தொப்பை இல்லாத தட்டையான வயிற்றைப் பெற தவிர்க்க வேண்டிய உணவுகள்!

ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தட்டையான வயிற்றைப் பெற விரும்புவார்கள். அதற்காக பலர் தினமும் ஜிம் செல்வது, டயட்டில் இருப்பது போன்றவற்றை மேற்கொள்வார்கள். இச்செயல்களால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் தான்.

ஆனால் மோசமான டயட்டை மேற்கொண்டால், அதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அதன் காரணமாக பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொப்பை இல்லாத தட்டையான வயிறு வேண்டுமானால், முதலில் தொப்பைக்கு காரணமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

தொப்பை நாம் அன்றாடம் உண்ணும் ஒருசில உணவுகளால் தான் வருகிறது. அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து அவற்றைத் தவிர்த்து வந்தால், தட்டையான வயிற்றுடன் சிக்கென்று காட்சியளிக்கலாம்.


பால் பொருட்கள்:
பால் பொருட்கள் வயிற்றில் வாயுவின் தேக்கத்தை அதிகரிக்கும். எனவே உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள், பால் பொருட்களை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

அளவுக்கு அதிகமாக ஒருவர் பால் பொருட்களை உட்கொண்டால், அடிவயிற்றில் கொழுப்புக்கள் தேங்கி, தட்டையான வயிற்றைப் பெற தடையை ஏற்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு பால் பொருட்கள் பிடிக்குமானால், தயிரை சேர்த்துக் கொள்ளலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
தற்போதைய அவசர உலகில், ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிட நேரம் இல்லாமல், எங்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தான் விற்கப்படுகிறது. இதனால் அதையே பலரும் வாங்கி சமைத்து சாப்பிடுவதால், அதில் உள்ள உட்பொருட்கள் தொப்பைக்கு வழிவகுக்கிறது.

உப்புள்ள உணவுகள்:
உப்பு உணவின் சுவையை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுவது. ஆனால் இந்த உப்பு ஒருவரின் உடலில் அளவுக்கு அதிகமானால், அதனால் உடல் பருமனால் அவஸ்தைப்படக்கூடும். எனவே உப்புமிக்க சிப்ஸ், நட்ஸ் போன்றவற்றை உட்கொள்ளும் வழக்கத்தைக் கைவிட வேண்டும்.

கார உணவுகள்:
என்ன தான் கார உணவுகள் உடலின் மெட்டபாலித்தை அதிகரித்தாலும், அளவுக்கு அதிகமானால், அதனால் செரிமான பாதையில் பிரச்சனைகளை சந்தித்து, அதன் காரணமாக வயிற்றில் கொழுப்புக்களின் தேக்கமும் அதிகரிக்கும். எனவே அதிகமான அளவில் கார உணவுகளை உட்கொள்ளாதீர்கள்.


கார்போஹைட்ரேட் உணவுகள்:
கார்போஹைட்ரேட் உணவுகள் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறையை எதிர்த்து, வயிற்றை உப்புசமடையச் செய்யும். இது அப்படியே நீடித்தால், தொப்பை குறைவதற்கு பதிலாக, பெரிதாக ஆரம்பிக்கும். எனவே பாஸ்தா, பிரட் மற்றும் இனிப்பு உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

பழங்களையே தேர்ந்தெடுங்கள்:
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளைத் தவிர்த்து, பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். குறிப்பாக சிட்ரஸ் பழங்களை அதிகம் தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள். இதனால் அதில் உள்ள அமிலத்தன்மை, கொழுப்புக்களின் எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கும்.
Similar Threads: