Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

கதவைத் திற... காற்று வரட்டும்!


Discussions on "கதவைத் திற... காற்று வரட்டும்!" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கதவைத் திற... காற்று வரட்டும்!

    கதவைத் திற... காற்று வரட்டும்!


    சுவாசம்

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆக்ஸிஜன் அவசியம். திறந்த வெளியிலும் குளுமையான காற்றிலும் இயற்கையாகவே ஆக்ஸிஜன் உள்ளது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் காற்றோட்டம் இல்லாத இடங்களில் படுத்து உறங்குவது சிலரது வழக்கம். இது நுரையீரலுக்கு நல்லதல்ல என்கிறார் சுவாச நோய்கள் சிறப்பு மருத்துவரான திருப்பதி.

    ``ஒரு நபர் மூச்சு விடுவதற்கு 100 மி.லி. ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஒரு நிமிடத்துக்கு 1200 மி.லி. அளவு ஆக்ஸிஜன் தேவை. இது நல்ல உடல்நலம் உள்ள மனிதர்களுக்கு பொருந்தும். நுரையீரலில் பிரச்னை எதுவும் இருந்தால், இந்த அளவானது அதிகரிக்கும். உயரம் அதிகமுள்ள மலைவாழிடங்களில் வழக்கமான அளவுக்கு சற்று அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படும். காற்றோட்டம் இல்லாத அறையில் படுத்தால் கூட அங்கே
    ஆக்ஸிஜன் ஓரளவு இருந்தே தீரும்.

    இதை`ஏர் லீக்’ என்போம். முழுவதுமாக மூடப்பட்ட அறையில் கூட ஆக்ஸிஜன் இருக்கும். 2-3 நாட்கள் அதே அறையில் இருந்தால் உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து, வெளிவரும் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்.

    பூட்டிய அறைகளில் ரேடான் எனப்படும் நச்சு வாயு இருக்கும். பூட்டிய அறையில் ஒரு மனிதர் இருக்கும் போது இந்த ரேடான் நச்சு வாயுவின் அளவும், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற தேவையற்ற வாயுக்களின் அளவும் அதிகரிக்கும். இந்த சூழலில் உறங்குபவர்களுக்கு நாள் முழுவதும் சோர்வாக இருக்கும். நுரையீரல் பாதிப்பு அதிகரிப்பதுடன், காலப்போக்கில் நுரையீரல் கேன்சர் வரும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.

    வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ள அறையில் படுத்துத் தூங்குவதுதான் ஆரோக்கியமானது. காற்றோட்டம் இல்லாத அறைகளில் பூஞ்சை, பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் வாழும். இவையும் நுரையீரலை பாதித்து நோய்த்தொற்றை உருவாக்கும். சில வீடுகளில் கொசுத் தொல்லைக்காக ஜன்னலை மூடி விட்டு படுப்பார்கள். இதுவும் தவறானது.

    கொசுவலை அடித்து விட்டு ஜன்னலை திறந்து வைப்பதே நல்லது. படுக்கையறையில் ஏ.சி. வைத்திருப்பவர்கள் எல்லா ஜன்னல்களையும் மூடி வைத்திருப்பார்கள். இதனால் கூட அறையில் உள்ள ஆக்ஸிஜன் குறையும்.

    அதனால் பகல் நேரத்தில் அந்த அறையின் ஜன்னல்களை திறந்து வைத்து, காற்றோட்டத்துக்கு வழி செய்ய வேண்டும். வீட்டுக்குள் வளர்க்கும் துளசி போன்ற செடிகளால் கூட ஆக்ஸிஜனின் அளவு அதிகமாகும். காற்றை சுத்தப்படுத்தும் ஏர் ஃபில்டர்களை பயன்படுத்தினால் ஓரளவு பயன் கிடைக்கும். வீட்டுக்குள் சில மூலிகைச் செடி கொடிகளை வளர்ப்பதும் நல்ல பயன் தரும்.’’

    சில வீடுகளில் கொசுத் தொல்லைக்காக ஜன்னலை மூடி விட்டு படுப்பார்கள். இதுவும் தவறானது. ஜன்னல்களுக்கு கொசுவலை அடித்து விட்டு ஜன்னலை திறந்து வைப்பதே நல்லது. படுக்கைஅறையில் ஏ.சி. வைத்திருப்பவர்கள் எல்லா ஜன்னல்களையும் மூடி வைத்திருப்பார்கள். இதனால் கூட அறையில் உள்ள ஆக்ஸிஜன் குறையும்...



    Sponsored Links
    Last edited by chan; 17th Mar 2016 at 04:05 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter