Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 4 Post By ahilanlaks
  • 1 Post By safron
  • 1 Post By gkarti

பள்ளிக்கூடத்தைச் சுற்றி பயங்கரம்!


Discussions on "பள்ளிக்கூடத்தைச் சுற்றி பயங்கரம்!" in "Health" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    பள்ளிக்கூடத்தைச் சுற்றி பயங்கரம்!




    நன்றி குங்குமம் டாக்டர்

    தேவை அதிக கவனம்


    புதுப் புத்தகம், புதுச் சீருடை எனப் புது உற்சாகத்தோடு மீண்டும் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டனர் குழந்தைகள். கூடவே பள்ளிக்கு அருகிலேயே குழந்தைகளை இலக்கு வைத்து நடத்தப்படும் வியாபாரங்களும் களைகட்டத் தொடங்கி
    விட்டன. அரசு எவ்வளவுதான் தடை விதித்தாலும், குழந்தைகளை கவரும் வகையில், அவர்களின் உடல்நலத்தை பாதிக்கும் பொருட்களின் விற்பனையை வியாபாரிகள் குறைப்பதாகத் தெரியவில்லை.

    “குழந்தைகளின் கைக்கு எட்டும் தூரத்தில், அவர்களின் ஆரோக்கியத்துக்குக் கேள்விக்குறியாக இருக்கும் எண்ணிலடங்கா பொருட்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன” என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரானேஷ். குழந்தைகளை ஈர்க்கும் அத்தகைய பொருட்களிலுள்ள ஆபத்துகள் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார் அவர்... “குழந்தைகளை வெகுவாக கவரும் வகையில் அவர்களை பாதிக்கும் பல்வேறு பொருட்கள் லாபநோக்கத்துக்காக சந்தைப்படுத்தப்படுகின்றன.

    இவை ஆபத்தானதாக இருந்தாலும், குழந்தைகளுக்குப் பிடிக்கிறது என்ற காரணத்துக்காகவே விபரீதம் புரியாமல் வாங்கிக் கொடுக்கும் பெற்றோரும் இருக்கின்றனர். குழந்தைகளின் சுவாசத்தை பாதித்து, உயிரிழப்பு வரை கொண்டு சென்ற அரசால் தடைவிதிக்கப்பட்ட ‘ஜெல்லி பால்’இப்போதும் எல்லா ஃபேன்சி ஸ்டோர்களிலும் தங்கு தடையின்றி கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இவற்றை தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைப்பதால் பெரியதாகி விடுகிறது. பல வண்ணங்களில் விற்கப்படும் இந்த ஜெல்லி பால்கள் மீன் தொட்டிகளில் போட்டு வைக்கவும், அழகுப்பொருளாகவும், பர்த்டே பார்ட்டிகளில் அலங்காரத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    நாளடைவில் இந்த ஜெல்லி பால் மோகம் அதிகமாகி, குழந்தைகள் வெகுவாக பயன்படுத்த ஆரம்பித்தனர். பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில் எளிதாக கிடைப்பதால் இதை வாங்கி, தண்ணீர் பாட்டில்களில் போட்டு வைத்து, விளையாடவும், ஜெல்லி மிட்டாய்களை போல இருப்பதால் சாப்பிடவும் செய்கின்றனர். இதில் கலக்கப்படும் பாலி அக்ரிலேட் (Polyacrylate) என்ற வேதிப்பொருள் தண்ணீரில் போடும் போது நீரை உறிஞ்சி பெரிதாகும் தன்மை உடையது. இவற்றை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, அஜீரணம், வயிற்றுப்புண் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

    அதிகம் உட்கொண்டால் குடல் அடைப்பு மற்றும் குடல் ஓட்டை போன்ற ஆபத்தும் ஏற்படக்கூடும். இது உடலில் உள்ள நீரை உறிஞ்சி, உடலுக்கான நீரோட்டத்தை தடைசெய்கிறது. பாலி அக்ரிலேட் ரசாயனம் கலந்த பொருட்களை வைத்து குழந்தைகள் விளையாடுவதால் கண் மற்றும் சரும நோய்களும் தாக்கும். ஜெல்லி மிட்டாய்கள், பப்பிள் கம், சூயிங்கம் போன்றவற்றை குழந்தைகள் அதிகம் வாங்கி சாப்பிடுகிறார்கள். சர்க்கரை, கூழ்மமாக்கி (Emulsifier) மற்றும் மெழுகுப்பொருள் சேர்க்கப்படும் இவற்றைச் சாப்பிடுவதால் எந்த நன்மையும் கிடையாது.

    இவை வயிற்றினுள் செல்லும் போது வயிற்றுவலி, வயிறு உப்புதல், பல்சொத்தை, பல்வலி போன்ற பிரச்னைகளே ஏற்படும். இவற்றை மெல்லும் போது காற்று வயிற்றினுள் சென்று பசி ஏற்படாமல் செய்துவிடும். இதனால் குழந்தைகளின் ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் மாறிவிடுகின்றன. சிகரெட் போன்ற வடிவத்தில் முழுவதும் சர்க்கரையாகவோ, செயற்கை இனிப்பு கலந்தோ பல வண்ணங்களில் தயாரிக்கப்படும் சிகரெட் மிட்டாய்களை சிகரெட் ஊதுவதாக நினைத்து விளையாடிவிட்டு, அதை சாப்பிடும் பழக்கம் குழந்தைகளிடையே அதிகரித்துள்ளது. இவற்றில் எந்த ஊட்டச்சத்தும் கிடையாது.

    இவற்றில் சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுவதால் அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு பருமன் பிரச்னை வருகிறது. இதை சிகரெட் ஊதுவதுபோல விளையாடும் சிறுவர்கள் நாளடைவில், தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிவிடும் அபாயமும் உள்ளது. பள்ளிகளுக்கு அருகில் விற்கப்படும் குல்ஃபி ஐஸ், குச்சி ஐஸ் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தும் தண்ணீர் தரமானதாக இருப்பதில்லை. தரமற்ற தண்ணீரில் உள்ள நுண்ணுயிரிகளால் காய்ச்சல், சளி போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உண்டு. இவற்றையும் குழந்தைகள் தவிர்ப்பதே நல்லது.

    சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனி பாக்ெகட்டுகளில் நைட்ரஜன் வாயு அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. இந்த வாயு பாக்டீரியா போன்ற கிருமிகள் தாக்காமல் இருக்க பயன்படுவதால், கிருமிகளால் ஏற்படும் நோய் வராவிட்டாலும், மற்ற ஆரோக்கிய கேடுகள் ஏற்படலாம். இதுபோன்ற உணவுப் பொருட்களையும் தவிர்ப்பதே நல்லது. இன்றைய குழந்தைகள் சாக்லெட், பர்கர், ஐஸ்க்ரீம் போன்றவற்றை விரும்பி உண்கின்றனர். இவற்றால் தீங்குகளே அதிகம். இதுபோன்ற தவறான உணவுகளை குழந்தைகள் உண்பதிலிருந்து மீட்க, பெற்றோரே ஆரோக்கிய உணவுகளை பள்ளிக்கு கொடுத்து அனுப்பலாம்.

    சில பள்ளிகளில் நிர்வாகமே, குழந்தைகள் உடலுக்கு தீமை தரும் நொறுக்குத்தீனிகளை தடை செய்திருக்கிறது. இது வரவேற்க வேண்டிய நடவடிக்கை. இதுபோல அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தினால், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை பெருமளவில் கட்டுப்படுத்தலாம்’’ என்கிறார் மருத்துவர் பிரானேஷ்.

    பள்ளிப்பையில் புகையிலைப் பொருள்!

    உலக புகையிலை எதிர்ப்பு தினத்தன்று வெளியான செய்தியில், பள்ளிகளுக்கு அருகில், 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள கடைகளில் சிறுவர்களின் கண்ணில் தெரியும்படி மிட்டாய்கள், சாக்லெட் போன்ற தின்பண்டங்களோடு, புகையிலைப் பொருட்களையும் வைத்து விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

    புகையிலைக்கு எதிராக குழந்தைகள்’ என்ற மாணவர் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், சென்னையின் பிரதான பகுதிகளான ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி மற்றும் தியாகராய நகர் பகுதிகளில், பள்ளிகளுக்கு அருகிலுள்ள பெட்டிக் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் சிகரெட் விற்பனை மற்றும் குழந்தைகள் சாப்பிடும் வகையில், புகையிலைப் பொருட்கள் சிறிய வடிவிலான ‘சாஷே’பாக்ெகட்டுகளாக வடிவமைக்கப்பட்டு ‘Cool Lip’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    "மூன்று வருடங்களுக்கு முன்பே மென்று தின்னக் கூடிய புகையிலைப்பொருட்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருப்பினும், வெளி மாநிலங்களிலிருந்து தடையின்றி இவை தமிழகத்துக்குள் வந்து கொண்டிருக்கின்றன. தலைமை ஆசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களின் புத்தகப்பைக்குள் இருந்து புகையிலைப் பொருட்களை எடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி பள்ளிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நோட்டீஸ் போர்டில் புகைப்பழக்கத்துக்கு எதிரான எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைப்பதோடு கடமை முடிந்துவிட்டதாக கல்வி நிறுவனங்கள் நினைத்துக் கொள்கின்றன.

    அரசாங்கம் இதுபோன்ற பொருட்களை கல்வி நிறுவனங்களுக்கு அருகில் வைத்து விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் உதவி தலைமைப் பேராசிரியரும், புற்றுநோய் நிபுணருமான டாக்டர் விதுபாலா. பள்ளி, கல்லூரிகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு அருகே புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சென்னையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சோதனை அனைத்து ஊர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails பள்ளிக்கூடத்தைச் சுற்றி பயங்கரம்!-ht44305.jpg  
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    615

    Re: பள்ளிக்கூடத்தைச் சுற்றி பயங்கரம்!

    Gud info
    Kattayama ellorum ariya vendiya vidayam ka
    Thanks for the sharing

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: பள்ளிக்கூடத்தைச் சுற்றி பயங்கரம்!

    Quote Originally Posted by safron View Post
    Gud info
    Kattayama ellorum ariya vendiya vidayam ka
    Thanks for the sharing
    Welcome Sumy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    46,677

    Re: பள்ளிக்கூடத்தைச் சுற்றி பயங்கரம்!

    Ahaaa.. Thanks for the Info, Kaa!

    ahilanlaks likes this.

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: பள்ளிக்கூடத்தைச் சுற்றி பயங்கரம்!

    Quote Originally Posted by gkarti View Post
    Ahaaa.. Thanks for the Info, Kaa!
    Welcome Karthi

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter