கணையத்தின் பணி என்ன?

கணையத்தின் பணி என்ன?

வயிற்றின் மேல் பகுதியில், இரைப்பைக்குப் பின்னால் அமைந்திருக்கும் கணையம், செரிமானத்திற்கு தேவையான முக்கிய என்சைம்களையும் ஹார்மோன்களையும் சுரக்கிறது. ரத்தத்தில் கலக்கும் குளூக்கோஸை திசுக்கள் பயன்படுத்த உதவும் இன்சுலின் ஹார்மோனும் கணையத்தில்தான் சுரக்கிறது.

கணையம் பாதிக்க காரணங்கள் என்ன?
மது அருந்துதல், புகைபிடித்தல், வீரியம் மிகுந்த சில வகையான மருந்துகளை தொடர்ந்து எடுத்து கொள்ளுதல், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரித்தல், வயிற்றில் அடிபடுதல், புற்றுநோய் என, பல காரணங்களால், கணையத்தில் பாதிப்பு ஏற்படலாம்.

கணைய பாதிப்பின் அறிகுறிகள் என்ன?
கடுமையான வயிற்று வலி, அதிகப்படியான பித்தத்தினால் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் வாந்தி, அடிக்கடி காய்ச்சல், வயிற்று உப்புசம் போன்றவை.நாள்பட்ட கணைய அழற்சியால் ஏற்படும்

முக்கிய பாதிப்பு என்ன?
நாள்பட்ட அழற்சியால், கணையம் தவிர மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படலாம். கணைய பாதிப்பால் பாதிக்கப்படும்

உறுப்புகள் என்னென்ன?
இதயம், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும், தவிர, பார்வைக் கோளாறு ஏற்பட்டு பார்வை இழப்பும் ஏற்படலாம். மூளையைப் பாதித்து நினைவு இழக்கக்கூடும். மஞ்சள் காமாலையும் வரக்கூடும்.

உடனடி கணைய அழற்சிக்கு சிகிச்சைகள் என்ன?
கணைய அழற்சியால், கணையம் சிறிதாகப் பாதிக்கப்படும் து அதை மருந்துகளால் சரிப்படுத்திவிட முடியும். ள்பட்ட கணைய அழற்சிக்கு மருந்துகள் இல்லை.

நாள்பட்ட கணைய அழற்சிக்கான சிகிச்சைகள் என்ன?
வலியைக் குறைக்கும் மருந்துகள் மட்டுமே உள்ளன. நாள்பட்ட கணைய அழற்சியில் கணையத்திலிருந்து வடியும் திரவம், ரத்தத்துடன் உடல் முழுவதும் கலந்து, மரணம் சம்பவிக்க வாய்ப்புள்ளது. கணையத்தில் உள்ள திரவங்களை ஒரு நாளில் சரிசெய்தால், பாதிக்கப்பட்டவரை காப்பாற்றிவிடலாம்.

கணைய அழற்சியால் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டா?

கணைய அழற்சி மீண்டும் மீண்டும் ஏற்படும் போது, புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. அதோடு கணையத்தில் கற்கள் தோன்றும். எனவே, கவனமாக இருப்பது அவசியம்.

கணைய அழற்சி சிகிச்சைக்கு பின், நோயாளி பின்பற்ற வேண்டிய விஷயங்கள்?

கணைய அழற்சியை தொடக்க நிலையில் கட்டுப்படுத்திய பிறகு, மீண்டும் தீவிரமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கணையம் பாதிக்கப்படும்போது, ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். எனவே, உணவில் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.

கணையம் பாதிக்காமல் தடுப்பது எப்படி?
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளையும், காரம் அதிகமுள்ள உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கமிருந்தால், அதை தவிர்க்க வேண்டும். முறையான உணவுமுறையை பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும்.

- ரவி
குடல் மற்றும் இரைப்பை நிபுணர்.சென்னை.


Similar Threads: