ஜூன் 5 - உலக புற்றுநோயில் இருந்து மீண்டோர் தினம்: புற்றுநோய்க்கு அப்புறமும் வாழ்வு உண்டு - ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுவதுமாகக் குணப்படுத்தலாம்

புற்றுநோய்க்கு அப்புறமும் வாழ்வு உண்டு என்பதை உணர்த்தவே Cancer survivor day எனப்படும் புற்றுநோயிலிருந்து மீண்டோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைப் பிடிக்கப்படுகிறது. இதை முதலில் அறிவித்தவர் மெர்லில் ஹேஸ்டிங் என்பவர். மெக்சிகோவில் 1987-ம் ஆண்டில் நடைபெற்ற புற்று நோயை எதிர்த்து வாழ்பவர்களின் மாநாட்டில் இதை அவர் அறிவித் தார். இதனைத் தொடர்ந்து 1988-ம் ஆண்டு முதல் புற்றுநோயிலிருந்து மீண்டோர் தினம் கடைப்பிடிக்கப் படுகிறது.
கேன்சர் ஒரு கொடிய நோய். அதை குணப்படுத்த முடியாது என்று மக்கள் நினைத்த காலம் போய் கேன்சரை ஆரம்பத் திலேயே கண்டுபிடித்து முறை யான சிகிச்சை அளித்தால் அது முழுவதுமாக குணப்படுத்த கூடிய நோய் என்று மக்கள் புரிந்து கொண்ட காலம் இது. இன்று முற் றிய புற்றுநோயாளிகளைக்கூட வலியின்றி அதிக நாட்கள் உயிர் வாழ வைக்கக் கூடிய மருத்துவ சிகிச்சைகள் வந்துவிட்டன.
இதுகுறித்து ஓய்வுபெற்ற மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரி யர் பி.கே.சி. மோகன் பிரசாத் கூறியதாவது: பொதுமக்களிடம் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது.
புற்றுநோயின் ஆரம்ப அறி குறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி, மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதற்கு தொலைக்காட்சி, பத்திரி கைகள், வானொலி மற்றும் அரசு சார்பில் நடத்தப்படும் புற்றுநோய் கண்டுபிடிப்பு முகாம்கள் போன் றவை முக்கிய காரணங்களாகும்
விழிப்புணர்வு மட்டுமின்றி, விஞ்ஞான முன்னேற்றங்களான எண்டாஸ்கோபி, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பெட் ஸ்கேன், நுண்ணூசி மூலம் திசு பரிசோதனை (Needle Biopsy) ஆகிய பரிசோத னைகளும் புற்றுநோயை ஆரம்பத் தில் கண்டுபிடிக்க உதவுகின்றன. ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப் பட்டவர்கள் நீண்ட நாள் உயிர் வாழ் வார்கள். புற்றுநோயைக் கண்டு பிடித்தபின், அதை குணப்படுத்து வதற்காக பல்வேறு புதிய சிகிச்சை முறைகளும் வந்துள்ளன.
புற்றுநோய் பாதிக்கப்பட்ட உறுப்பை அகற்றாமலேயே குணப் படுத்துவது, நுண்துளை அறுவை சிகிச்சை, லேசர் சிகிச்சை, ரத்தம் சிந்தாத கத்தி மூலம் அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் செல்களை மட்டும் அழிக்கும் கதிரியக்க சிகிச்சை, பக்க விளைவில்லாத கீமொதெரபி சிகிச்சை போன்றவை புதிய சிகிச்சை முறைகளாகும்.
இந்த சிகிச்சைகளோ, அதற் குரிய உபகரணங்களோ மட்டும் புற்றுநோயாளியை குணப்படுத் தாது. அவற்றை தேவையான நேரத்தில், தேவையான விகிதத்தில் உபயோகப்படுத்த தகுதி பெற்ற புற்றுநோய் சிகிச்சை நிபுணரால் (ONCOLOGIST) மட்டுமே முடியும். உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் புற்றுநோய் சிகிச்சையின் வெற்றிக்கு, சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் பங்கு மிக முக்கியம் எனத் தெரியவந்துள்ளது.
ரோபோ மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சையைக் கூட இயக்குபவர் ஒரு மனிதனே. ஆகவே மனிதன் என்றென்றும் மருத்துவ உபகரணங்களைவிட மேம்பட்டவன்தான். அதனால் நோயாளிகள் தகுதியான மருத்துவர்களை நாடிச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றார்.
10 லட்சம் புதிய புற்றுநோயாளிகள்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைப் பிரிவு மூத்த குடிமையியல் மருத்துவர் சக்கரவர்த்தி கூறியதாவது: 2012-ம் ஆண்டு கணக்கின்படி 1.4 கோடி புதிய புற்றுநோயாளிகள் உலகம் முழுவதும் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தியாவில் 10 லட்சம் புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 4.7 லட்சம் பேர் பெண்கள், 5.3 லட்சம் பேர் ஆண்கள்.
நோய் பாதிப்பில் முதல் இடத்தில் நுரையீரல் புற்றுநோய், அடுத்த இடத்தில் மார்பக புற்று நோய் இருக்கிறது. ஆண்களுக்கு உதடு, வாய், இரைப்பைகளில் அதிகம் புற்றுநோய் வருகின்றன. பெண்களுக்கு மார்பகம், கர்ப்ப வாய் மற்றும் கர்ப்ப பைகளில் அதிகம் வருகிறது. ஆண்களுக்கு புகையிலை மூலம் புற்றுநோய் அதிகம் வருகிறது.
ஆசியாவிலேயே அதிகம் காணப்படுவது கர்ப்பவாய் மற்றும் வாய் புற்றுநோய்தான். ஜப்பானில் இரைப்பை புற்று நோய் அதிகம். புகையிலை, மதுவை அறவே தவிர்த்தல், கதிர்வீச்சு மற்றும் பணிபுரியும் இடங்களில் வேதிப்பொருட்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ளுதல், காற்று, நீர் மாசடைவதை குறைத்தல், சுகாதாரக் கல்வியை போதிப்பது போன்றவை இக்காலகட்டத்தில் அவசியமாகின்றன என்றார்.


Similar Threads: