ஸ்ட்ரெஸ்-ஆரஞ்சுப் பழமும் மன அமைதியும்!

மனரீதியான கஷ்டங்களை கொடுப்பதோடு நின்றுவிடாமல் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதிலும், நோய்களை உண்டாக்குவதிலும் அதிக செல்வாக்கு செலுத்துகிறது மன அழுத்தம். மன அழுத்தத்தின்போது அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் பருமனும் இன்னொரு முக்கியமான பிரச்னை. இந்த சிக்கலான நிலைமையில் மன அழுத்தத்தை நிர்வகிக்க நிரூபிக்கப்பட்ட நான்கு வழிகளைக் கூறுகிறார்கள் நிபுணர்கள். முயற்சித்துப் பாருங்கள்.

ஆரஞ்சு ஒன்று போதுமே!

அதிக மன அழுத்தமாக இருக்கிறதா? ஆரஞ்சுப் பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். நிதானமாக தோலை உறித்து சாப்பிடுங்கள். இது தியானம் செய்வதுபோல மனதை அமைதியாக்கும் செயல். முக்கியமாக, ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் சிட்ரஸ் அமிலமும், அதன் சுகமான நறுமணமும் அமைதியான மனநிலையைத் தருகிறது என்கிறார்கள் ஆஸ்திரிய நாட்டின் வியன்னா பல்கலைக்கழகத்தினர்.


மதிய உணவைக் கண்காணியுங்கள்

மனதளவில் சோர்வாக இருக்கும்போது அதிகம் சாப்பிடும் வேட்கை எழுவதைக் கவனித்திருக்கிறீர்களா? இதுபோன்ற மன அழுத்தம் மிகுந்த நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் மதிய உணவின்போது சற்று அதிகமாகவே சாப்பிடுவோம் என்பதால் மன அழுத்தத்துடன் மதிய உணவு சாப்பிடக் கூடாது என்கிறார்கள். நிதானமான மனநிலையோடு சாப்பிடுகிறவர்கள் மன அழுத்தம் கொண்டவர்களைவிட 30 சதவிகிதம் குறைவாக சாப்பிடுகிறார்களாம்.

காலணிகளோடு கவலைகளையும்

கழற்றிவிடுங்கள்பள்ளியிலிருந்தோ, அலுவலகத்திலிருந்தோ வீட்டுக்குச் சென்றவுடனே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அந்த நேரத்தில் கொஞ்சம் அலர்ட் ஆகிவிடுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள். நொறுக்குத் தீனிகளுக்கு நாம் பலியாகும் நேரம் அது. அதனால் காலணிகளைக் கழட்டிவிடும்போதே, கவலைகளையும் கழட்டிவிடுவது நல்லது. இதில் உடனடியாக நாம் செய்ய வேண்டிய இன்னொரு தந்திரம், ஆடைகளை மாற்றி ரெஃப்ரஷ் ஆகிவிட்டால் அதிகம் சாப்பிடத் தோன்றாது என்கிறார்கள்.

வெப்பத்திலும் இருக்கிறது விஷயம் American clinical and climatological என்கிற அமைப்பு, உடலின் வெப்பநிலை அதிகமாகும்போது உடலின் மெட்டபாலிசமும் அதிகமாகி எக்ஸ்ட்ரா கலோரிகளை செலவழித்துவிடுகிறது என்று கூறியிருக்கிறது. இதன் மூலம் எடை குறைய வாய்ப்பு அதிகம். அதனால், குளிரான நேரங்களில் சாப்பிடுவதிலும் கொஞ்சம் கவனமாக இருப்பது பலன் தரும்!


Similar Threads: