தோற்றம் தருகிறது. நாற்றத்தை உணரமுடியாது போகிறது
  என்றாவது தலைக்கு குளிக்கும் போதோ அல்லது உடல் சக்தி பெறும் போது உடல் தன்னை தூய்மைப் படுத்திக்கொள்ள மூக்கின் வழியாக நீராகவோ, தும்மலாகவோ, வெளியேற்ற முற்படுகிறது.

  இதை நாம் உடல் தன்னை குணப்படுத்திக் கொள்ளும் என அறியாத மருத்துவர்களது அறிவுரைப்படி தவறான சிகிச்சையால் தடுத்து விடுகிறோம்.

  தேங்கும் நீரும், சளியும், மருந்துகளாலும், உடலைச் சூடாக்கும் சுடுநீர்க் குளியலும், உடலை அறியாதவர்களின் அறிவுரையும் நோயை அதிகமாக்குகிறது.

  தலை முக்கியமாக கருதப்படுவதற்கு காரணம் தலையில் புலன் உறுப்புகள் அனைத்துக்கான தொடர்பு கருவிகளும் உள்ளன (கண், காது, மூக்கு) மேலும், மத்திய நரம்பு மண்டலமான மூளை தண்டுவடம் உள்ளதென அறிவோம். இவற்றை பாதுகாக்க உடல் அதிகமான சக்தியை செலவழிக்கிறது.

  2. கண்களில் சிவப்பு, எரிச்சல், பார்வை குறைவு, பித்த நோய்கள், மன நலக் கோளாறுகள்,காமாலை, பாத வெடிப்பு, பெருவயிறு போன்றவை உண்டாகிறது.

  தலையில் ஏறும் சூட்டால் கண்களும்; அதனால் கல்லீரலும், பித்தப் பையும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

  பிறந்த குழந்தைகளை எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டாததாலும், தினமும் தலைக்கு குளிக்காததாலும் குழந்தைகளுக்கு பித்தம் முற்றியதனால் மனநலம் பாதிப்பு விரைவில் வெளிப்படுகிறது. ஹபர் ஆக்டிவ் சைல்ட் எனப்படும் பாதிப்புக்கு உடலுக்கு மட்டும் குளிப்பதே முக்கிய காரணம்.

  3. நுரையீரல் பாதிப்பு, இளைப்பு, ஈளை, ஆஸ்துமா, காச நோய், கணைச் சூடு, உடல் மெலிவு, மூலம் பவுத்தரம், மலச்சிக்கல் போன்றவையும் ஏற்படும்.

  மெலிந்து போன உடலமைப்பை உடைய குழந்தைகளை கணைச் சூடு தாக்கியுள்ளது என கூறுவர். உடலை குளிர்விக்கும் முறைகளை சீராக்கினால் சூடு குறைந்து உடல் தேறும். அதிக சூட்டால் பாதிக்கப்படும் உறுப்புகளில் முக்கியமானது நுரையீரலும், பெருங்குடலும். மூலம் பவுத்திரம் என்பது ஆசனவாய்ப் பகுதியில் மட்டும் ஏற்படும் நோயல்ல.

  வாயிலிருந்து உணவுக்குழாய், பெருங்குடல் அனைத்தும் சூடு மிகுந்து பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு அடையாளமே மூலம், பவுத்திரம். இதற்கு முக்கிய காரணம் இரவில் தூக்கத்தை தவிர்ப்பது, அதிக பயனம், உடலுக்கு மட்டும் குளிப்பது போன்றவை ஆகும்.

  4. வயிற்றுப்புண், வாய்ப்புண், சீரணக் கொளாறுகள், சர்க்கரை நோய் எனப்படும் மதுமேகம் உட்பட்ட 21 வகை மேக நோய்கள், மூத்திர நோய்கள், மூத்திரப் பை மற்றும் சிறுநீரக கற்கள், பித்தப் பை கற்கள் உருவாகுதல், போன்றவற்றை உடலுக்கு மட்டும் குளிக்கும் பழக்கம் உருவாக்கும்.

  5. முகப் பருக்கள், முகத்தில் முடி முளைத்தல், தலையில் பொடுகு உருவாதல், பித்த நரை, உடல் எங்கும் முடி முளைத்தல், காலாணிகள், பித்த வெடிப்புகள் ஆகியவையும் தலைக்கு குளிக்காமல் இருப்பதால் உருவாகும் நோய்களே.

  6. கர்ப்ப பை கட்டிகள், சிணை முட்டைகள் அழிதல், நீர்கட்டிகள், அதிக உதிரப் போக்கு, மாதவிடாய் இன்மை, பெண் மலடு, ஆண் மலடு, ஆண்மை குறைவு, விந்து நீர்த்துப் போதல், விந்து முந்துதல் என அனைத்து நோய்களுக்கும் மேலும், பால் விணை நோய்களுக்கும் தினமும் தலைக்கு குளிக்காமல் உடலை மட்டும் கழுவுவதே காரணம்.

  7. உடலில் தோன்றும் 4448 நோய்களுக்கும் ஐந்து மூலகங்களில் ஏற்படும் சீர்குலைவே காரணம். ஏதாவது ஓர் மூலகத்தில் பாதிப்பு வந்தாலும் அது அனைத்து மூலகங்களையும் பாதிக்கும்.

  இதை கருத்தில் கொண்டே,

  ‘மிகினும் குறையினும் நோய் செய்யும் -நூலோர்
  வளி முதலாய் எண்ணிய மூன்று'.

  -என்றார் தமிழ் அறிவர்.

  ‘கூழாக இருந்தாலும் குளித்துக் குடி’, சனி நீராடு’ என கூறியவர் நம் தமிழ் முதாட்டி ஔவை. எல்லா காலங்களிலும் குளிரக் குளிக்கவேண்டும் என நோயற்ற வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த நம் சான்றோர் வற்புறுத்துகின்றனர்.

  ஆரோக்யமற்ற சூழல் ஏழை,பணக்காரன் என இல்லாது எல்லோர்க்கும் பொதுவாகி விட்டது. கருவுற்ற குழந்தையிலிருந்து, இளையவர், முதியவர் என எல்லோரும் நலக் குறைவால் நாளும் செத்துப் பிழைக்கிறார்கள். ஈட்டும் வருமானத்தில் பாதிக்கும் அதிகமாக மருந்து மாத்திரைகள், சோதனைகளில் கரைந்துவிடுகிறது.

  இந்நிலை மாற, நம் பெரியவர்கள் வகுத்துக் கொடுத்த நோய் அணுகாவிதிகளைச் சிந்தித்து பின்; செய்து பழக்குவோம். நலவாழ்வை கொள்ளையடிக்கும் மருந்து வணிகர்களிடம் இருந்து நமது குழந்தைகளையும் நமது ஆரோக்கியத்தையும் மீட்டு உயிரைக் காத்துக் கொள்வோம்.  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 13th Oct 2015 at 07:55 PM.
  sumathisrini, gkarti and Vaisri02 like this.

 2. #2
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,146

  re: நலம் தரும் குளியல் - The good bath guide

  Good Sharing Lakshmi

  chan likes this.

 3. #3
  gomathyraja's Avatar
  gomathyraja is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  Bangalore
  Posts
  211

  Re: நலம் தரும் குளியல் - The good bath guide

  Thanks for your useful information Lakshmi.
  gomathy


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter