மார்கழி காற்று உடலுக்கு நல்லது
மார்கழி மாதமே பனிக்கும், பஜனைக்கும் தான் சொந்தம். கோவில்களில் ஒலிக்கும் சுப்ரபாத இசைக்கு மயங்கும் உள்ளங்களால், தூக்கத்துக்கு இடம் கொடுக்கவே முடியாது.

தூக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, மற்றொரு காரணம் தேவைப்படுமானால், கோலம் போடும் நிகழ்வாகத்தான் இருக்க முடியும். அதுவரை, கோலம் போடத் தெரியாத பெண்கள் கூட, தட்டுத்தடுமாறி, புள்ளி வைத்து வண்ணக் கோலமிட விரும்புவர்.

இந்த கலாசாரத்தை கட்டாயப்படுத்தியதற்கு பல காரணங்கள் உண்டு. ஆரோக்கியம் சார்ந்த விஷயத்துக்கும், கோலம் போடுவதற்கும் பல தொடர்புகள் உள்ளன. பொதுவாக பெண்கள், குடும்பத்தின் மீது காட்டும் அக்கறையை, தன் மீது காட்டுவதில்லை. இதற்கு வாய்ப்பளிக்க, கொண்டு வரப்பட்டதே, மார்கழி கோலம் போடும் பழக்கமாம்.

இம்மாதத்தில், ஓசோன் படலத்தில் இருந்து, ஆக்ஸிஜன் அதிகளவில் வெளிப்படுகிறது. அதை சுவாசிப்பது நுரையீரலுக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சி தருகிறது. குனிந்து கோலம் போடுவதால், உடலில் உள்ள நரம்புகள் வலுவடையும்.

இதனால், பெண்களுக்கான கர்ப்பப்பை சம்மந்தமான, நோய்கள் கூட குணமடையும் என்பது மருத்துவ ரீதியான உண்மை. இந்த கோலத் தை, பச்சரிசி மாவால் இட்டு போடும் பட்சத்தில், எறும்பு உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு உணவு கிடைக்கும்.

இந்த சமயத்தில், அதிக குளிரால், காளான் தொற்று, வைரஸ், பாக்டீரியா கிருமிகளால், எளிதில் நோய் பரவும் அபாயமுள்ளது. இதை தடுக்க, சாணம் தெளிப்பதும், வீட்டை சுத்தப்படுத்துவதும் அவசியம்.

தற்போது மேற்கத்திய கலாசார நுகர்வால், பாரம்பரிய பழக்க வழக்கங்கள், காரணம் அறியாமலே ஒதுக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. இனியாவது, அதிகாலையில் மாசுபடாத காற்றை சுவாசிக்கலாமா?