புதிய கண்டுபிடிப்பு: மூக்கில் வாழும் கிருமிகளில் இருந்து நோய் எதிர்ப்பு மருந்து

இப்போது மனிதனுக்கு ஏற்படும் பல நோய்களை குணப்படுத்த நேரடி மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை கொடுத்து அந்த நோயை குணப்படுத்துகிறார்கள்.

ஆனால் இப்போது புழக்கத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை விட நோயை ஏற்படுத்தும் கிருமிகளுடைய வீரியம் அதிகரித்து வருகிறது. இதனால் பல நோய் எதிர்ப்பு மருந்துகளால் இந்த கிருமிகளை கொல்ல முடியவில்லை.

எனவே புதிய வகை நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மனிதனின் மூக்கில் வாழும் ஒருவகை கிருமிகளில் இருந்து சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கலாம் என ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிருமிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்து மூலம் மிக சக்தி வாய்ந்த நோய்களை உருவாக்கும் பேத்தஜன், எம்.ஆர்.எஸ்.ஏ. ஆகிய கிருமிகளை கூட கொல்ல முடியும் என்று கண்டறிந்துள்ளனர். இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தற்போது பல நோய் எதிர்ப்பு மருந்துகள் மண்ணில் வாழும், பாக்டீரியாக்களில் இருந்து உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Similar Threads: