Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By chan
  • 1 Post By Ragam23
  • 1 Post By jv_66
  • 1 Post By sharamsn

வலி! - Reasons for Pains


Discussions on "வலி! - Reasons for Pains" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    வலி! - Reasons for Pains

    வலி!

    இன்று மூட்டு வலி என்றால் நாளை முதுகு வலி... அடுத்த நாள் கால் வலி... இப்படி தினம் ஒரு வலியை அனுபவிப்பதும், வலி நிவாரணிகள் போட்டு, அதை அலட்சியப்படுத்துவதும் பெண்களின் வாழ்க்கையில் சகஜம்.

    ஆனால், எப்போதும் எல்லா வலிகளும் அப்படி அலட்சியப்படுத்தக்கூடியவை அல்ல... அவை பெரிய ஆபத்துகளின் ஆரம்ப அறிகுறியாகக் கூட இருக்கலாம் என்கிறார் பொது மருத்துவரும் வலி மற்றும் ஆதரவு சிகிச்சை நிபுணருமான ரிபப்ளிகா.

    ``வயசானா வலி வர்றது சகஜம் என்றும், அதிக அலைச்சல், வேலைதான் வலிக்கான காரணம் என்றும் பல பெண்களும் தங்களது வலிகளை அலட்சியப்படுத்துகிறார்கள். வலி அதிகமாகும்போது வலி நிவாரணிகளைப் போட்டுக் கொண்டு, தற்காலிகமாகத் தப்பிக்கிறார்கள்.

    பெண்களுக்கு எலும்பு மூட்டுகளில் வலி வருவது மிகவும் சகஜமானது. குறைந்த அளவில் வலி ஆரம்பிக்கும்போதே மருத்துவரை அணுகாவிட்டால், அது நாளடைவில் கால்சியம் மற்றும் வைட்டமின் ‘டி’ பற்றாக்குறையின் தீவிரத்தை அதிகரித்து, எலும்புகளின் தேய்மானத்தைத் தீவிரப்படுத்தி, நடமாட்டத்தையே பாதிக்கக்கூடும்.

    இன்று நிறைய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதைக் கேள்விப்படுகிறோம். முடி உதிர்வது மட்டும்தான் இரும்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறி அல்ல. இரும்புச்சத்து குறைந்தால், மூட்டுகளில் கடுமையான வலி வரலாம். சில பெண்களுக்கு திடீரென காரணமே இல்லாமல் தாடைப் பகுதியில் வலிக்கும்.

    குறிப்பாக முறுக்கு போன்ற கடினமான உணவுகளை மெல்லும் போது வலி அதிகமாவதை உணர்வார்கள். உடனே பல் மருத்துவரைப் பார்ப்பார்கள். உண்மையில் Temporomandibular joint எனப்படுகிற இந்தத் தாடைப் பகுதி வலிகூட, ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அறிகுறியே என்பது பலரும் அறியாதது.

    இரும்புச்சத்தும், வைட்டமின் மற்றும் கால்சியமும் குறைந்தால் உடலின் பல மூட்டு இணைப்புகளிலும் வலி வரும். `நான் சின்ன வயசுலேருந்தேஅனிமிக்தான்... எனக்கு எப்பவுமே லோபிரஷர்தான்’ என்றெல்லாம் சிலர் பெருமையாகச் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். இரும்புச் சத்துக் குறைந்து ரத்த சோகை ஏற்படுவதும், ரத்த அழுத்தம் தாறுமாறாக மாறுவதும் ஆரோக்கியக் கேட்டின் அபாய அறிகுறிகள் என்பதை இவர்கள் அறிய வேண்டும்.

    மாதவிலக்கு சுழற்சியில் ஒழுங்கு இல்லாவிட்டால், உடம்பு சூடு என்பது போல தாமாக ஒரு காரணத்தை சொல்லிக் கொள்ளாமல், இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கிறதா என சரி பார்க்க வேண்டும். நீண்ட நாட்களாக அடிக்கடி படுத்துகிற மூட்டு வலிகளை அலட்சியப்படுத்தாமல், அவை கால்சியம் குறைபாட்டின் விளைவா அல்லது ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் பிரச்னைகளின் அறிகுறிகளா எனப் பார்க்க வேண்டும்.

    உதாரணத்துக்கு புரதம் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு அதன் விளைவாக யூரிக் அமிலச் சுரப்பு அதிகமாகி, Gout எனப்படுகிற ஒரு பிரச்னை வரும். அதன் விளைவாக கை, கால்கள் என எல்லா இடங்களிலும் வலியை ஏற்படுத்தலாம். எனவே, யூரிக் அமில அளவை சரி பார்க்க வேண்டும்.

    SLE (Systemic Lupus Erythematosus) என்கிற ஒரு பிரச்னையில் உடலில் அணுக்கள் ஆங்காங்கே தேங்கி, அதன் விளைவாக உடல் முழுக்க வலியும் வீக்கமும் இருக்கும். அதற்கான சரியான பரிசோதனையும் சிகிச்சையும் மட்டுமே நிரந்தர நிவாரணம் தரும்.இன்னும் உடலினுள் ஏற்படுகிற பலவகையான இன்ஃபெக்*ஷன்களின் விளைவாலும், அவை ஏற்படுத்துகிற நச்சுப் பொருட்களிள் விளைவாலும் வலி வரக்கூடும்.

    எனவே, வலி என்றதும் வயதையோ, வேலையையோ காரணம் காட்டி, வலி நிவாரணிகளைத் தேடி ஓடாமல், இனியாவது பெண்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.’’வலி என்றதும் வயதையோ, வேலையையோ காரணம் காட்டி, வலி நிவாரணிகளைத் தேடி ஓடாமல், இனியாவது பெண்கள் விழித்துக் கொள்ள வேண்டும்...


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Ragam23 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Australia
    Posts
    591

    re: வலி! - Reasons for Pains

    Very good article

    chan likes this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: வலி! - Reasons for Pains

    Very useful details.

    chan likes this.
    Jayanthy





  4. #4
    sharamsn's Avatar
    sharamsn is offline Commander's of Penmai
    Real Name
    sharmi begam
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    puducherry
    Posts
    1,344

    Re: வலி! - Reasons for Pains

    nice info...TFS

    chan likes this.
    SMILE TO SOLVE PROBLEM

    SILENCE TO AVOID PROBLEM

    sharmi begam...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter