வளர்சிதை மாற்றம்

கிரேக்கத்தில் ‘மெட்டபாலிக்’ என்றால் ‘மாற்றம்’ என்று பொருள். இந்த வேர்ச் சொல்லில் இருந்து தோன்றியது ‘மெட்டபாலிசம்’ என்ற வார்த்தை. நாம் உட்கொண்ட உணவு, நம்முடைய உடலில் எவ்வாறு மாற்றப்படுகிறது, பின்னர் எப்படி அது வெளியேறுகிறது என்கிற ரசாயனச் செயல்பாடுகளை வளர்சிதை மாற்றம் என்கிறோம்.
மெட்டபாலிக் விகிதம்

எவ்வளவு ஆற்றல் அல்லது கலோரியை நம்முடைய உடல் தினசரி செலவழிக்கிறது என்பதை, ‘மெட்டபாலிக் விகிதம்’ என்கிறோம். எவ்வளவு கலோரி அல்லது ஆற்றலை செலவழிக்கிறோமோ அதைப் பொறுத்து, நம்முடைய உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும். எனவேதான், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மெட்டபாலிக் விகிதம் மிகவும் முக்கியம். அதிக கலோரியை எரித்தால், உடல் எடை குறையும். மிகக் குறைவான கலோரியை எரித்தால், எடை குறையாது; அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Similar Threads: