பாதங்களில் மிகை வியர்வை
ஏன், இப்படி?

வியர்வை என்பது ஆரோக்கியமான விஷயம் தான் என்றாலும், அதீத வியர்வையும் அது உண்டாக்கும் நாற்றமும் அடுத்தவரை முகம் சுளிக்கவே செய்யும். அதிலும் சிலருக்கு பாதங்களின் அடிப்பாகத்தில் அதிக அளவில் வியர்க்கும்.

இதனால் க்கள் அணியும்போது வியர்வை துர்நாற்றம் ஏற்படுவதால் பணியிடங்களிலும் வெளியிடங்களிலும் மற்றவர்களோடு பழகவே கூச்சப்படுவார்கள். மிகைவியர்வைக்கான காரணங் களையும் அதற்கான பராமரிப்பு முறைகளையும் விளக்குகிறார் பாத நோய் நிபுணர் டாக்டர் ராஜேஷ் கேசவன்.

“அதிக அளவில் வியர்ப்பதை ஹைப்பர்ஹைட்ராசிஸ் (Hyperhidrosis) என்று கூறுகிறோம். பொதுவாக வெயிலில் வெளியே செல்லும்போதும் உடல் வெப்ப நிலை அதிகரிக்கும் போதும் குளிர்ச்சிப் படுத்திக் கொள்வதற்காகவே இயற்கையாக நம் உடல் வியர்க்கத் தொடங்கும். உடலின் தேவைக்கு அதிகமாக வியர்ப்பதையே ‘மிகை வியர்வை’ என்று சொல்லப்படுகிறது.

மிகை வியர்வை பிரச்னை உள்ளவர்களுக்கு எந்நேரமும் அதிக அளவில் வியர்வை வெளியேறும். பெண்களைவிட ஆண்களில் இளம்பருவ வயதினருக்கே மிகை வியர்வை உண்டாகிறது. ஒவ்வொருவருக்கும் வியர்த்தல் பகுதி வேறுபடும். அதில் சிலருக்கு அடிப்பாதங்களில் அதிக அளவில் வியர்வை சுரக்கும். இது மரபு வழிக் காரணத்தாலும் இருக்கலாம் . வேறு நோய்களுக்காக மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கும் ஃபுட் சப்ளிமென்ட் எடுத்துக் கொள்பவர்களுக்கும் மிகை வியர்வை உண்டாகிறது.

இவர்களின் அடிப்பாதங்கள் எப்போதுமே ஈரப்பதத்துடன் இருப்பதால் க்கள் அணிபவர்களின் சாக்ஸ்கள் ஈரமாகிவிடும். பாதங்கள் ஊறி வெளிறிக் காணப்படும். பாதங்களில் மேல் சருமம் உரிந்து வெடிப்புகள் உண்டாவதால் அதில் தொற்றுகள் உண்டாகி அரிப்பு ஏற்படும். அதன் காரணமாக துர்நாற்றம் வீசத் தொடங்கும்.

தங்கள் பாதங்களில் எப்போதும் துர்நாற்றம் வீசுவதால் இவர்கள் தாழ்வுணர்ச்சியால் தனிமைப்படுகிறார்கள். குறிப்பாக இளம்பருவ வயதில் உள்ளவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்” என்று கூறும் மருத்துவர், இவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை சொல்கிறார்.

“பாதங்களை சுகாதாரமான முறையில் பராமரித்தல் அவசியம். தினமும் பாதங்கள் மற்றும் விரல் இடுக்குகளில் ஆன்ட்டி பேக்டீரியல் சோப் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். பிறகு சுத்தமான டவலினால் துடைத்து நன்கு உலரவிட்டு பின் பாதங்களுக்கென்றே விற்கப்படும் பவுடர் அல்லது ஆன்ட்டி ஃபங்கல் (Antifungal) பவுடர் போட வேண்டும். தரமான ஈரத்தை உறிஞ்சக்கூடிய சாக்ஸ்களை அணிய வேண்டும்.

அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் நாள் முழுவதும் ஒரே சாக்ஸ்களை அணியாமல், எப்போதும் ஒரு ஜோடி சாக்ஸ்களை உடன் வைத்திருக்க வேண்டும். அவற்றை உணவு இடைவேளைகளின் போது மாற்றிக் கொள்வது நல்லது. முடிந்தால் ட்ரையர் உபயோகித்து கால்களை உலரச் செய்யலாம்.

மேற்கூறிய முறைகள் பயனளிக்கவில்லை என்றால், மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். படிப்படியாக மூன்று நிலைகளில் சிகிச்சை அளிக்கப்படும். ஆரம்ப சிகிச்சையாக வியர்வை உண்டாவதை குறைக்கும் அல்லது தடுக்கக்கூடிய ஆன்ட்டிபெர்ஸ்பிரன்ட்ஸ் (Antiperspirants) களிம்புகள் மற்றும் கிரீம்களை பாதங்களில் மேல் பூச்சாக தடவ கொடுக்கப்படுகிறது. வியர்வைச் சுரப்பிகளால் இந்த மருந்து உறிஞ்சப்பட்டு உடலினுள் ஊடுருவும் போது வியர்வை உண்டாவது நின்றுவிடும்.

அடுத்த கட்ட சிகிச்சையாக, ஐயன்டோபோரேசிஸ் (Iontophoresis) என்ற சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது. இம்முறையில், பாதங்களை நீரில் படும்படி வைத்து அந்த நீரில் குறைந்தழுத்த மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. இப்படி பாயும் மின்சாரம் வியர்வை சுரப்பிகளின் வேலையை தற்காலிகமாக நிறுத்துகிறது. இந்த சிகிச்சை முறையால் பலருக்கு வியர்க்கும் தன்மை வெகுவாக குறைகிறது.

மூன்றாவது சிகிச்சை முறையில், போட்டுலினம் டாக்ஸின் (Botulinum toxin) மருந்தை ஊசிமூலம் பாதங்களில் செலுத்தப்படுகிறது. இது வியர்வை சுரப்பிகளை தூண்டக்கூடிய ரசாயனப் பொருள் உற்பத்தியை தடுக்கிறது. இதனால் மிகை வியர்வை கட்டுப்படுகிறது” என்கிறார் டாக்டர் ராஜேஷ் கேசவன்.அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் நாள் முழுவதும் ஒரே சாக்ஸ்களை அணியாமல், எப்போதும் ஒரு ஜோடி சாக்ஸ்களை உடன் வைத்திருக்க வேண்டும். அவற்றை உணவு இடைவேளைகளின் போது மாற்றிக் கொள்வது நல்லது.




Similar Threads: