Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

வந்ததே கோடை வாட்டுதே நம்மை


Discussions on "வந்ததே கோடை வாட்டுதே நம்மை" in "Health" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  வந்ததே கோடை வாட்டுதே நம்மை

  வந்ததே கோடை வாட்டுதே நம்மை


  தேவை அதிக கவனம்

  கடந்த வருட மழையும் வெள்ளமும் அப்போதே கிளப்பிவிட்ட பீதிகளில் ஒன்று - அடுத்து வரப்போகிற வெயில் காலத்தைப் பற்றியது. கொட்டித் தீர்த்த மழைக்கும் அடித்து ஓய்ந்த வெள்ளத்துக்கும் சற்றும் குறைவில்லாமல் கொளுத்தப் போகிறது வெயில் என ஆரூடம் ஆரம்பமானது அப்போதே.

  அதை உண்மையாக்கும் வகையில் ஜனவரியின் மத்தியில் இருந்தே வெயில் வாட்டத் தொடங்கியது. சென்ற வருடம் ஆந்திராவில் உச்சபட்ச வெயிலின் கொடுமையால் மக்களில் பலர் இறந்தனர்.

  அந்த அளவு வெயிலின் கொடுமை தமிழ்நாட்டில் இல்லை என்றாலும், பயமின்றி நிம்மதியாக இருக்க முடியாத நிலைதான் நமக்கும். இந்த கோடை வெயில் எப்படி இருக்கும்? குழந்தைகள் முதல் முதியோர் வரை கோடையின் கொடுமையிலிருந்து எப்படித் தற்காத்துக் கொள்ளலாம்? விளக்கமளிக்கிறார்கள் நிபுணர்கள்...

  ``இந்த வருட கோடை வெப்பம் வழக்கத்தை விட மிக அதிகமாகவே இருக்கும் என்றாலும், ஓரளவு சமாளித்துவிடலாம். ஏனென்றால், மே மாதம் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன’’ - குளிரச் செய்கிற கோடை மழைத் தகவலுடன் பேசுகிறார் பிரதீப் ஜான்.

  வானிலை ய்வுக்கட்டுரைகளை வலைத்தளத்திலும் முகநூலிலும் எழுதி வருபவர். ‘தமிழ்நாட்டின் வெதர்மேன்’ என முகநூல் நண்பர்களால் அழைக்கப்படுபவர்.
  சென்னையை புரட்டிப் போட்ட மழையின் போது, இவர் முகநூல் பக்கத்தில் எழுதிய வானிலை முன்னோட்டம் பல்வேறுபட்ட மக்களுக்கும் பயன்பட்டது.

  ``ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களைத்தான் கோடைகாலம் எனச் சொல்வோம். பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருக்கும் வெப்பம், ஜூன் மாதத்தில் குறைந்துவிடும். இருந்தாலும், ஜூன் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், கசகசப்பு இருந்துகொண்டே இருக்கும். ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வானத்தில் மேகங்களின் அளவு குறைவாக இருக்கும்.

  இதனால் இரவுநேர வெப்பநிலையும் அதிகமாக இருக்கும். சென்னையில் இரவு வெப்பநிலையே 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. எனவேதான் இரவு புழுக்கமும் வியர்வையும் அதிகமாக இருக்கிறது. ஏப்ரலில் அதிக பட்சம் சென்னையை பொறுத்தவரை 37 டிகிரி செல்சியஸ் வரை செல்லும்.

  மே மாதத்திலோ 43 டிகிரி செல்சியஸ் வரை செல்ல வாய்ப்புள்ளது. சென்னையில் கடற்காற்று இருப்பதால் காற்றில் ஈரப்பதம் இருக்கும். ஏப்ரல் நிலவரப்படி பார்த்தால் கூட தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளைவிட சென்னையின் வெப்பநிலை குறைவாகவே உள்ளது.

  பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பில் வெப்பநிலையில் ஏற்படும் அதிகபட்ச மாற்றம்தான் எல் நினோ. El Nino - Southern Oscillation (ENSO) என்பது இதன் விரிவாக்கம். எல் நினோ உருவாகும் போதெல்லாம் கடுமையான மழை, தாங்க முடியாத வறட்சி என எதிர்மறையான தட்பவெப்பத்தை பல பகுதிகளில் உருவாக்குகிறது. சென்னையில் ஏற்பட்ட பெருமழைக்கும், அதிக வெப்பம் கோடையில் ஏற்படும் என்பதற்கும் இதுவே காரணமாக சொல்லப்படுகிறது.

  ஆனால், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் இந்த கோடையில் வெப்பத்தின் அளவு குறைவாகத்தான் இருக்கும். அதனால் பயப்படத் தேவையில்லை. தற்காத்து கொள்ளத் தெரிந்தாலே, இக்கோடையை சமாளித்து விடலாம்...’’ என்கிறார் பிரதீப் ஜான்.

  ``இந்த கோடையில் சூரிய ஒளியில் நேரடியாக செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்...’’ என்று தொடங்கி, கோடையில் ஏற்படும் சருமப் பாதிப்புகளுக்குத் தீர்வுகள் சொல்கிறார் சரும நல மருத்துவர் ஆர்த்தி.‘‘இந்த வெயில் காரணமாக சருமம் கருத்துப் போகும். அதைத் தவிர்க்க சன் ஸ்கிரீன் லோஷன், கிரீம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். குளித்தவுடன் முகத்திலும் உடலிலும் மாய்ச்சரைசிங் கிரீம் தடவிக் கொள்ளலாம். தலைக்கு எண்ணெய் வைத்துக்கொண்டு வெயிலில் செல்லக்கூடாது.

  பூஞ்சைப் பிரச்னை உள்ளவர்கள் ஆன்டிஃபங்கல் சோப் மற்றும் ஷாம்புவை பயன்படுத்தலாம். பொடுகுத் தொல்லையும் அதிகமாக இருக்கும். வியர்க்குரு, கொப்புளங்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க சரும நல மருத்துவரிடம் ஆலோசனை செய்த பின் மட்டுமே, பவுடர், ஷாம்பு, லோஷன், கிரீம்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். காட்டன் உள்ளாடைகளையே அணிய வேண்டும்.

  அசைவம் மற்றும் வறுத்த, காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி மோர் குடிக்கலாம். நாள் முழுவதும் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளிகள், விற்பனை பிரதிநிதிகள் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது. வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ள மதிய நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதியம் 2 மணி அளவுக்கு வெப்பத்தின் அளவு உச்சத்தில் இருக்கும்.

  கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைந்து அடிக்கடி நாக்கு வறண்டு போகும். எனவே, குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் தாகம் எடுக்கும்போதெல்லாம் தண்ணீர் குடிப்பது அவசியம். நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், வெள்ளரிக்காய், பழங்கள் போன்றவற்றை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை என இருவேளை குளிப்பது நல்லது. வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் போது பெண்களும் குழந்தைகளும் வெளியே செல்லாமல் இருக்க வேண்டும்...’’ என்கிறார் டாக்டர் ஆர்த்தி.

  ``வயது ஆக ஆக உடல் பலவீனம் அடைவதில் தொடங்கி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் எனப் பலவிதமான பாதிப்பு கள் உடலில் தோன்ற ஆரம்பித்து விடும். பொதுவாக, வயதானவர்கள் உடலில் நீரின் அளவு குறைவாகவே இருக்கும். மேலும், இவர்களுக்குத் தாகம் எடுக்கும் தன்மையும் குறைந்து காணப்படும். கோடைக்காலத்தில் வயோதிகர்களுக்கு இப்பிரச்னைகள் அதிகமாகும்.

  இதன் காரணமாக, வயதானவர்கள் முழுவதும் சோர்ந்து போய் காணப்படுவார்கள். இதில் இருந்து முதியவர்களை பாதுகாப்பது அவசியம்’’ என்கிற முதியோர் நல மருத்துவர் பிரபாகரன், கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிற அதிர்ச்சித் தகவலோடு தொடர்கிறார்...

  ``நீரின் அளவு சற்று குறைந்தாலும் பலவிதமான பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வயதானவர்கள் சோர்ந்து போவார்கள். கொளுத்தும் வெயிலில் வெளியே செல்லும் முதியவர்களுக்கு மட்டுமல்ல... வீட்டின் உள்ளேயே இருக்கும் வயதானவர்களுக்கும் இப்பாதிப்பு ஏற்படலாம்.

  கோடைக்காலத்தில் அளவுக்கு அதிகமாக நீர் வெளியேறுவது காரணமாக, சிறுநீரகத்தில் தொற்று, மலச்சிக்கல், குழப்பம், சிறுநீரகத்தில் கல் உருவாதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் அதிகம். சில நேரங்களில் இவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் உண்டாகி மரணம்கூட நேரலாம். எனவே, உடலில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறுவதை மிக எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்தியாவில் கடந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் காரணமாக 2 ஆயிரத்து 500 பேர் இறந்து போனதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

  கொளுத்தும் வெயிலில் முதியவர்களின் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. உணவுப்பழக்கம், போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருத்தல், படுத்த படுக்கை யாக கிடக்கும் முதியவர்களுக்குத் தேவையான அளவு தண்ணீர் கொடுக்காமல் இருத்தல், சாப்பிடும் நேரங்களில் மட்டும் நீர் அருந்த கொடுப்பது போன்ற காரணங்களால் நீர்ச்சத்து குறைகிறது.

  மேலும், இவர்கள் பல நோய்களுக்கு சாப்பிட்டு வரும் ஒருசில மருந்து, மாத்திரைகளாலும் நீர் பற்றாக்குறை ஏற்படலாம். ஆகவே, கோடைக்காலத்தில் முதியோர், முடிந்தவரை தனியாக செல்லாமல் துணைக்கு ஒருவரை அழைத்து செல்வது பாதுகாப்பானது. வயதான காலத்தில் தாகம் எடுக்கும் தன்மை குறைவாக இருக்கும். இதை சரிசெய்ய அடிக்கடி தண்ணீர், இளநீர், ஐஸ் சேர்க்காத பழச்சாறு போன்றவற்றைக் குடித்து வருவது நல்லது...’’ என்கிறார் டாக்டர் பிரபாகரன்.

  பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருக்கும் வெப்பம், ஜூன் மாதத்தில் குறைந்துவிடும். இருந்தாலும், ஜூன் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், கசகசப்பு இருந்துகொண்டே இருக்கும்.

  வெயில் இந்தியா!

  இந்தியாவில் அதிக வெப்பம் தாக்கக் கூடிய Heat Wave Zone அபாயம் உள்ள மாநிலங்கள் இவை. பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், த்தரகாண்ட், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிஸா, தெலுங்கானா,

  ஆந்திரப்பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் மற்றும் மத்திய மகாராஷ்டிரா.தமிழ்நாட்டைக் காட்டிலும் இப்பகுதி களில் கோடையின் தாக்கம் அதிகம்.நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், வெள்ளரிக்காய், பழங்கள் போன்றவற்றை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை என இருவேளை குளிப்பது நல்லது.


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 16th Apr 2016 at 04:57 PM.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter