டூத் வொயிட்டனிங் 10 உண்மைகள்


`டூ
த் வொயிட்டனிங்’ என்பது பல்லின் வெளிப்புறத்தில் எனாமல் நிறத்தை மேம்படுத்தும் ‘ப்ளீச்சிங்’ சிகிச்சை. ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் கார்பமைடு பெராக்ஸைடு என்ற இரண்டு ரசாயனங்களைக்கொண்டு இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.

மருத்துவமனையில் செய்யப்படுவது மற்றும் வீட்டிலேயே செய்யப்படுவது என, இரண்டு முறைகளில் டூத் வொயிட்டனிங் செய்யப்படுகிறது. பல்லின் தரம், நிற மாற்றத்தின் காரணங்கள், சென்சிடிவிட்டியைப் பொறுத்து சிகிச்சை முடிவு செய்யப்படும்.

தண்ணீரில் ஃபுளோரைடு ரசாயனம் இருக்கிறது. இதுதான் பற்களின் நிற மாற்றத்துக்குக் காரணம். அதிக அளவில் ஃபுளோரைடு கலந்திருக்கும்போது, அது பற்களை உருவாக்கக்கூடிய ஹைட்ராக்சிஅப்படைட் மூலக்கூறுகளைப் பாதித்து, பற்களின் நிறத்தை மாற்றுகிறது.

வெளிர்நிறம் முதல் அடர் நிறம் வரை பற்களின் தன்மையைப் பொறுத்து நிறங்கள் மாற்றப்படும். என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்பதை டாக்டர் முடிவு செய்வார்.

டூத் வொயிட்டனிங் என்பது, பார்லரில் செய்யக்கூடிய ஃபேஷியல், ப்ளீச்சிங் போன்று பல் மருத்துவர் செய்யும் சிகிச்சையே. சிகிச்சைக்குப் பிறகு இருக்கக்கூடிய வெண்மை தற்காலிகமே. நம் பராமரிப்பைப் பொறுத்து, 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரைகூட வெண்மை நிறம் மாறாமல் இருக்கும்.

கர்ப்பிணிகள் டெட்ராசைக்கிளின் என்ற ஆன்டிபயாடிக் மருந்தைப் பயன்படுத்துவதாலும், பற்களில் அடிபட்டு அதன் வேர்ப் பகுதி கெட்டு இருந்தாலும், வயது முதிர்ச்சியாலும், பற்களின் எனாமல் தேயும்போதும், காபி, டீ, உணவுகளில் சேர்க்கப்படும் ஃபுட் கலர்ஸ், புகைபிடித்தல், அழுக்குகள் சேரும்போது உருவாகக்கூடிய பாக்டீரியாவினாலும் பற்களின் நிறம் மாறக்கூடும்.

பற்களை ப்ளீச்சிங் செய்வதற்குப் பதிலாக, `வெநீர்’ (Veneer) என்கிற பற்களுக்கு மேல் செராமிக் பயன்படுத்தி மிக மெல்லிய ஓடு போன்ற அமைப்பை உருவாக்கும் சிகிச்சை செய்வதன் மூலம் இயற்கை அழகைப் பெறலாம்; பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம்.

கர்ப்பிணிகளும், பால் கொடுக்கும் தாய்மார்களும், பெராக்ஸைடு அலர்ஜி இருப்பவர்களும் டூத் வொயிட்டனிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

வீட்டிலேயே டூத் வொயிட்டனிங் செய்ய முடியும் என்றாலும், இதற்காகப் பயன்படுத்தக்கூடிய மருந்துகளால் வாந்தி, குமட்டல், வயிற்று வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மருத்துவர் பரிந்துரையின்படி செயல்படுவது நல்லது.

டூத் வொயிட்டனிங் பற்பசைகள் இப்போது கிடைக்கின்றன. இந்த பற்பசை அனைவருக்கும் ஏற்றது அல்ல. இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துவதால், பற்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.


Similar Threads: