Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree30Likes

Health tips -அழகு மனமும், உடலும்

Discussions on "Health tips -அழகு மனமும், உடலும்" in "Health" forum.

  1. #11
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: அழகு மனமும், உடலும்

    உடல் ஆரோக்கியமில்லை என்ற கவலையா ? இனி கவலை வேண்டாம் !
    கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
    நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!
    தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
    மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
    ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
    பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
    சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
    சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
    வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
    பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
    சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
    சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
    பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
    அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
    தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
    பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா?
    புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
    கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
    வயிற்றைச் சுத்தமாக்கும் உணவுகள்:
    அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.
    எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.
    அதேபோல கேரட், வெங் காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது.
    எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும்.
    தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
    சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது

    Sponsored Links
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  2. #12
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: அழகு மனமும், உடலும்

    நினைவு ஆற்றலை பெருக்குவது எப்படி?
    ======================================

    மூன்று முக்கிய விஷயங்களை கடைப் பிடித்தால் போதும் !!!!!

    1) உடற்பயிற்சி முக்கியம் :-
    ========================
    மூளையை வலுப்படுத்தனும் நா, உடற்பயிற்சி அவசியம்;
    பிராண வாயு உறுதிப்படும்; ஞாபக மறதி குறையும்;
    1) நடை 2) ஓட்டம் 3) நீச்சல் 4) மலை ஏற்றம் இவை சிறந்தது.

    2) தூக்கம் அவசியம் :-
    ====================
    ஆராய்ச்சி முடிவுகள் தூக்கமின்மை காரணம் ஆகவே
    ஞாபக மறதி ஏற்படுகிறது என்று கூறுகின்றன.

    குறைந்தது 7 மணி நேரம் தூக்கம் அவசியம்;
    தினசரி இரவு 11 மணிக்கு தூங்க செல்கின்றோம் என்றால்
    அதனையே வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்;

    அதே போன்று காலையில் 6 மணிக்கு எழுகிறோம் என்றால் அதே
    நேரத்துக்கு உடலை பழக்கம் செய்து கொள்ள வேண்டும் ;

    3) மன அழுத்தம் குறைக்கணும் :-
    ==============================

    மன அழுத்தத்திற்கும் நினைவாற்றலுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.
    மன அழுத்தம் காரணமாக ஞாபக மறதி வரலாம்;

    மன அழுத்தம் மூளையின் மிக முக்கிய எதிரிஆகும்; நினைவாற்றலை மேம்படுத்த,
    மன அழுத்தத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்துவது அல்லது கட்டுக்குள் கொண்டு
    வருவது அவசியம் ஆகும்;

    மன அழுத்தத்தை குறைக்க தியானம் சிறந்த தீர்வாகும்; தியானப் பயிற்சியானது
    படைப்பாற்றலையும் , ஒரு முகத்தன்மையையும் அதிகரிக்கும்; இதன் மூலம் நினைவாற்றல் மேம்படும்;

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  3. #13
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: அழகு மனமும், உடலும்

    ஒல்லியா இருகிங்களா ? உங்கள் உடல் எடை அதிகரிக்க மிக
    *****************************************************************************************
    சிறந்த வழிகள்
    ************************
    உங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உள்லேடுப்பதன் மூலம் கட்டாயம் உங்கள் உடலேடையை அதிகரிக்க முடியும்
    வேர்க்கடலை வெண்ணெய்
    ******************************************
    வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன், தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.
    வெண்ணெய்
    *********************
    அனைவரும் வெண்ணெயை தினமும் சாப்பிட்டால் உடல் பருமனடையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் தான். ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது
    ஜூஸ்
    **********
    உடல் ஆரோக்கியமாகவும், எடை அதிகரிக்கவும், சில பவுண்ட் உடலுக்கு தேவைப்படுகிறது. ஆகவே தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.
    கோதுமை பாண்
    *************************
    தானியங்களில் நிறைய கலோரிகள் உள்ளன. அதிலும் கோதுமையில் அதிகமாகவே உள்ளது. ஆகவே பாண் வாங்கும் போது, கோதுமை பாணிநை வாங்கி சாப்பிட்டால், ஆரோக்கியத்துடன் எடையும் கூடும்.
    ஓட்ஸ்
    ***********
    காலையில் சாப்பிட ஓட்ஸ் மிகவும் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு. அதிலும் இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இதனால் உடலில் சீரான இரத்த ஓட்டம் இருப்பதோடு, உடலும் பருமனடையும்.
    தயிர்
    *******
    பழங்களை விட, தயிரில் 118 கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.
    வாழைப்பழம்
    *********************
    வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமில்லை, குறைந்தது 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.
    உருளைக்கிழங்கு
    ****************************
    கார்போஹைட்ரேட் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  4. #14
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: அழகு மனமும், உடலும்

    பற்களில் கறை படிந்துள்ளதா? இனி கவலை வேண்டாம்!
    **************************************************************************************
    என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
    பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
    இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.
    கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும். வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  5. #15
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: அழகு மனமும், உடலும்

    சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்
    *******************************************************************************************
    சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
    சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
    வரக்கொத்தமல்லி --அரை கிலோ
    வெந்தயம் ---கால் கிலோ
    தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
    இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
    இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
    ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்

    RathideviDeva likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  6. #16
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: அழகு மனமும், உடலும்

    எண்ணெய் குளியலினால் ஏற்படும் நன்மைகள் என்ன?

    எண்ணெய் தேய்த்து குளிப்பதினால் :-
    1) உடலின் தொழில் உள்ள தூசு மற்றும் இறந்த அடுக்குகள்
    நீக்கப்பட்டு தோல் திசுக்கள் மற்றும் தசைகளுக்கு சக்தியும் வலிமையையும் கிடைக்கிறது.
    2) மேலும், அப்யங்கம் எனப்படும் எண்ணெய் தேய்த்துக்
    கொள்ளும் பழக்கம் மன அழுத்தங்களை போக்கி, நாள் முழுதும்
    சுருசுருப்பையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
    3) உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது.
    4) சருமத்திற்கு பளபளப்பை தருகிறது.
    5) தலை முடியை வலுப்படுத்துகிறது.
    6) மேலும், இயற்கையாகவே நம் உடலில் ஒரு வித எண்ணெய் சுரக்கும்.
    அது நமது தோலு க்கு பாதுகாப்பை கொடுக்கிறது. அதனால் தான் தோல் மிருதுவாக இருக்கிறது.
    7) அது போன்று, தலையிலும் இந்த எண்ணெய் சுரக்கிறது.
    அந்த எண்ணெய் ஆனது, இயற்கை conditioner ஆக இருந்து முடிக்கு போஷாக்கை கொடுக்கும்.
    8) இதனால் தான் சிறு குழந்தைகளுக்கு பெரும்பாலும் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பார்கள். இது ஏன் என்றால், வேகமாக வளர்ந்து வரும் அவர்களது திசு வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.
    9) மேலும், இன்றைய வாழ்க்கை முறையில் பிறந்த குழந்தை தவிர, குழந்தை பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கும் காலம் வரை அனைவருக்கும் மன அழுத்தம் ஆரம்பித்து விடுகிறது.
    இந்த மன அழுத்தம் அவரவர் வயதுக்கு தகுந்தவாறு மாறுபடுகிறது. மன அழுத்தம் ஏற்படுவதால்,, உடல் சூடு அதிகம் ஆகி, கண் எரிச்சல், உடல் சோர்வு ஏற்படுகிறது.அது போன்ற சமயங்களில் எண்ணெய் குளியல் பெரிதும் உதவுகிறது.

    jv_66 likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  7. #17
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: அழகு மனமும், உடலும்

    எண்ணெய் குளியல்கள் எடுத்து கொள்ளும் முறைகள் என்ன?

    1) வாரம் ஒரு முறை கட்டாயமாக எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
    2) எண்ணையை லேசாக சூடாக்கி தலையிலும்,உடம்பிளுமுடம்பிலும் தேய்த்து
    அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீர் கொண்டு சீயக்காய்
    தேய்த்து குளிப்பதால்,
    2.1)உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது.
    2.2) மன அழுத்தம் குறைகிறது.
    2.3) தோலுக்கு ஊட்ட சத்து கிடைக்கிறது.
    2.4) தோல் மினுமினுப்பாகிறது.
    2.5) முடி உதிர்தல் நிற்கிறது.
    2.6) சயனஸ் பிரச்னை உள்ளவர்கள் கூட இந்த முறையில் என்னை குளியல் எடுத்து கொண்டால்
    பிரச்னைகள் வராது.
    2.7) பொதுவாக எண்ணெய் குளியல் செய்த பிறகு, ஒரு டும்ளீர் சுடு நீர் குடித்து விட்டால், சளி தொல்லையோ, ஜுரமோ வராது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
    3) எண்ணெய் பசை அதிகம் உள்ள தோலினை உள்ளவர்கள் மட்டும், எண்ணையை குறைவாக வைத்து குளிக்க வேண்டும்.

    jv_66 likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  8. #18
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health tips -அழகு மனமும், உடலும்

    Thanks Girjia @girija chandru for all these tips.

    You may continue all your health tips in this thread.

    Jayanthy

  9. #19
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: அழகு மனமும், உடலும்

    எந்த எண்ணையில் குளிக்கலாம்?

    நல்லெண்ணெய் சிறந்தது. அனால் சிலருக்கு நல்லெண்ணெய்
    உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. அவர்கள் தேங்காய் எண்ணையில் குளிக்கலாம்.
    சிலருக்கு நல்லெண்ணெய், தேங்காய் என்னை இரண்டுமே ஒத்துகொள்ளாது.
    அவர்கள் கடலை எண்ணையிலும் குளிக்கலாம்.

    அவரவர் உடல் வாகிற்கு ஏற்ப எண்ணையினை உபயோகப்படுத்தலாம்.
    முடிந்தவரை, சீயக்காய் உபயோகப்படுத்தி குளிப்பது நல்லது.

    ஏன் என்றால்,, கடினமான ஷாம்பூவை உபயோகிக்கும் போது,
    1) அது தலையில் உள்ள எண்ணெய் பசையை முற்றிலுமாய்
    நீக்கி, முடியை வறண்டு போக செய்து விடுகிறது.

    2) அடுத்தது உடலில் உள்ள அமிலதன்மையையும் பாதிக்கிறது.
    3) இதனால் ஷாம்பூ உஸ் செய்யாமல், வெட்டி வேர், துளசி, மருதாணி, நெல்லி போன்றவை சேர்ந்த மூலிகை சீயக்காய் உபயோகிப்பது மிக,மிக சிறந்தது.

    jv_66 likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  10. #20
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Health tips -அழகு மனமும், உடலும்

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks Girjia @girija chandru for all these tips.

    You may continue all your health tips in this thread.
    thanks jayanthy ma....

    jv_66 likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter