அன்பின் சக்கரம்


அனாஹத சக்கரம் அன்பின் உறைவிடம். இதை வலுவாக வைக்க ஆழ்நிலை தியானம் மிகவும் உதவும். இதனால்தான், `பிரம்ம முகூர்த்தம்’ எனப்படும் விடியற்காலை மூன்று முதல் ஐந்து வரை ஆழ்நிலை தியானம் செய்ய உகந்த நேரம் எனக் கருதினார்கள். நுரையீரல் அதிக சக்தி பெற்று, இதயத்தைப் பலமடையச்செய்கிறது.

மற்ற உறுப்புகள் செவ்வனே வேலைசெய்கின்றன. அனாஹத சக்கரத்தைச் சார்ந்த உணர்வு, அன்பு. அன்பின் உறைவிடத்தை இதயம் என்கிறோம். அனாஹத சக்கரம் மலரும் பருவத்தில் அன்பு, கருணை, மனித நேயம் இவற்றைக் குழந்தையின் இதயத்தில் பதியவைத்தால், நாட்டில் நல்ல வளமான சமுதாயம் உருவாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
Similar Threads: