Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By chan

காய்ச்சல் வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகர&


Discussions on "காய்ச்சல் வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகர&" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    காய்ச்சல் வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகர&

    காய்ச்சல் வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?


    நோய் வருவது நல்லது; அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது ஒரு தரப்பினரின் வாதம். சாதாரண காய்ச்சலோ... டைபாய்டோ... நோயில் படுத்து எழுந்தவருக்கு அதற்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையை பரவலாகவே பார்க்கலாம். அது எந்தளவுக்கு நிஜம்? விளக்கம் அளிக்கிறார் மகளிர் நலன் மற்றும் பொதுநல மருத்துவர் நிரஞ்சனா தேவி...

    ``காய்ச்சல் வந்த பின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதில் சிறிதளவும் உண்மையில்லை. இது ஒரு மூடநம்பிக்கை. ஒருவருக்கு சாதாரண காய்ச்சல் வந்தாலே உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி குறையுமே தவிர, அதிகரிக்க வாய்ப்பே இல்லை. இதற்கு குழந்தைகள் முதல் பெரியவர் என யாரும் விதிவிலக்கல்ல.

    ஒருவர் சிறு காய்ச்சல் உட்பட அம்மை நோய், தட்டம்மை நோய் காரணமாக அவதிப்பட்டால்கூட அவருக்கு மருந்து, மாத்திரைகள் தரக்கூடாது... ஊசி போட்டுக்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு இன்றும் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது. ஆனால், அப்படி செய்யக்கூடாது. இதுமாதிரியான நேரங்களில்தான் பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ சிகிச்சைகள் அதிக அளவில் தேவைப்படும். ஏனென்றால் கிருமி தொற்று, நோய் காரணமாக அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே குறைய ஆரம்பித்து விடும். இதனால் நிமோனியா போன்ற நோய்கள் வரலாம். மேலும் நுரையீரல் பாதிப்பு அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. குடலில் பூச்சிகள் வரலாம். வயிற்றுப்போக்கும் வரும்.

    தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் 5 நாட்கள் கண்டிப்பாக வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். சின்னம்மை காரணமாக உடலில் சிறுசிறு கொப்புளங்கள் ஏற்படும். இவற்றில் உள்ள நீரில் ஏராளமான நுண்கிருமிகள் காணப்படும். இவை மற்றவர்களுக்குப் பரவும். எனவே சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் இருபத்தியொரு நாட்கள் ஓய்வில் இருப்பது நல்லது. இவர்கள் வேப்பிலையைப் படுக்கையின் மீது போட்டு படுக்கவும், குளிப்பதற்கும் வேப்பிலையை அவசியம் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் இந்த நோய்களில் இருந்து சீக்கிரம் குணமாக முடியும். ஒருவருக்கு சின்னம்மை வந்து குணமானபின், மறுபடியும் வாழ்நாள் முழுவதும் அவருக்கு இந்த நோய் வராது. ஆனால், தட்டம்மை ஒருமுறை வந்துவிட்டால் மறுபடியும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இளம்பிள்ளை வாதம் (Polio), ரணஜன்னி (Tetanus) போன்ற நோய்களுக்கான உரிய தடுப்பு மருந்துகள் மற்றும் ஊசிகளைப் போட்டுக்கொண்டால் இந்த நோய்கள் வராது என்ற நம்பிக்கையுடன் இருக்கலாம்.

    எனவே நோய் குணமானபின், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கவனக்குறைவாக இருந்துவிடாமல், என்ன நோய், அதன் தீவிரம் ஆகியவற்றை தெரிந்துகொண்டு மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.’’

    காய்ச்சல் வந்தவர்களுக்கு கிருமி தொற்று, நோய் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே குறைய ஆரம்பித்து விடும். இதனால் நிமோனியா போன்ற நோய்கள் வரலாம். மேலும் நுரையீரல் பாதிப்பு அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. குடலில் பூச்சிகள் வரலாம். வயிற்றுப்போக்கும் வரும்.


    Similar Threads:

    Sponsored Links
    sumitra and chitra.k like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: காய்ச்சல் வந்தால் எதிர்ப்பு சக்தி அதிக

    Very good information about fever! thank you!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter