Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine Jan 2018! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By chan

ஆ... ஆண்களுக்கும் வருது அனீமியா!


Discussions on "ஆ... ஆண்களுக்கும் வருது அனீமியா!" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,568

    ஆ... ஆண்களுக்கும் வருது அனீமியா!

    ஆ... ஆண்களுக்கும் வருது அனீமியா!


    அடுத்த அதிர்ச்சி



    ‘‘ரத்தசோகை எல்லாம் பெண்களின் பிரச்னை என்று இனியும் ஆண்கள் அலட்சியமாக இருக்க முடியாது. காரணம், பெண்களுக்கு இணையாக இப்போது ஆண்களையும் அதிகம் தாக்குகிறது ரத்தசோகை’’ என்று அலாரம் அடிக்கிறார் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவரான டி.பி.ஆர்.பரத்வாஜ்.

    ரத்தசோகை எதனால் வருகிறது?


    சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் மற்றும் பிளாஸ்மாவால் ஆனது நம் ரத்தம். இவற்றில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்தால், அதனுள் இருக்கும் ஹீமோகுளோபின்கள் என்கிற நிறமிகளின் எண்ணிக்கையும் குறையும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி குழந்தைப் பருவத்தில் 6 மாதம் முதல் 6 வயது வரை 11g/dl அளவு ஹீமோகுளோபின்கள் இருக்க வேண்டும். 6 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு 12g/dl அளவும், வயது வந்த ஆண்களுக்கு 13g/dl அளவும், பெண்களுக்கு 12g/dl அளவிலும் இருக்க வேண்டும். இந்த அளவு குறைவதையே ரத்தசோகை (Anemia) என்கிறோம். இதை சாதாரண ரத்தப் பரிசோதனையிலேயே கண்டுபிடித்துவிடலாம்.

    சத்துக்குறைபாடு, விபத்து, அறுவைசிகிச்சை, புற்றுநோய், மரபியல் காரணங்கள், மூலம் (Piles) போன்ற காரணங்களால் ரத்தசோகை உண்டாகும். மாதவிலக்கு, பிரசவம் போன்ற காரணங்களால் பெண்களுக்கு அதிகம் ரத்தசோகை ஏற்படுகிறது.

    ஆண்கள் ஏன் பாதிக்கப்படுகிறார்கள்?

    மதுப்பழக்கம், புகைப் பழக்கமும் கெட்ட பழக்கங்கள் என்று சொல்வதற்குப் பின்னால், ஆரோக்கிய ரீதியாக ஓராயிரம் காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ரத்தசோகையும் முக்கிய காரணம். துரித உணவுகள், பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகள் சாப்பிடுவது போன்ற பழக்கங்களினாலும் ஹீமோகுளோபின் அளவு ஆண்களுக்குக் குறைந்து, ரத்தசோகை ஏற்படுகிறது. இதனுடன் சரிவிகித உணவு உண்ண வேண்டும் என்பதிலும், பெரும்பாலான ஆண்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. இதனால் ஏற்படும் சத்துக்குறைபாடுகளாலும் ரத்தசோகை ஆண்களுக்கு வருகிறது. உணவில் இருக்கும் இரும்புச்சத்தை குடல் சரியாக உறிஞ்சிக் கொள்ளாத Malabsorption பிரச்னையாலும், இரும்புச்சத்துக் குறைபாடு ஆண்களுக்கு ஏற்படுகிறது. அதிகம் தேநீர் சாப்பிடும் பழக்கத்தாலும் இந்தப் பிரச்னை உண்டாகிறது.

    வேறு காரணங்கள்?

    சமீபகாலமாக, நாம் அதிகமாகக் கேள்விப்படும் ஒரு நிகழ்வு மூளைச்சாவு. மூளைச்சாவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் மூளை உயிர் வாழ அத்தியாவசியமான பிராண வாயு ஏதாவது காரணத்தினால் 8 முதல் 10 வினாடிகளுக்கு மேல் மூளைக்குச் செல்வது தடைபடுமானால் மூளைச்சாவு ஏற்படவாய்ப்புண்டு. இந்த பிராணவாயுவை தங்கு தடையின்றி தொடர்ந்து மூளைக்கு கொண்டு செல்வது ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினே ஆகும். இந்த ஹீமோகுளோபின் அளவு குறையாமல் இருக்க இரும்புச்சத்து மிகவும் அவசியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஹீமோ குளோபின்களின் எண்ணிக்கை குறைந்தால் ரத்தத்தின் செல்களுக்கு ஆக்சிஜன் எடுத்துச் செல்வது தடைபடும். இதிலிருந்தே ரத்தசோகையை உடனடியாக ஏன் கவனிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

    இதுதவிர பி12, ஃபோலிக் அமிலம் அளவு குறைதல், வயிற்றில் கொக்கிப்புழு போன்ற கிருமிகளின் தாக்கம், எலும்பு மஜ்ஜையில் திசு வளர்ச்சி குறைபாடு மற்றும் புற்றுநோய், வயிற்றுப் புண், சில நோய்களினால் ரத்தக்கசிவு, வலி நிவாரணிகள் பயன்படுத்துதல்
    காரணங்களாலும் ரத்தசோகை ஏற்படும்.

    அனீமியாவில் வகைகள் உண்டா?


    வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் குறைவினால் ஏற்படும் மெகாலோபிளாஸ்டிக் அனீமியா (Megaloblastic anemia), இரைப்பை நீரில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் குறைதல், அதிக மது அருந்துதல் போன்ற காரணங்களால் ஏற்படும் பெர்னிஷியஸ் அனீமியா(Pernicious Anemia), ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் 120 நாட்கள் கூட வாழாமல் அழியும் ஹிமாலிடிக் அனீமியா, மரபியல் காரணங்களால் ஏற்படும் சிக்கில் செல் அனீமியா (Sickle cell anemia), தாலசீமியா, என்சைம் குறைபாட்டினால் உண்டாகும் G6PD குறைபாடு என்கிற ரத்த அழிவுசோகை, ஏபிளாஸ்டிக் அனீமியா (Aplastic anemia) போன்ற பல வகைகள் உள்ளன.

    ரத்தசோகையின் அறிகுறிகள்?


    மூச்சுத்திணறல், உடல் சோர்வு, மனச்சோர்வு, வாய்க்கோணங்களில் வெடிப்புகள், நரைத்தல், பசியின்மை, ஞாபக மறதி, ஆண்மைக் குறைவு, சாம்பல், அரிசி, விபூதி, ஐஸ்கட்டி போன்ற பொருட்களை உண்ண வேண்டும் எனும் வேட்கை (PICA)...
    இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன?

    இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை வகைகள் - குறிப்பாக, பசலைக்கீரை, பேரீச்சம்பழம், கொய்யா, சிவப்பு மாமிசம்(Red meat), கல்லீரல், மீன் முதலியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப் படி இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். போதுமான காய்கறிகள், பழங்களை உணவில் சரியான விகிதத்தில் சேர்த்துக் கொண்டால் ரத்தசோகையை குணப்படுத்த முடியும். வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும்போது ஃபோலிக் அமில மருந்து மட்டும் எடுத்துக்கொண்டால் நரம்பியல் குறைபாடுகள் அதிகமாவதற்கு வாய்ப்புண்டு. இதைத் தடுக்க வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகிய இரண்டு மருந்துகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ரத்தசோகைக்கு என்ன சிகிச்சை?

    அனீமியாவின் தன்மையைப் பொறுத்து ஒவ்வொன்றுக்கும் சிகிச்சை மாறுபடும். ஹிமாலிடிக் அனீமியா ரத்த அழிவுச்சோகையில் ரத்த அணுக்கள் தனக்குரிய வாழ்நாளான 120 நாட்கள் வாழாமல் முன்னதாகவே அழிந்துவிடும். இதைத் தவிர்க்க மண்ணீரலை அறுவைசிகிச்சை மூலம் அகற்றி, நோயிலிருந்து பூரண குணமடைய முடியும். தாலசீமியா வகை ரத்தசோகைக்கு எலும்பு மஜ்ஜையை மாற்றுவதே நிரந்தரமான தீர்வு. ஏபிளாஸ்டிக் அனீமியாவுக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை முறையே சிறந்தது. இவையெல்லாம்

    வந்தபிறகு நாம் செய்துகொண்டு குணமாக முடிகிற சிகிச்சைகள். அதைவிட சிறந்தது ரத்தசோகையை வரும் முன்னரே தடுப்பதும், ரத்தசோகையைத் தெரிந்துகொண்டால் அலட்சியப்படுத்தாமல் சிகிச்சை எடுத்துக்கொள்வதும்தான்!



    Sponsored Links
    Last edited by chan; 21st Nov 2015 at 10:26 AM.
    shrimathivenkat and ishitha like this.

  2. #2
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: ஆ... ஆண்களுக்கும் வருது அனீமியா!

    thanks for sharing...


  3. #3
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: ஆ... ஆண்களுக்கும் வருது அனீமியா!

    udeful sharing sis!



    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter