நடை நல்லது!


ஓ போடு... எட்டு போடு!

`Walking is man’s best medicine’ என்பார்கள். எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பது, நீரிழிவைக் கட்டுப்படுத்துவது, இதய ஆரோக்கியத்துக்கு உதவுவது, வளர்சிதை மாற்றத்தை சீராக்குவது, எலும்புகளைப் பலப்படுத்துவது, ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருப்பது, நல்ல தூக்கத்துக்குக் காரணமாவது, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது, மன அழுத்தத்தை விரட்டுவது... இப்படி நடைப்பயிற்சியின் நன்மைகளை நீட்டிக் கொண்டே போகலாம்.எல்லாம் சரிதான்... எல்லா நாட்களும் வீட்டை விட்டு வெளியே இறங்கி வாக்கிங் செல்ல முடியாதவர்கள் என்ன செய்வது? மழை, குளிர் காலங்களில் தவறவிடுகிற வாக்கிங் பழக்கத்தை எப்படி ஈடுகட்டுவது என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. எட்டு நடைப்பயிற்சி என்கிற ஒன்றை தீர்வாகச் சொல்கிறார் அக்குபங்சர் நிபுணர் ஈஸ்வரி ரகு.இந்த எட்டு நடை கொரியா, தைவான், ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் உபயோகத்தில் உள்ளது. Whang Shujin Bagua Zhang (வாங் ஷுஜின் பாகுவா ஜங்) என்ற பெயரில் அங்கு இந்த நடைப்பயிற்சியை முறையாக கற்றுக்கொடுக்கிறார்கள். நம்ம நாட்டிலும் ‘இரு, ஒரு எட்டு நடந்திட்டு வந்திடறேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான் ஒரு எட்டு போய் வந்திறேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி தவறான புரிதல் என்றே தோன்றுகிறது’’ என்கிற ஈஸ்வரி, எட்டு நடை செய்யும் முறைகளையும் விளக்குகிறார்.

``வீட்டிலேயே காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும் இடமாக தேர்வு செய்து ஆறு அடி விட்டமுள்ள இரு வட்டங்களை ஒன்றை ஒன்று தொட்டிருக்கும் படியாக எட்டு (8) வடிவில் தரையில் வரைந்து கொள்ள வேண்டும். அந்த பாதையில் கூழாங்கற்களை பதித்தால் பலன் இன்னும் அதிகம். அக்குபிரஷரை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த நடைப்பயிற்சி அமைந்திருக்கிறது. பாதையில் செய்யும் நடைப்பயிற்சியில் கவனச் சிதறல் இருக்கும். மற்றவர்கள் மீதும் வாகனங்கள் மீதும் கவனம் போகும். நம்மோடு பாதையில் நடைப்பயிற்சி செய்பவர்கள் இருந்தால் அவர்களோடு பேசுவது டீ, காபி குடிப்பது என்று பல இடையூறுகள் வரும். எட்டு வடிவ நடைப்பயிற்சியிலோ கவனச் சிதறல்களும் இடையூறுகளும் இருக்காது.

எட்டு நடையால் என்ன பலன்?

தினசரி இந்தப் பயிற்சி செய்வதால் அதிக தொல்லை தரும் நோய்கள் நம் உடலை விட்டு வெளியேறும். பாதங்களும் கால்களும் பலம் பெறும். இப்பயிற்சியால், குதிகால் முதல் உச்சந்தலை வரை பயன் பெறுகிறது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிக்கு இது மிகச் சிறந்த நிவாரணி. கண் பார்வை மற்றும் செவித் திறன் அதிகரிக்கும். உடலினுள் செல்லும் பிராண வாயுவால் உடல் சக்தி பெறும். சுவாசம் தொடர்பான கோளாறுகள் உடலில் இருந்து வெளியேறும். மனமும் சுவாசமும் சீரடைவதால் ரத்த ஓட்டமும் சீராக நடைபெறும். குடலிறக்க நோயும் இதனால் குணமாகும்.ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், தலைவலி, மலச்சிக்கல், மூட்டுவலி, தூக்கமின்மை என எல்லா நோய்களும் எந்தவிதமான மருந்து, மாத்திரைகளும் இல்லாமலே முற்றிலும் குணமாகும் என்பது அனுபவப்பூர்வ உண்மை. தொடர்ந்து 30 நிமிடங்கள் எட்டு நடைப்பயிற்சி செய்வதால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் எட்டு போன்ற திருப்பத்தில் காலடி எடுத்து வைக்கும் போதும் உடல் சிறிது திருப்பம் அடைகிறது. உடலின் எல்லாப் பகுதிகளும் சமமான அசைவுக்கு உட்படுகின்றன. சாதாரண நடைப்பயிற்சியால் உண்டாகும் உடல் சோர்வு, இந்த எட்டு நடையில் இருக்காது. எட்டு நடை அரைமணி நேரம் நடந்தால், 3 கிலோமீட்டர் தூரம் நடந்ததுக்கு சமம். நேராக நடந்துவிட்டு வருவதை விட, எட்டு நடையால் கிடைக்கும் பலன்கள் அதிகம். வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது என்றிருக்கும் பிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே (அ) வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே நடப்பதற்கு மிக அற்புதமானதொரு பயிற்சி இது.

எட்டு’ நடைப்பயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்வதால் மூட்டு வலியும், ரத்த அழுத்தமும், ஒரு மணி நேரம் செய்தால் நீரிழிவில் இருந்தும் தப்பிக்கலாம். மற்ற நடைப்பயிற்சியை விட நான்கு மடங்கு இது சிறந்தது. இப்பயிற்சியால் மன அழுத்தமும் குறையும். தினமும் எட்டு நடை முறைப்படி செய்தால், நோய் எட்ட நிற்கும்!’’

பாதையில் செய்யும் நடைப்பயிற்சியில் கவனச் சிதறல் இருக்கும். மற்றவர்கள் மீதும் வாகனங்கள் மீதும் கவனம் போகும். நம்மோடு பாதையில் நடைப்பயிற்சி செய்பவர்கள் இருந்தால் அவர்களோடு பேசுவது, டீ, காபி குடிப்பது என்று பல இடையூறுகள் வரும். எட்டு வடிவ நடைப்பயிற்சியிலோ அவ்வாறான கவனச் சிதறல்கள் இருக்காது.

ஒவ்வொரு முறையும் எட்டு போன்ற திருப்பத்தில் காலடி எடுத்து வைக்கும் போதும் உடல் சிறிது திருப்பம் அடைகிறது. உடலின் எல்லாப் பகுதிகளும் சமமான அசைவுக்கு உட்படுகின்றன. சாதாரண நடைப்பயிற்சியால் உண்டாகும் சோர்வு, இந்த எட்டு நடையில் இருக்காது.