Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Bunion-விரலோடு விளையாடலாமா?


Discussions on "Bunion-விரலோடு விளையாடலாமா?" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Bunion-விரலோடு விளையாடலாமா?

    விரலோடு விளையாடலாமா?


    பாதத்தையும் பாதுகாப்போம்!

    புனியன்... வாயில் நுழையாத இது ஒன்றும் புது நோய் இல்லை. கால் பெருவிரலில் ஏற்படும் வளைவைத்தான் புனியன் (Bunion) என்கிறார்கள். இது யாருக்கு வருகிறது? ஏன் வருகிறது? இதன் விளைவுகள் என்னென்ன? எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கோவிந்தராஜன் விளக்குகிறார்…

    ‘‘கால் பெருவிரல் சற்று வீக்கமடைந்து வளைந்து இருப்பதே ‘புனியன்’ என்று சொல்லப்படுகிறது. நாளடைவில் இந்த வீக்கம் பெரிதாகி வளைய ஆரம்பிக்கும். வீங்கிய அந்தப் பகுதி சிவந்து காணப்படும். இதனால் கால் விரல்கள் வளைந்து நெளிந்து கோணலாகிவிடும். ஆண்களைவிட பெண்களுக்கே இப்பிரச்னை அதிகம் ஏற்படுகிறது. ஆண்களில் தட்டையான பாதம் (Flat foot) உள்ளவர்கள், நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்கள் மற்றும் மிகவும் இறுக்கமான ஷூ உபயோகிப்பவர்களுக்கு புனியன் வரும். ஹைஹீல்ஸ் செருப்புகள், பாய்ன்டட் ஹீல்ஸ் போன்ற ஃபேன்ஸி செருப்புகளை அணிகிற பெண்களுக்கும் புனியன் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பாயின்டட் ஹீல்ஸ்களால் விரல்களில் அழுத்தம் ஏற்பட்டு பெருவிரலில் வளைவு ஏற்படுகிறது.

    பரம்பரையில் ருமட்டாயிட் ஆர்த்ைரட்டிஸ் இருப்பவர்களுக்கும், யூரிக் அமிலப் பாதிப்பு இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை வருகிறது. சிலருக்கு நடக்க முடியாமல் அதிகமான வலியுடனும், சிலருக்கு வலியில்லாமலும் இருக்கும். உடலின் எடை பாதத்தில் இறங்கும் போது அந்த எடையை சமநிலைப்படுத்துவதற்காக பெருவிரலுக்கும் கடைசிவிரலுக்கும் இடையே அழுத்தம் ஏற்பட்டு, கால்விரல்கள் ஒன்றன் மேல் ஒன்று குவிய ஆரம்பிக்கும். இந்த வளைவு அதிகமாகும் போது பெருவிரல் எடையைத் தாங்க முடியாமல் இரண்டாவது விரலைத் தள்ளிக்கொண்டு அந்த விரலும் வளைய ஆரம்பிக்கும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் இரண்டாவது விரலில் வலி அதிகமாகி இப்படியே விரல்கள் ஒன்றன் மீது ஒன்றாக தள்ளிக்கொண்டு வளைந்து கால் பாதங்கள் பார்ப்பதற்கு அருவெறுப்பான தோற்றத்துடன் மாறும். வலி இல்லாததால் இப்பிரச்னைக்கு சிலர் சிகிச்சை எடுக்காமல் விட்டு விடுவர்.

    நாளடைவில் விரல்களின் வளைவுகள் அதிகமாகி தங்களுக்குப் பிடித்த செருப்புகளைக்கூட அணிய முடியாத நிலை ஏற்படும். ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு பெருவிரலையும் அடுத்த விரலையும் பிரிக்கக்கூடிய சிலிகானால் ஆன செபரேட்டர் ஒன்றை பொருத்தி சரிசெய்துவிடலாம். இதன் மூலம் இரண்டு விரலும் ஒன்றோடொன்றுப் மோதாமல் பெருவிரலின் வளைவை நேராக்கி விட முடியும். இளவயதினருக்கு அறுவை சிகிச்சை மூலம் எலும்பை ரீஅலைன்மென்ட் செய்யலாம். ஆரம்ப நிலையில் உள்ள வயதானவர்களுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் வீக்கத்தை அகற்றி விடலாம். நோய் முற்றிய தன்மையில் அறுவை சிகிச்சை மூலம் எலும்பை ரீஅலைன்மென்ட் செய்வதுதான் தீர்வு.”

    "வலி இல்லாததால் இந்தப் பிரச்னைக்கு சிலர் சிகிச்சை எடுக்காமல் விட்டு விடுவர். நாளடைவில் விரல்களின் வளைவுகள் அதிகமாகி தங்களுக்குப் பிடித்த செருப்புகளைக் கூட அணிய முடியாத நிலை ஏற்படும்."


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 30th Nov 2015 at 08:04 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter