Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine October! | All Issues

User Tag List

No Hungry Pills!-பசியா மருந்து


Discussions on "No Hungry Pills!-பசியா மருந்து" in "Health" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  15,932

  No Hungry Pills!-பசியா மருந்து

  பசியா மருந்து

  ‘நாரதரே... இது என்ன புதுக்குழப்பம்?’ என்று புலம்பும் கண்டுபிடிப்பை நடத்தியிருக்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.நம் மூளையின் பின்பக்கம் இருக்கிறது ஹைப்போதலாமஸ் என்ற பகுதி. வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு, ‘அப்பாடா போதும்’ என்று உணர்ந்து திருப்தியாகக் காரணம் இந்த ஹைப்போதலாமஸ்தான். மூளையின் இந்த பலவீனத்தை உணர்ந்த ஆய்வாளர்கள், ஒரு மாத்திரையின் மூலம் பசியை மறப்பதற்காகக் கண்டுபிடித்திருப்பதுதான் No Hungry Pills!


  இங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்களின் தயாரிப்பான இந்த மாத்திரை, 24 மணி நேரத்துக்கு பசியின்மையை ஏற்படுத்தக்கூடியது. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரலாம் என்ற சூழ்நிலையில், இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவரான பாசுமணியிடம் NHP பற்றி பேசினோம்.

  ‘‘எடையைக் குறைக்கவும், பசியை மறக்கவும் பல்வேறு ஆரோக்கியக் கேடான முயற்சி கள் உலகம் முழுக்கவே நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் NHP மாத்திரையும். உணவைப் பற்றிய நம்முடைய தவறான அபிப்பிராயத்தையே இந்த மாத்திரை உணர்த்துகிறது. உணவு என்றவுடன் பலரும் கலோரிகளை மட்டுமே நினைக்கிறார்கள். வெறுமனே எனர்ஜிக்காக மட்டுமே சாப்பிடுகிறோம் என்றும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

  கார்போஹைட்ரேட், புரதம், ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நீர்ச்சத்து என பல்வேறு தேவைகளும் காரணங்களும் உணவின் பின்னால் இருக்கின்றன. அவற்றை ஒரு மாத்திரையை வைத்து சமன் செய்துவிட முடியாது. உணவினால் கிடைக்கும் சத்துகள் அனைத்தையும் இழக்கவேண்டியிருக்கும்.

  உணவு மட்டுமே பருமனை உண்டாக்குகிறது என்பதும் தவறான கருத்து. ஹார்மோன் கோளாறுகள், மருந்துகள் எடுத்துக் கொள்வது, மரபியல் என்று உடல்நிலை சார்ந்த பல்வேறு காரணங்கள் பருமனுக்கு உண்டு. அந்த அடிப்படை காரணத்தைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

  போதுமான உணவு உடலுக்குக் கிடைக்காததால் மனச்சோர்வு, கோபம் போன்ற மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதுடன், குடல் மற்றும் இரைப்பை மண்டலங்களும் தங்களுடைய செயல்திறனை இழக்கும். பசியை மழுங்கடிப்பதால் ரத்த அழுத்தம், பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொட்டாசியம் சத்துக்குறைபாடு ஏற்பட்டால் இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பே ஏற்படலாம்.

  இந்த மாத்திரையை நிறுத்திவிட்டால், முன்பைவிட உடல் எடை அதிகமாகும் அபாயமும் உண்டு. எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் சரிவிகித உணவு, சரியான உடற்பயிற்சி என முறையான வழியைப் பின்பற்றுவதே நல்லது. NHP போன்ற குறுக்குவழிகள் தற்காலிகமாகப் பலன் தந்தாலும் மோசமான பின்விளைவுகளையே நிரந்தரமாகத் தரும்!’’


  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  11,731

  Re: No Hungry Pills!-பசியா மருந்து

  Aiyo idhu enna ippadi ellam tablet kandu pidichi irukkanga andava


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter
<--viglink-->